5. தொலைத்தவை எத்தனையோ! 17

 

untitled     17.

இங்கு குரோட்டன் வகைகள் 32 ஆகப்பெருக்கினேன். வேலியோரங்களில் இருந்தவை போக மிகுதியை தேயிலைக் கன்றுகள் நட்டு உருவாக்கும் நர்சரி முறையில் சிறு பொலிதீன் பைகளில் மண் நிரப்பி நட்டு வளர்த்தோம்.

arabica coffee tree nursery plantation.134427231_240

தேயிலை நர்சரி இப்படித்தான் இருக்கும்.

downloadcroton-assorted

அது போல குரோட்டன்களை நட்டு வளர்த்தோம். சில குரோட்டன் வகைகள்.
வீட்டுத் தாள்வாரம் சீமெந்தால் கட்டி மழைநீர் வடிந்தோட வாய்க்காலும் சீமெந்தில் இருக்கும். முதல் மூலைப்படத்தில் தெரிகிறது.

collage -2

அந்த ஓரமான திட்டில் அடுக்கி வைத்திருப்போம். வீட்டில் உதவிக்கு ஆள் இருப்பதால் வசதியாக இருக்கும் தோட்ட வேலைகளிற்கு.  சில மாலை நேரங்களில் காக்காப் பள்ளம் என்ற இடத்திற்கு நடந்து போவோம். ஒரு தடவை எடுத்த படங்கள் இவை.  சிலர் இங்கு குளிப்பதும் உண்டு.

collage -3

30 – 35 வருடங்களிற்கு முன்னர் எடுத்த படங்கள் இவை.

பிள்ளைகள் பிறந்து வளர்ந்ததெல்லாம் முன்னிருந்த வீட்டில்.
இங்கு விடுமுறைக்கு வந்து போவார்கள்.  சில வித்தியாச இலை மரக்கன்றுகள் காண்கிறீர்கள்.

collage -1

கீழே நான் சேலை உடுத்த படம் மல்லிகைப் பூ பிடுங்குகிறேன்.
மாலை நேரங்களில் மல்லிகை தலைக்கு வைத்த காலம் அது.
எவ்வளவு இன்பம் அள்ளினோம் அங்கு.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான வாழ்வு.
ஆண்டவனுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

hheee211

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 14-11-2017

 

a

Advertisements

4. தொலைத்தவை எத்தனையோ! 16

 

untitled

தொலைத்தவை எத்தனையோ! 16

 

முன்னைய இடத்தில் வாழ்ந்தது போல அத்தனை வசதியும் இங்கும் இருந்தது.

தென்னை மரங்கள் அதிகமாகவும்

Artocarpus-altilis-foliage

ஒரு பென்னம் பெரிய ஈரப்பலா மரமும் மேலதிகமாக இருந்தது.

Breadfruit_-_Artocarpus_altilis_oo2Eerapila Curry poriyal-2
ஈரப்பலாவில் கறியும் பொரியலும் செய்யலாம். அவித்த ஈரப்பலாவை சிறு சிறு சீவலாக்கி வெயிலில் காய வைத்து சீனிப்பாணி காய்ச்சி காய்ந்த சீவல்களைப் போட்டுக் கிளறினால் நல்ல பணியாரமாக வரும் சுவையும் நன்றாக இருக்கும். இதுவும் சிங்களத்தில் பிரபலம்.

பழைய வீட்டில் போகன்வில்லா பலவகை நிறங்களில் உருவாக்கியது போல இங்கு ஐந்தூரியம் மலர் செடிகள் உருவாக்கினோம்.

10-bag-Rare-font-b-Flower-b-font-Seeds-font-b-Anthurium-b-font-Andraeanu-Seeds100_1854-150x150

பலவகை நிறங்கள், பச்சை நிற ஐந்தூரியமும் இருந்தது. எனக்கு ஆச்சரியம். இலங்கை பேராதனைப் பூங்காவில் பச்சை நிற மலர் கண்டேன்.
தேங்காய் உரித்த தும்புகள் உரமாகப் போடுவோம்.

பழைய இடத்தில் நாங்களாகவே சீமெந்தில் பூச்சட்டிகள் செய்து பாவனைக்கு எடுத்தோம். பல வகை அச்சுகள் செய்து உருவாக்கினோம்.

flower

இப்படியாக.
ஓரு சமயம் பூச்சட்டியில் இருந்தவற்றை வரிசையாக நிலத்தில் நட்டும் பராமரித்தோம்.  ஐந்தூரியம் மலர்களின் மேல் இருந்த ஆசையால் தான் தொலைத்தவை  தலைப்பில் எஸ்டேட் வாழ்வு தொடரானது.

Billede-2

Billede-1

அதை படத்தில் காண்கிறீர்கள்.
முற்றத்தில் பெரிய மாமரம். சுற்றி வர றப்பர் மரங்கள்.

இந்த முற்றத்தில் தான் முதன் முதலில் சொப்பர் சைக்கிள் ஓடினேன். கணவர் பின்னால் நின்று பிடிக்கிறேன் என்று கூற அந்த நம்பிக்கையில் நான் என்பாட்டில் நிதானமாக ஓடினேன். அவர் உதவி செய்யாமலே நான் சைக்கிள் ஓடினேன். பின்பு மாலை நேரங்களில் சில நாட்களில் சைக்கிளில் ஒரு உலா செல்வது வழமையானது.

பலவகையான அழகிய இலைகள் உள்ள செடிகளும் வளர்த்தோம்.

7_sep_lowcd5b8f5f6efdf0c1063ca4b8955a8520

இதில் காணும் அனைத்தும் எம்மிடம் இருந்தது.

249415_3
போகோனியா (Bogonia ) எனும் வகை செடிகளும் வளர்த்தோம். இதுவும் புது விதங்கள் எங்காவது கண்டால் கணவர் கொண்டு வந்து தருவார். பலவகைகளாக வளர்த்தோம். உதாரணத்திற்கு சிலவற்றைப் படத்தில் காண்கிறீர்கள்.
மிகுதியை அடுத்த அங்கத்தில் தொடரலாம்.

hheee211

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 31-10-2017

 

red-flower-leaves-swirl-divider_Xyj9uf_SB_PS

 

 

 

3. தொலைத்தவை எத்தனையோ- 15

 

untitled

தொலைத்தவை எத்தனையோ- 15

*

காய்கறிகளும் பழங்களும் இப்படியாக இருக்க பூச்செடிகளும் ஒரு பக்கம். ரோஜாக்கள், மணிவாழைகள்,

diffrentsnurserylive-catagory-bouganvillia-plants

போகன்வில்லாக்கள், குறோட்டன் வகைகள் என்று பல வகைகள் ஒவ்வொரு இனத்திலும் தேடி உருவாக்கினோம். எனது பூக்கன்றுப் பைத்தியத்தைத் தெரிந்து இவர் போகும் இடங்களிலும் எனக்குக் கிளைகள் வாங்கி வந்து தருவார். நட்டு உண்டாக்க.

Free-Shipping-High-Quality-100pcs-Mix-color-23-color-Bougainvillea-spectabilis-Willd-Seeds-Bougainvillea-seeds.jpg_640x640
போகன் வில்லா வெள்ளை, சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு என்று பல வகைகள் இருந்தன.
அப்போது என் தம்பி த பினான்ஸ் கம்பெனியில் கொழும்பில் வேலை. மாதம் ஒரு தடவை வருவார். வீடு உல்லாசப் பயணக் கொட்டகை போல உள்ளது அக்கா என்பார்.
வீட்டின் முன்புற புல் வெளியில் நின்று பார்த்தால் கீழே

Scan-2

 முள்ளுக்கம்பி ஓரங்களில் குறோட்டன் செடிகள் தெரிகின்றன.

Scan-3

தேயிலை மரங்கள் மட்டமாகவும் நிழலுக்கான மலேசியா மரங்களும் தெரியும். ஓரு பொம்மையை தேயிலைச் செடியில் வைத்தால் அப்படியே உருண்டு போய் கீழே  விழுவது  போல  தேயிலைச் செடிகள் மட்டமாக இருக்கும்.
நானும் இவரும் கடைக்குப் போய் நடந்து வரும் போது தேயிலை மரங்கள் மட்டமாக இல்லாவிடில் இது சரியில்லையே என்பேன். அடுத்த நாள் நல்ல மட்டமாகச் செய்ய ஆட்களைப் போட்டு அந்த மலையையே திருத்துவார்.

அப்போதே நல்ல விமர்சிகையாக நான் அங்கீகரிக்கப் பட்டுள்ளேன்.

Kolukkumalai-Tea-Estate_Munnar

16 ஏக்கர் என்று ஒரு பகுதி இப்படியான தோற்றமாக இருக்கும்.

வாகை மரத்தில் குற்றிகளாக முதலில் ஒரு  குற்றி வீட்டுக்கு வந்தது. அதை நிறம் தீட்டினேன் அழகாக இருந்தது. பிறகு தொழிலாளரைக் கொண்டு வெட்டி தந்தார் 5 குற்றிகள் வித்தியாசமாக நிறங்கள் தீட்டி பூச்சட்டி வைக்கவும் வெளியே விநோதமாக அமரவும் பாவித்தோம்.

அக்காலத்தில் பிளாஸ்ரிக்கில் பல நிறங்களாக இருக்கைகள் வெளி வந்தன. ஒன்று 60 ரூபா இலங்கைப் பணமாக.

plastic
இது போன்றது அது. அப்போது அது பெரிய பணம் . ஆகையால் இப்படி ஒரு யோசனையாக நானே நிறம் தீட்டினேன். அழகுக்கு அழகும் பொருளுக்கு பொருளுமானது.

521427_10200149135908322_824376021_n542604_10200150924393033_1215618048_n
நாம் இங்கு மாறும் போது அதில் தம்பி இரண்டு எடுத்தார். அதனால் அதைப் படமாக இப்போது காட்ட முடிந்தது.  இப்போதும் அவர் அதை வைத்திருக்கிறார்.
பின்பு என் கணவருக்குப் பதவி உயர்வு கிடைக்க பிரதான பிரிவுக்கு மாறினோம்.

hheee211

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 19-10-2017

 

Kolukkumalai-Tea-Estate_Munnar

2. தொலைத்தவை எத்தனையோ- 14

 

untitled

தொலைத்தவை எத்தனையோ- 14

 

இவைகள் கழுத்துறை மாவட்டத்து தேயிலை, றப்பர் கொக்கேனைத் தோட்டத்து நினைவுகள்.

பழங்களுக்காக வாழைகள் நிறையவே இருந்தன. மாறி மாறி வாழைக் குலைகள் வந்த வண்ணமிருக்கும்.

1034-7-Amazing-Health-Benefits-Of-Banana-FlowersAfbeeldingen_Algemeen_Foodstyling_auto_auto_c430_c323_q_bananen_2
அதே போல வாழைப் பொத்தியும் (பூவும்) சமையலுக்கு உதவும்.
முள்ளுக் கம்பி வேலியோரம் அன்னாசி முளைகளை ஊன்றுவோம். அதுவும் எப்போதும் பழம் தந்து உதவும்.

annasiannasi palam

Unavngivet

அன்று நாம்.
பின்னால் தெரியும் வாழைகள்.

கசுக்கொட்டை மரமும் அதற்குரிய காலத்தில் கசுக்கொட்டைப் பழமும் தரும்.

cashew-plantht2546
பப்பாளி மரங்கள் அடிக்கடி பழம் தரும் மறந்தால் காகம் கொத்தி காட்டித் தரும்.

பப்பாளி-thamil.co_.uk_பப்பாளி.thamil.co_.uk_

லாவுள் பழம் அதன் காலத்தில் பழம் தரும்.

லாவுul பழம்

கோப்பி மரம் வேலியோரம்.  கோப்பிப் பழம் நன்கு பழுத்தால் மிக சுவையாக இருக்கும்.சுவைத்துள்ளேன்.
கோப்பிப் பூ மிக வாசனையாக இருக்கும்.அழகாகவும் இருக்ககும்.
Coffee-Plant-Entrepreneurs-Should-Take-A-Look-At-Coffee-Farmingred-coffee-beans-branch-coffee-tree-white-background-74319182

1200px-Coffee_Flowers505427197-coffee-tree-coffee-cultivation-coffee-plantation-tanzania

கோப்பிப் பழங்கள் பிடுங்கி வெயிலில் காயவைத்து உரலில் இடித்து தோல் போக்கி நாமே தயாரிப்போம் கோப்பித் தூள். எனக்கு நல்ல நினைவு ஒரு தடவை கோப்பி விற்ற காசில் இவருக்கு ஒரு ரிசேட் வாங்கியது.

பலா மரங்களும் தன் காலத்திற்குப் பலாப்பழம் தரும்.

palapalam

அது தவிர தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளரும் கொண்டு வந்து தருவார்கள். பலாக் கொட்டைகளைப் பல வகையில் சமைக்கலாம்.

பலா-விதைகள்-thamil.co_.uk_polosmallun

இதை அவித்து தோலுரித்து உரலில் துவைத்து தேங்காய்பூ சினி கலந்த உருண்டைகளாகப் பிடித்து மாலை நேரத் தேனீருடன் ருசிக்கலாம். பலாக்கொட்டைப் பொரியல் செய்யலாம். கறி வைக்கலாம். கொட்டையை அடுப்பில் சுட்டு உண்ணலாம்.

அதே போல முற்றிய பலாக்காயில் கறியும், பெரிதாக பலாச்சுளைகளை அவித்து தேங்காய் பூவுடன் கலந்தும் உண்போம். வெகு ருசி.
பிஞ்சுப் பலாக்காயைத் தோல் சீவி கொந்தல் செய்து அதாவது மிகச் சிறு தூளாக வெட்டி வெங்காயம் மிளகாய் கடுகு பெ.ரும் சீரகம் தாளித்து அவித்து எடுத்தால் மிக சுவை. இது பொலெஸ் என்று சிங்களத்தில் வெகு பிரபலம். green jack fruit polos. மேலே சமைத்தபடி தட்டில் உள்ளது பொலேஸ்.சும்மாவும். சாப்பிடலாம் சோறுடன் கலந்தும் உண்ணலாம்.மிக சுவை. சில வீட்டில் சிங்கள் ஏழைகளிண் உணவாகவும் இருக்கும்.

வெற்றிலைக் கொடி வைத்திருந்தோம்.

TH04BETEL-BRSC

தொழிலாளர்களுக்கு விற்போம். கோழிகள் வளர்த்து முட்டைகள் விற்றோம்.
தென்னை மரங்கள் இருந்தது. நமது தேவைக்குப் பாவிப்போம்.

இப்படியாக பணம் செலவழிக்காது ஒரு அருமையான வாழ்வு வாழ்ந்தோம். இன்றும் கனவில் அந்த வாழ்வு வரும். பசுமையானவை.

hheee211

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 13-10-2017.

under-1jpg

1. தொலைத்தவை எத்தனையோ.13

 

untitled                                      1 3.

தொலைத்தவை எத்தனையோ – 13.

என்ற தலைப்பில் 12 அங்கங்கள் எனது இணையத்தளமான வேதாவின் வலையில் எழுதியுள்ளேன். ( https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B/)
இரண்டாவது வலையாக இங்கு வேதாவின் வலை.2 ல் 13வது அங்கமாக இதைத் தொடருகிறேன்.
இலங்கையில் கலவர பூமியான கழுத்துறை மாவட்டத்தில் சிங்களம் பிரதான மொழியான இடத்தில் நான் திருமணமாகி வாழ்வைத் தொடர்ந்தேன்.
என்ன கதை சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்ப்பா!…இல்லை…..இல்லை….ஐந்தூரியம் மலர்கள் நினைவு வந்தது.
எனது தோட்டக்கலை அனுபவங்களை எழுதலாம் என்ற சிந்தனை என்னைத் தூண்டியது.
அழகிய தேயிலைத் தோட்ட வாழ்வு 750 ஏக்கர் நிலப்பரப்பில் நடுவிலொரு சிறு வீடு இரு படுக்கையறைகள், இருக்கையறை, சமையலறை சுற்றிவர தோட்டம். இயற்கை மழையால் பூக்கன்றுகளிற்கு நீர் விடத் தேவையற்ற சுவாத்தியம்.
வீட்டிற்குத் தேவையான சமையல் காய்கறிகள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை.

ponnanganiht2438

download (2)download (3)

vallatai

பொன்னாங்காணி, பசளி கீரை, சிறுகீரை, வல்லாரை மழை பெய்தால் தானாகவே வளரும்.

ht4101
அகத்தி மரக் கீரையும், அகத்திப் பூவை தனியாகவும் சமைக்கலாம்.

முருங்கை-இலை-thamil.co_.uk_download (4)

இதே போல முருங்கை மரக் கீரை, முருங்கைக் காய் என்றும் தானாக வளர்ந்த மரங்கள்.

curryleavesdownload (5)

download (6)download (7)

download (8)

கறிவேப்பிலை மரமாகவும் இருந்தது. தோட்டமாகச் செய்து கத்தரிக்காய், போஞ்சி, பச்சை மிளகாய், வட்டுக் கத்தரிக்காய் என்பன கிடைத்தன.

elephant-foot-yam-250x250download
சட்டிக்கரணைக் கிழங்கு கிடைத்தது. இதன் கீரையையும் சமைக்கலாம் குருத்தான இலையாக.

imagesdownload (1)
இராசவள்ளிக் கிழங்கும் உருவாக்கினோம்.

Tapioca
மரவள்ளிக் கிழங்கு வேண்டிய அளவு வளர்ந்தது. மரவள்ளிக் கீரையும் சமையலுக்குப் பாவிப்போம். மரவள்ளியையும் பல மாதிரிச் சமைத்து உணவாக்க முடியும்.
பசியால் வாடும் ஏழை களவாணிப் பயல்கள், குடித்து விட்டுக் கூத்தாடுவோரும் , இரவில் இதை களவாகவும் பிடுங்கிப் போவார்கள்.

(இத்தனையும் பணம் கொடுத்து வாங்கி உண்ணும் காலம் இது.
இலவசமாக இவைகளை அன்று பெற்ற காலம்.
நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்.
இப்படி ஒரு வாழ்வு அன்று ஆண்டவனுக்கு நன்றி.)

hheee211
சரி மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். புரட்டாதி – 2017

 

divider