2. பாமாலிகை (தாய்நிலம்.37)சிலியும் இலங்கையும்…

 

-kk

‘*

சிலியும் இலங்கையும்…வேதா. இலங்காதிலகம்.

October 28, 2010

*

சிலியும் இலங்கையும்…

பாதாளச் சுரங்கத்தில் முப்பத்துமூன்றுயிர்
பரிதாபமாக மாட்டிக் கொண்டனர்.
பதறிய அரசு திறமையாகப்
பரிகாரம் கண்டது உயிர் காக்க.
பாதுகாப்பாய் வெளிவந்த உறவுகளை
பரிவாய் அணைத்து வரவேற்றது.
பாருங்கள் சிலி நாட்டு மனிதாபிமானம்!

கொத்துக் குண்டு இரசாயனக் குண்டுகளால்
குழந்தைகள் அப்பாவித் தமிழர்களைக்
கொன்று குவித்தனர் நம்நாட்டில்.
நாற்பதாயிரம் உயிர்களை நசுக்கினர்.
நாயினும் கேவலமாக மனிதர்களை
நாடற்றவராய் ஆக்கி அங்கு
நாட்டு மனிதர் காட்டுமனிதராகிறார்.
நாற்றமுடை மனிதாபிமானம்.

எங்கு யாரிடம் கேட்பது!
தங்கு தடையின்றி வன்முறையற்று
பொங்குது கவன ஈர்ப்புகள்
இங்கும் புலம் பெயர்ந்தோர் டென்மார்க்கிலும்
கேணிங் நகரிலிருந்து மூவர்
கொப்பென்கேகனுக்கு நடைப் பயணம்.
எத்தனை முயற்சிகள் உலகெங்கினும்!
அத்தனையும் பலன் தரட்டும்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
25-10-2010.

http://www.alaikal.com/news/?p=48901

 

cc

Advertisements

1. பாமாலிகை (தாய்நிலம்.36)

 

an

*

இன இருப்பின் உறுதிக்காய்….

*

தங்கத்தாயின் அங்கம் நோக
சிங்கமாய் ஏந்திய உயிர்
எங்கள் மண்ணுக்காய் போராடி
அங்கு கல்லறையில் துயில்கிறது. (தங்க…)

இன இருப்பின் உறுதிக்காய்
மன உறுதியில் செயல் வீரராய்
கனமான களப்போரில் உடல்
இரணமாகி வீழ்ந்த வீரரிவர். (தங்க…)

கந்தகத்துள் நாள் முழுதும்
வெந்து வாழ்ந்த சோதிகள்.
பந்த பாசம் விலக்கி
அந்தம் காணப் போரிட்டவர். (தங்க…)

சுவாசத்தை மண்ணிற்கு ஈந்தவரின்
திவசமான கனத்த வாரம்.
பூவால் தூவி அவரை இன்றும்
மனதால் நினைக்கும் வாரம். (தங்க…)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-11-2009

*

 

cc