3. பிரபலங்கள்(காந்தி மறைவு தினம்)

 

ganthi

*

காந்தி மறைவு தினம்

 

lotus-border

Advertisements

2. பிரபலங்கள், பாரில் அவதரித்த பரிசுத்த குமாரன்.

 

 

merry-christmas

*

பாரில் அவதரித்த பரிசுத்த குமாரன்.

*
(ஏலவே – ஏற்கெனவே)
ஈராயிரம் வருடங்களின் முன்னர் இரட்சகர்
ஈடற்ற கருணையாளன் பெத்தலகேமில் பிறந்தார்.
ஈனர்களால் அறியவியலாத பிறப்பைச் சோதிடர்
ஈடுபாட்டுடன் அறிந்தார். விண்மீன் வழிகாட்டலில்.
ஈகையாளனைக் காண ஆவலாய் நடந்தனர்.
*
ஏரோதின் அரண்மனை பெரும் சலசலப்பானது.
ஏவலிட்டானரசன் இருவயதிற்குள்ளான ஆண்பிள்ளைகளையழிக்க ஏலவேயறிந்த எச்சரிக்கையால் ‘ திருக்குடும்பம்’ எகிப்திற்கேகியது.
ஏரோது மரிக்க மறுபடி யூதநாடு வந்தனர்.
ஏசுநாதர் போதனை இரட்சிப்புடன் நாட்களோடியது.
*
கருணைமகனையழிக்க யூதர்கள் திடமுடன் துன்புறுத்தினர். கடைசியிராப்போசனத்தில் ‘ நம்முளொருவனெனைக் காட்டிக்கொடுப்பா’னென்றார். கருணையற்ற செயல்கள் நிகழுமென முன்னரேமொழிகிறார்.
காட்டிக்கொடுக்கிறான் யூதாசு யேசுவை முத்தமிட்டு.
கர்த்தர் கொடுமைக்காரர்களால் சிலுவையில் அறையப்படுகிறார்.
*
கறையற்ற நல்வாழ்விற்குச் சொல் செயலால்
நிறையுதாரணமாக வாழ்ந்து காட்டிய மீட்பர்
இறைமகன் பலருக்கு மறுகாட்சி கொடுத்தார்.
இடிபாடுகளகற்ற மாட்டுத்தொழுவத்தில் கன்னிமேரியிடமவதரித்த
இறைதூதர் யேசுவின் பிறப்பே நத்தாராகிறது.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-12-2017
*
santasit-l

1. டி. கே. பட்டம்மாள்.

 

collage- padda

*

டி. கே. பட்டம்மாள்.

*

பாட்டிற்கொரு பெண் இசை ராணி
ஊட்டமிகு கர்நாடக இசைக் குயில்.
பாட்டுத் திறத்தாலன்று எம்.எல்.வசந்தகுமாரி
பட்டம்மாள், எம்.எஸ் சுப்புலட்சுமி
கூட்டாக பெண் மும்மூர்த்திப் பிரபலங்கள்.

*

தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி பக்திப்பாடகர்.
தாயார் காந்திமதி (ராஐம்மாள்) பாடகி.
பட்டம்மாளுடன் மூன்று சகோதரர்களும் பாடகர்கள்.
பகிரங்கத்தில் பெண்கள் பாடாத மரபுக்குடும்பம்.
பாட்டுத்திறன் வெட்டியது மரபு வேலியை.

*

பட்டுக் காஞ்சிபுரக்காரி டி.கே. பட்டம்மாள்.
இட்ட பெயர் அலுமேலு. செல்லமாய்
ஒட்டியது ‘ பட்டா ‘ ஈரிணைவாலானது பட்டம்மாள்.
சுட்டிப் பெண்ணாய் நான்கு வயதில் பாடினார்.
பாட்டரசி பிறப்பு 1919 பங்குனி 28.

*

முறையாக இசை பயிலாதவர். கச்சேரிகளில்
தவறாது இசைகேட்டுத் திறன் வளர்த்தார்.
தெலுங்கு இசையாசிரியர் சிலகாலம் பயிற்றுவித்தார்.
10 வயதில் வானொலியில் பாடிய பிரபலம்.
13 வயதில் எழும்பூரில் முதல் கச்சேரியரங்கேற்றம்.

*

இராகம் தானம் பல்லவியை சாதுரியமாய்
இசைக்கச்சேரியில் கையாண்ட பெண் இசைப்புலியிவர்.
இதனால் ‘ பல்லவி பட்டம்மாள் ‘ பெயர் பெற்றார்.
இசையரங்கில் பெண்பாட முடியாத மரபையுடைக்க
தலைமையாசிரியர் அம்முக்குட்டிஅம்மாள் தெலுங்காசிரியர் உதவினர்.

*

அனைத்து மாநிலங்களில் முன்னணி சபாக்களில்
தேசியகருத்து பக்திப் பாடல்களையே பாடினார்.
கொலம்பிய இசைத்தட்டில் பாடவும் ஊக்கியவர்
அம்முக்குட்டி அம்மாளே. பாபநாசம் சிவன்
தொடர்பால் சினிமாவில் பாடினார்.

*

எண்ணற்ற விருதுகள் பெற்றார். பல
வெளி நாடுகள் சென்று பாடினார்.
தனக்கெனத் தனிப்பாணி அமைத்துப் பாடியவர்.
இவர் ஒரு இசை சகாப்தம் 90வது வயதில்
2009 – ஆடி 16லிவர் பூதவுடல் மறைந்தது.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-7-2016.

*