18. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். (உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.)

 

kaviijulakam - BARATHY-1

*

சங்கத் தமிழ்பூங்கா குழுமத்தின் சான்றிதழ்கள் இது வரை வலையேற்றினேன்.
இது கவியுலகப் பூஞ்சோலையில் நான் பெற்ற ஒரு பாரதிதாசன் சான்றிதழ் இது

கவியுலகப்பூஞ்சோலை – பாரதிதாசன் போட்டி. இல. 05

*

 உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

*

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் அத்தோடும்
அள்ளுதல் உள்ளத்தாலும் தூயதாகட்டும்.
உள்ளம் ஆசு தள்ளிடில்,
கொள்ளும் மனதின் தெளிவினில்
துள்ளும் நல்லொழுக்க எண்ணங்கள்.

*

இல்லத்தில் இந்நிலை உலாவினால்
செல்வங்கள் அடியொற்றும் நிலையாகும்.
நல்ல எண்ணங்கள் அத்திவாரம்.
நல்வழிக்குப் பொய்யறு நிலையுறுதி.
அல்லல்லழிக்கும் உண்மை பேசுதல்.

*

உயர் குறிக்கோள் உள்ளத்திற்கு
அயர்வற்ற ஊக்கம் தரும்.
துயரற்ற வெற்றியாளர் அனுபவம்
நயமுடன் தேடி அறி.
வியப்புறு வெற்றி பெறுவாய்.

*

நோக்கம் ஒன்று நிறுவு!
ஆக்கமுடன் குறி நோக்கு!
ஊக்கமாய் நகருதல் அவசியம்!
தேக்கமற்ற ஏக்கம், தயக்கம்
விலக்கியடியெடு வெற்றி உனதே!

*

மனமே நண்பன் உயர்த்துவான்!
வானம் தொட நினை!
தானாக மரத்திலேனும் ஏறுவாய்!
பின்னோக்கியுனை நீயே தள்ளாதே!
தன்னம்பிக்கை, உயரறிவு மனப்பாங்கேயுதவும்!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 28-3-2017

*

 

ribbon

Advertisements

17. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( உருவங்கள் மாறலாம்.)

 

sanka-bara-17th

*

 உருவங்கள் மாறலாம்.

*

பொய்யான உலகில் புன்னகை
செய்தேயுருமாற்றும் போலியர் பலர்
மெய்யென எதையும் நம்பி
செய்யும் காரியமே வெம்புதலாகும்.
அய்யகோ! ஆபத்தான உறவுருவே!

*

பஞ்சான உள்ளம் கொண்டதாய்
பாம்பாக அசைபவரும், ஆபத்தாய்
வஞ்சகம் நெஞ்சில் தீயாய்
வாஞ்சையாய் அசைவோரும் பலராய்
அஞ்சும் உருவாம் உறவுகளே!

*

பருவ மாற்றங்களால் சுய
உருவ மாற்றங்கள் இயற்கை.
சருகாயுதிர்ந்து இலையாய் தளிர்த்தாலும்
தருக்களின் சக்கர வாழ்வு
உருமாறி உருள்தல் அழகு.

*

அரிதாரம் பூசும் உருவங்களால்
பிரிதலாகும் வாழ்வின் நிம்மதியால்
பரிதாப நிலை எழுகிறது.
விரிக்கும் வாழ்க்கையனுபவத் தாக்கங்களால்
உளமாற்றம் உருவை மாற்றுகிறது.

*

உறவு உயிரிற்கு உருவமில்லை.
துறவற்ற உணர்விற்கும் உருவமில்லை.
அறுசுவை, மலரின் மணம்
அலைகள் என்றும் மாறாதவை.
அழியாத மண்ணின் சொத்துகள்.

*

உருவங்கள் மாறினும் தம்
உள்ளம் மாறாதோரும், அம்(அழகிய) 
உள்ளமே மாறி உருமாறியோரும்
உள்ளனர் அதிசயம் இல்லை!
கள்ளம் ஊடுருவும் உள்ளங்கள்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 24-11-2017.

*

 

31851321-certificate-template-vector

16. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( நம்பிக்கையே வெற்றி)

 

sanka .bara-16

*

நம்பிக்கையே வெற்றி

*

நம்பிக்கையாம் அற்புதக் கோடு அரும்
தும்பிக்கை போன்றது. சிற்றொளிக் கீற்றும்
வெம்பிடாது மனம் காக்கும் தூணாகும்.
நம்பிக்கையில் துணிவு விதை மரமாகும்.
உந்துசக்தி, ஊன்றுகோல், கடிவாளமாம் நம்பிக்கை
எந்த நிலையிலும் எழ வைக்கும்.
எறும்பூரக் கற்குழியுமென்பது விடாமுயற்சியின் நம்பிக்கை.
மலையின் நிலையும் மாறும் சிற்றுளியால்.

*

அங்கீகாரம், அணைப்பு, அன்பு, பாசம்
நங்கூரமாகி நம்பிக்கைக் கொடி உயரும்.
அகங்காரம், வெறுப்பு, அலட்சியம், கோபம்
சங்காரம் செய்யும் நம்பிக்கை ஆணிவேரை.
இலையுதிர்க்கும் மரங்களின் பெரும் காத்திருப்பு
இலை துளிர்த்தலுக்காய் அழகிய பூத்திருப்பு
கலைமிகு எடுத்துக்காட்டு ஆறறிவு மனிதனுக்கு.
நிலையாம் நம்பிக்கை வளருங்கள் வெற்றிக்கு.

*

நம்பிக்கை வில்லெடுப்பவன் காண்பது வெற்றி
ஓயாத அருவியாக முயற்சி செய்!
இருடடிலே மின்னலும் நம்பிக்கை ஏந்தும்.
நதியும் கருமத்தின் சிரத்தை பாடும்.
தன் சிறகுகளை நம்பிப் பறக்கும்
தன்னம்பிக்கைக்குக் குருவிகள் ஓர் எடுத்துக்காட்டு.
சோர்வை அகற்று! இலட்சியம் பெருக்கு!
பார்வையைச் சிகரத்திற்கு உயர்த்து! சாதனையாக்கு!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 15-8-2017

*

rainbow line

15. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(இளமையில் வறுமை.)

 

 

sanka-bara-15

*

இளமையில் வறுமை.
*

வளர்ந்து செழிக்கும் இளமையில் வறுமை
கிளர்ந்து மனதில் சினத்தை வளர்க்கும்.
தளர்ந்த நம்பிக்கை தகராறு பண்ணும்.
கிளர்ந்திட விடாது வாலிபம் நரங்கும்.

*

வானமளவு விரியும் ஆசைகள் மனதுள்
வாதாடிச் சுருளும் குடிசையுள் பதுங்கும்.
வாக்குவாதம் ஏமாற்றத்தால் வஞ்சம் தீர்க்கும்.
வாதையால் தீய நட்புகளில் மனமேகும்.

*

இல்லாமை நிலைமை பெரும் கொடுமை.
வறுமை வராது தடுத்தல் மேன்மை.
முயலாமை இயலாமை இணைதலே வறுமை.
ஆற்றாமை வெறுமையழிக்க வறுமைச் சிறையுடையட்டும்.

*

பணம், அறிவு, பாதுகாப்பு, பொருளின்மையும்
வறுமையே. ஓளவை மொழிகிறாரிப் பாலைவனத்தை
‘ கொடிது கொடிது வறுமை கொடிது.
அதனிலும் கொடுமை இளமையில் வறுமை ‘ 

*

வறுமைப் பொறியைக் குறிவைத்து அணை!
வெறிச்சோடிய வாழ்வுயர விடாமுயற்சி எடு!
அறிவின்மையை அழித்து கல்வியொளி ஏற்று!
வறுமையின் எதிர்ப் பயணம் மானுடவினையூக்கு!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 22-5-2017

*

 

mybar

14. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(இளமையிற் கல்வி.)

 

sanka -14- bara

*

இளமையிற் கல்வி.

*

‘ இளமையிற் கல்வி சிலையில் எழுத்து.
இளமையிற் கல்வி கல் மேலெழுத்து ‘
வளமான பழமை ஊக்க மொழிகள்.
இளமையில் கற்றல் கற்றபடி ஒழுகிடவே.
கற்பதற்கு எல்லையில்லை கடலானது கல்வி.

*

களவு கொடுக்க முடியாத செல்வம்.
இளமையிற் கற்றால் மனதிலூன்றி வளரும்.
உழுத நிலத்தில் பயிரிடுவதற்குச் சமம்.
அள்ள அள்ளக் குறையாத செல்வமிது.
இளமையிற் கல்வி முதுமையிலும் உதவும்.

*

படித்தோம் எண்ணும் எழுத்தும் கண்ணாகுமென்று.
பசுமை மரத்தாணியாய் இளமையிற் பதியுமென்று
ஒழக்கவியல, நன்னடத்தைகள் கற்று அறிதலும் 
இளமையிற் கற்றலில் அடங்கியதும் பிரதானம். 
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதாம்.

*

காற்றுள்ள போதே நெல்லைத் தூற்றுவார்.
காய்த்திறுகாத பிஞ்சு மனம் இளமை.
காலத்தில் பயிரிடுதலே கல்வி ஞானம்.
காப்பீடு, காமதேனு போன்ற கல்வி
காய கற்பமாய்க் காலமுழுதும் காக்கும்.

*

‘ கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு ‘

( காய கற்பம் – உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து)

*

வேதா.இலங்காதிலகம். டென்மார்க். 16-5-2017

*

 

book - a

13. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(புவியை மறந்த மேகங்கள்.)

 

 

sank-bara13

*

புவியை மறந்த மேகங்கள்.

*

கவிஞர் கவியை எழுத மறந்திடார்.
அவிப்பாகத்தை வேள்வியாளர் தர மறந்திடார்.
குவிதலால் கூம்பு, கோளம் காண்கிறார்
புவியை மறந்த மேகங்கள் குளிராததால்
பூமியை நனைக்காது வெப்பம் உயருகிறது.

*

பாளம் பாளமாய்ப் பூமாதேவி காய்ந்து
கூளமாய் இலைகள் பழுத்து விழ்கிறது.
கோளமாம் பூமியின் காதலையேன் மறந்தாய்!
தாளமிடும் மழையையேன் அனுப்ப மறந்தாய்!
மேளம் கொட்டும் இடியுடன் வருவாய்!

*

காடழித்து சூழலை மாசு படுத்தினோம்.
நாடழித்து தொழிற்சாலை, வாகனப் புகையால்
கேடதிகரித்து வெப்பம் ஏறியது உண்மை.
பாடறிந்து திருந்தி மரங்கள் நடுவோம்.
கூடடைவதான உன்னோட்டம் குறைத்து குளிர்வாயாக!

*

வெண் பஞ்சு மேகங்களே அசதியா!
விண் மறந்து இறங்க மனமில்லையா!
கண் துஞ்சுகிறீர்களா! கேள்விக்கு பதிலென்ன!
தண்புனலாம் மழையின் ” சோ ” என்னும்
பண்ணிசை காது குளிர இறங்கட்டுமே.

*

நீரினாவிகள் பாரமில்லையா! முகிலே!
நீர்க்கட்டி நோயாகாதா! நீசக்கிரகங்களுன்னைச் சுற்றியதா!
நீவிவிடக் குளிர் காற்று மறுத்ததா!
நீர்க்கோலம் போட மழையை அனுப்பிவிடு!
நீயாக வருவாய்! புவியை மறந்த மேகங்களே!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-5-2017

*

cloudbar550

12. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( பாவேந்தர் வாழியவே)

 

sankk-12-barathy

*
 பாவேந்தர் வாழியவே

*
அங்கம் சிலிர்க்கும் வரியில் உணர்வேந்தியவன்
பங்கம் களைய உலகிற்காய் வரைந்தான்
சங்கம் வளர்த்த தமிழ் மதுவேந்தியவன்
பொங்கும் புகழோன் பாவேந்தர் பாரதிதாசன்.

*

கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன்
கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள்
கனக பொக்கிசப் புதல்வர் சுப்புரத்தினம்.
கவிஞன் உதயம் சித்திரை 29 – 1891.

*

உவமைகளில் மன்னர் இசையோடு பாடுவார்.
உகந்த நாடக நடிகர். இந்தியாவில்
தமிழ் பாட்டெழுதிய முதற் பாவலன்.
தமிழிதழ்களின் ஆசிரியர் . பிரெஞ்சும் கற்றிருந்தார்.

*

கிண்டற்காரன், கண்டெழுதுபவன், கிறுக்கன், இவர்
கொண் டெழுதிய சில புனைபெயர்கள்.
தமிழ் தேர் சுற்றிய பக்தன்
கமழ் பகுத்தறிவு சுயமரியாதை பெண்ணுரிமையாளன்.

*

திரைப்படக் கதை வசனகர்த்தா சுயதிறனால்.
சிறையேகினார் போராட்டங்களில் அதிக நாட்டம்.
முறையான புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் (1954ல்.)
கறையற்ற ஐந்தாண்டு அரசியற் செயலாக்கம்.

*

புதுச்சேரியில் புடமிட்ட தமிழ் தங்கம்.
மகாகவி பாரதி சந்திப்பால் பாரதிதாசனாகியெழுதினார்.
பழனியம்மாள் நல் இல்லறத் துணைவி.
தங்கக்கிளி (1946) சாகித்தியஅகதாமி (1970) தபால் தலை (2001)
கௌரவங்கள். பாரதிதாசன் வாழியவே!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 27-4-2017

*

 

Swirl divider v2

11. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( பொழுது விடியுமா.)

 

 

sanka-11-barra

*

 பொழுது விடியுமா.

*

கழுகு போல் காத்திருக்கிறேன் நல்ல
பொழுது விடியும் என்ற நம்பிக்கையில்
பழுதில்லா என் எண்ணத்தை இறைவன்
கழுவிட மாட்டான் அசையாத உறுதி.
அழுதிடவுமில்லை அக்கறையான பக்தியும் உண்டு.

*

மெழுகாய் உருகும் காலம் இது.
பொழுது விடியுமாவென்ற கேள்வியே இல்லை.
எழுந்திடு! பொழுது விடியட்டும் காலைச்
சேவல் கூவட்டும்! புள்ளினங்கள் ஒலிக்கட்டும்!
அழுதிடட்டும் உன் குழந்தை பாலுக்காக.

*

வெற்றி நடை போட வேண்டும்!
பற்றிடு பல சாதனை நேரத்தை!
கற்ற திறமைகள் உலகிற்காய் ஒளிரட்டும்!
முற்றி முதிர்ந்திட முன்னர் முழுவதுமாய்
முயற்சித்து விடு பொழுது விடியும்!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-4-2017

*

 

SUNRISE

10. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(உலகம் உன் கையில்.)

 

 

sanka-bara 10

*

உலகம் உன் கையில்.

*

(தலகம் -தடாகம். திலகன் – சிறந்தவன். நறுமை – நன்மை)

கலகம் நிறை உலகிது அறிந்திடு.
விலக முடியாது வல்லாண்மையால் வென்றிடு.
தலகத்தில் சிறப்பு மலரான தாமரையாகு 
உலகம் உன் கையில் தானேயென்று.
திலகம் பெறு சமூகத்தில் திலகனென்று.

நதியோடும் போக்காக நம் பாதையை
குதித்தோடி நாமே நம் வழியை
மதியாகக் கடத்தல் திறமை. விதியை
அதி புத்தியால் வெல்வது நதியை
அணை போடுதல் போன்ற சவால்.

வறுமையை ஓட்டு, மரங்களைக் காப்பாற்று
சிறுமையான விவசாயி நிலையை ஏற்று
வெறுமையை வெறுத்து உன்னை அறி.
நறுமை பொறுமையால் செங்கம்பளம் விரியும்.
மறுமையிலல்ல இப்பொழுதே உலகமுன் கையில்.

காத்திருக்காதே கணனியைத் தட்டு! முன்னால்
நேத்திரத்திலும் உலகம் உன் கையில்.
ஆத்திரமழித்து உண்மையாய் தர்மமாய் செல்!
சாத்திரம் கைவிட்டு சித்த உறுதியால்
நம்பிக்கையோடேகு உலகம் உன் கையில்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 31-3.2017

*

pavala

9. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். (சோகங்கள் தூசாகும் தருணமிது)

 

 

sanka-barathy-9

*

சோகங்கள் தூசாகும் தருணமிது

*

சோம்பல் விலகினால் மனிதனின் பாதி 
சோகங்கள் தூசாகும் ஒரு சேதி.
சோதிடம் பார்த்தும் கலைப்பார் மீதி
சோலையான மனமிருந்தால் காலையுதய நியதி.

*

அலுப்புடைய மனிதர் அருகிலிருந்தால் மேலும்
வலுவாகும் விலக தருணமில்லாத யாகம்.
கிலுகிலுப்பை ஒலியில் கலகலப்பாகும் குழந்தையால்
குலுங்கி ஓடாதோ சோகங்கள் தூசாகி.

*

பாகம் பாகமாய் பகவத்கீதை தொல்காப்பியம் 
ஏகமும் வாசிக்கும் தருணம் இன்பம்.
தேகம் உருக்கும் இராக ஆலாபனம்
சோகங்கள் அழித்து வெள்ளிக் கொலுசொலிக்கும்.

*

வற்றாத குளிரருவியில் குற்றால நீராடல்
உற்சாகமோங்கி மயிலாக மனத்தோகை விரியல்
ஒற்றைத் தேன்சிட்டு மலரிலமரும் அழகினொளி
வற்றாத நம்பக்கையீந்து மனம் துள்ளலிடும்.

*

புல்லாங்குழலின் சந்தோச சங்கீத அலையில்
பல்லாங்குழியாடும் கடற் காற்றின் இதத்தில்
உல்லாசம் கொள்ளும் மனநிலை தான் 
பொல்லாத சோகங்கள் தூசாகும் தருணம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 23-3-2017

*

 

ribbon