10.நான் பெற்ற பட்டங்கள்

தமிழன்னை விருது.
________________________ Mikka nanry.


வேதா. இலங்காதிலகம்.- தென்மார்க் – 9-2-2023

9. நான் பெற்ற பட்டங்கள்

அவ்வையார் விருது.

அருந்தமிழ்க் கவிக்கூடம் – சமூகக் கவிதை தலைப்பு.
அவ்வையார் விருது.
குழுவினருக்கு மிக்க நன்றி.
00


பெண்ணறிவு நுண்ணறிவு
00

பெண்ணறிவு பெருகுதல் பெருமிதம் பெருந்தகவு.
பெண்ணொருத்தி அறிவால் பெருஞ்சமூகம் உயரும்.
நுண்ணறிவு கூரறிவு வேலைத்திறன் நிறைந்த
பெண்மையின் கண் நிறைவுப் பண்பிலே
தண்மதியாம் தவழ்புனல் வெண்ணுரை அன்பிலே
எண்ணற்ற புதுமைகள் வண்ணமாய் எழுந்துள்ளன.


00
இத்தாலி விளக்கு ஏந்திய சீமாட்டி
இன்கவி பாரதிக்கு ஒரு நிவேதிதா
அதியமான் நெடுமான் அஞ்சிக்கு ஒளவை
விவேகானந்தருக்கு சாரதாதேவியார் விந்தைப் பெண்பாலர்.
தன்னைத் தானே வலுப்படுத்தி வாழ்பவள்.
மானுட நதிப்பெருக்கின் ஆரம்பமும் இவளுடனே!
00

7-3-2023


பெண்ணறிவு பெருகுதல் பெருமிதம் பெருந்தகவு.
பெண்ணொருத்தி அறிவால் பெருஞ்சமூகம் உயரும்.
நுண்ணறிவு கூரறிவு வேலைத்திறன் நிறைந்த
பெண்மையின் கண் நிறைவுப் பண்பிலே
தண்மதியாம் தவழ்புனல் வெண்ணுரை அன்பிலே
எண்ணற்ற புதுமைகள் வண்ணமாய் எழுந்துள்ளன.
00

இத்தாலி விளக்கு ஏந்திய சீமாட்டி
இன்கவி பாரதிக்கு ஒரு நிவேதிதா
அதியமான் நெடுமான் அஞ்சிக்கு ஒளவை




விவேகானந்தருக்கு சாரதாதேவியார் விந்தைப் பெண்பாலர்.
தன்னைத் தானே வலுப்படுத்தி வாழ்பவள்.
மானுட நதிப்பெருக்கின் ஆரம்பமும் இவளுடனே!
00


8. நான் பெற்ற பட்டங்கள்

கவிஞர் நா. முத்துக்குமார் விருது

அன்புடன் நன்றிகள்
அருந்தமிழ் கவிக்கூடம் -கவிதை…தலைப்பு
00


ஆனந்த யாழை மீட்டுகிறாய்!
00


ஆனந்த யாழை மீட்டுகியாய் தென்பாய்
நானந்த இனிமையில் மயங்குகிறேன் அன்பே
ஓ! நந்தலாலா! இன்பக் குழலிசையோடு
நாமிந்த இரசனையை இணைத்திட முனைவோமா!
தேனந்தக் காதலும் தேங்காது இணையட்டுமே!
வானகம் வரை வளர்த்து ஆனந்திப்போமே!
00
கள்ளுறும் மலராகத் துள்ளுது இரகசியமாய்
உள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது வா!
வள்ளுவன் மொழிந்த மூன்றாம் பாலும்
உள்ளம் உவந்து உணர்த்துவதும் இதுவே!
வள்ளத்தில் உன் மடியில் நான்
வானிலா பார்க்கிறேன் உன் முகமாய்!
00
22-2-2023

7.  நான் பெற்ற பட்டங்கள்

இது எனக்கு 2வது பாரதி விருது. குழுவிற்கு மனமார்ந்த நன்றி
00

சிந்து நதியின்மிசை நிலவினிலே….
00
(மதி –பகுத்தறிவு. அசை-செய்யுள் உறுப்பு. விசை –வெற்றி.
நசை –நம்பிக்கை. )

00
முந்தி மதியில் கேட்ட இசை
அந்தி பகலாய் இரசிக்கும் அசை
உந்திய ஊஞ்சலில் ஊன்றிய விசை
கெந்திப் பாடிய கெடுமதியற்ற நசை
சிந்து நதியின்மிசை நிலவினிலே ஓசை
00
சிந்தையில் குந்திப் பந்தியிடும் சந்தத்தை
செந்தமிழப்; பெண்மை சுதந்திர உணர்வை
சுந்தரக் குழந்தைக்கு ஓடி விளையாடிட
மந்திர வரிகளை வீரமாக்கிய மகாவித்தகன்
அந்தம் வரை தமிழ்ச் சாரதியே!
00
வேதா.இலங்காதிலகம் – தென்மார்க் -24- 9-2022

6.  நான் பெற்ற பட்டங்கள்

கவிதைக் கலைமாமணி விருது.

கவிதைக் கலைமாமணி விருது.
குழுமத்திற்கு மிக்க நன்றிகள்.
00


நினைக்காத நாளில்லையே
00
கருவறை தொடங்கிக் கல்வறை யீறாக
சில்லறை இன்றிச் சிறக்கும் தூயது
நல்லறமாயிது வாய்த்திட்டால் நனி சிறந்த
பல்லறமுடைய தமிழ் பசுந்தான பரிமாணமாகும்.
00
தமிழ் மழையில் அமிழ்ந்த சிந்தனைகள்
குமிழ்ந்து ஈரமாகிக் குடை விரித்து
சிமிழாகும் மனம் நினைக்காத நாளில்லை.
துமிலம் புகழ் சிகரமெட்டத் துணையாகும்
00
துயரங்கள் பறக்கும் தமிழை இணைத்தால்
துஞ்சுதல் இல்லாத் துடிப்பு ஏற்றும்
அஞ்சாமை அழிக்கும் தேனிலூறிய செந்தமிழ்.
விஞ்சட்டும் புலமைத் தமிழ் வானோங்க!
00


( துமிலம் – பேராரவாரம்) _
வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் – 25-6-2022

5. நான் பெற்ற பட்டங்கள். சாவித்ரிபாய் பூலே விருது…

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆன சாவித்ரிபாய் பூலே விருது…
குழுமத்திற்கு நன்றிகள்

நிலவும் மலரும் கவிதைப் போட்டி.

மந்திரப் புன்னகை

மாராட்டிய மாநில சமூக சீர்திருத்தவாதி
ஆராட்டும் சதார மாவட்ட நைகான்
வீராங்கனை – முத்து – சாவித்ரிபாய் கவிஞராக
விரித்த புன்னகை – கவிதைமலர்கள் – நூல்
சுந்தரத் திறமைகளின் மந்திரப் புன்னகையானது
00

புனே பல்கலைக்கழகம் இவர் பெயரேந்தியது
புகழுடை அஞ்சல் தலை வெளியீடாகியது.
சாவித்ரிபாய் புலே விருதும் உருவானது.
சாதனைப் பெண்ணரசியாகி சுந்தரமாய் அனைவருக்கும்
மாதிரியாகி மந்திரப் புன்னகை சிந்துகிறார்!


வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் – 9-3-2022

4.  நான் பெற்ற பட்டங்கள்.

2022

கவிமணி விருது. – இது இரண்டாவது கவிமணி விருது.

தலைப்பு –
கன்னம் உரசும் காற்றே என் கனவை அறிவாயா!

என்னை அதிகம் நேசிக்கும்
அன்புப் பேரழகி ரகளைக்காரி
கன்னக் குழல் காற்றில்
கன்னத்தை ஓயாது முத்தமிடும்
என்னவள் எங்காவது எதிர்ப்பட்டால்
இன்னமும் தேடிப் பிணைப்பாயா!
முன்னம் உணரா மயக்கம்
இன்னதென்று காட்டுவாயா இன்றே!
00

இன்பக் கிளர்ச்சியுடை இரசவாதியே!
கன்னற் தெம்மாங்குத் தென்றலே!
பற்பல ஆக்கங்களால் கட்டமைந்து
அற்புதப் பயணங்களாலான இயக்கம்
உற்சவ உலகவாழ்வு இனிக்க
கற்பகதருவென் கண்மணியைத் தேடுவாயா!
கன்னச் சுருள் என்னவள்
கன்னம் முத்தமிடல் நியாயமா!
00

குழைந்து குழைந்து இசைவாய்
இழைந்திடணும் நாளும் என்னுடன்
அழைத்து வருவாயா அருகினில்
பிழைத்திடுவேன் அன்பில் பிரியமாய்.
கன்னம் உரசும் காற்றே
இன்னும் தயக்கம் ஏன்!
அன்னம்விடு தூதாக அழைக்கிறேன்
உன் கடனைச் செய்வாயா!
00

சிறகின்றித் தமிழில் பறக்க
உறவேந்தி உரசுகிறாய் உருகி
மறவாது காதலை எண்ணி
உறவாட உணர்வு ஏற்றுகிறாய்
கிறங்கிடும் சொல் விதைகளை
உறங்காது கிளைத்துப் பரப்புகிறாய்!
நிறங்காணும் வண்ண ஒளியாக
திறங் காண சிகரமேற்றிடுவாய்!

வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்2022

3.  நான் பெற்ற பட்டங்கள். கவி அரசி விருது.

சொல்லத்தான் நினைக்கிறேன்


சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லிழுக்கு வருமோ!
சொல்வழுவற்ற கவிதை சொல்வோன் கவியரசன்.
சொல்வளக் கவிதைக்காரி கவியரசி எனலாம்!
வல்லமைச் சிறகு அன்றோ கவிதை!
நல்ல விருதிற்குச் சிறந்த ஆலோசனை!
00
சொல்ல நினைப்பது எத்தனையோ! எங்குமே
சொல் வன்மை இல்லையெனில் தோல்வியே!
சொல்லிழுக்குப் படாதிட நாகாத்தல் அவசியம்.
சொல்லில் பயனுடையவை சொல்லலாம் – நாளும்
நல்ல சொல் அல்லல் தராது!


வேதா இலங்காதிலகம் -டென்மார்க் -3-3-2022

2. நான் பெற்ற பட்டங்கள்

கண்டாங்கிச் சேலைகட்டி கட்டழகாய் போறவளே!

சொண்டுச் சிவப்பழகு சுண்டி இழுக்குதடி
குண்டுமல்லி மணக்குதடி சண்டித்தனம் வேண்டாமடி
அண்டங் காக்கா கொண்டை நோக்க
இண்டிடுக்கில் ஒழிபவளே பண்புனது நாணமடி
உண்டியோடு வந்துள்ளேன் உண்டிடலாம் வந்திடடி
00

தண்டமிழ்த் தண்மையான கண்டாங்கிக் கட்டழகி
ஒண்டி வாழ்வு தண்டனைக் குரியதடி
திண்டாட விடாதே கெண்டியில் நீரெடு!
பண்டைக் கம்பங்கழி நண்டுக் கறியுண்டு
முண்டாசு கழற்றுகிறேன் முன்னாடி வந்திடுவாய்!


வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் 9-2-2022

1. 2022. நான் பெற்ற பட்டங்கள்

நான் பெற்ற பட்டங்கள் — 19 வரை ஏழாவது – சான்றிதழ்க் கவியதிகாரம் நூலில் இடம் பெற்றது.
இனிப் புதிதாக…ஒன்று….


குழுமத்திற்கு மனமார்ந்த நன்றி
00

(தலைப்பு ) தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
00
கருத்து விளக்கம் – (இமிழ் – இனிமை. துமிலம் – பேராரவாரம்)
00 – கவிதை—-

இமிழ் இது குறுமுனித் தேன்
அமிழ்ந்திடாத முத்தமிழெம் உயர்வுக்கு ஊன்
துமிலமான தமிழிலக்கணம் உயர்த்தும் கோன்
குமிழாகும் பனுவலில் மகிழும் நான்
குமரிக்கண்ட ஆதிப் புதையலே தான்
00

அறிவுத் தமிழ் முச்சங்கமேறி; வித்தகமானது
அகத்தியம் தொல்காப்பியம் முற்றிய உரைகளின்
தத்துவங்களே அற்புத வரலாறாய் உதவுகிறது.
உத்தம மாமகுட வரிகள் தேவப்பிரசாதமானது.
உயிர்த் தீயால் பயிராக்குங்கள் தமிழை.
00

வேதா. இலங்காதிலகம் – டென்மார்க். 25-1-2022