4. பா மாலிகை ( காதல்)காதலனின் கண்ணீர் (7 1)

 

 

tear

*

காதலனின் கண்ணீர்

*

காதலன் கண்ணீர் கரைபுரண்டோட
தாடியோடு போத்தல் கையிலாட
காதலை வெறுத்து அவனோட
காப்பிட வேண்டும் இந்நிலையோட.

*

கல்வி கையகப் படவில்லை
கருமமாற்ற காசு வசப்படவில்லை
கடவுளான பெற்றோர் தடமாகியும்
கடமைகளோடு வாழ்வு தொடருகிறோம்.

*

காதலனின் கண்ணீர் உலகில்
கார்வையாக காவியப் படகில்.
காதல் காயம் கடக்கில்
காரிய சாதனை சாதிக்கலாம்.

*

காதலன் கண்ணீர் காலத்திற்கும்
காதோரம் வடியும் கங்கையாம்.
காளையவன் முதுமையிலும் கலக்கம்
காஞ்சிரமாய் கசக்கும் கசக்கும்!

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-6-2016

*

drops

12. பா மாலிகை(கதம்பம்) (507)காலத்திற்கும்……

 

13925632_10208934152328242_908585750239286140_o

காலத்திற்கும்……

*
 
ஓடிக் கொண்டேயிருக்கும் மன எண்ணம்
பாடிக் கொண்டேயிருக்கும் தினம் தினம்
புல்லாங்குழல் துளைகளால் இசை வழிகிறது.
பல்லாங்குழி ஆடி ஆசுவாசமாகிறது மனது
*
கண்களிற்குத் தெரியும் வானச் சுவர்.
எண்ணத்தில் தெரிவது கடல் தொடுவதாய்
சுவருமில்லை கடல் தொடுவதுமில்லை. ஓரு
மாயத் தோற்றம் கானல் சுவரேதான்.
*
தேவர்களல்ல அவர்கள் வெறும் மானிடரே
தேவதருவல்ல மனம் ஊன் உதிரமுமே
எல்லாப் பூக்களும் மணப்பதில்லை நெஞ்சில்
நில்லா மணங்கள் எனவும் உண்டே
*
ஈனச் சுவர் ஊனச் சுவரிடியும்
சீனச் சுவர் மானச் சுவரிடியாது
கான அலை காதில் கேட்டபடியே
காலத்திற்கும் நெஞ்சில் பாட்டு ஓடும்.
*
வேதா. இலங்காதிலகம் 11-8-2016
*
border- 4

2. சான்றிதழ்கள் (16) – கவிதைகள் – விடியலில் கரைந்த இரவு

13-10-2016

*

விடியலில் கரைந்த இரவு

*

இரவுகள் மெல்ல மெல்லக்
கரவுகிறது விகசிக்கும் விடியலில்.
பரவிடும் செயற்பாடுகள் பவ்யமாய்
இரவரங்க மேடையில் ஓய்வெடுக்கிறது.

*

மற்றுமொரு புது விடியல்
அற்புத ஓய்வில்இ தன்னம்பிக்கை
ஏற்றும் பேரொளிப் புத்துணர்வாகிறது.
நேற்றைய கவலைகள் கடுகாகிறது.

*

இரவெனும் போர்வை சீவன்களிற்கு
இரசவாதமிடும் காய கற்பம்.
இரட்சணியம் தரும் வலை.
அரவணைக்கும் பஞ்சுப் பொதி.

*

இயற்கையின் விந்தையாம் இரவு
மயற்கையற்ற பூமியின் தரவு.
பிரச்சனை வனாந்தர நெருப்பிற்கு
சிரச்சேதம் தரும் இரவு.

*

விடியலில் தரை தட்ட
அடியெடுக்கும் புதுத் திட்டம்.
படிமானமாக்கி எதையும் தடவிடுமிரவு
அடிவானம் அத்திவாரமமைதி வாழ்விற்கு.

*

கசங்கிக் கலங்கி மனிதன்
கரைந்திடுவான் அறிவீர் இரவின்றேல்!
வரையிலாப் பொறுமையுடை தாயாகிறது
நிகரிலா விடியலில் கரையுமிரவு.

*

காற்றில் வாசனை கலத்தலாய்
ஆற்றில் அசுத்தம் கரைதலாய்
ஊற்று மலை உயரமாய்
தேற்றுகிறதுயிர்களை விடியலில் கரையுமிரவு.

*

13- 10 – 2016
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

 

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

3.நான் பெற்ற பட்டங்கள்(10)

15வதாக ‘ கவி வித்தகர் ‘பட்டம் இறுதி வரிக்கவிதை வரிகளாக எழுதிவெற்றி பெற்றேன்.
தமிழுக்கு ஆண்டவனுக்கு…நன்றிகள்.

ஓ!……மிகவும் ஆனந்தம்!…லேசுப்பட்ட வேலையல்ல.!…
பல தடவை முயற்சித்தேன்!.
அதனால் எழுத எழுத என் தமிழ் மெருகேறுவது உண்மை….
இன்னும் முயற்சிப்பேன். ‘ கவி வித்தகர் ‘ நிலாமுற்றப் பட்டம்.
மிகுந்த மகிழ்ச்சி…நடுவர் குழாம், நிலாமுற்றம் குழுவினருக்கு மிக்க நன்றி.

*

En paddankal

*

nilaamuttam .kaviviththakar

*

 இதன் கவிதை இதோ!..:-    கடைசி வரிக் கவிதை

அவள் ஒரு அழகிய கவிதை

*

மஞ்சள் நிலவொன்று  மகிழ்ந்து
கொஞ்சும் விழிகளுடன் வீதியிலிறங்கியது
தஞ்சம் கேட்கவில்லை தன்
நெஞ்சத் துணிவுடன் கடமைக்காய்.

*

ஆரவாரமின்றி அடக்கமாய் அடியெடுக்கிறாள்.
ஆரணங்கேயுன் அழகால் அல்லாடும்
அணழகர் எத்தனையோ ஆயிழையே!
ஆராதிக்குமவன் உன்னிதயம் திருடிவிட்டானா!

*

பிரமன் படைப்பிலே பித்தாகிறேன்
பிரமை பிடிக்குதடியுன் விழியழகில்
பிரபஞ்சத்தைப் புரட்டும் காதல் 
பிட்சாந்தி நானடி புரிகிறதா!

*

நாணிக்கோணும் பெண்ணல்ல நீ!
நாலும் தெரிந்த பாவனையென்னை
நாட வைக்கிறதுன் அன்பை
நாடகப்பொற்பாவையே என் நறுந்தேனே.

*

வாழ்வின் சந்தம் காதலடி
தாழ்ந்திடாது உய்த்திட உன்னோடு
ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமடி.
வாழ்ந்திடுவோமே ஒரு குடைக்கீழ்

*

இவளொரு ஆசைச் சுரங்கம்!
அறிவுப் பெட்டக அரங்கம்!
அனுபவக் காதலிற்கு விதையாய்
அவள் ஒரு அழகிய கவிதை.

*

(பிட்சாடனம் – இரத்தல், பிச்சையெடுத்தல்)

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 5-7-2017

*

 

divider lines.jpg - A

 

3. நான் பெற்ற பட்டங்கள் (10)

நான் பெற்ற விருதுகள் தொடர்ச்சி…..

*

(வேதாவின் வலை – யில் 7 பதிவுகள் 7 அங்கமாக இந்தத் தலைப்பில் உள்ளது. )    

*

நான் பெற்ற சாரல் குயில் பட்டம் தவற விடப் பட்டு நினைவு வர வலையேற்றுகிறேன்.
அதற்குரிய கவிதை சான்றிதழும் இங்கு.

*

1.  கவியூற்று
2.  கவினெழி
3.  கவியருவி
4.  கவிச்சிகரம்.
5.  சிந்தனைச் சிற்பி
6.  ஆறுமுகநாவலர் விருது.
7.  கவிமலை.
8.  கவிவேந்தர்.
9.  கவித்தாமரை
10.  கவித் திலகம்
11.  பைந்தமிழ் பாவலர் 
12.  கிராமியக் கவிஞர்
13.  சாரல் குயில

*

saral kujil-1

*

செந்தமிழ்ச் சாரல் – கிராமியக் கவிதை
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 22-4-2017

வீரம் விளைஞ்ச மண் இது தானே

*

வீரம் விளைஞ்ச மண்ணின் கதையின்
சாரம் கூறும் விவரங்கள் எம்மை
ஓரம் போகச் செய்யாது சிரமுயர்த்தி
தீரம் கொள்ளச் செய்திடும் உண்மை.

*

யாருக்கும் அடங்காத வீர குணம்
யாக்கையில் ஓடும் குருதியிலும் ஊறும்.
கோலெடுத்துச் சிலம்பாடி வளர்ந்து பின்
வேலெடுத்து வீரம் நாட்டினர் அன்று.

*

இலக்கு நோக்கிப் பயணம் சென்றால்
கலக்கி உயர்வாய்க் கவனச் செறிவில்
கனவேகம் மனவேகமாகி உறுதியான உடலும்
உனது இயக்கமாகி உலகை வெல்வாய்.

*

மகாபாரதப் போரும் தந்திரங்களும் இன்னும்
இராம இராவண யுத்தமும், தமழரின்
மரபுவழி வீர விளையாட்டு ஏறுதழுவலும்
வீரம் விளைந:த மண்ணின் வரலாறே.

*

சிந்துவெளி நாகரிகத் தொடக்கம் இது.
முந்தைய பெண் வீராங்கனை வேலுநாச்சியார்
பிரித்தானிய ஆட்சிக்கெதிராயெழுந்த இராணி இலட்சுமிபாய்
இந்திய விடுதலைப் போராளி கடலூர் அஞ்சலையம்மாவென
வீரம் விளைஞ்ச மண் இது தானே.

*

1457745k8p286od3g