11. பா மாலிகை ( கதம்பம்) இப்ப என்ன பண்ணுவ.. (506)

 

13962481_1571369989835078_1254058300487189822_n

*

இப்ப என்ன பண்ணுவ..

*

(காராகிரகம் – சிறைச்சாலை)
அமைதியான ஏழைத் தங்கம்
சீதா திறமைசாலி பருத்தியாடைக்காரி
ஒதுக்கப்படுவாள். லலிதா பணக்காரி
பளபளப்பு ஆடைக்காரி திறமைசாலி.
ஒரே வகுப்புக்காரர் கல்வியகத்தில்.
*
பரபரவெனப் பிரபலமானவள் லலிதா.
அவள் பணத்தில் மயங்கிய
அனைவரும் அவளைக் கொண்டாடிப் புகழ்ந்தனர்.
நட்புக் குழுக்களவளைத்
தலையில் வைத்துச் சீராட்டினர்.
*
விசேட பரீட்சையொன்று வந்தது.
பெண்கள், ஆண்களில் ஒவ்வொருவர்
தெரிவாம். பரீட்சை முடிந்தது.
பரிசளிப்பு நாள் காலை
பிரார்த்தனைக் கூட்டம் கூடியது.
*
பெண்களில் சீதா முதலிடம்.
அமைதியாயங்கு பரிசை ஏந்தினாள்.
அனைவரையும் சீதா நிமிர்ந்து பார்த்தது
”இப்ப என்ன பண்ணுவ ”
என்றது போன்று இருந்தது.
*
பாரபட்சம் காட்டுதலொரு வகை
காராகிரகம் உணர்வு ரீதியில்.
சீரான மனுகுலமொரு வகையே.
பிரித்துப் பேதமாக்குகிறான் மனிதனே
பரிவான மனிதநேயம் பரிதாபம்.!
*
ஆதிகால சாதி முறையின்றும்
பாதியாக உள்ளது மறையவில்லை.
பேதியாக பெற்றோருக்கு இக்கால
இளையவர் திருமணங்கள் சவாலாக
”இப்போ என்ன பண்ணுவ” என்கிறது.
*
சமயங்கள் சடங்குகள் பூசனைக்குரியவை
இமயம் ஏறும் யதார்த்தமாயின்று
வேக உணவுபோன்ற நிலையாயனைத்தும்
இந்நிலை பெரியவர்களை ”இப்போ
என்ன பண்ணுவ” என்றிளிக்கிறது.
*
விதி விதியென மனதாறும்
நிலைமாறியுயர்வுகள், காத்திராத மாற்றங்கள்
சாதனைத் திறமைகள் ஒவ்வொருவரையும்
”இப்போ என்ன பண்ணுவ”
எனத் திகைக்க வைக்கிறது.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 9-8-2016 –
*
400_F_3567131_TyQmoFWmgvILrh0SZfuqUzWA5JzKDtJX -2
Advertisements

3 thoughts on “11. பா மாலிகை ( கதம்பம்) இப்ப என்ன பண்ணுவ.. (506)

 1. மகாதேவன் செல்வி :- பருத்தி முதலிடம் பிடித்தது. இப்ப என்ன பண்ணுவ?
  · 10 August 2016 at 19:14

  Vetha Langathilakam:- …,இப்ப என்ன பண்ணுவ?….nanry sakothara..
  10 August 2016 at 20:14 ·

  Premkumar Prajana :- அருமை
  10-8-2016

  கருத்திடலி6ற்கு மகிழ்ச்சி.Premkumar Prajanaww 10-8-16
  மிக நன்றி உறவே.
  கருத்திடலிற்கு மகிழ்ச்சி. 10-8-16
  ·

  Premkumar Prajana:- மகிழ்ச்சி மா
  10-8-16

  Like

 2. சி வா :- எளிமையும்
  அடக்கமும்
  என்றுமே வெல்லும்..
  “இப்ப என்ன பண்ணுவ”..

  மிக அருமை வேதாம்மா..
  · 11 August 2016 at 08:07

  Vetha Langathilakam :- மிக நன்றி உறவே.Siva.
  கருத்திடலிற்கு மகிழ்ச்சி
  11 August 2016 at 08:48

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s