38. சான்றிதழ்கள் – கவிதைகள் (48-நினைவுகள் சுமையா?)

 

 

nathiyora- 4

*

நினைவுகள் சுமையா?

*
( மகாபதுமம் – குபேர நிதி/. புனைவு – அலங்காரம். /
விதானம் – மேற்கட்டு, மேல் விதானம்.)
*
நினைவுப் பேறு மகாபதுமம்.
நினைவுச் சுமையென்பது மனத்தீர்வு.
நினைவில்லாததிலும் நினைவுச் சுமை
புனைவு, மகிமை, பண்புடைத்து.
நினைவுச் சுமையைப் பகிர்தலானந்தம்.
பிறந்ததினாலாய பயனே நினைவுகள்.
மறந்தாலவன் சடலம், அவலம்.
சிறந்திட சுமையையின்பச் சுவடாக்கு.
*
நினைவே மனிதன் உருவம்.
நினைவுச் சுமையே வாழ்வாம்.
நினைவுகள் இல்லாத நீள்வு
வினையாம் மனநலவாலோசகர் தயவு.
வியனுலகில் பேறுடையவன் நினைவாளன்.
பாசமுடையோர் நினைவு வாசநதியாயசைவு.
தோசமுடை பனியிலும் வெப்பவதிர்வு.
நேசச்சுமையும் சந்திரக் குளிர்வு.
*
உறக்கம் தொலைத்தாலும் மெதுவாக
மறக்காது சுற்றும் பூமியாக
பறக்கும் சுமைகள் மின்மினியாக
நிறக்கும் வானவில் அபிசேடமாக.
தலையில் பூவிட்டு நெற்றியில்
நீயிடும் குங்குமம் பற்றிடும்
விலையற்ற நினைவு சுமையாகவும்
வலையிட்டு இறுக்கும் உறவை.
*
பயனாகிய அருளன்பு கனிந்தால்
பனையளவு சிந்தனையீந்து வருடும்
உரிமைப் பொருட்களினிதமான நினைவு
எரியூட்டும் சுமையாகினும் உறவுரிமையானது.
எரிக்கவியலாதெதனாலும் மரணம் தவிர.
இதயப் பெட்டகத்திலடைக்காத வண்ணத்திப்பூச்சியாக
இதமான மயிலிறகுத் தடவல்களான
சுமையாக விதானமாகிறதியத்தில்.
*
வேதா. இலங்காதிலகம்.டென்மார்க். 7-2-2018
*
lines-flowers-and-nature-475142

1. Photo poem

 

photo-poem

*

தாபமாகவும் நிதம் சாபமாகவும்
கோபமாகவும் தீபமிடுவது ஏன்!
தூபமிடு! நகைச்சுவைத் தூபமிடு!
சோபனமாகட்டும் பாபம் அழியட்டும்.
வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-3-2016
*

எனது முதலாவது வலையில்   கவிதை பாருங்கள் தலைப்பில்
105 ஆக்கங்கள் போட்டோ வரிகளாக உள்ளது.
இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
மிக்க நன்றி.

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/

*

 

vowels

2. ஹைக்கூ (12)

DSC00859

*

11.    நாம் உதைத்தாலும் அகழ்ந்தாலும்
         எம்மை ஏற்றுத் தாங்குகிறது
         பூமித் தாய்மை

*

koli

12.  கோழிக்கூட்டிற்குள்ளிதமான வரவேற்பு.
குழந்தையின் மகிழ்வு..
குளிர்காலம்.    26-2-2018

*

1527065bnsdoygduo

37. சான்றிதழ்கள் – கவிதைகள் (47-இணையும் இதயங்கள்.)

amirtham 1-2-18 love

*

 

 இணையும் இதயங்கள்.

*

என்னுயிரோடுருகிய மென் காதல் மலரெடுத்து
இன் கவிதைத் தோரணம் கட்டு.
தென்றலாய்த் தவழ்ந்து உலவும் நளினம்
மென்னிலவம் பஞ்சாய் நெஞ்சோடு இணையட்டும்.

*

உன் காதலுணர்வு இப்படியே பிணையட்டும்.
இன்பத்திலிரு இதயங்கள் ஊஞ்சல் ஆடட்டும்.
வன்முறைகள் விலகி, தூர மறையட்டும்
இன்னிசை மெல்லினங்கள் மட்டுமே இழையட்டும்.

*

திலகமிடும் வெற்றி வாழ்வு நிறையட்டும்.
விலகிடாத பந்தம் விரவி மணக்கட்டும்.
கலகமில்லாக் காதல் காலத்தில் இறுகட்டும்.
உலகத் திருவிழாவை நம் காதல் எட்டட்டும்.

*

பலமுடை நேசத்தைப் பகிர்ந்து உறவாடுவோம்.
குலவும் அழகில் குவலயம் வியக்கட்டும்.
நிலவும் அன்பில் உதாரண இணையாக 
உலாவி மகிழ்ந்து உன்னதம் காண்போம்.

*

வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.1-2-2018.

*

 

lotus-border

4. பிரபலங்கள் (முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்.)

 

vipu

*

முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்.
………………………………………………………………

 

ஆதித் தமிழ்க்குடி அறவழிக்காரர், ஆத்மஞானி
ஆற்றலுடை பேராசிரியர், இயற்றமிழ் வல்லவர்
அறிவியற் கலைஞர், சங்கத் தமிழில் சிறந்தவர்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்வளர்ச்சிக் கருவாளர்.

*

தம்பதிகள் சாமிக்கண்ணு கண்ணம்மா புதல்வர்.
தம்பிப்பிள்ளை இயற்பெயர். நோய் வாய்ப்பட
தமிழ்க்கந்தனருளால் (கதிர்காமம்) குணமாகியதால் மயில்வாகனன்.
தாய்மொழிக் கல்வி, அறிவியற் கல்வி வித்தாளரிவர்.

*

மயில்வாகனமென்ற விபுலானந்தர் கிழக்கிலங்கை அவதாரர்.
மரபு வழிக்கல்வி காரைநகரில் ஆரம்பம்.
மதுரைத் தமிழ்சங்கம் முதலிலங்கைப் பண்டிதர். (1916)
முதலாவது இலங்கைத் தமிழ்ப் பண்டிதருமிவரே.

*

வித்தகப் புதையல், மனுகுல நேசிப்பாளர்
உத்தமமாகப் பயிற்றப் பட்ட ஆசிரியரிவர்
தித்தித்த தமிழாராய்ச்சியிறுதியில் இசைத்தமிழ் ஆராய்ச்சியானது.
அத்துடன் நாடகத் தமிழ் நல்லாசிரியருமானார்.

*

முதல் தமிழ்ப்பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழுகம் 1931
முதல் தமிழ்ப்பேராசிரியர் இலங்கைப் பல்கலைக்கழகம் 1943.
மொழி பெயர்ப்பாளர், பல்துறைசார் பேரறிஞர்.
முதியோர், பாலருக்கும் பாடசாலைகள் அமைத்தார்.

*

பாடசாலைகளின் முகாமையாளர், இதழாசிரியர், விஞ்ஞான 
பட்டதாரி, கல்விக் கண்திறந்த கல்வியாளர்
பன்முகத் திறமையான வரலாற்று நாயகரால்
பங்குனி 29 – 1892ம் நாள் பெருமையுற்றதிவர் பிறப்பால்.

*

‘ பிரபோதசைத்தன்யா’ எனும் நாமம் துறவறப் 
பயிற்சியில் சென்னை இராமகிஷ்ண மடத்தால்
பிரம்மச்சரியத்திற்காகப் பெற்றார். அதே சித்திராப்
பௌர்ணமியில் 1924ல் சுவாமி விபுலானந்தரானார்.

*

பெருமைக்குரியவர் யாழ்ப்பாணத்தில் காந்தியை வரவேற்றார்.
பண்டித பரீட்சைகளை ஆரம்பித்து வைத்தார்.
பல்கலைக்கழகம் சென்னை தமிழ் ஆராய்ச்சித்துறை
பாடத் திட்டத்தினைத் தயாரித்த பெருமையாளர்.

*

ஞானோபதேசம் பெற்ற குரு நினைவாக
மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் தொடங்கினார்.
இச் சமூகத் துறவித் தொண்டாளர் 
இந்தியாவில் யாழ்நூல் 1947ல் அரங்கேற்றினார்.

*

அதனிரு கிழமையால் தமிழ் கூறு 
நல்லுலகப் பணியாளர் இறைவனடி சேர்ந்தார். 
இலங்கைத் தேசியவீரர்கள் வரிசையிலிவர் உள்ளார்.
இலங்கைத் தமிழ்மொழிதினம் இவரது மறைவு நாள்.

*

வேதா. இலங்காதிலகம்ஓகுஸ்,டென்மார்க்.  march 2017

*

 

anchali

1. ஹைக்கூ (6)

hhai

ஆழ்ந்த அன்புச்சுமை
காலம் முழுதும்.
இனிமைவாழ்வு.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.19-2-2018

1.கோடைகாலப் புயல் காற்று:-

   விடுங்கள்! யாரது!
   என்னைப் பலமாகத் தள்ளுவது!
   புயல் காற்று.

2. நட்சத்திரங்கள்.:-

    இத்தனை மின்குமிழிகளையிட
    எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்!
    மின்னும்நட்சத்திரங்கள்.

3. மாலைப்பனி:-

    வைத்தியர் வரவில்லையே!
    யாரித்தனை ஊசிகளேற்றுவது!
     மாலைப்பனி.

4. உறை  பனி:-

   குழந்தை ஆவலாக ஓடியது
   மூடிய துணியை இழுக்க
   உறைபனி

5.  வானவில்:-

     அம்மா நிறங்கள் வாங்கவில்லையா?
     அதையெடுத்துப் பூசட்டுமா?
 வானவில்    நிறங்கள்.

( 5 – மேலே ஒன்று ஆறு)

15-2-2018. வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

drops

35. பா மாலிகை ( கதம்பம்) திருமணம். 527

manam

*

திருமணம்.

*

திரு நிறைந்து சுகாதாரமாய்
திருக்காப்புடன் குறையின்றி வாழ்வதுவாய்
திருமணம் புகுந்தது கட்டுப்பாடாய்
ஒரு தாலி கட்டுவதாய்.
திருட்டி விழுந்தது போலாச்சு
திருத்தமற்று மதிப்பு இழந்தாச்சு.

*

திருமணச் சட்டம் தூசியாச்சு
ஒருமன எண்ணம் காணாமலாச்சு
திருவாசகமாய் திருமண வாழ்வை
ஒருவாசகமாய் வாழுமொரு மனதாளர்
அருமையாய் போற்றி வாழ்வோர்
பெருவாழ்வு வாழுவோருமுளர்.

*

திருவோடு ஏந்துவதாய் நீதிமன்றத்தில்
திருவமுதாக விவாகரத்தை வேண்டுவோர்
திருத்தம் சிறப்பென்று மறுமணத்தை
விருப்போடு தேடுகிறார் விதியென்று.
திருமணப் புனிதம் போற்றுதல்
அருமை நினைவு காத்திடுங்கள்.

*

பா வானதி வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்.  6-3-2016

*

திருமணம்

திமிறும் மனைவியும் திணறும் கணவனுமாய்
திருமண வாழ்வொரு இறுகிய கட்டாய்
திடகாத்திரமிழக்கும் திசையறியா நிலையின்று
திவ்வியக் காட்சியாகவொரு திசை புரிகிறதா பாருங்கள்.

2017

இதே தலைப்பில் இன்னொரு கவிதை இதையும் வாசித்துப் பாருங்கள்.இதோ இணைப்பு:-  

https://kovaikkavi.wordpress.com/2017/01/08/464-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3/

தமிழ்-சித்திரை-புத்தாண்டு-வாழ்த்துக்கள்-52650-18758

36. சான்றிதழ்கள் – கவிதைகள் (46.விடியல்களை நோக்கி )  


sanka17-2-17

*

விடியல்களை நோக்கி 

*

பெரு நம்பிக்கையில் காலூன்றும் எத்தனம்
ஒரு விடியலுக்காய் வெளிக்கும் கீழ்வானம்.
சுருளலை உருள்வின் பிரம்மப் பிரயத்தனம்
ஒரு விடியல் முயற்சியின் பூரண இலக்கணம்.

*

உருவாகும் ஒரு விடியலின் தேடல்
கருவாகும் கனவு விதையினால் கூடும்.
ஆனந்த விடியலைத் தேடிடும் எதிர்பார்ப்பு
ஆழ்ந்த துயிலினால் கூடும் அமைதிப்பூ

*

ஆகாய மழைத் துளிக்கு ஏங்கும் தவிப்பு
ஆட்படும் விளைநிலத்து விடியலின் காத்திருப்பு.
ஓட்டினைச் சன்னமாய் உடைக்கும் தவிப்பு
முட்டையுள் குஞ்சு விடியலிற்கு உயிர்ப்பு.

*

வான்கடலில் சந்திரனிற்கு விடியல் தேவையில்லை.
அவன் மந்திர விடியலே கருக்கிருட்டு வேளை.
விண்ணிலே நட்சத்திரங்கள் விடியலைத் தேடி
கண் சிமிட்டி ஓடாது வான் தடாகத்தில்

*

இன்னும் மேலும் ஓயாது தேடு
நன்னெறி காத்து நாளும் ஓடு
உன்னைச் சுற்றியொரு ஒளி வட்டமியற்கையில்
பின்னுமுன் முயற்சியே பெருமாக்கம் விடியலுக்கு.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 16-2-2017

sunburst

35. சான்றிதழ்கள் – கவிதைகள் (45.களத்து மேட்டிலே காத்திருக்கேன்..)

 

 

sanka-kirami2- 6-3-17

*

ஓ! கிராமியக் கவிதையா!.. மிக்க மகிழ்ச்சி.
சங்கத் தமிழ் குழுவினருககு.மனமார்ந்த நன்றிகளும்.
வாழ்த்தகளும் பங்கு கொண்ட கவிஞர் குழாமிற்கும்;
மிகுந்த வாழ்த்துகள். கிராமியக் கவிதை சிறப்புச் சான்றிதழ்.

*

களத்து மேட்டிலே காத்திருக்கேன்…….

*

வளமாய் அப்பா உழுதிடுவார்
நளபாகம் செய்து கட்டுச்சோறு
அளவாய் உனக்கும் கட்டிடவா
குளத்துக் கரையாலே வருவாயா
களத்து மேட்டிலே காத்திருக்கேன்.

*

அத்தை மகன் என்னை
சத்தியமாய் பெண் பார்க்க
சித்தம் கொண்டு வருகிறான்.
குத்தம் சொல்லாதேயென் மேலே
கூடிப் பேசிடுவோம் வந்திடுவாய்.

*

உன்னைக் கட்டிக்க ஆசைப்பட்டேன
என்ன சொல்வாய்! வருவாயா!
தென்னங் குற்றியில் அமர்ந்திருந்து
மின்னும் நீரிலே கால்களிட்டு
என்ன முடிவு சொல்வாயோ!

*

கண்ணைக் கசக்க விட்டிடாதே! 
கண்ணாளம் கட்டிக்க சம்மதிப்பாய் 
எண்ணி உன்னை ஏங்குகிறேன்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே!
களத்து மேட்டிலே காத்திருக்கேன்.

*

உன்னை மனசுல நெனச்சு
இன்னொரு வாழ்க்கை வேணாமே
சொன்ன பேச்சு மாறாமே
என்னை எடுக்க வருவாயாம்
சுகமாய் இனிக்க வாழ்வோமே!

( குற்றி – மரக் கட்டை)

*

6-3-2017.  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

villa

34. சான்றிதழ்கள் – கவிதைகள் (44. ஆசையோடு காத்திருக்கேன்)

 

 

sank-kiram27-2-17-3

*

– கிராமத்துக் கவிதை

ஆசையோடு காத்திருக்கேன்.

*

ஆசையோடு காத்திருக்கேன் என் அன்னமே!
மீசையையும் உன் ஆசைப்படி வளர்த்திருக்கேன்
பூசை வேளை நெருங்குதடி வந்திடுவாய்
மோசம் போக வைத்திடாதே செல்லமே.

*

முத்து மாலை வாங்கி வந்தேன்.
முல்லை மலரும் கட்டி வந்தேன்
இத்துணை தாமதம் ஏன் கிளியே!
ஓத்தையிலே காத்திருக்கேன் உனக்காக இங்கு.

*

சின்னாளம் படடிலே சிலுசிலுப்பாயா! நீ
சிவத்தைப் பட்டுக் காஞ்சிபுரம் கட்டுவாயா!
அன்னக்கொடி மாமியோடு துணை வருவாயா!
என்ன திட்டம் ஆவலிலே துடிக்கிறேனடி.

*

என்னவோ சொல்வேனென்று சொன்னாயே அன்று
இன்றாவது கூறுமொரு எண்ணம் உண்டா!
என்று சொல்வாய் வெகுவாகக் காத்திருக்கேன்
நன்று அது கலியாணச் சேதியாகுமோ!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 26-2-2017

*

village