1. பா மாலிகை (வாழ்த்துப்பா. 49) எங்கள் திருமணப் பொன்விழா. *

 

DSCF2857

*

எங்கள் திருமணப் பொன்விழா.

*

தாமரை மன்றத்தில் ஊதுபத்தி வாசம்.
தாமிரசாசனத்தில் நாமம் பதியும் ஓசம் (மிகு புகழ்).
சாமரம் வீசும் தேவதைகள் சேவகம்.
மாவிலைஇ தோரணங்கள்இ மேளங்கள் தாளம். 
மாங்கலியம் பூண்டு ஐம்பது வருடங்கள்
மாண்புடைத் திருமண பொன்விழா பொலிந்தது.
மாயமில்லாப் புன்னகையின் மாட்சியில் மாதவம்
மாதுரியமாய் இல்லமெங்கும் பரந்து விரியுது.

*

அன்புப் பூவிதழ்கள் சொரிந்து வாழ்த்த
இன்பப் புன்னகை இதழ் பிரிந்திட
துன்பப் புகை விலகி ஒழிந்திட
வன்ம சேலைகளை ஒதுக்கிய ஒளிசுடருது!
வாழ்வில் தங்கத் தளிர்கள் வளர்ந்து
தாழ்வின்றி வரம்புடன் உயர்தல் நிறைந்தது.
தாழ்த்திடத் தாண்டவம் ஆடுதல் தவிர்த்து
தாவிப் பறக்கலாம் சிறகுகள் சிலுப்பி.

*

வெள்ளி(25) முத்து(30) மாணிக்கம்(40) இப்போது
துள்ளி வந்தது பொன்விழா(50) ஆண்டு
பள்ளமற்ற அகத்திணை வாழ்விலிது (21-7-2017)
வெள்ளமென மக்களின்றியெம் பிள்ளைகள் பேரருடைநாள்.
அருகிலிருந்த அன்புப்பூஇ சுறுசுறுப்பான இலக்கியம்
கருவிட்ட தோற்றப் புலமைத் தமிழ்
மெருகிட்டு எழுதிய கவிதைக் கோலம்
திருடியது என்னை வியப்பு இல்லை!

*

வாழட்டும் ஆரோக்கியம் ஆனந்தம் நீள!
வளருமன்பும் நீளட்டும் மாதவன் சேலையாக
வாணாள் முழுதும் இறையருளும் நீளட்டும்!
வசந்தமுடை நந்தவனம் இல்லறம் என்பதாகி
வளரும் இளையோருக்கு இது உதாரணமாகட்டும்!
வலிமைஇ பொறுமை வடக் கயிறெடுத்து 
வசமாக்கும் இல்வாழ்வு வலம்புரியென வளமாகும்
வாழ்த்தட்டும் அன்பு மனங்கள் நிறைந்து!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-7-2017

*

50th-wedding-anniversary-poem

*

(பா மாலிகை வாழ்த்துப்பா 48 – எனது முதல் வலையிலிருக்கிறது. https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/ )

*

aaaaa