7. கண்ணதாசன் சான்றிதழ் (24)இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்…..

 

kavichatal - elakkanaththil valli-7-3-17

*

Poongavanam Ravendranதமிழமுது கவிச்சாரல்

· 10 March ·

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
– பாவேந்தர்

கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் 7–3–17 நாளாம் போட்டி கவிதையின்

#தலைப்பு__#இலக்கணத்தில_வல்லினம்_காணவில்லையாம்_எடுத்து_சென்றாயோ_நீ_ஏதும் தொடரவும் 

வெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*
தலைப்பு:- இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்
எடுத்துச் சென்றாயோ நீ ஏதும்….

இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்
எடுத்துச் சென்றாயோ நீ ஏதும்
அன்றி துலக்குவாயோ அழகாக
மூன்று இன எழுத்துகளறிவாயா!

கசடதபற – வல்லினம் கட்டுவாயா!
ஙஞணநமன – மெல்லினமா ! அன்றி
யர லவழள – இடையினமா சொல்!
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இது.

இது எம்மொழி நம்மொழி.
வல்லொலிகள் கொண்ட மெய்யெழுத்து.
வல்லினமும் உயிரெழுத்தும் சேர்ந்து
நல்ல தமிழ் உருவாகும்.

வல்லினத்தை மெல்லினம் திருடுமா!
வலிமை போதாதிருக்கலாம் அன்றோ!
வல்லினம் இடையினத்தில் ஒளிந்திருக்க
நல்ல வாய்ப்புண்டு காமமிகுந்தால்.

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவில்
வல்லினம் மிகாது. அத்தனை,
இத்தனை, எத்தனையிலும் மிகாது.
அஃறிணைப் பன்மையிலும் மிகாது.

எட்டு பத்து தவிர
மற்றைய எண்கள் பெயர்
பின் வரும் வல்லினம்
மிகாது என சிறிதறிவோம்.
*

7-3-2017   வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

31851321-certificate-template-vector

Advertisements

6 . கண்ணதாசன் சான்றிதழ்(23) சூது கவ்வும் வாழ்வு

 

 

kavichatal-suthu kavvum 2-3-17

*

Poongavanam Ravendranதமிழமுது கவிச்சாரல்

Admin · 3 March ·

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
– பாவேந்தர்

வணக்கம் பாவலர்களே#கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் 1–3–17 நாளாம் போட்டி கவிதையின்

#தலைப்பு_#சூது_கவ்வும்_வாழ்வு 

வெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தமிழமுது கவிச்சாரல். 28-2-2017
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*
சூது கவ்வும் வாழ்வு

*

சூது கவ்வும் வாழ்வு.
வாது வஞ்சம் சூழ்வு.
பாதுகாப்பு இல்லா தாழ்வு.
வேதனைக் குளத்தில் ஆழ்வு.
ஏது நிம்மதியென ஆய்வு.

நீதி நேர்மையில் தோய்ந்து
பீதி விலகிய அன்பிலாழ்ந்து
ஆதிசிவனின் பக்தியை மோந்து
மதியைப் புகுத்தித் திடமாய்
விதியை வெல்வது நிம்மதி.

கேடுடை சகவாசம் விலக்கி
கேள்வி கல்வியைப் புகுத்தி
நாடும் நல்லுள்ளங்களை அணைத்து
நல்லவை உலகிற்குச் செய்தால்
தொய்வில்லா ஆனந்தம் கூடும்.

சூது கவ்வி இருண்டது
மகாபாரதக் காவியம். பின்பு
சாகாத தர்மம் வென்றது.
கார்மேகமும் சூதாகவே கப்புகிறது.
தர்மமே மழையாகி வெல்கிறது.

சூசகமின்றி சூது வரும்.
சூக்குமம் அறிந்து தந்திரமாய்
சூட்டிகையாய் வெல்லல் திறமை.
நம்ப நட, நடவாதே
நம்பி. இதுவே வெற்றியாகும்.

*

blackwith colour

 

5. கண்ணதாசன் சான்றிதழ்(22) நதியில்லாத ஓடம்….

kavichatal- nathijillatha oodam -20-1-17

*

· 25 January · 

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு

இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
– பாவேந்தர்

#கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்

தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 20–1–17 நாளாம் போட்டி கவிதையின்
#தலைப்பு_நதியில்லாத_ஓடம் 

வெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*
தமிழமுது கவிச்சாரல் 20-1-2017-
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
தலைப்பு:- நதியில்லாத ஓடம்

நதியிலே ஓடமாய் நகர்தல் களிப்பு.
பதியின் அன்பிலே திளைத்தல் செழிப்பு.
மதியின் ஒளியிலே இரவின் விழிப்பு.
சதியில்லா வாழ்வும் நீரில்லா நிலையே.

இறை வணங்கா வாழ்வு வெறுமை.
கறையான வாழ்வு மானுடச் சிறுமை.
கருத்தில்லாக் கவிதை தமிழுக்கு வறுமை.
காதலில்லா வாழ்வு நதியில்லா ஓடம்.

எழுதவியலா நிலை பதட்ட நினைப்பு.
பழுது உடலினால் பரிதாபம் நிலைப்பு.
அழுது ஆவதில்லை சத்தியம் தவிப்பு.
உழுததை நினைப்பார் வயலில்லா வேளை.

வாதை தரும் மது துணையில்
போதை வாழ்வு வாழ்பவன் சமூகத்தில்
கீதை வாழ்வு வாழ எண்ணும்
பாதையும் ஒரு நதியில்லா ஓடம்.

குறியோடு வாழ்ந்தவர் தலை குனிந்து
தறிகெட்ட பிள்ளையினால் தகுதி இழந்து
அறிவிலி தாமோவென்று தடுமாறும் போது
முறிந்த மனதாளர் நதியில்லா ஓடம்.

 

divider_123

4. கண்ணதாசன் சான்றிதழ்(21) ஏக்கம்.

 

eaKKam...

*

கவிஞர் கண்ணதாசன் சிறப்பு சான்றிதழ்  (கண்ணதாசன்- வெண்கலம்.)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

ஏக்கம்.

*

ஏக்கம் பெரும் மனத் தாக்கம்.
ஊக்கம் அழித்துத் தூக்கம் கெடுக்கும்.
பூக்கும் நல்லுணர்வுகள் தாக்கிச் சிதைக்கும்.
ஆக்கபூர்வச் செயல்களை நீக்கும் உணர்வு.

*

ஏழ்மை பிரதிபலிக்கும் சிறுவன் படம்
ஆழ்ந்த ஏக்கம் அப்பிய முகம்.
வீழ்ந்திடாது கையொன்று தாங்கினால் இவன்
வாழ்ந்திடும் நிலையின் சோகம் தொலையும்.

*

கருவில் ஒரு குழந்தைச் செல்வம்
உருவாகாத ஏக்கம் தம்பதிகள் வாழ்வில்
பெரும் தாக்கம், சில சாதனைகளும்
தருவிக்கும் நோக்கம் கொண்டும் மாற்றும்.

*

‘பருவம்’ எழுதி ஒரு (வெண்கலச்) சான்றிதழ்
துருவமாகிப் போன ஏக்கத்தின் தாக்கம்
சருகாகி மறையலாம் திருவாக உயரலாம்
பெருமை அறுபத்தொன்பதிலும் எழுதுவதெனக்கு.

*

உங்கள் அறுபத்தொன்பதில் என்ன செய்கிறீர்களென்று
பார்க்க மந்திரத் தூர நோக்கி
ஒன்று வேண்டுமென்பது என் ஏக்கம்!
ஓராயிரம் ஏக்கங்கள் எழுத இடமில்லையே!

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 23-8-16

*

 

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉

3. கண்ணதாசன் சான்றிதழ் (20)

 

venkalam- 3

*

கண்ணதாசன் சிறப்பு வெண்கலச் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

�#�ஆசைகளின்_படியில்�

கவிதையுலகப் பூஞ்சோலை கண்ணதாசன் வெண்கலம்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 16-8-16
தலைப்பு:- ஆசைகளின் படியில்.

*

யாரும் தடுக்க முடியா ஆசை
நீரூற்றுகள், கனவுக் குமிழிகள்!
காற்றுடைந்து போகும், கையில்
பற்றி உடைக்கவும் முடியும்.

பேராசைகளாகப் பெருகி வருத்திடும்.
விளக்கேந்திய சீமாட்டியும் வரலாம்.
சுனாமியும் சூறையாடலாம்.
தொடுவானமும் ஆகிடலாம்.

நெஞ்சம் அச்சாகிச் சுழலும்
நினைவுகள் நம்பிக்கையின் படியில் தான்.
மேக நட்சத்திரங்களான ஆசைக் குவியல்கள்
யாருக்குச் சுமந்திடக் கனதி!

கடதாசிக் கப்பல் செய்யப் பயிற்சி
காட்டித் தந்தது கைவினை ஆனது.
மழை நீரில் கப்பல் அசைந்தது.
மட்டில்லாவின்பம் கப்பல் கண்டு பிடித்தவராக.

ஆடியாடிப் போனது இரு பக்கமும்.
சிறு கற்களை ஏற்றுவோமென ஆசை
கற்களோடு படகு மெல்ல நகர்ந்தது.
மழையில் நனையப் படகு கவிழ்ந்தது.

மனம் சாய்ந்தது.. அளவாசையால் அவலமில்லை.
அடியடியாக உயர்ந்து அமைதியாகப் போகலாமே
அளவிற்கு மிஞ்சினால் கவிழும் படகாகி
கண்ணீருடன் இரணமும் தான் மிஞ்சுமே

ஆசையால் அழிந்த காவியங்கள் பல.
இராமாயணம் மகாபாரதம் நிறைய சொல்லும்.
மண் பெண் பொன் பொருளாசைகள்
ஆசையை விட்டார் உலகில் எவர்

சூரியன் ஆசையின்றிக் கதிர் வீச
சந்திரன் ஆசையின்றிப் பால்நிலா எறிக்க
பூமி ஆசையின்றிச் சுற்றிக் கொண்டேயிருக்கிறது.
கௌதம புத்தரும் ஆசையைத் துறந்தார்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 16-8-2016

kavijula -naduvar

 

 

 

 

 

2. கண்ணதாசன் சான்றிதழ்(19)

 

vilikalin ekkath - 19

*

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
– பாவேந்தர்

வணக்கம் பாவலர்களே#கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்

தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 24–1–17 நாளாம் போட்டி கவிதையின்
#தலைப்பு_விழிகளின்_ஏக்கத்தையே…தொடரவும் கோர்வைகளாகும்#பலவிரல்கள்_ஆறுதல்_கூற_பின் 

வெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

#கவிதாயினி_கவிச்சிற்பி_சிவதர்சினி_ராகவன்_நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


தமிழமுது கவிச்சாரல் 23-1-2017
வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.
தலைப்பு:- விழிகளின் ஏக்கத்தையே……….
கோர்வைகளாகும் பல விரல்கள் ஆறுதல் கூற பின்.
விழிகளின் ஏக்கத்தையே பிரதிபலிக்கும்
அழிவுடை பசியில் ஆழ்ந்திருக்கும்
கழிவிரக்கத்திற்கு ஆட்படும் சிறார்கள்
அழிந்திட மாட்டார் மாறாக
வாழ்வினில் உயர்ந்தோர் உதவியில்
இழிவற்ற நிலைக்கு ஏகி
விழிகளில் நிறைவு கண்டால்
எழிலாகக் குறைகள் மறைந்திடும்.

*

காதலனின் பிரிவால் வாடி
காலை மாலையாய் ஏங்கியவள்
காத்திருக்கும் நீள் பிரிவில்
பூத்திருக்கும் விழியின் ஏக்கம்
பார்த்திருக்கப் பறந்து போகும்.
கோர்த்திடும் மந்திர மாயம்
ஈர்த்திடும் காதல் தானே!
பார்த்திருக்கப் பசுந்தாகும் காதல்.

*

குழந்தையின் ஏக்கம் என்றும்
குறைவற்ற பெற்றோர் அணைப்பில்.
நிறைவில் ஒன்று குறைந்திடினும்
மறையாது விழியின் ஏக்கம்.
இறையருளால் நெருங்கும் அன்பாளர்
குறையற்று ஆதரவாய் அணைத்தால்
கோர்வைகளாகும் பல விரல்கள்
ஆறுதல் கூற பின்.

*
puple colour

1. விழிதாண்டும்_நினைக்கையிலே கண்ணதாசன் சான்றிதழ்(18)

 

vili thaandum- 18

*

கவியுலகப் பூஞ்சோலையின் 12-8-16 ஆம் நாளான போட்டி தலைப்பின் கவிதை #விழிதாண்டும்_நினைக்கையிலே# இன்றைய போட்டி கவிதையின் வெற்றியாளர் #கவிஞர்Vetha LangathilakamLangathilakamஅவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்  

#விழிதாண்டும்_நினைக்கையிலே#
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

*

கண்ணதாசன் சான்றிதழ் வெண்கலம் 
தலைப்பு:-
விழி தாண்டும்…. (ஆரம்பம்)
நினைக்கையிலே….(முடிவு)

*

விழி தாண்டும் காட்சியல்ல அதை
மொழிந்திட சொற்கள் இல்லை உண்மை
வழி நீண்டு விரியும் செழுமை.
மொழி தேடித் திணறும் நிலைமை.

*

இளம் பச்சை முதிர் பச்சையாய்
எழிலாய் நிமிர்ந்து வானம் பார்க்கும்
இலங்கைச் செல்வம் பசுமை தேசத்தை
எமக்காய் உயிலெழுதியது போன்ற நிலை.

*

என்னைக் கிள்ளேன் என்னைக் கிள்ளேனென்று
எல்லையற்றுக் கண் விரிவில் தெரிந்த
தேயிலைக் கொழுந்துப் பச்சை கண்களிற்குக்
களிப்பு மாலை சூட்டியது அற்புதம்.

*

பசுமைக் கானகம் வெளிச்ச வானப்பரப்பு
பள்ளம் மேடாய் மலைப்பாங்கு வனப்பு.
இதயத்தில் மழை பொழிய உள்ளே
முல்லை மொட்ட விழும் உணர்வு.

*

மேட்டில் வைக்கும் பொருளுருண்டு சரசரவெனப்
பள்ளத்தில் சேர்க்கும் தேயிலையின் மட்டமழகு.
இவ்வழகைச் செதுக்கும் பிரம்மாக்கள் வாழ்வு
அவலத்தில், வரிசைக் குடியிருப்பின் உள்ளே.

*

ஒரு அறையோடு ஒட்டிய மனை
முழுக் குடும்பமும் அதனுள் சயனம்.
அன்றிலிருந்து இன்று வரை போராட்டங்கள்.
அவர்களிற்கு விடிவென்பது இன்னும் இல்லை.

*

பூலோக சொர்க்கமான இம்மேதகு வாழ்வு
பூச்சிதறலாகப் பிரித்தது இனக் கலவரம்.
எண்ணும் தோறும் விழி தாண்டும் நீர்
என்னுயிர்க் காதலனும் அன்று அழிந்தான்.

*

முன்னூறு தொழிலாளருடன் அழகிய மலையில்
பதினேழு வருட வாழ்வின்றும் கனவிலும்.
இழுத்துப் போர்த்தினாலும் சோகம் சோகமே
இதயம் மறக்காத காதலதை நினைக்கையலே….

*

வேதாவின் வலை முதலாவதில் 16 கண்ணதாசன் சான்றிதழ் ஆக்கங்களும் 17 சான்றிதழ்களும் உள்ளது. அதன் தொடர்ச்சியே இது.
அந்த இணைப்பும் தருகிறேன்.

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 12-8-2016

*

divider lines.jpg - A