2. தேனினும் இனியது காதல். (69)

1383073_624407780944557_437286089_n

*

தேனினும் இனியது காதல்.

*

தேனினுமினியது காதல் ஊனையுருக்கும்
தேவ இரகசியமல்ல பூவுலக இன்பம்.
தேவனை, தேவதையைக் கண்டதும்
புலனைந்தும் தடுமாறி உலைதல்.

*

உயிரை உய்விக்கும் உன்னதம்
உடலைக் களவாடும் இளமையில்.
பயிராகிப் பயனீயும் முதுமையில்
ஒயில், பலம் காதல் யாகம்.

*

இயற்கையின் தேவை
இயல்பு நிலை.
கண்ணில் புகுந்து கருத்துக்
கவர்ந்து சுகிக்கும் காதல் தீ

*

கன்னல் இளமையிலின்னல் தருமிது
பன்னீரன்பால் பின்னிப் பிணையும்.
பார்வையூஞ்சல் பாந்தத் தொடுகை
ஏந்துமின்பம் ஏராளம்! ஏராளம்.!

*

அன்பிது பழகியறிந்தால்
துன்பியலிது பழகி விலகல்.
எதற்கிணையிது மதுவிது
அணைக்கவும் தீ அணையுது.

*

வஞ்சமற்று அள்ளி ஈவது
கஞ்சமற்று திரும்பக் கொடுப்பது.
விரல்கள் பத்துமுணரும் இன்பம்
வெட்கமில்லை வேண்டும் வரை

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-7-2016

*

(காதல் – தலைப்பில் 67 கவிதைகள் எனது முதல் வலையில் உண்டு)

*

1457745k8p286od3g

Advertisements

8 thoughts on “2. தேனினும் இனியது காதல். (69)

 1. Subi Narendran :- இதைவிட அழகாக காதலை உணர்த்த முடியாது. சிறப்பான கவிதை. //தேனினுமினியது காதல் ஊனையுருக்கும்தேவ இரகசியமல்ல பூவுலக இன்பம் // வாழ்த்துக்கள்.
  27-5-2017.

  Vetha Langathilakam:- மிக மகிழ்வு கருத்திடலிற்கு..
  மனமார்ந்த நன்றி சகோதரி.
  27-5-17

  Like

 2. Maniyin Paakkal :- அருமையான ஆக்கம். காதலினி இனிமை தெளிக்கிறது வரிகளெங்கும்
  30-5-2017
  Vetha Langathilakam:- மிக மகிழ்வு கருத்திடலிற்கு..
  மனமார்ந்த நன்றி Mani…
  30-5-2017

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s