1. டி. கே. பட்டம்மாள்.

 

collage- padda

*

டி. கே. பட்டம்மாள்.

*

பாட்டிற்கொரு பெண் இசை ராணி
ஊட்டமிகு கர்நாடக இசைக் குயில்.
பாட்டுத் திறத்தாலன்று எம்.எல்.வசந்தகுமாரி
பட்டம்மாள், எம்.எஸ் சுப்புலட்சுமி
கூட்டாக பெண் மும்மூர்த்திப் பிரபலங்கள்.

*

தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி பக்திப்பாடகர்.
தாயார் காந்திமதி (ராஐம்மாள்) பாடகி.
பட்டம்மாளுடன் மூன்று சகோதரர்களும் பாடகர்கள்.
பகிரங்கத்தில் பெண்கள் பாடாத மரபுக்குடும்பம்.
பாட்டுத்திறன் வெட்டியது மரபு வேலியை.

*

பட்டுக் காஞ்சிபுரக்காரி டி.கே. பட்டம்மாள்.
இட்ட பெயர் அலுமேலு. செல்லமாய்
ஒட்டியது ‘ பட்டா ‘ ஈரிணைவாலானது பட்டம்மாள்.
சுட்டிப் பெண்ணாய் நான்கு வயதில் பாடினார்.
பாட்டரசி பிறப்பு 1919 பங்குனி 28.

*

முறையாக இசை பயிலாதவர். கச்சேரிகளில்
தவறாது இசைகேட்டுத் திறன் வளர்த்தார்.
தெலுங்கு இசையாசிரியர் சிலகாலம் பயிற்றுவித்தார்.
10 வயதில் வானொலியில் பாடிய பிரபலம்.
13 வயதில் எழும்பூரில் முதல் கச்சேரியரங்கேற்றம்.

*

இராகம் தானம் பல்லவியை சாதுரியமாய்
இசைக்கச்சேரியில் கையாண்ட பெண் இசைப்புலியிவர்.
இதனால் ‘ பல்லவி பட்டம்மாள் ‘ பெயர் பெற்றார்.
இசையரங்கில் பெண்பாட முடியாத மரபையுடைக்க
தலைமையாசிரியர் அம்முக்குட்டிஅம்மாள் தெலுங்காசிரியர் உதவினர்.

*

அனைத்து மாநிலங்களில் முன்னணி சபாக்களில்
தேசியகருத்து பக்திப் பாடல்களையே பாடினார்.
கொலம்பிய இசைத்தட்டில் பாடவும் ஊக்கியவர்
அம்முக்குட்டி அம்மாளே. பாபநாசம் சிவன்
தொடர்பால் சினிமாவில் பாடினார்.

*

எண்ணற்ற விருதுகள் பெற்றார். பல
வெளி நாடுகள் சென்று பாடினார்.
தனக்கெனத் தனிப்பாணி அமைத்துப் பாடியவர்.
இவர் ஒரு இசை சகாப்தம் 90வது வயதில்
2009 – ஆடி 16லிவர் பூதவுடல் மறைந்தது.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-7-2016.

*

5 thoughts on “1. டி. கே. பட்டம்மாள்.

 1. Karthikeyan R Vaitheeswaran :- குறும் பதிவானாலும் செறிவான நடையில் அமைந்த அவசியமான பதிவு… ஒரு மகோன்னதமான பெண்மணியின் காதையை நீண்ட கவிதையாய் வடித்தால் அற்புதமாக வரும்… வாழ்த்துக்கள்
  3-11-2017

  Vetha Langathilakam:- சரி சகோதரா . மிக நன்றி. தங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆயினும் இது வரிக்கட்டுப்பாடுடன் தேவைக்காக எழுதப்பட்டது.அதனால் தான் குறுகியது. மிகுந்த தேடுதலுடன் எழுதியது. இதை பெரிதாக எழுத மறுபடி அதே தேடுதல் தேவை. இப்போது நான் எனது 4 – 5 வது நூல் வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். பார்ப்போம் ஆறுதலாக முயற்சிக்கிறேன்.
  மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றிகள்.
  3-11-17

  Karthikeyan R Vaitheeswaran மிக்க நன்றி🙏

  Like

 2. Subi Narendran;. டி. கே. பட்டம்மாளை பற்றி நிறைவான பகிர்வு. நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். மிகவும் நன்றி.
  3-11-2017
  Vetha Langathilakam:- நன்றி சகோதரி மிக மகிழ்ச்சி.
  இனிய இரவு வணக்கம்.
  3-11-17

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s