2. அறிவுடைமை (நாலடியார்)

 

நாலடியார்

*

அதிகாரம் 25 –  அறிவுடைமை

*

நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்      naladiyar
கணிகல மாவ தடக்கம்– பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரங் கூறப் படும்.

*

 

 நளி – பெரிய,  கடல் – கடலின், தண் – குளிர்ந்த, சேர்ப்ப – கரையுடைய அரசனே  நல் கூர்ந்த – வறுமையடைந்த,  மக்கட்கு – மனிதர்க்கு, அணிகலமாவது – அணிதற்குரிய ஆபரணமாவது, அடக்கம் – அடங்கியிருத்தல், பணிவுஇல் – அடக்கமில்லாத, சீர் – தன்மையில், மாத்திரையின்றி – அளவு இன்றி வரம்பு கடந்து நடக்குமேல் – ஒழுகுவானாகில்,  வாழும் . அத்தகையவன் வாழும் ஊர் – ஊரினரால், கோத்திரம் – தன் குலம், கூறப்படும் – இழிந்து சொல்லப்படும்.  என்றவாறு…

*

என் வரிகள்:

*

மகா சமுத்திரத்தின் தண்மை
மணற்தரையின் அதிபதியாம் மன்னனே!
கீழ்ப்படியும் குணம் பொருளில்
கீழ்நிலையாளரை வடிவாக்கும் நகை
கீழ்ப்படிதலற்று எல்லையின்றி மனிதன்
இயங்கினால் தன் சொந்தக்
குடியாளராலேயே இவன் குலம்
இழித்துக் கூறும் நிலையடையும்

*

 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
22-5-2015

*

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

Advertisements

One thought on “2. அறிவுடைமை (நாலடியார்)

 1. 10 பின்னூட்டங்கள் (29-11-2015 post)

  கோவை கவி
  நவ் 29, 2015 @ 10:13:32

  http://www.vallamai.com/?p=57811

  மறுமொழி
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 29, 2015 @ 12:10:20

  பதிவு நன்று சகோ

  மறுமொழி
  கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 15:30:20

  மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
  அன்புடன் நன்றி கூறுகிறேன்.

  மறுமொழி
  ramani
  நவ் 29, 2015 @ 12:48:09

  அருமையான எளிமையான
  கவிதையாக கொடுத்த விதம் அருமை
  சொல்லுக்கான விளக்கம் கொடுத்ததால்
  புதிய சொற்களையும் கற்றுக் கொள்ள முடிகிறது
  புதிய அரிய முயற்சி
  தொடர நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி
  கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 15:31:04

  மிகவும் மகிழ்ச்சி தங்கள் இனிய கருத்திற்கு.
  அன்புடன் நன்றி கூறுகிறேன் உறவே.

  மறுமொழி
  திண்டுக்கல் தனபாலன்
  நவ் 30, 2015 @ 03:12:31

  விளக்கம் அருமை…

  மறுமொழி
  கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 15:31:32

  மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
  அன்புடன் நன்றி கூறுகிறேன் உறவே.

  மறுமொழி
  selvakumar
  நவ் 30, 2015 @ 05:07:31

  அருமையான பதிவு

  மறுமொழி
  கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 15:31:51

  மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
  அன்புடன் நன்றி கூறுகிறேன் உறவே.

  மறுமொழி
  கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 15:29:18

  Sujatha Anton :- விளக்கம் அருமை…
  Unlike · Reply · 1 · November 30 – 15 at 5:29pm

  Vetha Langathilakam- மிகவும் மகிழ்ச்சி Sujatha கருத்திற்கு.
  அன்புடன் நன்றி கூறுகிறேன்.
  24-12-2015.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s