3. சான்றிதழ்கள் (17)– கவிதைகள். பூஞ்சோலையில் ஒரு பொன் வீணை.

 

 

*

பூஞ்சோலையில் ஒரு பொன் வீணை.

*

பூச்சிதறும் நந்தவனம் உள்ளே அங்கேயா!
பூபாளம் இசைக்கும் பெண்ணா வீணையா!
பாச்சிதறும் ஒரு தமிழ் வீணையா!
பூங்கணை வீசுமொரு பெண் வீணையா!

*

பூவுலகில் இன்பங்கள் கோடி பல
பூரித்து மகிழ்கிறோம் நாளும் சில.
பூஞ்சிட்டுக்கள் ஒரு புறம் கலகலக்க
பூங்காற்று மனசெல்லாம் பூமணம் தூவியது.

*

பூமுகம் மலர்ந்தவொரு பெண் சிலையருகே
பூபாள இசை கேட்குமொரு குழந்தை
பூங்கோயிலெனத் தாய் முகம் பார்க்க
பூரித்து இராகம் இசைக்கிறாள் வீணையில்.

*

மஞ்சள் பட்டு உடுத்திய அவள்
மரகதச் சிலையாய் தாய்மை பொங்க
மிஞ்சிய இசையாய் தாய்மையாய் சிரிக்கும்
பூஞ்சோலையில் ஒரு பொன் வீணையவள்.

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
25-5-2016

 

end

2. சான்றிதழ்கள் – கவிதைகள்(16) கலப்படம்

 

Image may contain: 1 person

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

 

கலப்படம்

*

செழிப்புடன் நடக்கும் வியாபார உத்தி.
விழிப்பணர்வு தான் மக்களுயர் புத்தி.
இழிஞர் செயல் இயற்கையையே ஏய்த்தல்
அழிப்பதிதை யென்பது முயற்கொம்பு வைத்தல்

*

பாலிலே நீர் புரதம் யூரியாவுடன்
பாதகமாய் அமோனியமும் கலக்கி விற்பனை.
பாலர்இ நோயாளிகளிற்கும் பாடாவதி செய்கிறார்.
பாதுகாக்கும் உயிருக்குதவும் மருந்திலும் கலப்படம்.

*

அரிசியில் கற்கள். நீரில் கழுவுகிறோம்.
அரிக்கன் சட்டியால் பிரித்து எடுக்கிறோம்.
சரியான பொருளின் சாயலில் இன்னொரு
உரித்தான பொருள் கலந்து பொருளீட்டல் கலப்படம்.

*

கூகிளிணையம் புகுந்து கலப்படப் பொருளறிந்தால்
கூச்சல் பயங்கரமாய் எழும் இதயத்தால்
நீரிழிவு நோய்இ வயதிற்கு மீறியவுடல்
நிறைஇ ஆபத்துகள் கணக்கின்றி வரும்.

*

விஞ்ஞானம் நன்மைஇ தீமையாய் சமூகவிரோதிகளாம்
மெஞ்ஞானமற்ற பணமுதலைகளின் கலப்படப் பெருக்கம்.
உணவுப் பாதுகாப்பாளர்இ தரக்கட்டுப்பாட்டாளர்இ சுற்றுச்
சூழல் மையங்கள் பரிசோதனை அவசியம்.

*

நன் கொடை இரத்தத்திலும் கலப்படமாம்
வன்மை நிலை! எத்தனை பேராபத்து!
இயற்கையோடு இணைந்த பொருட்கள் வாங்கி
செய்கையாய் வீட்டில் பொருளாக்கல் சிறப்பாம்.

*

நிலவரம் எதற்கும் துணியும் பணவெறியர்.
கலவரம் காக்க நல் விபரமறிந்து 
கலப்படமற்ற கொள் முதலே நலமுடைத்து
கலாச்சாரக் கலப்படம் இரவாட்டம் காதலர்தினமுமன்றோ!

*

1315293wplqdvzpnl

1. சான்றிதழ்கள் – எ – எழுத்து வரிகள்(15)

 

 

amirth - ena eluthu

*

 

*

– எ – எழுத்து வரிகள்

*

எங்கள் ஒற்றுமை இணைவு மாநிலத்தில்
எல்லையற்ற சாதனையை நிச்சயம் எட்டட்டும்.
எண்ணங்கள் உயர்ந்தால் செயலும் சிறக்கும்.
எள்ளளவும் பயமற்ற துணிவின் பயணமிது.

*

எது வரை போவோமென்பதில்லை வெல்லும்
எழுகளம். எள்ளுதலின்றி வாழ்தல் பிரதானம்.
எளிதல்ல ஏற்றம் காண முயன்றிடு.
எல்லவன் போன்று ஒளி பெறலாம்.

*

எல்லவன் – சூரியன்.
எழுகளம் – போர்களம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 9-5-2017.

*

சான்றிதழ்கள் தலைப்பில் 14 சான்றிதழ்கள் வேதாவின் வலை – கோவைக்கவியில் உண்டு.
இங்கு தொடருகிறது..  https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*