13. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(புவியை மறந்த மேகங்கள்.)

 

 

sank-bara13

*

புவியை மறந்த மேகங்கள்.

*

கவிஞர் கவியை எழுத மறந்திடார்.
அவிப்பாகத்தை வேள்வியாளர் தர மறந்திடார்.
குவிதலால் கூம்பு, கோளம் காண்கிறார்
புவியை மறந்த மேகங்கள் குளிராததால்
பூமியை நனைக்காது வெப்பம் உயருகிறது.

*

பாளம் பாளமாய்ப் பூமாதேவி காய்ந்து
கூளமாய் இலைகள் பழுத்து விழ்கிறது.
கோளமாம் பூமியின் காதலையேன் மறந்தாய்!
தாளமிடும் மழையையேன் அனுப்ப மறந்தாய்!
மேளம் கொட்டும் இடியுடன் வருவாய்!

*

காடழித்து சூழலை மாசு படுத்தினோம்.
நாடழித்து தொழிற்சாலை, வாகனப் புகையால்
கேடதிகரித்து வெப்பம் ஏறியது உண்மை.
பாடறிந்து திருந்தி மரங்கள் நடுவோம்.
கூடடைவதான உன்னோட்டம் குறைத்து குளிர்வாயாக!

*

வெண் பஞ்சு மேகங்களே அசதியா!
விண் மறந்து இறங்க மனமில்லையா!
கண் துஞ்சுகிறீர்களா! கேள்விக்கு பதிலென்ன!
தண்புனலாம் மழையின் ” சோ ” என்னும்
பண்ணிசை காது குளிர இறங்கட்டுமே.

*

நீரினாவிகள் பாரமில்லையா! முகிலே!
நீர்க்கட்டி நோயாகாதா! நீசக்கிரகங்களுன்னைச் சுற்றியதா!
நீவிவிடக் குளிர் காற்று மறுத்ததா!
நீர்க்கோலம் போட மழையை அனுப்பிவிடு!
நீயாக வருவாய்! புவியை மறந்த மேகங்களே!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-5-2017

*

cloudbar550

Advertisements

4 thoughts on “13. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(புவியை மறந்த மேகங்கள்.)

 1. Sri Mathy :- அழகான சொற்கள். நிச்சயமா மழை வந்துவிடும். உரத்த குரலில் வாசித்தால். அருமை அம்மா.

  MadhuraGroup admin :- மழையின் பண்ணாசை கேட்க ஆசைதான்…
  முகிலே நீர்க்கோலம் போட மழையை அனுப்பிவிடு…
  அருமை மா…வாழ்த்துகள்
  12-5-2017

  Vetha Langathilakam :- Sri Mathy மிக நன்றி பகிர்விற்கு. படக்கவிதை எழுதினேன் மதம்
  பற்றி. எடுபடவில்லை . இதுவும் எப்படியோவென யோசித்தேன்.
  கருத்திற்கு மகிழ்ச்சி உறவே.

  Vetha Langathilakam :- Madhura மிக நன்றி பகிர்விற்கு. . கருத்திற்கு மகிழ்ச்சி உறவே.

  Sri Mathy :- எனதும் படக்கவிதை எடுபடவில்லை. .

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s