85.பாமாலிகை (இயற்கை) 125

குட்டிப் படம் கடதாசியில் ஒட்டியதா-

குட்டிப் படம் கடதாசியில் ஒட்டியதா

ட வரிகள் 42./ 14-12-2015

சுவரில் தெரிவது தன் சொந்தமா என்று அறிந்துகொள்ளத்தான் இந்த முகர்தலா? அல்லது சுவரொட்டியாய் இருந்தால் புசித்துப் பசியாறலாமே எனும் ஆவலால் பிறந்த ஆராய்ச்சியா? என்று ஆட்டை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

குட்டிப் படம் கடதாசியில்
ஒட்டியதா! அதையாவது பிரித்தால்
பட்டினி பரிதவிப்பிற்கு உண்ணலாமே!
கிட்டச் சென்று ஆராய்ச்சியா!

சிறிதே பொறு பிள்ளாய்!
கடிதே புற்தரைக்குச் செல்லலாம்!
தெரிவதிங்கு நம் சொந்தமா!
உரிமையாய் அறிந்திட முகர்தலா!

வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்.

vector_146.cdr

24. பாமாலிகை (தாய்நிலம்.) 59. முன் கதைச் சுருக்கம். – அஞ்சலி

முன் கதைச் சுருக்கம். – அஞ்சலி
0


எங்கள் இன்பம் எங்கள் துன்பம்
எங்கள் கையில் என்பது பொது
எங்கள் நிம்மதி எங்கே! அதை
எவர் எடுத்தார் பெரும் கொள்மதியாய்!
எங்கள் நாடு நரகத்தில்
எவர் செய்தார் அத் துரோகத்தை
எவர் செய்த பிழை இது!
எவர் திருத்தி அமைதி காண்பார்!
0
காட்டு மிருகமாய் மனிதரைச் சுடுதல்
கடவுள் பலியாய் வெட்டி வீழ்த்தல்
நாட்டு மனிதர் செய்கிறார் தினம்
பூட்டுகிறார் ஏன் ஆறு அறிவை!
தீட்டும் ஆணவச் செருக்கினால்
நாட்டுக்கு நாசம் நிறைவது கொடுமை
வீட்டு ஐந்தறிவு மிருகமாய் இன்று
ஆட்டம் போடும் மனிதர்கள் அங்கு.
0
சிங்களப் பிரபுத்துவப் பரம்பரை ஆட்சிகள்
சீருடன் செழித்து நிலைத்து ஊன்றிட
சிங்களத் தமி;ழ்ச் சகோதரத்துவ வாழ்வைச்
சிறிதேனும் ஆட்சியாளர் ஏற்கவில்லை
சிங்கள பௌத்த காவலாளிகள் தாமென்று
சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் என்றும்
சிக்கல் திரைகளாற் பிரித்தே ஆள்கிறார்
சிங்கள தமிழுறவைச் சிறுசிறு தீவாக்கிட்டார்
0
இவைகளை உடைத்து நொறுக்க
இன்னுயிர் ஈந்த வீரர்கள் இன்று
மா வீரர்களாய்க் கல்லறை மடியில்.
குட்டக் குட்ட குனிய மாட்டோமென்றார்
வெட்டப் பட்டும் வெடிகளாலும் இன்று
கட்டிடத்தினுள் கல்லறையினுள் வாழ்கிறார்.
கொட்டுகிறோம் மலர்களோடு எம் அஞ்சலிகளை
மட்டுப் படுத்த முடியாத அஞ்சலிகள் இது
0


27-11-2007. வேதா. இலங்காதிலகம். (இலங்கைத் தமிழிச்சி)
டென்மார்க்.
(இலண்டன் தமிழ் வானொலியில் நான் வாசித்த கவிதையிது)

84- பாமாலிகை (இயற்கை) 124. மலர்கள்

மலர்கள்

கண்களைக் கொள்ளை கொண்டு
எண்ணம் மாற்றும் மலர்கள்
கண் இமைக்காது நோக்க
திண்டாட்டம் இல்லை மனதிற்கு.
செண்டாக, தனியாகவோ இதயத்தைத்
திண்டாட விடாது உண்மை
பெண்மையையும் பண்புடை மலரென்று
கொண்டாடுகிறார் பெரும் கேள்வியே!

6-5-2021.

23. பாமாலிகை – (தமிழ்மொழி) 70. பண்டமாற்றம்

பண்டமாற்றம்

என் கை எழுதிய பனுவல்களுக்கு
உன் மனக் கருத்துகள் மாறுகொள்வேன்.
பொங்கும் அன்னதானமாய்த் தமிழினை
எங்கும் பின்னுவேன் கவிமாலையாய்
00

மங்காத் தமிழினை நாள் முழுதும்
சங்கொலி, சக்கரமாய்ச் சுழல விடுவேன்.
ஏதோவொரு அலட்சியம் துன்பமானாலும்
தங்குதடையின்றி எழுதிக் குவிப்பேன்.
00

சமூக வலைத்தளம் வேறு வழிகளென
அலைந்திடாது தமிழினை இறுகக் கட்டுவேன்
பேரர்கள் தமிழைப் பேசி
உறவாட
வாரப்பாடாய்ப் பாடு படுவேன்
00

சொற்கள் இறகுகளாகிப் பறக்கிறது
அற்புதக் கனியாக இனிக்கிறது.
கற்பனைக் குடையாகிறது, ஆடையாகிறது.
குற்றமற்ற சொற்கள் வயிறார உண்ணுங்கள்.
00

11-12-19

வேறு:-

சிந்தை நிறைந்த அன்றைய
முந்தைப் பெருமைகள் மறக்கிறார்
செந்தமிழ் நாடெனும் போதினிலே
பைந்தமிழ் ஆறு ஒடணுமே
நந்தமிழ் விட்டு ஆங்கிலமே
செந்தமிழ் என்று பேசுகிறாரே

20010

22. பாமாலிகை -(தமிழ்மொழி) 69. மோகன இறகுகள்..

மோகன இறகுகள்..
00

ஊக்கமாய் வரிகள் மோகன இறகுகளாகி
தேக்கமின்றி முடிவற்று நீளும் சிந்தனைகள்.
ஆக்கமாய் வானில் ஏகமாய் உயருகிறது
தாக்கமாய் அலட்சியமாக்குவர் ஆசாட பூதிகள்
நோக்கம் தடை படாது நதியாகும்
00

நல்ல விதைப்பு செழித்து உலகில்
சொல்லும் தரமாய் நல் விருட்சமாகும்
எல்லையற்றுப் பலன் தரும்
நல்லவர் மனிதத்தின் துகில் உரிக்கார்.
உல்லாகனாவான் (திறமையாளன்) வழமை உலகில்
00

எழுதித் தீராத தமிழ் இது
பழுதற்று முந்தையோர் தந்த தமிழிது
விழுது விட்டு ஊஞ்சல் ஆடுது.
சுந்தரமாக சொற்கள் கூட்டும் இரசவாதத்தில்
பந்தென உருளுது சந்தமும் சறுக்கலுமாய்.
00

பொங்கும் உணர்வு வழி
மனச்சங்கால் பிரசவிப்பது இது
ஏங்கும் சத்தியங்கள், ஓங்குமெழுச்சிகள்.
தீங்குடைய திமிரல்ல! உலகில்
பலர் பெரும் திறமைசாலிகள்.
கண்டு பயனடைதல் இன்பம்.
000

26-11-2019