78. பா மாலிகை ( கதம்பம்) ஆசை. 564.

 

 

rain

*

ஆசை.

*

வெட்டவெளியில் கொட்டும் மழையில் என்
பட்டு உடை நனைத்து நீரில்
சொட்டச் சொட்ட நனைய ஆசை.

*

சின்னக் கூந்தல் வளர்ந்து என்
பின்னங் காலைத் தொட்டு நீள
பட்டுக் குஞ்சம் கட்ட ஆசை.

*

தென்னை மரத்தில் ஏறி அந்தச்
சின்னக் குருவி பிடித்து மெல்ல
சின்ன இறக்கை நீவ ஆசை.

*

கடல் அலைகள் மடிந்து மடிந்து
கடலினுள் ஒழிந்து எழுந்து வந்து
கால்கள் கழுவும் உணர்வு ஆசை

*

வண்ணம் அடித்த கோழிக் குஞ்சை
சின்ன முயலின்பஞ்சு மென்மையை
கண் இமைக்காது இரசிக்க ஆசை.

*

கடற்கரையில் நீண்ட நேரம்
வானம் பார்க்கக் கொள்ளை ஆசை
வெள்ளை மணலை அளைய ஆசை.

*

இசையோடு இருக்க, கலையை இரசிக்க
இடைவிடாது ஓவியம் வரைய
மடை திறந்த ஆசை ஆசை.

*

பெரிய வளவைப் பெருக்கி ஒதுக்க
பெருமிதம் நிறைந்த அளவிறந்த ஆசை
ஆசைகளில் இiவை சிற்றளவு வீசை.

*

12-6-2001

*

 

vanna koli-b

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s