1. 2022. நான் பெற்ற பட்டங்கள்

நான் பெற்ற பட்டங்கள் — 19 வரை ஏழாவது – சான்றிதழ்க் கவியதிகாரம் நூலில் இடம் பெற்றது.
இனிப் புதிதாக…ஒன்று….


குழுமத்திற்கு மனமார்ந்த நன்றி
00

(தலைப்பு ) தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
00
கருத்து விளக்கம் – (இமிழ் – இனிமை. துமிலம் – பேராரவாரம்)
00 – கவிதை—-

இமிழ் இது குறுமுனித் தேன்
அமிழ்ந்திடாத முத்தமிழெம் உயர்வுக்கு ஊன்
துமிலமான தமிழிலக்கணம் உயர்த்தும் கோன்
குமிழாகும் பனுவலில் மகிழும் நான்
குமரிக்கண்ட ஆதிப் புதையலே தான்
00

அறிவுத் தமிழ் முச்சங்கமேறி; வித்தகமானது
அகத்தியம் தொல்காப்பியம் முற்றிய உரைகளின்
தத்துவங்களே அற்புத வரலாறாய் உதவுகிறது.
உத்தம மாமகுட வரிகள் தேவப்பிரசாதமானது.
உயிர்த் தீயால் பயிராக்குங்கள் தமிழை.
00

வேதா. இலங்காதிலகம் – டென்மார்க். 25-1-2022

28. பாமாலிகை – (தமிழ்மொழி) 75 தமிழ் புனித கங்கை

தமிழ் புனித கங்கை

(ஓச்சம் – புகழ்)
ஆசையாயழகுத் தமிழுலக
மாசையகற்ற மெழுகியோச்சமாக
காசையெதிர்பார்க்காது எழுதுகோலெடுத்து
ஓசையின்றி எழுதுகிறேன்
00

களவாடா அறிவு
இளகியழியா ஞானம்
அளவற்ற புனித கங்கையென
குளித்து நீந்துங்கள்.
00

நற்கருத்துடைக் கவிதை
அற்புதச் சொல்லோவியம்
பொற்பத அறிவுப்பூபாளமான
வெற்றிப் பயணமே!
00

பொறுப்பாய் இலக்கியக்
கருத்தில் கவனமீர்த்ததை
விருப்பு அடையாளமிடாது
உருத்தாய்க் கருத்திடுங்கள்!
00

நட்புக்குச் சிகரமாய்
உட்புகுந்து மனதுள்
ஒட்டி உறவாடுங்கள்!
எட்டிக்காயல்ல தமிழ்!


கவிநட்சத்திரம் வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் 23-1-2022

5. எனது 6வது – 7வது நூல்கள்.

இங்கு எனது புத்தகங்களும் பெற்றுக் கொள்ளலாம்

1.பெற்றோரியலில் சிற்றலைகள்
2.குறட்டாழிசை
3.மனக்கடல் வலம்புரிகள்.
4.சான்றிதழ்க் கவியதிகாரம்

வாசிப்பால் மனத்தூசி விலகும்
வாசிக்க வாசிக்க மன
பாசிப் படை விலகும்.
தூசியும் கரை ஒதுங்கும்.
யோசிக்கும் உணர்வு பெருகும்.

உன்னை மறப்பாய்!
உலகை அளப்பாய்!
உண்மை உணர்வாய்!
ஊற்றான அறிவால்!!

22-1-2022

27. பாமாலிகை – (தமிழ்மொழி)74. அணிந்துரையாய் வாழ்வு

அணிந்துரையாய் வாழ்வு

தயங்க முடியாது கையை இழுத்தது.
முயங்கு என்று மொழி வழிந்தது
இயங்கிய கரம் இணைத்தது வரிகள்
மயங்கியது பொங்கிய எண்ணச் சுதந்திரம்.
மொழி சார்ந்த மனம் தத்துவமாய்
வழிந்தது சித்தியாய்ச் சமத்துவமாய்ச் சங்கீதமாய்.
00

கவிதையாய்ப் பறக்க விடப் போகிறேன்
கட்டிய நூலை இளக்கி விடப்போகிறேன்.
எட்டிடாத வெட்ட வெளியில் உயரும்!
கட்டான எண்ணத் தியானங்கள் இவை
கருணையான மையேந்தும் விழி நிறைய
கருத்துரைக்கும் நூற்காம்பிலிருக்கும் மலரே!
00

துணிவு இதழ் பிரிக்கும் நெஞ்சத்தின்
அணி பெரும் நம்பிக்கை ஆகிட
பிணியற்ற இதயம் தோகை விரிக்க
தணியாத உள்ளங்களின் தாறுமாறான தாண்டவத்
திணிப்பு பணிவற்ற பகிரங்கச் சீர்கேடாகாது
அணிந்துரையாய் வாழ்வு அணிவகுக்காதோவென நப்பாசை!
00

கவியருவி வேதா. இலங்காதிலகம். (இலங்கைத் தமிழிச்சி)
டென்மார்க் 25-4-2021

22. தொலைத்தவை எத்தனையோ

எங்கள் கோப்பாய் (கோவைப்பதி) கிளுவானை ஒழுங்கை வீடு. நான் 20½ வருடங்கள்
வளர்ந்த வீடு முன் படிக்கட்டு. என் தம்பியுடன்.

மழை பெய்யும் போது விறாந்தையில் அமர்ந்து பார்க்கும் போது இப்படித்தான் தெரியும் – கிளுவானை ஒழுங்கை வீடு. இப்போது அது தரை மட்டம்.

அப்பு – எனது அப்பாவின் தந்தை – கண்ணாடியப்பா என்று அழைப்போம். அவர்களுக்குத் .தோட்டக் காணி உண்டு. அதில் மிளகாய்க் கன்று கத்தரிச் செடி தக்காளி என்று பல வகை நட்டிருக்கும். ஒரு 10 மணி 9 – ணி போல ” தோட்டத்திற்குப் போவோம் வாறியா பேபி ” என்று அப்பு கூப்பிடுவார். அங்கு போய் – த்தரி – மிளகாய் – தக்காளி என்று பிடுங்கிக் கொண்டு வீட்டிற்கு வருவோம். அப்பு எங்கள் வீட்டிற்கும் கொண்டு போகத் தருவார்
இது மிளகாய்த் தோட்டம்

கத்தரிச் செடி காயுடன்

தக்காளிச் செடி