என்னைப் பற்றி

என்னைப் பற்றிய அறிமுகம்..

 

 

*

collage twins

*

அன்பானவர்களே!

எல்லோருக்கும் வணக்கம்.

இலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் எனது தந்தையார்.

புத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளையின் இரண்டாவது மகள் சிவக்கொழுந்து
எனது தாயார்.

(கோப்பாய்)   கோவைப் பதியில் ஆதியில் பெண்களுக்காகச் சரஸ்வதி பாடசாலையை 1910ம் ஆண்டு விஜயதசமி அன்று கோப்பாய் வெல்லம்பிட்டி காணியில் நிறுவியவர் என் அப்பப்பா முருகேசு சுவாமிநாதர்.  ஆண்களிற்காக மாண்பு மிகு அமரர் ஆறுமுகநாவலர் உருவாக்கிய பாடசாலையையும் இணைத்து கோப்பாய் நாவலர் மத்திய கலவன் பாடசாலையாக அமரராகும் வரை நிர்வகித்தவர். 
இன்று  இது  நாவலர்  மத்திய மகா வித்யாலயமாகத் திகழ்கிறது.
(இவை தவிர 1911ல் உரும்பராயில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவி தானே ஆங்கில ஆசிரியராக அங்கு வேலையும் செய்தார். காரைநகரில் ஒரு ஆங்கிலப்பாடசாலையும் நிறுவ உதவினார். அவை இன்று பெரிய கல்லுரிகளாத் திகழ்கின்றன. இன்று இருபாலை கோண்டாவில் றோட்டில் உள்ள அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அன்று ஐக்கிய போதனா கலாசாலையாக நாவலடியில் உருவாக உதவியவர். பன்னவேலைப் பயிற்சிக் கலாசாலைகளை யாழ்-பூதர் மடத்திலும், நீர்கொழும்பு கிறிமெற்றியானாவில் சிங்களவருக்காகவும் நிறுவியவர்.
இது தவிர 1905ம் ஆண்டு மலேசியாவிற்குச் சென்றவர் அங்கு பகாங் என்னுமிடத்தில் ஒரு ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். பின்னர் அரசாங்கத்திடம் ஒப்படைத்து இலங்கை வந்தார். ( இது இன்று பிலபலமான ஆங்கிலப் பாடசாலையாக உள்ளது )

நான் நர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்தேன். திருணமாகி ஹொரண நகரத்தில்  ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தேன். இங்கு டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளேன்.

1976ல்    இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு நான் கவிதை எழுதியதில் இருந்து எனது எழுத்துச் சாலை ஆரம்பம்.

அதற்கு முன்னர் அப்பாவின் வாசிப்புப் பிரியம் என்னோடு தொற்றியது.

பாடசாலைப் பேச்சுப் போட்டிகளிலும் பங்கு பற்றிப் பரிசு பெற்றுள்ளேன்.

எனது கணவர் கனகரட்னம் இலங்காதிலகம் தேயிலை-றபர் தோட்ட நிர்வாகத்தில் இருந்தார்.   இவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தேன்.
சுமார் 17 வருடங்கள் கழுத்துறை மாவட்டத்தில்  தேயிலை   றப்பர்  தோட்ட வாழ்வு. 
சிங்களம் பேசப் பழகினேன்.  ஒரு மகன்,   சொந்தத் தொழில்  நிறுவனம் நடத்துகிறார்.– ஒரு மகள், மனநலஆலோசகராக இலண்டனில் வேலை பார்க்கிறார்.  மகன் வழிப் பேரர்கள் இருவர் உள்ளனர். (6years- 3½years)

1987 ஐப்பசி மாதம் டென்மார்க்கிற்கு நானும் இரு பிள்ளைகளும் டென்மார்க் குடும்ப இணைப்புச் சட்டமூலம் வந்தோம். எனது கணவர் 1986ல் டென்மார்க்கிற்குப் புலம் பெயர்ந்தார்.
இங்கு வந்து 18 மாதம் கட்டாய டெனிஷ் மொழி படித்தோம். அது முடிய பாலர் பாடசாலை ஆசிரிய பயிற்சி ஒரு வருடம் செய்தேன். பின்னர் இதற்குரிய கல்வி (நர்சரி ரெயினிங் என்பீர்கள்) 3 வருடம் படிப்பு பயிற்சியுடன்,   1993ல் படிப்பு முடிந்து ” பெட்டகோ ” என்ற பட்டம் பெற்றேன். வேலையும் செய்தேன் (இவைகள் டெனிஸ் பிள்ளைகளோடு தான்).  இப்போது ஓய்வு நிலையில் இருக்கிறேன்.

திருமணமாகிக் கணவரின் ஊக்குவிப்பிலும் டென்மார்க், யேர்மனி, இலண்டன் சஞ்சிகைகள் சிலவற்றிலும் எழுதினேன்.

வானொலி, தொலைக்காட்சிகளில் விமர்சனம், கவிதை, அனுபவக் கட்டுரைகள் எழுதி வாசித்துள்ளேன்.

ரி.ஆர்.ரி தமிழ் அலை ஐரோப்பிய வலத்தில் இரண்டேகால் வருடங்கள்  டென்மார்க் செய்திகளும், இலண்டன் தமிழ் வானொலியில் தகவல் சாலயில் இரண்டு வருடங்கள் டென்மார்க் செய்திகளும் வாசித்துள்ளேன்.

கவிதைப் போட்டிகளிற்கும் கவிதைகள் எழுதுகிறேன்.  வெள்ளி – தங்க – வைர முத்திரைக்கவிஞர் – பல நிலைகளில் வெற்றியடைந்துள்ளேன்.
இதில் பல சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். கவியுலகப் பூஞ்சோலையில்

கண்ணதாசன் சான்றிதழ்கள் – 24
பாரதிதாசன் சான்றிதழ்கள் – 14

சங்கத் தமிழ் கவிதைப்பூங்காவில்
பாரதிதாசன் சான்றிதழ்கள் -17
கம்பர் சான்றிதழ்கள்-3

நிலாமுற்றத்தில்
மணிமேகலை சான்றிதழ்கள் 10
– கண்ணகி சான்றிதழ்கள் –  13 என்றும்
பல பட்டங்களும்  ( விருதுகள்) கிடைத்துள்ளது.

பல விருதுகளாக:- கவியூற்று, கவினெழி, கவியருவி, கவிச்சிகரம், சிந்தனைச்சிற்பி, ஆறுமுகநாவலர், கவிமலை, கவிவேந்தர், கவிதாமரை, கவித்திலகம், பைந்தமிழ்க்கவிஞர், கிராமியக்கவிஞர், சாரல்குயில், நிலாக்கவிஞர், கவிவித்தகர், கனல்கவி, முழுமதி , கவியருவி  போன்ற விருதுகள் பெற்றுள்ளேன். (இதை படமாகக் கீழே காணலாம்.)

paddam - 3

 

எனது புத்தகங்கள்.

2002ல் ‘வேதாவின் கவிதைகள்’ நூலும்,        

http://noolaham.net/project/20/1931/1931.pdf

tst book

2004ல் ‘குழந்தைகள் இளையோர் சிறக்க’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் கொண்ட நூலும்,

http://noolaham.net/project/20/1929/1929.pdf

2nd book

2007ல் ‘உணர்வுப் பூக்கள் எனும் கவிதை நூலை நானும் எனது கணவருமாக எழுதி வெளியிட்டோம்.

http://noolaham.net/project/20/1930/1930.pdf

3rd book

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இங்கு எழுத்தாளர் பெயரை அழுத்தினால்  அல்லது நூல் பெயர்களை அழுத்தினால் மின்னூல்களாக  எனது மூன்று புத்தகங்களும்(பிடிஎப்ஃ) வாசிக்கலாம்.

இசை, நடனம்,  ஓவியம்  கலைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் ரசிப்பதுண்டு. மேடைகளில் கவிதைகள் வாசிப்பதுண்டு. தமிழெனும் வேர் காக்கும் விதைப்பு இது. டேனிஸ் மொழியில் குழந்தைகள் பராமரிப்பு (நர்சரி) பற்றிய கல்வியை மூன்று வருடங்கள் படித்து ‘பெட்டகோ’ எனும் தகுதியை 1993ல் பெற்று,  3லிருந்து 12 வயது டெனிஸ், தமிழ்ப் பிள்ளைகளுடன் சுமார் பதினைந்து வருடங்கள் வேலை செய்துள்ளேன்.

இன்று  வல்லமை.கொம், பதிவுகள்.கொம்,  வார்ப்பு.கொம், முத்துக்கமலம்.கொம், தமிழ்ஆத்தேர்ஸ்.கொம், அலைகள்.கொம்    இன்னும் சிலவற்றில் ,  அவ்வப்போது எழுதுகிறேன்.

கோவைக்கவி, பா வானதி, கோவைக்கோதை புனை பெயர்களைப் பாவிக்கிறேன்.

மார்கழி 11ம் திகதி 2003 பாரதியாரின் பிறந்த தினமன்று. காலை 9.30 திலிருந்து 10.30 வரை இலங்கை ரூபவாகினி தெலைக்காட்சி ஐ சனாலில் (Eye channel) ” மனையாள் மண்டபம் ” நிகழ்வில் என்னை விசேட விருந்தினராகப் பேட்டி கண்டனர். அந்த நிகழ்வு நேரடி ஒளி பரப்பாகக் காட்சியானது.

அடுத்தொரு முறை 2005ல் ஆடி 18ல் ரூபவாகினி தொலைக்காட்சியில் ” உதயதரிசனம் ” நிகழ்வில் அறிவிப்பாளர் அமரர் திருமதி ரேலங்கி செல்வராசாவின் நிகழ்வில் என்னைப் பேட்டி கண்டார் இதுவும் நேரடி ஒளிபரப்பாக நிகழ்ந்தது.

செந்தமிழ் நூலெடுத்துக் கவி மாலிகை, பாமாலிகையென பாக்களால் மாலை, சிந்தனை மொழி, கட்டுரை, கதை என்று பல வகைகளாகப் புனையும் இணையச் சாலையில் எனது இடுகைகளை வாசியுங்கள். https://kovaikkavi.wordpress.com/   ஆடி மாதம் 2009ம்ஆண்டு இவ்வலைப்பூ தொடங்கப் பட்டது.        வாசிப்பதோடு நின்றுவிடாது  உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யுங்கள். உங்கள் ஒவ்வோரு சொல்லும் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் கிரியா ஊக்கியாகும்.

2-5-2015ல் டென்மார்க்கில் எமது நகர ஓகுஸ் தமிழர் ஒன்றியம் எனக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றை நடத்தி ” நாவலர் விருது ” தந்தனர்.
இது சிறந்த ஒரு அங்கீகாரமாக அமைந்தது. இது விவரமாக எனது வலையில் 10 அங்கங்களாக படங்களுடன்  கீழ் வரும் இணைப்பில் எழுதியுள்ளேன். வாசிக்க முடியும்.

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2015-2/

என்னைப் பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில் உள்ளதையும் சேர்த்துள்ளேன்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இது அலைகள்.கொம் இணையத்தளத்தில் என்னுடனான  பேட்டி.     http://www.alaikal.com/news/?p=38761#more-38761  

இது முகநூல் நிலாமுற்றம் குழுமம் என்னிடம் கேட்ட கேள்விகள்.- பதில்கள். இணைப்பு   :–

https://www.facebook.com/vetha.langathilakam/notes?lst=1148741300%3A1148741300%3A1519762225

(https://www.facebook.com/notes/vetha-langathilakam/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/10155426739087182/)

மே 15, 2017

வேதாவின் வலை.2     திறந்துள்ளேன். இதன் ஆங்கிலப் பெயர்

https://kovaikkothai.wordpress.com/

இனி அங்குதான் எல்லாம் எழுதப்படும்.  

அனைவருக்கும் நல்வரவு கூறுகிறேன்.

வாசித்து மகிழுங்கள். நன்றி.

என்றும் அன்புடன்

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

7-7-2010.

invi

புதிய இந்த வலையில் இதை எழுதிய நாள்.  மிக்க நன்றி.

வேதா.இலங்காதிலகம். டென்மார்க். 28-5-2017.

*

2015ல் வைகாசி மாதம் எனது இருப்பிடமான ஓகுஸ் நகர மக்கள் என்னை அங்கீகரித்து ஒரு பாராட்டு விழா செய்து,  ” ஆறுமுகநாவலர் விருது” தந்தனர் . அதன் இணைப்பு இது.

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2015-2/

*

IMG_0140[1]

 

*

5-3-2013.

*

 

1457745k8p286od3g

IN valaicharam:       Ranjny –    Ranjani Narayanan said…

இன்றைய முதல் மரகதமாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமதி வேதா உண்மையில் மரகதம் தான். தமிழில் அவருக்கு இருக்கும் புலமை அவரது கவிதைகளைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
பயணக் கட்டுரையிலும் நம்மை அணைத்து உடன் அழைத்துச் செல்லுவார்.
என்னைப் போன்றவர்களின் எழுத்துக்களையும் படித்து ரசித்து பின்னூட்டம் கொடுத்து உற்சாகப் படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே!
//தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்!!// என்று தனது வலைப்பூவை அறிமுகம் செய்திருக்கும் அழகே அழகு.
இன்றைய அறிமுக மரகதப் பதிவர்களுக்கு பாராட்டுக்கள்!

VETHA WROTE:         Thank you Ranjany…sis.

This link:-    http://blogintamil.blogspot.dk/2013/01/blog-post_17.html

இதற்குக் கருத்தெழுத விரும்பினால் எனது முதல் வலையில் எழுத முடியும்.அதன் இணைப்பு……….

https://kovaikkavi.wordpress.com/about/      …..

Advertisements