12. பா மாலிகை(கதம்பம்) (507)காலத்திற்கும்……

 

kalam

*

காலத்திற்கும்……

*
 
ஓடிக் கொண்டேயிருக்கும் மன எண்ணம்
பாடிக் கொண்டேயிருக்கும் தினம் தினம்
புல்லாங்குழல் துளைகளால் இசை வழிகிறது.
பல்லாங்குழி ஆடி ஆசுவாசமாகிறது மனது
*
கண்களிற்குத் தெரியும் வானச் சுவர்.
எண்ணத்தில் தெரிவது கடல் தொடுவதாய்
சுவருமில்லை கடல் தொடுவதுமில்லை. ஓரு
மாயத் தோற்றம் கானல் சுவரேதான்.
*
தேவர்களல்ல அவர்கள் வெறும் மானிடரே
தேவதருவல்ல மனம் ஊன் உதிரமுமே
எல்லாப் பூக்களும் மணப்பதில்லை நெஞ்சில்
நில்லா மணங்கள் எனவும் உண்டே
*
ஈனச் சுவர் ஊனச் சுவரிடியும்
சீனச் சுவர் மானச் சுவரிடியாது
கான அலை காதில் கேட்டபடியே
காலத்திற்கும் நெஞ்சில் பாட்டு ஓடும்.
*
வேதா. இலங்காதிலகம் 11-8-2016
*
border- 4
Advertisements

3 thoughts on “12. பா மாலிகை(கதம்பம்) (507)காலத்திற்கும்……

 1. Alvit Vasantharany Vincent :- Vetha Langathilakam ஓ! எங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.
  11 August 2016 at 22:02

  Alvit Vasantharany Vincent :- மிக இளையவராகத் தெரிகிறாரே.
  11 August 2016 at 22:02

  Subajini Sriranjan:- தொடுவானம் /இனிய வரிகள்
  · 11 August 2016 at 21:06

  Vetha Langathilakam:- அன்புடன் மிக்க நன்றி சுபா. மகிழ்ச்சி.
  11 August 2016 at 21:54

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s