1. பா மாலிகை (வாழ்த்துப்பா. 49) எங்கள் திருமணப் பொன்விழா. *

 

DSCF2857

*

எங்கள் திருமணப் பொன்விழா.

*

தாமரை மன்றத்தில் ஊதுபத்தி வாசம்.
தாமிரசாசனத்தில் நாமம் பதியும் ஓசம் (மிகு புகழ்).
சாமரம் வீசும் தேவதைகள் சேவகம்.
மாவிலைஇ தோரணங்கள்இ மேளங்கள் தாளம். 
மாங்கலியம் பூண்டு ஐம்பது வருடங்கள்
மாண்புடைத் திருமண பொன்விழா பொலிந்தது.
மாயமில்லாப் புன்னகையின் மாட்சியில் மாதவம்
மாதுரியமாய் இல்லமெங்கும் பரந்து விரியுது.

*

அன்புப் பூவிதழ்கள் சொரிந்து வாழ்த்த
இன்பப் புன்னகை இதழ் பிரிந்திட
துன்பப் புகை விலகி ஒழிந்திட
வன்ம சேலைகளை ஒதுக்கிய ஒளிசுடருது!
வாழ்வில் தங்கத் தளிர்கள் வளர்ந்து
தாழ்வின்றி வரம்புடன் உயர்தல் நிறைந்தது.
தாழ்த்திடத் தாண்டவம் ஆடுதல் தவிர்த்து
தாவிப் பறக்கலாம் சிறகுகள் சிலுப்பி.

*

வெள்ளி(25) முத்து(30) மாணிக்கம்(40) இப்போது
துள்ளி வந்தது பொன்விழா(50) ஆண்டு
பள்ளமற்ற அகத்திணை வாழ்விலிது (21-7-2017)
வெள்ளமென மக்களின்றியெம் பிள்ளைகள் பேரருடைநாள்.
அருகிலிருந்த அன்புப்பூஇ சுறுசுறுப்பான இலக்கியம்
கருவிட்ட தோற்றப் புலமைத் தமிழ்
மெருகிட்டு எழுதிய கவிதைக் கோலம்
திருடியது என்னை வியப்பு இல்லை!

*

வாழட்டும் ஆரோக்கியம் ஆனந்தம் நீள!
வளருமன்பும் நீளட்டும் மாதவன் சேலையாக
வாணாள் முழுதும் இறையருளும் நீளட்டும்!
வசந்தமுடை நந்தவனம் இல்லறம் என்பதாகி
வளரும் இளையோருக்கு இது உதாரணமாகட்டும்!
வலிமைஇ பொறுமை வடக் கயிறெடுத்து 
வசமாக்கும் இல்வாழ்வு வலம்புரியென வளமாகும்
வாழ்த்தட்டும் அன்பு மனங்கள் நிறைந்து!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-7-2017

*

50th-wedding-anniversary-poem

*

(பா மாலிகை வாழ்த்துப்பா 48 – எனது முதல் வலையிலிருக்கிறது. https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/ )

*

aaaaa

 

Advertisements

7 thoughts on “1. பா மாலிகை (வாழ்த்துப்பா. 49) எங்கள் திருமணப் பொன்விழா. *

 1. Umapathysivam Thambipillai · Friends with Ramanan Ramachandran:-
  மகிழ்ச்சி ததும்பும் இனிய கவிதை,இன்பம் சூழ்ந்த ஐம்பதாண்டு மனம் நிறைந்த இல்லறப்பயணம்,அப்பயணத்தில் மலர்ந்த நறுமணம் நிறைந்த மலர்கள்-
  இவை யாவும் இறைவனருளிய வரங்கள்.
  தொடரட்டும் உங்கள் இன்பம் சூழ்ந்த இல்லற வாழ்வு பல்லாண்டு என இவ்வாழ்த்தி மடல் அனுப்புவதில் பெருமகிழ்சியடைகிறேன்
  4-8-2017

  Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி உறவே..கவிதை பற்றி எழுதியது மிக மகிழ்வு.
  தங்கள் வாழ்த்திற்கும் இறையாசி நிறையட்டும்.எங்களிற்கு தாங்கள் மூத்தவர்.
  தங்கள் ஆசீர்வாதம் மிக மகிழ்ச்சி தருகிறது. நன்றி…நன்றி…
  4-8-2017

  Like

 2. Jeyam Thangarajah:- பூவும் வண்டென,பா கூற வரவில்லை .
  பொன் விழாவை,மண்வாழ்வில்,உண்டாக்கிக் கொண்டாடும்,ஒரு ஜோடியின் மணநாள் திருநாளில் ,வாழ்வின் வேதங்களின் வாழ்த்துக்களை நாதமாக்கியபடி…காதல் சுகம் நூறாகட்டும்.மூழ்கிக் கழித்த மகிழ்ச்சியின் நிகழ்ச்சிகள்,நான்கு விழிகளில் துளிர்விட்டு வழியட்டும்.உயிரக்ள் மகிழ்ந்துருகி ,மகிழ்ச்சி அமுதை நாட்களுக்குள் கரைக்கட்டும்.பாக்கியம், மெய்யாய் பாக்கியம் செய்துகொண்டதுவோ ,மண்ணின் சொர்க்கம் இவர்களென ,ஐம்பதின் இல் வாழ்க்கை, நாள் வாழ்க்கை இரசிகர்களை,தேடிச்சென்று புகழ்மாலை சூடுகின்றேன்.தங்கள் ஆசைகள் திசை எட்டும் அரங்கேறி,வானம் போல நீண்டு வாழ வாழ்த்துகின்றேன்,இப் பிரபஞ்சத்துடனும், அதை உண்டாக்கிய எல்லாம் வல்லவருடனும் சேர்ந்து…
  5-8-2017
  Vetha Langathilakam :- இதுவே பா தானே உறவே.
  அருமை. மகிழ்ச்சி. மிக்க நன்றி யெயம் தங்கராஜா.
  இறை ஆசீர்வாதத்துடன் எங்கள் ஆசிகள் வாழ்த்துகளும் சேர்க்கிறேன்.
  6-8–2017

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s