1. பா மாலிகை ( காதல்) – ஓரவிழிப் பார்வையிலே – (68)

kan

*

ஓரவிழிப் பார்வையிலே

*

ஓரவிழிப் பார்வையிலே தேனே
தாரகை நீயே ராணி
பாரம் சிறிது குறையுமே கண்ணே
சாரம் எதுவென்று கூறவா கண்ணே
*
நீந்துதே நிலவு முகத்திலுன் கூந்தல்
காந்த அலையொன்று கதம்பமாய் நெருங்குதே
அந்தக் கலை நின்றென்னை மயக்க
சொந்த நிலை அலர் நிலையாச்சுதே
*
இன்ப ஒளி விழியால் அன்பையூற்று
மன்மதப் பேரெழிலால் இன்னல் களை.
நன்றே என்னுள்ளில் நந்தவனம் நீயே
தென்றலாய் வீசு தெம்மாங்கு பாடு
*
எந்தன் அகத்தில் சுதந்திரச் சிந்தனைச்
சந்தனம் பூசுகிறாய் சகதியை நீக்குகிறாய்
தந்தனத்தோம் இசைக்கும் மந்திரக்காரி நீ
சிந்தும் இழிவற்ற காதலின் இலக்கணமே.
*
14-6-2016
வேதா. .இலங்காதிலகம்.
டென்மார்க்.
*

வேறு–

12-11-2015
பின்னும் மனம் இழைதலில்
மின்னும் நாணம் வழிதலில்
உன்னை இந்தக் கண்ணாடியில்
சின்ன இமை தாழ்தலில்.
காதலோ இது மனிதம்
காத்தலின் உணர்வுப் புனிதம்.
காந்தமாய் இழுக்கும் வனிதம்
காதல் நாணமொரு மந்திரம்!
_________________

நேயர்களே இது எனது இரண்டாவது வலை. முதலாவது – வேதாவின் வலை.
இணைப்பு இதோ:- https://kovaikkavi.wordpress.com/
அங்கு பா மாலிகை காதல் தலைப்பில் 67கவிதைகள் உண்டு அதன் இணைப்பு:-  https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/
*
Billedresultat for குழந்தை   தாயுடன்    அணைதல்

6 thoughts on “1. பா மாலிகை ( காதல்) – ஓரவிழிப் பார்வையிலே – (68)

  1. Maha :- தந்தனத்தோம் இசைக்கும் மந்திரக்காரி
    · 4 August 2016 at 21:46

    Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உறவே.
    5 August 2016 at 20:31

    Ratha Mariyaratnam :- பாரம் சிறிது குறையுமே
    சாரம் எதுவென்று கூறவா

    சந்தங்கள் இறுதி வரிகளில் கூட மிக அழகாக
    4 August 2016 at 22:36

    Like

  2. Ratha Mariyaratnam :- சிந்தும் இழிவற்ற காதலின் இலக்கணமே
    4 August 2016 at 22:37

    Vetha Langathilakam :- ஆனால் சகோதரி நிலாமுற்றப் போட்டிக்கவிதை
    தெரிவாகலே இல்லை என்று எண்ணகிறேன்.
    சந்திப்பு ம் அப்படித்தான்.
    5 August 2016 at 09:11

    Subajini Sriranjan :- அழகான பா
    5 August 2016 at 20:20

    Vetha Langathilakam:- மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உறவே.
    5 August 2016 at 20:32

    Like

பின்னூட்டமொன்றை இடுக