4. நான் பெற்ற பட்டங்கள்(11)

 

தமிழுலகில் நான்பெறும் 16வது பட்டமாக
                -கனல்கவி-
என்ற பட்டத்தை பெற்றுள்ளேன். தமிழுக்கு ஆண்டவனுக்கு…நன்றிகள்.

nilaa. kanal kavi

*

நிலாமுற்றம் – கவிஞனின் கனவு.
கடைசிவரித் தலைப்பு கவிதை.
கடைசிவரி:-

25508166_2002576499965256_1339735498830385932_n

*

உதிரும் வண்ணக்கனவுகளே

*

எதிரும் புதிருமானவை கனவுகள்.
அதிரும் பலமற்ற எண்ணங்கள்
உதிரும் பவழமல்லிகையாய்ப் பரவும்.
முதிருமறிவில் சில முதுமையாகும்.
பதியும் காலடித் தடமாகவும்
சதிராடும் மழைத் தாளமாகவும்
புதிய மின்னலாகவும் கனவுகள்
தகுதியுடைய கனவுகள் பலனாகும்.

*

உதிராத வண்ணக்கனவுகளாக நிழற்படங்கள்
கதிராக விரிந்தொளி வீசிடும்.
உதிக்கும் வண்ணக்கனவுகளை நூலில்
பதித்திட கவிதையாக இனிக்கும்.
சொற் சங்கிலிகளை இணைத்து
நற்கனவு மாலை செய்தாலே
பொற்கனவு சக்தியுடைய எண்ணமாகும்.
கற்கோவிலாக நிமிராதோ கனவுகள்.

*

கொட்டும் பனியில் இயற்கை,
வட்டமிடும் வயோதிபரசைவு பனியில்,
சீனி வியாதியாளரின் அதிக
தீனியாம் தீராத ஆசை,
பாலில்லா மார்பைச் சுவைக்கும்
குழந்தையின் தீவிர எண்ணம்
புதிராகும் வானவில்வண்ணங்களும் மாதிரி
உதிரும் வண்ணக்கனவுகளே!

*

பாதையில் கானல் நீரும்
உதிரும் வண்ணக்கனவுகளே…..

*

EN - paddankal

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 21-12-2017

*

12076127-stuhy-rosette-badge,-ilustrace

 

 

 

Advertisements

3.நான் பெற்ற பட்டங்கள்(10)

15வதாக ‘ கவி வித்தகர் ‘பட்டம் இறுதி வரிக்கவிதை வரிகளாக எழுதிவெற்றி பெற்றேன்.
தமிழுக்கு ஆண்டவனுக்கு…நன்றிகள்.

ஓ!……மிகவும் ஆனந்தம்!…லேசுப்பட்ட வேலையல்ல.!…
பல தடவை முயற்சித்தேன்!.
அதனால் எழுத எழுத என் தமிழ் மெருகேறுவது உண்மை….
இன்னும் முயற்சிப்பேன். ‘ கவி வித்தகர் ‘ நிலாமுற்றப் பட்டம்.
மிகுந்த மகிழ்ச்சி…நடுவர் குழாம், நிலாமுற்றம் குழுவினருக்கு மிக்க நன்றி.

*

En paddankal

*

nilaamuttam .kaviviththakar

*

 இதன் கவிதை இதோ!..:-    கடைசி வரிக் கவிதை

அவள் ஒரு அழகிய கவிதை

*

மஞ்சள் நிலவொன்று  மகிழ்ந்து
கொஞ்சும் விழிகளுடன் வீதியிலிறங்கியது
தஞ்சம் கேட்கவில்லை தன்
நெஞ்சத் துணிவுடன் கடமைக்காய்.

*

ஆரவாரமின்றி அடக்கமாய் அடியெடுக்கிறாள்.
ஆரணங்கேயுன் அழகால் அல்லாடும்
அணழகர் எத்தனையோ ஆயிழையே!
ஆராதிக்குமவன் உன்னிதயம் திருடிவிட்டானா!

*

பிரமன் படைப்பிலே பித்தாகிறேன்
பிரமை பிடிக்குதடியுன் விழியழகில்
பிரபஞ்சத்தைப் புரட்டும் காதல் 
பிட்சாந்தி நானடி புரிகிறதா!

*

நாணிக்கோணும் பெண்ணல்ல நீ!
நாலும் தெரிந்த பாவனையென்னை
நாட வைக்கிறதுன் அன்பை
நாடகப்பொற்பாவையே என் நறுந்தேனே.

*

வாழ்வின் சந்தம் காதலடி
தாழ்ந்திடாது உய்த்திட உன்னோடு
ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமடி.
வாழ்ந்திடுவோமே ஒரு குடைக்கீழ்

*

இவளொரு ஆசைச் சுரங்கம்!
அறிவுப் பெட்டக அரங்கம்!
அனுபவக் காதலிற்கு விதையாய்
அவள் ஒரு அழகிய கவிதை.

*

(பிட்சாடனம் – இரத்தல், பிச்சையெடுத்தல்)

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 5-7-2017

*

 

divider lines.jpg - A

 

3. நான் பெற்ற பட்டங்கள் (10)

நான் பெற்ற விருதுகள் தொடர்ச்சி…..

*

(வேதாவின் வலை – யில் 7 பதிவுகள் 7 அங்கமாக இந்தத் தலைப்பில் உள்ளது. )    

*

நான் பெற்ற சாரல் குயில் பட்டம் தவற விடப் பட்டு நினைவு வர வலையேற்றுகிறேன்.
அதற்குரிய கவிதை சான்றிதழும் இங்கு.

*

1.  கவியூற்று
2.  கவினெழி
3.  கவியருவி
4.  கவிச்சிகரம்.
5.  சிந்தனைச் சிற்பி
6.  ஆறுமுகநாவலர் விருது.
7.  கவிமலை.
8.  கவிவேந்தர்.
9.  கவித்தாமரை
10.  கவித் திலகம்
11.  பைந்தமிழ் பாவலர் 
12.  கிராமியக் கவிஞர்
13.  சாரல் குயில

*

saral kujil-1

*

செந்தமிழ்ச் சாரல் – கிராமியக் கவிதை
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 22-4-2017

வீரம் விளைஞ்ச மண் இது தானே

*

வீரம் விளைஞ்ச மண்ணின் கதையின்
சாரம் கூறும் விவரங்கள் எம்மை
ஓரம் போகச் செய்யாது சிரமுயர்த்தி
தீரம் கொள்ளச் செய்திடும் உண்மை.

*

யாருக்கும் அடங்காத வீர குணம்
யாக்கையில் ஓடும் குருதியிலும் ஊறும்.
கோலெடுத்துச் சிலம்பாடி வளர்ந்து பின்
வேலெடுத்து வீரம் நாட்டினர் அன்று.

*

இலக்கு நோக்கிப் பயணம் சென்றால்
கலக்கி உயர்வாய்க் கவனச் செறிவில்
கனவேகம் மனவேகமாகி உறுதியான உடலும்
உனது இயக்கமாகி உலகை வெல்வாய்.

*

மகாபாரதப் போரும் தந்திரங்களும் இன்னும்
இராம இராவண யுத்தமும், தமழரின்
மரபுவழி வீர விளையாட்டு ஏறுதழுவலும்
வீரம் விளைந:த மண்ணின் வரலாறே.

*

சிந்துவெளி நாகரிகத் தொடக்கம் இது.
முந்தைய பெண் வீராங்கனை வேலுநாச்சியார்
பிரித்தானிய ஆட்சிக்கெதிராயெழுந்த இராணி இலட்சுமிபாய்
இந்திய விடுதலைப் போராளி கடலூர் அஞ்சலையம்மாவென
வீரம் விளைஞ்ச மண் இது தானே.

*

1457745k8p286od3g

2. நான் பெற்ற பட்டங்கள் (9)

 

நான் பெற்ற விருதுகள் தொடர்ச்சி…..

*

(வேதாவின் வலை – யில் 7 பதிவுகள் 7 அங்கமாக இந்தத் தலைப்பில் உள்ளது. )    

இன்று 12-6-2017 ‘ கிராமியக் கவிஞர் ‘ விருது கிடைத்துள்ளது. தொடர்ந்து எழுதிய தலைப்புகாளல் கீழ் வரும் கவிதைக்கு இந்த விருது கிடைத்துள்ளது. மிக மகிழ்ச்சி இதோ பாருங்கள்.

*

nilamuttam - kiramiyam

*

1.  கவியூற்று
2.  கவினெழி
3.  கவியருவி
4.  கவிச்சிகரம்.
5.  சிந்தனைச் சிற்பி
6.  ஆறுமுகநாவலர் விருது.
7.  கவிமலை.
8.  கவிவேந்தர்.
9.  கவித்தாமரை
10.  கவித் திலகம்
11.  பைந்தமிழ் பாவலர் 

12.  கிராமியக் கவிஞர்

 

நாட்டுப்புறப் பாடல் 
தலைப்பு:- ஆவாரம் பூவே

*

ஆவாரம் பூவே! ஆசைக் கண்ணே!
பூவாரம் போட ஆசை பெண்ணே
காவாங்கரை (வாயக்காற் கரை)க்கு வருவாயா செண்டே
காவலாளியில்லா என் காட்டு மல்லிகையே
காதோரம் கூறுவேன் என் காதல்
தேவாரங்களை தேன் கதலிக் கனியே!

*

மச்சாளே! என் பாவாடைப் பூச்சரமே!
இச்சை அதிகமாச்சடி வாடி உன்னை
இழுத்தணைக்க வேண்டுமடி நேசக் குயிலே!
பழுத்த மாங்கனியே! எள்ளுருண்டை தானுனக்குப்
பாசமாய் நான் கொண்டு வருவேன்
எடுத்து ஊட்டி விளையாடுவோம் வாடி.

*

கொலுசு ஒன்று கேட்டாயே! ஆசையாய்க்
கொடுத்திட காத்திருக்கு என் கையிலே!
பவிசு காட்டாம வாடி புள்ளே!
பவித்திரமாய் உன்னை நான் காப்பேன்!
பச்சைப் புள்ளையல்ல நீ நல்ல
பருவக் குமரியடி பதமான பனாட்டே!

*

நேரம் கடத்தாம வேளைக்கு வந்திடு
நேச நெஞ்சு வாடுதல் நியாயமோடி!
நித்திரை குறையுதடி நின் காட்சி
நித்தமும் வேண்டுமடி! நாட்டுக் காதலானாலும்
நிறைகுடமடி என் காதல்! எனக்கு
நிழல் தர வாடியென் செல்லமே!

*

(பனாட்டு – பனங்கழியில் செய்யும் பதப்படுத்திய இனிப்பு)

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 29-5-2017.

 

No automatic alt text available.

 

 

1. நான் பெற்ற பட்டங்கள் (8)

 

நான் பெற்ற விருதுகள் தொடர்ச்சி…..

*

வேதாவின் வலை – யில் 7 பதிவுகள் 7 அங்கமாக இந்தத் தலைப்பில் உள்ளது. இதில் கவித்திலகம் சான்றிதழ் இப்போது தான் கையில் கிடைத்தது.
இந்தியாவில் டாக்டர் ஜீவாவின் குழும விழாவில் கொடுக்கப்பட்டது.

1. கவியூற்று
2.கவினெழி
3.கவியருவி
4.கவிச்சிகரம்.
5.சிந்தனைச் சிற்பி
6.ஆறுமுகநாவலர் விருது.
7.கவிமலை.
8.கவிவேந்தர்.
9. கவித்தாமரை
10. கவித் திலகம்
11.பைந்தமிழ் பாவலர்

dr.Jeeva-2

*

dr jeeva- viru

முழுவதும்  முதல் வலையில்

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&