2. பா மாலிகை (அஞ்சலிப் பா )24

 

fraa

*

கண்ணீர் அஞ்சலி

*

மலர்ந்தது வாழ்வு 30-8-1956ல்
உதிர்ந்தது (5-8-2017) அறுபத்தொரு அகவையில்.
உறவென்று கூடி உயிராய் உறவாடி
உருண்டோடும் வாழ்வு நிலைக்குமென்ற கனவு
உதிர்கிறது மரணத்தின் கொடிய முத்தத்தில்.
இது நிசமா! மறுபடி எழுந்திடமாட்டாரா!..
மனம் ஏங்குகிறது சொல்லாமல் சென்றதற்கு.
இயல்பான வாழ்வோடான நட்பு இனியில்லையா!
யாழ் வேலணை கரம்பொன் கொன்றையிலுதித்து
சுவிஸ்ல் மறைவது ஒரு விதியானதே!
அன்பு, பண்பு, பாசம் அனைத்தும்
அந்தரத்தில் அறுகிறது! ஆசை வைத்தலே
அவலமாகும் வாழ்வை ஆழ்ந்து நேசித்து
அகம் கலங்கிப் பிரியாவிடை கொடுக்கிறோம்.
அன்புறவுகளின் மனம் ஆறுதலடைய வேண்டும்.
இத்தனை காலம் உறவாடிய உங்களுறவு
அதிர்ந்து பேசாத அன்பும் பண்பும்
அனைவரையும் அணைக்கும் இதமான பாங்கும்
அடங்கியது தாங்கவியலாத ஆழ்ந்த துயரமாய்
நினைவுகளால் நாமும் மரணிக்கும் நிலையானதே!
அன்புடைய பழனியப்பா அருளார் அமலன்
ஆத்மா இறைபாதத்தில் அமைதியடையட்டும்!
இவர் பிரிவால் கலங்கும் உறவுகளின் மனமும்
அமைதியடையட்டும்! எமது கண்ணீர் அஞ்சலிகளைச் சமர்ப்பிக்கிறோம்.

ஓம் சாந்தி..சாந்தி!

அஞ்சலிப்போர்:- வசந்தன் மாணிக்கவாசகர்
நந்தினி மாணிக்கவாசகர்.
சுவிஸ் ஆவணி 2017.

*

 

mybar

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

2 thoughts on “2. பா மாலிகை (அஞ்சலிப் பா )24

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s