6. நான் (501)

 

IMG_0140[1].jpg.ww.jpg-o

நான்

*

நான் ஒரு மனிதனின் நாண்.
நான் எனும் உணர்வற்றவன் வீண்.
நான் எது! நானிந்த உடல்
நான் யார்! நான் மனச்சாட்சி.
நான் தலைக்கன அகந்தையுடன் இணையின்
ஊன் தான் ஒரு மனிதன்.
நான் பிரமம் என்கிறான் வேதாந்தி
நான் பிரமம் என்பது யோகநிலை.

*

நான் என்பதன் அடையாளம் நாமமாகிறது.
நான் தன்னம்பிக்கைத் தூண் ஆகிறது.
நான் எனதென உரிமை கொண்டாடுகிறது.
நான் நீ சேர்ந்தால் நாமாகிறது.
பெயர் அழைத்து யார் என்பது
துயரின்றி சிலிர்ப்பாய் தான் ஆகிறது.
நத்தை ஓட்டினுள் ஒழிய இயலாது
செத்தை தான் நானற்ற பதிலானது.

*

நான் கட்டுப்படும் நேர்மை பண்பில்.
நான் விட்டுக் கொடுக்கும் அன்பினில்
மன்னிக்கும் மனம் கொண்ட நான்
மின்னிடும் சூரியக் கதிரான வான்.
நான் நீ சேர்ந்தால் காதல்
என் பெற்றோரின் நல் வளர்ப்பிலும்
வீண் வம்பற்ற சூழலாலும் பண்புடன்
நான் நல்லவன் ஆவது திண்ணம்.

*

பா ஆக்கம்  பா வானதி

வேதா. இலங்காதிலகம்  டென்மார்க். 22-9-2015

*

 

5 thoughts on “6. நான் (501)

 1. Krishin Khiaram :- migach sirappu…yenna oru vunmai….naan yennum sollin magimai….ahangaram thavirtthu vazha vendum naam yellorume otrumaiyaga…vunmaiyaga vuzhaikka vendum naam…..eniya kaalai vanakkam… (.மிக்க சிறப்பு! என்ன ஒரு உண்மை! நான் என்னும் சொல்லின் மகிமை! ஆங்காரம் தவிர்த்து வாழ வேண்டும் நாமெல்லோரும் ஒற்றுமையாக உண்மையாக நாமெல்லோரும் உழைக்க வேண்டும் நாம் . இனிய காலை வணக்கம்.)
  25-6-2017

  Vetha Langathilakam:- அன்பின் உறவே… இனிய காலை வணக்கம்.! .தங்கள் அன்பான கருத்திடலிற்கு மனமார்ந்த நன்றிகள்.
  மிக்க மகிழ்ச்சி உறவே.
  25-6-2017

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s