52. பா மாலிகை ( கதம்பம்) உலகத் தமிழ் மின்னூலில் (வாழ்வின் பொருள் என்ன… )

 

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின்.
உலகத் தமிழ் மின்னூலில் எனது கவிதை ஒன்று 
வாழ்வின் பொருள் என்ன – தலைப்பில். 
வெளிவந்துள்ளது.
மகிழ்வுடன் பல நன்றி.

*

ulaka-thamil-1

*

ulaga-thamil-2

*

 

வாழ்வின் பொருள் என்ன… 

*
அன்னை தந்தையின் உறவால் நாமறியாமலொரு
சின்னக் கருவாகியிருட்டுலகில் முதிர்ந்து பிறந்தோம்.
என்ன பொருளிவ் வாழ்விற்கென்றால் ஒரு
உன்னதக் கேள்விககுப் பதில் உண்டோ!
வாழ்வு ஒரு முறையாம் தெளிவாயுணர்வோம்.
வாழ்வு பல புள்ளிகளுடைய அமைப்பாம்.
தாழ்ந்திடாது அவற்றை ஒன்றாய் இணைத்தல்
வீழ்ந்திடாது வாழ்ந்து உயர்தல் பெருமை.
அருத்தமாக வாழ்ந்திட அதற்கென சீரான
ஒரு குறிக்கோளோடு பயணித்தல் மேலும்
ஒரு இலக்கு வைத்து முன்னேறுதல்  எம்
அற்பதப் படைப்பின் மேன்மை நோக்கமாகும்
நம்பிக்கை என்னும் கொழு கொம்போடு
எம்பியெழுந்து முன்னேறினால் உலகினொரு பகுதியாக
செம்மையாய் உணரப்படுவோம். புறவுலகின் அன்பிணையும்.
வெம்மையாமெதிர்ப்பின் தொல்லை தாங்கும் வலுவிணையும்.
கோபம், ஏமாற்றம் தோன்றினுமுடன் மறையும்
தீபமான அறிவுத் தெளிதல்  புரிதலான சங்கமமாகும்.
பாபமான ஆசையால் துன்பம் அடைகிறோம்.
சாபமற்ற அன்பு, கருணையுண்மை, நேர்மையுயர்வாக்கும்.
கண்டு, கேட்டு, பெற்றடைதல் வாழ்வு.
உண்டு, தேடி, ஆராய்தல் வாழ்வு
தண்டெனும் ஒருமைப்பாடு பசையாக இணைக்கும் 
அன்பு வாழ்வின் மிகப்பெரும் பொருள்.
உழைப்பு சிகரமேற்றும் சோம்பல் பொருளழிக்கும்
அழைப்பில்லா வஞ்சனை, பொறாமை, சூது
தளிர்க்கின்ற பண்பை வாழ்வின் பொருளையழிக்கும்.
பிழைக்கின்ற அருளே வாழ்வின் பொருள்.
இறைபக்தியால் நல்லோரிணக்கம், மூத்தோர் வார்த்தைகளாம்;
கறையற்ற  ஊன்றுகோல்களால் நற்பொருள் உணர்வோம்.
நிறையற்றவுலகில் நிலையாமை வாழ்வு இது.
குறையான மனக்குளப்பமின்றி கேள்வியற்று மனமமைதியாவோம்.
வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 20-2.2018
*
vallu
Advertisements

56. சான்றிதழ்கள் – கவிதைகள் சிக்கு புக்கு ரயிலே….

 

 

kampa27-28-11-17

*

சிக்கு புக்கு ரயிலே….

*
அக்கம் பக்கம் பார்த்தே
திக்குத் திசையின்றி ஓடியே
சிக்கு புக்கு ரயிலேயென
எக்காளமாய் கூட்டுறவு வளர்த்தோமன்று.
*
ஒற்றுமை ஒருங்கிணைப்பால் நாம்
கற்றது பல நல்லவைகள்.
இற்றுவிழாது நெஞ்சினிலே என்றும்.
இனி வராது மறுபடியும்.
*
வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 27-11-2017
*
train
*
train

55. சான்றிதழ்கள் – கவிதைகள் அரிதாரம்.

 

 

kampan - 20-12-11-2017

*

 அரிதாரம்.

*

அரிதாரம் ஒப்பனைப் பொடியாயினும்
உரிமையாக தமிழ்நாட்டை ஆள
அரிதார ஆளுமை முனைகிறது.
அரிதாகக் கட்டியாக தூளானதுமான
அரிதாரம் பளிங்கானவொரு மருந்தாம்.
திருமகள், மஞ்சள் கத்தூரியுமரிதாரம்.

*

துரோகமுடைய காதல், வஞ்சகம் 
துரத்தும் நட்பு, கையூட்டெனும்
துன்மதியில் துயிலும் அரசியல்,
துன்பம் துடைக்காத சமூகசேவை,
துச்சமென மதிக்கும் சொந்தங்களனைத்தும்
துடைத்தெறியும் அரிதாரங்களே.

*

புன்னகை, அழுகை, மெய்,
பொய், கோபமனைத்துமே அரிதாரம்
பாடையில் போதலே அரிதாரமற்றது.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-11-2017.

*

devi-blue

54. சான்றிதழ்கள் – கவிதைகள்- அலைபாயுதே

 

 

 

chippikkul -1-12-17

*

அலைபாயுதே

*

நிலையின்றி என் மனம்
அலைபாயுதேன் எல்லை மீறி/
கலைக்கண்ணனின் கனிந்த பார்வை
கலையெனும் கண்ணான காதலோ!/

*

ஊன் பாகமாயுருவில் கலந்து
தேன் பாகாயினிக்கும் இது/
அன்பெனும் அவதியாம் உயிரூக்கி
இன்பநதியாய் இயக்கும் வாழ்வை/

*

புத்தக மயிலிறகாய் இதயத்துள்
பொத்தும் இருவர் உணர்வு/
தத்தித்தோம் போடுகிறது தலைமுறையாய்
மொத்தமான காதல் தத்துவநாடி./

*

அசையும் சுரபிகளின் மென்னகை
இசைத்து நனைக்குது உயிர்நதியை/
விசையாகி உறவை இணைக்கும்
வில்லாகிய இன்ப மன்மதபாணமாம்./

*

கண்ணுக்குள் நுழைந்து மனதோடு
வண்ணமாய் உயிருள் உரசி/
மண்ணுக்குள் மனிதனைப் பிணைத்து
எண்ணில்லாப் பலனீயும் காதல்./

*

பலர் வாழ்வு விலையாகுதே/
சிலரன்பு வளமாய் நிலையாகுதே/
தளராத மனம் தழும்பாதே./
நிலையான காதலென்றும் அலைபாயுதே./

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-12-2017

*

waterdivider

24. கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் – தேன் சிந்திய வானம்

 

nila-kannaki-7

*

நிலாமுற்றம்  குழும சான்றிதழ்கள்--7

 

தேன் சிந்திய வானம்

*

தேன் சிந்திய வானம்
தான் கண்ணதாசன் மனம்.
எளிமை, அழகு, உயிரோட்டம்
ஓசை நயம், பொருட்செறிவு
ஓங்கிய தேன்மழை வரிகள்.

*

கண்ணதாசனும் கவினுடை பாடலும்
எண்ணம் கிளறி ஏக்கமாக்கும்.
வண்ணமாய்ப் படிப்பினை ஊன்றும்
திண்மை நெஞ்சைத் தரும்.
உண்மைக் காதலும் தரும்.

*

பார்த்தேன் படித்தேன் களித்தேன்
பாடிடத்தான் துணிந்தேன் இதனைத்தான்
அத்தான் என்னத்தான் அவர்
என்னைத் தான் சேர்த்திணைத்து
முடித்தான் அது கவித்தேன்.

*

சத்தான கருத்துத் தேனாறு
வித்தக நாடித்துடிப்பின் பாலாறு
அவனுத்தமக் கவிநயம் தனித்துவம்
முத்தாமவன் வாழ்வு அனுபவம்
அத்தனையும் சிந்தனைத் தொகுப்பு.

*

சமுதாய வழிகாட்டும் வரியழகு
அமுதான குழந்தைப் பாடலழகு
அர்த்தமுள்ள இந்து மதமழகு
அர்ப்பணமான யேசு காவியமழகு
அளித்தவன் தமிழைப் பழகு.

*

இந்தியப் புலத்து முன்மாதிரி
சந்தப் பாவுலக வாரிதி
சாவிலும் மறையாப் பாவாட்சி
ஓவியமானவன் அறிவு மாட்சி
காவியங்களான விசுவரூப ஆட்சி

*

காலவோட்டம் குறைவானாலும் மேலோட்டமாயின்றி
நினைவூட்டத் தோணியிலே நிலைக்கிறாய்.
கருவூட்டி மெருகூட்டி வலுவூட்டி
கருத்தூட்டி அமுதூட்டும் கவிகளாய் 
வாழ்வோட்டத் தந்தாயே அஞ்சலிக்கிறோம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 12-4-2018

*

 

Center-Divider

51. பா மாலிகை ( கதம்பம்) நிலையில்லா வாழ்வு.

 

po

*

 நிலையில்லா வாழ்வு.

*

மண் குடிசையானாலும் மகிழ்ச்சி ஒன்றே
மனிதனின் நிலையான செல்வம்.
ஒன்று முதல் ஒன்பது பத்துவரை
ஓடியோடி உழைத்து உயர்.
ஆறாத பசியுடன் அம்மாவிற்குக் காத்திருப்பு
ஆறுமா இரை அகப்படுமா.
பட்ட மரமானாலும் பயன் தரும் 
பாடை வரை அறி.
நிலையில்லா வாழ்வில் நிலைத்த முயற்சி
நிர்மூலமாக்காது மனிதனை என்றும்.
ஏழைக்குக் கைகொடுத்து ஏற்றுவது இருப்பதை 
ஏழாகப் பங்கிடும் குணம்.

*

– 20-6-2018  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

*

muruga

50. பா மாலிகை ( கதம்பம்) கடந்து போகும் நேரங்கள்.

 

 

clock

கடந்து போகும் நேரங்கள்.

*

நடந்து முடிந்த பாடங்கள்
கடந்து போன நேரங்கள்.
உடந்தை எம் கவலையீனமே.
கிடந்து மனம் வருந்துமே.

*

கடந்த காலத்தில் ஊரில்
நடந்து வாழ்ந்த காலங்கள்
படர்ந்து பழகிய உறவுகள்
தொடர்ந்து வராதது பெருமேக்கமே.

*

தடம் மனதில் பதித்தவையினிக்
கேட்டாலும் வராதவை…..
கிடைத்த நேரத்தைப் பொன்னாக்குவோம்.

*

13-6-2018   வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

 

time

49. பா மாலிகை ( கதம்பம்) மொழி பெயர்ப்பு.

 

 

molipeya

*

மொழி  பெயர்ப்பு

*
மொழிபெயர்ப்பு மொழியாக்கம் ஒரு கலை
மொழி வளர்ச்சிக் கருவியாகவும் உலகிலே
தொடர்பாடலை இலகுபடுத்த வெகுவாய் உதவும்
தொலை உலகங்களை ஒன்றாக இணைத்தும்
தொடரும் சவால் நிறைந்த செயல்
*
பன்மொழிகள், கலை, இலக்கியம், பண்பாடு
படைப்பாக்க நுணுக்கம், சமூக அமைப்புகள்
படித்துணரும் வாய்ப்பு மொழிபெயர்ப்பின் அமைவு.
பிறர் கருத்து சிந்தனையைச் சுயமொழியில்
புரிந்திட உதவுமொரு இணைப்புப் பாலம்.
*
பிறமொழியறியாதவர் சொந்த மொழியில் அறியவும்
புதுக் கலைச்சொற்களறிவால் சொற் பஞ்சமழியவும்.
பலவிதமாய் மொழியைக் கையாளும் தாராளதன்மையுடன்
பாரம்பரிய நீண்டகால இலக்கியத்தொன்மை செம்மையறிவோம்
பாரிய உலக ஒற்றுமைக்கு அடித்தளமாகிறது.
*
பொழுது போக்கல்ல இலக்கியம்! பாரதியாரும்
பாடினார் அன்று, பிறநாட்டு நல்லறிஞர்
சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெறவேண்டும் என்று.
மொழிபெயர்ப்பு கடினமானதும், மாபெரும் சக்தியானதும்.
மனிதகுலத்தை வாழ்விக்க உதவுமொரு இயக்கமிது.
*
கிறிஸ்துவிற்கு முன்னர் இருநூற்று ஐம்பதில்
ஐரோப்பாவில் மொழி பெயர்ப்பு முதலுருவாக
கோமரின் ஒடிசி காப்பியம் இலத்தீனிலுதித்தது.
தமிழில் இந்தியாவில் விவிலியம் முதலாயுதித்தது.
தொடர்ந்து ரஷ்ய நூல்கள் வந்துதித்தன.
*
திருக்குறள் தொண்ணூறு மொழிகளில் மாற்றமானது.
கௌரவமான பண வருவாய்த் தொழிலிது.
கவனம், விடாமுயற்சி, மொழியறிவு பண்பாடுகளுதவுகிறது
கூகிளாலின்று அறுபத்துநான்கு மொழியாக்கம் முடியுமாதலால்
தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு இலகுவாகிறது.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 14-3-2018
*
akaram