6. பாமாலிகை (இயற்கை)(தடாகத்தில் தாமரை! 84.)

 

lotous-2

*

தடாகத்தில் தாமரை!

*
 
தடாகத் தாமரைக்கா மனது
படாத பாடு படுகிறது.
நடாத படிக்கட்டுத் தாமரைக்கு
அடாது மனம் துடிக்கிறது!
*
தாமரையிலை தண்ணீரை எப்படித்
தாங்குகிறது! சோதிக்கிறாயா கண்ணே!
தடுமாறி உருள்வதாய் மனம்
ததிங்கிணதோம் போடுவது பாராய்!
*
உயிருடைச் சிற்பமே நீயோ
உன்னதம் தாமரையோவெனும் ஆய்வு
உன் தலைமாலையாய் படரவா…
உத்தமியே உன் பதிலென்ன…?
தண்ணீர் எந்தி வரவா
கண்ணீரின்றி உனைக் காப்பேன்
மண் மானம் காத்து
மகிழ்ந்து இணைய வருவாயா…?
*
– வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.15-6-2016
*
lotus-border
Advertisements

5 பாமாலிகை (இயற்கை) நிலவு சுமந்த வானம் (83)

 

 

nilavu

*

நிலவு சுமந்த வானம்

*

நிலவு சுமந்த வானம்
இலவு காத்த கிளியாய்
நிலவை உலாவ விட்டது
கலவியை நழுவ விட்டது.
*
உன்னைச் சுமப்பது வானமானால்
என்ன மந்திரம் செய்து
என்னோடு நீயெப்போதும் வருகிறாய்!
சின்னச் சிங்காரக் கள்ளியடி!
*
நிலவொளியால் நீலக் கருவானம்
நட்சத்திரப் பூக்களால் மின்னும்
அழகு மாயம் காதலரை
கவிஞரை கள் வெறியேற்றிடும்.
*
சிவனும் நிலவைப் பிறையாய்
சுமக்கிறார் செய்த களவால்
தேய் பிறைச் சாபம்
தேடிய நிலவே பாவம்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 20-4-2017
*
cloudbar550

4. பாமாலிகை (இயற்கை) மலரே..மலரே .82)

 

flowers

*

மலரே…………………..மலரே

*

1.
மலரே! மணத்தாலுன், நிறங்களால் மகிழாதார்
உலகில் ஏது மன்மத எழிலே!
மௌனம் சுகமென சாமரம் வீசுகிறாய்.

மல்லிகையில் மன்மத பாணம், தாமரையில்
தெய்வீகம், ரோசாவில் இராச சுகந்தமென
சொல்லி வைத்தது யார் மலரே!

2.
மலரே நீயொரு விலைமகள் தானே!
வலம் வரும் வண்டிற்குத் தேனீந்து
விலக்காது மயக்குவாய்! நீரின்றி வாடுவாய்.

மகரந்தச் சேர்க்கைக்கு மனமுவந்து உதவும்
சிகரமான மாபெரும் சேவகி நீ!
மனிதரை, மாயவனை மயக்கும் மலரே!

*

6-7-2017  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

(வேதாவின் வலை – கோவைக்கவியில்
– பாமாலிகை இயற்கை தலைப்பில்
30வது பூவும் வண்டும்.
74வது பூக்கடை தலைப்பிலுட் கவிதைகள் உண்டு.)

*

 

9gwqyfjpg3

3. பாமாலிகை (இயற்கை). கோடை மழை.(81)

Rain214

*

கோடை மழை.

*

கோடை மழை பாலைவனச் சோலை.
குளிர்கழி (ஐஸ்) சுவைக்கும் உணர்வு நிலை.
பிரிந்த காதலர் சேரும் நிலை
பட்டினியாளனுக்கு எச்சிலிலையும் கோடை மழை.

*

தாயைப் பிரிந்த மழலைக்கு வரவாம்
தாயின் அணைப்பு கோடை மழையாம்.
விளைந்த வயலிற்குச் சொரியும் குளிர்மைக் 
கோடை மழை கொடுமையிலும் கொடுமை.

*

வெப்பத்தில் பொழியும் மழை நோய்களை
செப்பமாய் காவி வரும் தொல்லை.
குளங்களின் நீர் மட்டம் உயரும்.
வளங்கள் பெருக நல் வாய்ப்பாகும்

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.   15-5-2016

*

a_rainy_day_morten_bjarnhof

2. பாமாலிகை – இயற்கை (80)

 

pirapanjam-580x286
*

பேரண்டப்  பெருவெளி.

*
நட்சத்திரங்கள்,  கோள்கள்,  மனிதனியக்கும்  கருவிகள்
தட்டாமலையாகச்  சுற்றும்  பேரண்டப்  பெருவெளி.
வெட்ட வெளி,  ஆகாயம்  விதானமென்றும் 
வட்டம் சுற்றும் காற்று  மண்டலமுமிணைந்தது.
*
அறிவியலிற்கு   எட்டாத  மன  எல்லைகள்
முறிவற்று  விரிக்கும்  பால் வெளி பூமியும்
தெறிக்கும்  ஒளியீயும் சூரியனும்  தவிர
பிறிதொரு  எல்லையுண்டோ  பேரண்டப்  பெருவெளிக்கு!
*
நிறை விசை, அலை குன்றிய விசை,
மின்காந்த விசை,  ஈர்ப்பு  விசைகளடங்கிது,
அணு,  அணுத்துகள்களால்  உருவான கோள்கள்
பிரபஞ்சப்  பகுதிகளாகுமாம்  அறிவியற்  கூற்று.
*
ஆழம், பாரம்  அறியாதது, முடிவு
ஆரம்பம்   அறிய   முடியாதது  ஆகாயம்.
எம் மனமும்  அது போல 
தெய்வ நம்பிக்கையில் புவியில்  சுழருகிறோம்.
*
ஆறிவியல் வெற்றியால்  மனிதன்  நிலவில்
குறியாகக்  காலடி   வைத்தின்னும்  ஆராய்கிறான்.
காற்று  மண்டலம் போர்த்திய  வெளி
சூலுடை  மேகங்களும்  பேரண்டப்  பெருவெளியாகிறது.
*
இஸ்லாமியத்தில்  பிரபஞ்சத்  தகவல்கள்  அதிசயம்.
சூரியன்   பூமி,   நிலா  நட்சத்திரங்களே
பிரபஞ்சமா! அறிய  முடியாத  அதிசயம்.
ஆய்வகள்   தொடரும்   ஆழ்  வெளியிது
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  29-5-2017.
*
divider lines.jpg - A

1. பாமாலிகை – இயற்கை (79)

 

 

 

10996105_10206068409014964_5120062262148234462_o

*

 

தூரத்துப் பச்சை

*

கிட்டாத ஆசையும் கையால்
எட்டவியலாததும் தூரத்துப் பச்சையே
நேரத்தின் முயற்சி பலனாகில்
தூரத்துப் பச்சை என்பதில்லை.
*
அக்கரைப் பச்சை என்பது
இக்கரைக்கு அழகு உண்மை.
அளவான ஆசை உத்தமம்
அருமையாய் நெருங்கும் ஆனந்தம்.
*
அழகு தம்பதிகள் பார்வைக்கு!
ஆழப் புகுந்து பேசினால்
அழுகையே மிகும் சிக்கல்கள்
அக்கரை பச்சையே தூரத்தில்.
*
வெளிநாட்டு வாழ்வும் ஒரு
களியாட்ட தூரத்துப் பச்சை.
கண்ணால் காண்பது பொய்யென்று
உள்நாட்டை முன்னேற்றி வாழ்!
*

பாமாலிகை – இயற்கையில் 78 பாக்கள் வேதாவின் முதலாவது வலையில் நிறைந்தது.
இங்கு 79 திலிருந்து தொடர்கிறேன்.

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-6-2016
*
green