3. சான்றிதழ்கள் – கவிதைகள்(13) கலப்படம்

 

 

puthumai i-7 -2016

*

 

கலப்படம்

*

செழிப்புடன் நடக்கும் வியாபார உத்தி.
விழிப்பணர்வு தான் மக்களுயர் புத்தி.
இழிஞர் செயல் இயற்கையையே ஏய்த்தல்
அழிப்பதிதை யென்பது முயற்கொம்பு வைத்தல்

*

பாலிலே நீர் புரதம் யூரியாவுடன்
பாதகமாய் அமோனியமும் கலக்கி விற்பனை.
பாலர்இ நோயாளிகளிற்கும் பாடாவதி செய்கிறார்.
பாதுகாக்கும் உயிருக்குதவும் மருந்திலும் கலப்படம்.

*

அரிசியில் கற்கள். நீரில் கழுவுகிறோம்.
அரிக்கன் சட்டியால் பிரித்து எடுக்கிறோம்.
சரியான பொருளின் சாயலில் இன்னொரு
உரித்தான பொருள் கலந்து பொருளீட்டல் கலப்படம்.

*

கூகிளிணையம் புகுந்து கலப்படப் பொருளறிந்தால்
கூச்சல் பயங்கரமாய் எழும் இதயத்தால்
நீரிழிவு நோய்இ வயதிற்கு மீறியவுடல்
நிறைஇ ஆபத்துகள் கணக்கின்றி வரும்.

*

விஞ்ஞானம் நன்மைஇ தீமையாய் சமூகவிரோதிகளாம்
மெஞ்ஞானமற்ற பணமுதலைகளின் கலப்படப் பெருக்கம்.
உணவுப் பாதுகாப்பாளர்இ தரக்கட்டுப்பாட்டாளர்இ சுற்றுச்
சூழல் மையங்கள் பரிசோதனை அவசியம்.

*

நன் கொடை இரத்தத்திலும் கலப்படமாம்
வன்மை நிலை! எத்தனை பேராபத்து!
இயற்கையோடு இணைந்த பொருட்கள் வாங்கி
செய்கையாய் வீட்டில் பொருளாக்கல் சிறப்பாம்.

*

நிலவரம் எதற்கும் துணியும் பணவெறியர்.
கலவரம் காக்க நல் விபரமறிந்து 
கலப்படமற்ற கொள் முதலே நலமுடைத்து
கலாச்சாரக் கலப்படம் இரவாட்டம் காதலர்தினமுமன்றோ!

*

 

 

divider

3 thoughts on “3. சான்றிதழ்கள் – கவிதைகள்(13) கலப்படம்

  1. Dharma Ktm :- வாழ்த்துக்கள் அக்கா
    · 23 July 2016 at 11:47

    Vetha Langathilakam :- நன்றி தர்மா இனிய காலை வணக்கம்.
    (இல்லை இங்கு பகல் 12.00)
    கருத்திற்கு மகிழ்ச்சி.
    23 July 2016 at 11:57

    Sarvi Kathirithambi .- கலப்படம் இல்லையேல் வாழ்வும் கசந்துவிடுமோ . . . . இன்பமும் துன்பமும் கலந்ததே நொடியின் நகர்வு . . . .விரைவாக பயணித்தலில் கலப்படம் என்பதே நியதி . . . . எவரையும் மாற்றி அமைக்க முடியவே முடியாது . நாம இப்படியேதான் என வாழ்வோம் . . . .வேதா அக்கா உங்கள் வெற்றி மாலைகள் வாடவே வாடாது . வாழ்த்துக்கள் !
    23 July 2016 at 23:03

    Vetha Langathilakam:- கருத்திற்கு மகிழ்ச்சி.
    மிக்க நன்றி
    23-7-17

    Sothi Sellathurai:- இனிய வாழ்த்துகள்.
    · 26 July 2016 at 06:12

    Vetha Langathilakam :-கருத்திற்கு மகிழ்ச்சி.
    மிக்க நன்றி
    23-7-2017

    Like

பின்னூட்டமொன்றை இடுக