1. அறிவுடைமை (நாலடியார்)

 

Billedresultat for palm leaves manuscript

*

நிறைமதியாளர்

*

அதிகாரம் 25 –   அறிவுடைமை

பகைவர் பணிவிட நோக்கித்  தகவுடையார்
தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)

அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.

*

எனது வரிகள்:-

*

முழுமதிச் சந்திரனையே என்றும்
பழுதுடை கிரகணம் பற்றும்
பிறை நிலாவை அதன்
குறையோடு கிரகணம் பற்றா
இவ் விதியாய் எதிராளியின்
திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
அடக்கார்  எதிர்க்கார்  தம்முள்
குறுகும் நிறை மதியாளர். 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-4-2015

div138

Advertisements

2 thoughts on “1. அறிவுடைமை (நாலடியார்)

 1. 8 பின்னூட்டங்கள்

  karanthaijayakumar
  ஏப் 23, 2015 @ 01:02:01

  நாலடியாருக்கு
  தங்களின் கவித்துவ வரிகள்
  அருமை சகோதரியாரே

  மறுமொழி
  கோவை கவி
  ஜூலை 12, 2015 @ 12:27:46

  தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. மிக மகிழ்ச்சி.
  ஏதோ சிறிது முயற்சித்தேன் அவ்வளவு தான்.

  மறுமொழி
  திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 23, 2015 @ 01:47:01
  அருமை அருமை சகோதரி…

  இது போல் தொடருங்கள்…

  மறுமொழி
  கோவை கவி
  ஜூலை 12, 2015 @ 12:28:31

  தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. மிக மகிழ்ச்சி.
  ஏதோ சிறிது முயற்சித்தேன்…DD.

  மறுமொழி
  Killergee
  ஏப் 23, 2015 @ 03:40:43

  அழகான வர்ணனை அருமை.

  மறுமொழி
  கோவை கவி
  ஜூலை 12, 2015 @ 12:28:58

  தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. மிக மகிழ்ச்சி.

  மறுமொழி
  மகேசுவரிபாலச்சந்திரன்
  ஏப் 23, 2015 @ 13:48:48

  உங்கள் வரி அருமை,,,,,,

  மறுமொழி
  கோவை கவி
  ஜூலை 12, 2015 @ 12:29:32

  தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. மிக மகிழ்ச்சி.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s