14. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(இளமையிற் கல்வி.)

 

sanka -14- bara

*

இளமையிற் கல்வி.

*

‘ இளமையிற் கல்வி சிலையில் எழுத்து.
இளமையிற் கல்வி கல் மேலெழுத்து ‘
வளமான பழமை ஊக்க மொழிகள்.
இளமையில் கற்றல் கற்றபடி ஒழுகிடவே.
கற்பதற்கு எல்லையில்லை கடலானது கல்வி.

*

களவு கொடுக்க முடியாத செல்வம்.
இளமையிற் கற்றால் மனதிலூன்றி வளரும்.
உழுத நிலத்தில் பயிரிடுவதற்குச் சமம்.
அள்ள அள்ளக் குறையாத செல்வமிது.
இளமையிற் கல்வி முதுமையிலும் உதவும்.

*

படித்தோம் எண்ணும் எழுத்தும் கண்ணாகுமென்று.
பசுமை மரத்தாணியாய் இளமையிற் பதியுமென்று
ஒழக்கவியல, நன்னடத்தைகள் கற்று அறிதலும் 
இளமையிற் கற்றலில் அடங்கியதும் பிரதானம். 
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதாம்.

*

காற்றுள்ள போதே நெல்லைத் தூற்றுவார்.
காய்த்திறுகாத பிஞ்சு மனம் இளமை.
காலத்தில் பயிரிடுதலே கல்வி ஞானம்.
காப்பீடு, காமதேனு போன்ற கல்வி
காய கற்பமாய்க் காலமுழுதும் காக்கும்.

*

‘ கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு ‘

( காய கற்பம் – உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து)

*

வேதா.இலங்காதிலகம். டென்மார்க். 16-5-2017

*

 

book - a

Advertisements

7. பா மாலிகை ( காதல்) காதலர் தினமே!…..74

 

vala

*

காதலர் தினமே!…..

*

உலவும் தென்றல் காற்றினிலே இலேசாய்
இலவம் பஞ்சாய் காதல் குமிழிகள்.
உலகக் காற்றில் காதல் முத்தங்கள்
குலவிக் கலக்கிறது காதல் சல்லாபத்தில்.
திலகம் வைக்கும், வாழ்வை வெற்றியாக்கும்.
விலகிவிட்டால் வேதனை தீயாகும்.
கலகம் பண்ணும் நிலைமை தெரியுமா!
உலகத் திருவிழாவாம் காதலர் தினமாமே!
*
 கோழையும் வீரனாவான், கோடீசுவர மனமாகும்.
பாளை விரிவதாய் சுரபிகள் இயங்கிப்
பரவச அழகு உடலில் பாயும்.
இரசிக மனதில் கற்பனை வளர்ந்து
பிரவகிக்கும். உலகம் இனிக்கும். இவை
அரவணைக்கும் காதலிதயங்களின் அம்சங்கள்.
தரவுகள் அமளிப்படுத்திக் கிளுகிளுக்கும்
பெரு நாளும் காதலர் தினம்தானே!
*
 பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகஸ், டென்மார்க். 13-2-2017
*
0066

6. பா மாலிகை ( காதல்) 73. விழியே கவியெழுது.

 

vili

*

விழியே கவியெழுது.

*

( விழிதுறை – இறங்கு துறை, நீர்த்துறை)

விழி நிறைய கணையாச்சு
அழியெனச் சுழன்று மயக்கமாச்சு
விழிதுறையில் விழுந்து நனைந்தாச்சு
விழியே கவியெழுது நாளாச்சு.

*

தெய்விகக் காதல் உயர்வுடைத்தாம்
செய்யோனாய்ச் சுடரும் நேசமாம்.
மெய் உணர்ந்து மேவுமாம்
உய்தலிற்கு ஒழுக்கவியல் வேலியாம்.

*

ஊனுயிராய் உலவிக் கலக்கும்
ஊன்றுகோல் அன்பின் இணைப்பாம்.
ஊற்றென்பது உன்னதப் பார்வையாம்.
ஊக்கமுடைத்து கோர்வை மொழிகளாம்.

*

அன்பிது பழகி அறிவது.
துன்பமது பழகிப் பிரிவது
கன்னல் இளமையின்ப இன்னலிது
பன்னீரன்பினால் பின்னிப் பிணைவது.

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.7-6-2016.

*

 

eye

13. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(புவியை மறந்த மேகங்கள்.)

 

 

sank-bara13

*

புவியை மறந்த மேகங்கள்.

*

கவிஞர் கவியை எழுத மறந்திடார்.
அவிப்பாகத்தை வேள்வியாளர் தர மறந்திடார்.
குவிதலால் கூம்பு, கோளம் காண்கிறார்
புவியை மறந்த மேகங்கள் குளிராததால்
பூமியை நனைக்காது வெப்பம் உயருகிறது.

*

பாளம் பாளமாய்ப் பூமாதேவி காய்ந்து
கூளமாய் இலைகள் பழுத்து விழ்கிறது.
கோளமாம் பூமியின் காதலையேன் மறந்தாய்!
தாளமிடும் மழையையேன் அனுப்ப மறந்தாய்!
மேளம் கொட்டும் இடியுடன் வருவாய்!

*

காடழித்து சூழலை மாசு படுத்தினோம்.
நாடழித்து தொழிற்சாலை, வாகனப் புகையால்
கேடதிகரித்து வெப்பம் ஏறியது உண்மை.
பாடறிந்து திருந்தி மரங்கள் நடுவோம்.
கூடடைவதான உன்னோட்டம் குறைத்து குளிர்வாயாக!

*

வெண் பஞ்சு மேகங்களே அசதியா!
விண் மறந்து இறங்க மனமில்லையா!
கண் துஞ்சுகிறீர்களா! கேள்விக்கு பதிலென்ன!
தண்புனலாம் மழையின் ” சோ ” என்னும்
பண்ணிசை காது குளிர இறங்கட்டுமே.

*

நீரினாவிகள் பாரமில்லையா! முகிலே!
நீர்க்கட்டி நோயாகாதா! நீசக்கிரகங்களுன்னைச் சுற்றியதா!
நீவிவிடக் குளிர் காற்று மறுத்ததா!
நீர்க்கோலம் போட மழையை அனுப்பிவிடு!
நீயாக வருவாய்! புவியை மறந்த மேகங்களே!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-5-2017

*

cloudbar550

33. பா மாலிகை ( கதம்பம்)528 – நாதம் என் ஜீவனே

 

naatham

*

நாதம் என் ஜீவனே

*
(பகாரம் – அழகு, தெளிவு)

இசையின் ஆதாரம் நாதம் குரல்
அசைய இன்பம் தரும் நாதம்.
தசையாகி நாதம் சுருதி தரும்.
பசையாகும் சுருதியால் சுவரம் எழும்.

*

சுவரங்கள் தென்றலாகி இராகம் தரும்.
சுகராக நாதம் எம் தஞ்சமாகும்.
விகார நாதம் இசைவற்ற கீதம்
பகாரம் நாதம் எம் ஜீவனே.

*

ஆதி நாதப் பிரமம் ஓங்காரம்
ஆதி அந்தமற்ற நாதமின்றேல் உலகேது.
சங்கிலிருந்து பிரசவம் ஓங்கார நாதம்.
எங்கும் அதுவே பிரமம் கடவுள்.

*

அமைதி நாதம் அருந்தும் நேரம்
அழகு அங்கமும் தாளம் இடுமே
அகமும் மகிழ்ந்து அர்த்தம் பெறுமே
மோக நாதத்து ரசனையில் தேனூறுமே.

*

உயிரை உருக்கும் உன்னத நாதம்
உணர்வு நரம்பு மீட்டி உவப்பாகுமே
உறவு ஊஞ்சலாடும் உலகு சிறிதாகுமே.
உல்லாசக் களிப்பில் உயர் செயலாற்றுமே.

*

வேதம் என்றாகும் நாதம் உலக
பேதங்கள் அழிக்கும் சாதனை துனிர்க்கும்.
தீதினை நசுக்கும் தீங்குரல் இனிமையில்.
நாதம் என்றும் என் ஜீவனே

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 28-10-2016

*

45

32. பா மாலிகை ( கதம்பம்)527 பொக்கிசம் (முதுமை)

 

66684_140492679330791_43170_n

*

பொக்கிசம் (முதுமை)

*

ததும்பும் அனுபவ நிலை.
பதுமை பொது நிலை.
அது மெய் வலை.
முதுமை, மிகு பத்திரம்.
கைது நிலை உணர்வுகள்.
பொதுமையானவர் முதியவர் சமூகத்தில்.
முதுமையோடிளமை பால்யம் சகடம்.
முதுமை சாபமல்ல வரம்.
*
ஒதுக்குவார் நெருங்கார் பலர்
ஒதுங்குவார் அதனால் சிலர்..
முதுமை புதுமை முதிர்ச்சி.
திருவமுது முதுமை புலமை.
பெருகும் சுய மதிப்பீடு
மெருகேறும் சுய அபிமானம்..
அருகில் சென்று பேசுங்கள்.
சுருங்கும் தோல் உங்களிற்கும்.
*
அமைதி ஆசையின்மை நிறையும்
அந்திம சங்கம நிலையம்.
நங்கூரமிட்ட மனித சக்திகள்
சங்கூதித் தளரும் சித்திகள்.
நெடுங்கதையல்ல சிறுகதையே வாழ்வு.
நெருங்கும் முதுமை எல்லோருக்கும்
தாயே மகிழ்ந்திரு தாண்டிய
தாராள வாழ்வில் நிறைந்திரு.
*
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-2-2016
*

26. சான்றிதழ்கள் – கவிதைகள் (இறைவனின் அருட்கொடை )27. தன்மானம்

puth-ramalan-6-16

*

இறைவனின் அருட்கொடை

*
உறைவிடம் முதல் அனைத்துமாகியது
குறைவின்றி எமக்குக் கிடைத்தது.
திறையான ஒழுக்கம் தேவையாகிறது.
இறைவனின் அருட்கொடை அளப்பரியது.
*
பெற்றவரெனும் பொன்னுறவு முதலாக
பொற்கிழியாக மழலைகள் உறவாக
கற்றுத் தேறி உற்றவரோடிணைவாக
ஏற்றமுடனிவை இறையளித்த அருட்கொடை.
*
அளவற்ற ஆசையைக் கொத்தாய்
உளமெனும் சிற்றிடத்தில் வைத்தாய்
அளவற்ற அருளாளனே முத்தாய்
அளந்தளிப்பாய் உன் அருட்கொடையை.
*
என்னரிய பிறவியொரு அருட்கொடை.
நின்மலமான அங்கங்கள் பெருங்கொடை
இன்னமுத இயற்கை அருங்கொடை.
நன்மையாய் வாழ்தலே சுபவிடை.
*
அல்லாவின் அருட்கொடை இஸ்லாம்.
இயேசுவின் அருட்கொடை கிறீஸ்தவம்.
சிவனின் அருட்கொடை சைவம் (இந்துத்துவம்)
சீலமாய் கடமைகளைச் செய்வோம்.
*
எழுத்தாணி தந்தாய் கரத்தில்
தொழுதிடும் அருட்கொடைகள் சிந்தனையில்.
முழுவதும் வரைந்திடும் எத்தனத்தில்
தொழுகிறேன் இறைவனுக்கு நன்றிகள்.
*
*

27.  தன்மானம்

Puthumai-june-16

*
இந்த சான்றிதழ் கவிதையை கீழ் வரும் இணைப்பில் பாருங்கள்.
*

கவிதைகள் இல்லாத வெறும் விருதுகள் பக்கம் இது….
இணைப்பு இது….

https://kovaikkavi.wordpress.com/2012/02/12/36-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

*

hand...

12. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( பாவேந்தர் வாழியவே)

 

sankk-12-barathy

*
 பாவேந்தர் வாழியவே

*
அங்கம் சிலிர்க்கும் வரியில் உணர்வேந்தியவன்
பங்கம் களைய உலகிற்காய் வரைந்தான்
சங்கம் வளர்த்த தமிழ் மதுவேந்தியவன்
பொங்கும் புகழோன் பாவேந்தர் பாரதிதாசன்.

*

கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன்
கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள்
கனக பொக்கிசப் புதல்வர் சுப்புரத்தினம்.
கவிஞன் உதயம் சித்திரை 29 – 1891.

*

உவமைகளில் மன்னர் இசையோடு பாடுவார்.
உகந்த நாடக நடிகர். இந்தியாவில்
தமிழ் பாட்டெழுதிய முதற் பாவலன்.
தமிழிதழ்களின் ஆசிரியர் . பிரெஞ்சும் கற்றிருந்தார்.

*

கிண்டற்காரன், கண்டெழுதுபவன், கிறுக்கன், இவர்
கொண் டெழுதிய சில புனைபெயர்கள்.
தமிழ் தேர் சுற்றிய பக்தன்
கமழ் பகுத்தறிவு சுயமரியாதை பெண்ணுரிமையாளன்.

*

திரைப்படக் கதை வசனகர்த்தா சுயதிறனால்.
சிறையேகினார் போராட்டங்களில் அதிக நாட்டம்.
முறையான புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் (1954ல்.)
கறையற்ற ஐந்தாண்டு அரசியற் செயலாக்கம்.

*

புதுச்சேரியில் புடமிட்ட தமிழ் தங்கம்.
மகாகவி பாரதி சந்திப்பால் பாரதிதாசனாகியெழுதினார்.
பழனியம்மாள் நல் இல்லறத் துணைவி.
தங்கக்கிளி (1946) சாகித்தியஅகதாமி (1970) தபால் தலை (2001)
கௌரவங்கள். பாரதிதாசன் வாழியவே!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 27-4-2017

*

 

Swirl divider v2

11. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( பொழுது விடியுமா.)

 

 

sanka-11-barra

*

 பொழுது விடியுமா.

*

கழுகு போல் காத்திருக்கிறேன் நல்ல
பொழுது விடியும் என்ற நம்பிக்கையில்
பழுதில்லா என் எண்ணத்தை இறைவன்
கழுவிட மாட்டான் அசையாத உறுதி.
அழுதிடவுமில்லை அக்கறையான பக்தியும் உண்டு.

*

மெழுகாய் உருகும் காலம் இது.
பொழுது விடியுமாவென்ற கேள்வியே இல்லை.
எழுந்திடு! பொழுது விடியட்டும் காலைச்
சேவல் கூவட்டும்! புள்ளினங்கள் ஒலிக்கட்டும்!
அழுதிடட்டும் உன் குழந்தை பாலுக்காக.

*

வெற்றி நடை போட வேண்டும்!
பற்றிடு பல சாதனை நேரத்தை!
கற்ற திறமைகள் உலகிற்காய் ஒளிரட்டும்!
முற்றி முதிர்ந்திட முன்னர் முழுவதுமாய்
முயற்சித்து விடு பொழுது விடியும்!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-4-2017

*

 

SUNRISE