1. அங்கிங்கெனாதபடி…..(28)

 

முதலாவது வேதாவின் வலையில் ஆன்மிகம் 27 அங்கங்கள் எழுதியுள்ளேன்.
இங்கு தொடருகிறது… இது 28வது….

 

maxresdefault (3)

*

அங்கிங்கெனாதபடி…..

*

(ஒரு தடவை யெர்மன் ” பூவரசு”..இதழ் தந்த தலைப்பிற்கு எழுதிய கவிதை – 2004ல்)

அங்கிங்கெனாதபடி அண்ட சராசரமும்

தங்கித் துலங்கிடும் தங்க மயிலோனே முருகா!

பொங்கி விரவும் துணிவும்

மங்காது விரியும் புகழும்

தங்கிடும் பொருளும் உயர்வும்

கங்கையாய் என்னொடு கலக்க

மங்களமாய் அருள்வாய் இறைவா!

எங்கள் பரம்பொருளே முருகா!         (அங்கிங்கெனாதபடி)

பயமும் கவலையும் என்னுள்

சுயம்பு ஆகாது விலகிட

வியனுறு நம்பிக்கை உயர்ந்திட

பயனுறு நலம் பெருகிட

நயமுறு அறிவு வளர்ந்திட

நயம் தருவாய் முருகா!                   (அங்கிங்கெனாதபடி)

அன்பு, பண்பு உயர்ந்திட

இன்பம், திண்மை வளர்ந்திட

வன்மை வறுமை ஒழிந்திட

திருமிகு தாய்மண் இணைந்திட

திருப்தியாய் தமிழோடு வாழ்ந்திட

திருவருள் தருவாய் முருகா!.            (அங்கிங்கெனாதபடி)

*

(விரவும்- கல, பொருந்து. சுயம்பு – தானாக உண்டானது.

வியனுறு-சிறப்பு, வியப்புடை. திண்மை- வலிமை, உறுதி.)

*

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

12-12-2004

*

banner7

 

5 thoughts on “1. அங்கிங்கெனாதபடி…..(28)

 1. Ganesalingam Arumugam :- வாழ்த்துக்களும் இனிய காலை வணக்கமும்.
  28 June 2013 at 08:06 ·

  கவிஞர் தாரை கிட்டு :- பழனியாண்டவா உனக்கு பஞ்சாமிர்த சுவைக் கவிதை!
  28 June 2013 at 08:34 ·

  Abira Raj :- அருமை வாழ்த்துக்கள்
  28 June 2013 at 09:07 ·

  Dhavappudhalvan Badrinarayanan A M:- “பயமும் கவலையும் என்னுள்

  சுயம்பு ஆகாது விலகிட ” அருமை. வாழ்த்துக்களும் இனிய காலை வணக்கமும் Sago.
  28 June 2013 at 09:33 ·

  Vetha Langathilakam Nanry – இனிய காலை வணக்கம்!

  Like

 2. சிறீ சிறீஸ்கந்தராஜா :- அருமையான பாடல்… இசைகூட்டி… மெட்டமைத்து வெளியீடு செய்தால் நல்லது.. வாழ்த்துக்கள் அம்மா!!
  28 June 2013 at 11:22 ·

  N.Rathna Vel :- அருமை. நன்றி.
  28 June 2013 at 11:25 ·

  Shankar Ngv :- அறுமையான பதிவு
  28 June 2013 at 12:35 ·

  யாழ். இலக்கியக் குவியம் :- பொங்கி விரவும் துணிவும்
  மங்காது விரியும் புகழும்
  தங்கிடும் பொருளும் உயர்வும்
  கங்கையாய் என்னொடு கலக்க
  மங்களமாய் அருள்வாய் இறைவா!
  எங்கள் பரம்பொருளே முருகா! ——-
  28 June 2013 at 12:53 ·

  Like

 3. சரவண பாரதி :- முருகு முருகு என்றேன் அவை அழகு அழகு என்றே என் செவிதனில் எட்டியது ! தமிழ் தமிழ் என்றேன் அவையும் முருகு முருகு என்றே தேனிசை சொட்டியது !
  28 June 2013 at 13:27 ·

  Mageswari Periasamy :- அனைத்து வரிகளும் அருமை. முருகக் கடவுளே மயங்கி நிற்பார் பாருங்க தோழி.
  28 June 2013 at 15:47 ·

  Loganadan Ps தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆத்மார்த்த அஞ்சலிக் கவிதை. அற்புதம்!!!
  28 June 2013 at 19:19 ·

  Verona Sharmila பயமும் கவலையும் என்னுள்
  சுயம்பு ஆகாது விலகிட
  வியனுறு நம்பிக்கை உயர்ந்திட
  பயனுறு நலம் பெருகிட
  நயமுறு அறிவு வளர்ந்திட
  நயம் தருவாய் முருகா! முருகனுக்கு அருமையான பாடல்.
  29 June 2013 at 07:24 ·

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s