2.  கலைகளில் பரதம். (494)

 

baeatham

*

 கலைகளில் பரதம்.

*

பரதமுனிவர் அறிமுகமாக்கிய உயரிய கலை
பாவம், ராகம், தாளமிணைந்த சொல்
தேவதாசிகளின் சதிராட்டத்தின் நெறிப்படுத்திய
வடிவம். சின்ன மேளம், கூத்தாடல்
தாசி ஆட்டம். எழுபதாண்டுகளாகப் பரதமானது.

*

முகபாவனைகளில் நவரசங்கள் பிறக்கும் அழகு
அகம் குளிரச் செய்யுமுடல் மொழி.
முத்திரையிடும் கைவழி கண்கள் செல்ல
கண்கள் வழியோடிதயமும் செல்லும் இன்பவழி.
பாவரசமிணைந்த அறுபத்து நான்கு கலைகளிலொன்று

*
.
சஞ்சலமின்றிச் சலங்கையைக் கண்களிலொற்றிப் பூசித்து
அஞ்சாது அழகு மயிலாக ஆட
கொஞ்சிடும் சலங்கை தவறாது தாளமிட
வஞ்சியவள் சந்தத்தில் பரவசமாய் ஆடுவாள்.
கெஞ்சிடும் மனம் இன்னொரு தடவையென்று.

*

கண்கள் கருவண்டாய்ச் சுழன்று மொய்க்க
அண்ணாவியசைவில் மேடையில் கால்கள் பாவாது
வண்ணமாய் ஒயிலாயாடி அபிநயத்தில் எண்ணத்தில்
கண்ணன் லீலைகள் விரிந்திட அழகுப்
பெண் ராதையைத் தேடுவதோ மீயழகு.

*

உடல், மனம், ரசனைக்குப் பயிற்சி
உன்னதத் தென்னிந்தியர் தமிழர் நடனம்
இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னைய உருவாக்கம்.
அடவு, ஐதி, பாடல் நட்டுவாங்கமென
இசைக் கருவிகளின் கூட்டுக் களியாடலுமாகும்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-5-2017

*

வேறு – குறுங்கவிதை.

பாவம் உணர்ச்சியை, ராகம் இசையைப் 
பாவும் பரதமிந்திய புராதனக் கலை.
சிவன் மகிழ்வின் உச்சத்தில் ஆனந்தத்தாண்டவமும்
அழிக்கும் கடவுளாக ருத்ரதாண்டவமும் ஆடுகிறார்.

*

அபிநய வழி செய்தி பரிமாற்றம்
சுபசுரம் சதங்கை ஒலி பின்ன
செம்பஞ்சுக் குழம்பிட்ட பாதங்கள் சதிராட
அழகு மயிலென ஆடும் பரதம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 31-5-2017

*

544790_589749011038301_969070378_n

8 thoughts on “2.  கலைகளில் பரதம். (494)

  1. குறுங்கவிதைக் கருத்து:-

    · 1 June -2017 at 13:08 ·
    Suryajessy Jayavikash செம்பஞ்சுக் குழம்பிட்டப் பாதம் சதிராடியது..
    நின் செம்மொழி வாய்மொழியாய் உதிர்ந்து..
    செங்காந்தள் விரல் இசைந்து..
    கவியானது..
    எங்கள் விழிகளில் கலையானது..

    பரதமிந்திய.. ஒற்றை வார்த்தையா? ஒரு சிறு குழப்பம்..
    கவி..ஆகச் சிறப்பு.
    · 1 June at 11:50 ·
    Vetha Langathilakam:- Suryajessy Jayavikash ஆம் பரதம்- சக- இந்தியா – பரதமிந்திய mikka nanry..sis*’..
    1 June – 2017 – at 11:58
    Suryajessy Jayavikash நன்றிகள் சகோதரி. கவி மிக அருமை.. எனக்கும் உங்கள் வரிகளில் ஈர்ப்பு உண்டு.

    Like

  2. Subajini Sriranjan :- உயிரின் அசைவும் உலகத்தின் அசைவும்
    உள்ளடக்கும் பரதக்கலை//
    அருமையான ஆக்கம்
    · 3 June- 2017 – at 15:50

    Vetha Langathilakam :- மிக்க நன்றி சுபா…

    Mathialagan Mathia :- மொத்தத்தில் உமது கவி நிலாமுற்றத்தில் அபிநயம் செய்கிறது பரத நாட்டியமாக …வாழ்க..கவியே…!
    · 3 June – 2017 -at 16:00

    Vetha Langathilakam :- நன்றி உறவே

    Like

  3. Alvit Vasantharany Vincent :- நல்லதோர் கவிதை.
    y · 3 June at 19:20

    Alvit Vasantharany Vincent :- ‘தேவதாசிகள்’ என்ற பதமும் அவர்களுடைய ஆடற்கலையும் ஏற்கனவே உள்ள சொற்களே. இதில் தவறேதுமில்லை. இதுவே பின்னர் ‘பரதக்கலையாக’ மாற்றம் கண்டுள்ளது.
    3 June at 19:27

    Vetha Langathilakam :- ஆம் அதையே கூறினேன். இதன் காரணமாக கவிதை நிராகரிக்கப் பட்டது.
    எப்படியெல்லாம் தூக்கி எறிகிறார்கள் சிலர்.
    · 3 June at 21:12

    Alvit Vasantharany Vincent:- ஓ!
    3 June at 21:15

    Alvit Vasantharany Vincent :- பரவாயில்லை சகோதரி. நீங்கள் சோராமல் தொடர்ந்து எழுதுங்கள்.
    · 3 June at 21:16

    Like

  4. கிருபானந்த் நாமக்கல் :- பரதத்தின் காதலன் நானும்…அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை நீண்ட ஆசை பரதத்தை கவியாக்குவது வார்த்தைகள் இதுவரை வஞ்சனை மட்டுமே செய்கின்றன…
    8-6-2017
    Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே தமது கருத்திடலிற்கு.
    மகிழ்ந்தேன்.
    8-7-2017

    Like

பின்னூட்டமொன்றை இடுக