51.பா மாலிகை ( காதல்)118. ஓரப்பார்வையால் என்னைச் சாய்க்காதே

ஓரப்பார்வையால் என்னைச் சாய்க்காதே
00

50.பா மாலிகை ( காதல்)117

மதிமலர் – காதற் கவிதை

வேதா. இலங்காதிலகம் – தென்மார்க் – 10-11-2022

மதிமலர் – புதுக்கவிதை
அரவிந்த (தாமரை) இரவு…..

49. (பா மாலிகை ( காதல்) 116.

மதிமலருக்கு இரண்டாவதான காதற் கவிதை)


காதலாற்றுப்படை

கொண்டையில் மலர் சரியச் சரிய
கண்டபடி மனம் அலைய அலைய
வண்டுவிழிகள் எனை இழுக்குதடி
செண்டுப் பாவாகத் தொடுத்திட
பண்டுத் தமிழை மேய்கிறேனடி.
00
கலிங்கத்துப்பரணிக் கடைத்திறப்புப் பகுதியை
நலிவு அற்ற பரணியை
பொலிவுடை ஊடற் பிரிவை
பொருத்தமாய்ப் புரட்டிப் பார்த்து
பொழுது சாயமுன் சந்திப்போம்
00
தமிழாடிக் கவிதையாடிக் காதலாடி
தமிழ்ச் சொற்சுள்ளிகளை அள்ளிப்போடு
அமிழ்ந்திட வரிகளைக் கொழுத்திடு!
அமிர்தமாகட்டும் எமது சந்திப்பு.
அருகில் சேர்ந்து இணைவோம்.



– 20-10-2022

48. பா மாலிகை ( காதல்) 115. மாமன் மகளே

மாமன் மகளே
00

மாமன் மகளே! மாமதுரைக் குயிலே!
ஏமம் (களிப்பு) தரும் இன்ப வல்லியே
ஓமம் வளர்த்துத் தாலி கட்ட
ஆமென் (அப்படியே ஆகுக) கூறி எப்போது சிரிப்பாய்!
காமன் பண்டிகைக்குக் கூடுவோமா கண்ணே!
00
தாமன் (சூரியன்) சாயுமுன் வெற்றிலை பறித்து
தாயாரிடம் சேர்த்திட்டால் வாணிபம் உயரும்.
பூமகள் நீயும் பூக்கடையைப் பார்த்திடு!
மாமணிச்செண்டே மேம்படும் பணமுடை!
கோமகன் கோமகளாய் மணமேடை ஏறுவோம்.
00
– 29-3-2022

47. பா மாலிகை ( காதல்) 114 கொஞ்சம் பொறுப்பாயா!

கொஞ்சம் பொறுப்பாயா!

00
காதலை மறைக்காதே பூவினும்
மெல்லிய காதலை மறைக்காதே
மூடி மூடி வைத்தாலும்
இருமலும் காதலுமொரு குணமே
மல்லிகை, முல்லை, மருக்கொழுந்தாய்
ஊரெங்கும் வாசனை வீசுமே (காதலை..)

00
தேசிய நறுமணம் அறிவாயா!
தேங்காத உணர்வு புரிவாயா!
தெளிவற்ற மௌனம் பெரும்திரையே!
உன் விழிகள் காட்டிக் கொடுக்கும்
உன் கன்னம் நூறு சொல்லும்
தடுமாறும் பொழுதே தெரியுமல்லவா! ( காதலை..)
00
கன்னிப் பெண்ணின் மனதில்
காதல் இரகசியம் தானே!
மோதலிலும் காதல் வருமா!
விழியால் மொழி கூறேன்!
நிலம் ஏன் நோக்குகிறாய்
நினைத்திடு என்னை சுந்தரியே! (காதலை..)
00
நடித்திட நினைவும் வந்ததில்லை
மடித்து மூடிட மனதில்லை
படித்திட வேண்டுமா காதல்!
சுவாசம் போன்றது காதல்
பிரகாசமாக்கிட ஏன் தயக்கம்!
சுடுகலம் அல்லவே காதல்!
00
காதல் நாயகராவா! அன்றி
பொங்கும் எரிமலையா!

என்னிதயம் குளிருதே உனைக்காண
ஆகட்டும் பார்க்கிறேன்! அம்மா
அப்பாவோடு பேசுகிறேன்!
கொஞ்சம் பொறுப்பாயா! (காதலை..)
00


31-7-2021

46. பா மாலிகை ( காதல்)113.காதல்……(தேனாறு)

காதல்…...(தேனாறு)

நாணல் கரையோரம் சென்றதால்
கோணல் புற்களும் தடையானது
நாணம் பொங்க நின்றிருந்தாயுன்
பாணம் விடும்: கண்களினால்
வாணம்(ப்) பூமழையானது மனதிலே
00

காலம் நேரம் சரியானதால்
கோலம் காதல் வானவில்லாக
பாலம் இட்டது நேசத்தோடு.
சாலம் இடாத காதல்
கானல் நீராக வேண்டாமே.
00

நாணல் போல வளைந்து
நாணம் குழைத்து வாழ்வைக்
கோணல் இன்றி அமைத்தால்
காலம் வாழ்வின் சூகோலத்தைக்
கானலின்றி அழகுச் சாரலாக்கும்.
00

சீலமான வாழ்வு செவ்வானமாய்
நீலமாய் வண்ணக் சூகோலமாகட்டும்
மூலம் அன்பொன்றே ஆகட்டும்!
000


19-6-2018

46. பா மாலிகை ( காதல்) 113.

நறுமுகையே! குறுநகையே!

நறுமுகையே! குறுநகையே!

கண்ணான கண்ணே என்
கண்ணுக்குள் மணியே எம்
வண்ணக் காதலாண்டு நிறைவாய்
விண்ணெட்டுகிறது இரண்டாம் வருடம்

பண்ணிசை மனதில் ஆட
கிண்கிணி மணிகள் ஒலிக்க
கண்ணிறைந்த உன்னழகு காண
தண்ணிலவாய் நீ வருவாய்.

உன் நெருக்கம் மெதுவாக
என்னை நாட நாணிடும்
யன்னல் நிலவு விலகிடுமா!
மின்னல் ஒளி தருமா!

கண்கள் நிறைந்த காதல்
மண்ணிலே நிறைவாய் நிலைக்கட்டும்.
கிண்ணம் நிறைந்த கற்கண்டாய்
உண்மையாய் இதயத்தில் நிலைக்கட்டும்.

நறுமுகையே உன் செழிப்பான
குறுநகையில் மயில் தோகை
விரித்தாடும் என் மனம்
சிரித்தாடுவது உன்னால் அறிவாயா!

பின்னும் ஏக்கங்கள் இன்றி
மன்னன் நானும் மகாராணியாக
சின்ன மாளிகையில் நீயாகப்
பொன்னுலகு காண்போம் இவ்வுலகில்

வருடங்கள் நிறைப்பது அல்ல
வளமான வாழ்வு காண
வசதியான காலத்திற்காக அமைதியாய்
காத்திருப்போம் கலயாண மாலையிட

8-6-2020-

Mathiyuganathan Satgunanathan

விடா முயற்சி விஸ்வரூபம் வேதா

இவர் டென்மார்க்கில் நான் வாழ்த காலத்தில் ஒரே நகரத்தில் வசித்தோம் .
எங்கெல்லாம் இலக்கிய சந்திப்பு நடக்கிறதோ அங்கே இவரையும் காணலாம்
மிகவும் ஆர்வமான ஒரு இலக்கிய ஆர்வவர் , கவிஞர்.
இதற்கு அப்பால் நல்ல சமூக சிந்தனை உள்ளவர் .
அவர் கணவர் இலங்காதிலகம் நேர்த்தியான ஒரு நிர்வாகி
அவரும் நாங்களும் இணைந்து பல விழாக்களை நடத்தியிருக்கிறோம் .
அந்த நேரத்தில் எல்லாம் தானும் இணைந்து அரங்க அலங்காரம் வடிவமைப்பு போன்ற வற்றில் ஈடுபடுவார்
“மதி அது நேராக இல்லை இது சரியா இல்லை என்று மிகவும் ஆர்வாமாக விழா முடியும் வரை நிற்பார் .
பல கவியரங்குகளில் இணைந்திருக்கிறோம் .
இன்று வரை தன்னால் தொடர்ந்து எழுதி வரும் விடா முயற்சி விஸ்வரூபம்.
தமிழ் பாடசாலையில் ஆசியைரா பணி
இவருக்கு சிறு பிள்ளைகளை மிகவும் பிடிக்கும் .தானும் சிறு பிள்ளையாக மாறி விடுவார்.
இன்று தங்கள் இருவரின் நினைவலைகள் என்னுள் மிதந்தது.
இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்
May be an image of Vetha Langathilakam, eyeglasses and text that says ‘விடா முயற்சி விஸ்வரூபம் வேதா வாழும் போதே வாழ்த்துவோம்’

·

Vetha Langathilakam
Mathiyuganathan Satgunanathan முகநூலில் உமது அசைவுகளை இவருக்குக் கூறுவேன் இறுதியாக தங்கள் மகளின் நடனம் காட்டினேன். சங்கம் தூங்குகிறது. நடத்த உறுதியானவர்கள் இல்லை.
சங்கத்தைப் பொறுத்தவரை மனக் கவலையோடு உள்ளோம்.மிக்க நன்றி தங்கள் வரிகளுக்கு.உங்களை ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும்.
May be an image of rose

45. பா மாலிகை ( காதல்)(112). கொலுசு நினைவோடு….

கொலுசு நினைவோடு….

மென்சிறகு வெண் பறவைகளின் துணையோடு
உன் பரிசாம் கொலுசு நினைவோடு
இன்கதை பேசுகிறேன் தனிமை அனலோடு
அன்னத்தைத் தூது விடலாமா உன்னிடமென்று.

இராட்சசனே! இரசனைகளை நினைக்க வைத்து
இரக்கமின்றி விலகினாயே இது நியாயமோ!
இரசிகனே உன்னை நினைந்துருகி உருகியே
என்னாடை இடையில் இருந்து நழுவுகிறதே.

விரகம் மேலிட வீணாகிறதே என்
வித்தையாம் அழகுக் கலை! இனியென்னை
விழலாக கவனிப்பது நிலைக்கண்ணடி தானோ!
வியப்பு! இதை நினைத்தேனா நடக்குமென்று!

பிரிய அன்புப் பரிமாறல் விலகிட
பருவ உணர்வுத் தழுவல் கனவாகிட
திருவே மயக்கும் உன்னழகு நினைவாகிட
உருகும் புலன் ஐந்தும் தாகமாகிறது.

ஏக்க வானில் நீல இரவு
தாக்கம் தருகிறது உன் பிரிவு.
ஊக்கமற்ற சோர்வு தூக்கம் கெடுக்கிறது.
ஊன்றுகோல் நீயருகிருந்த இன்ப நினைவுகளே!

29-5-2017

44. பா மாலிகை ( காதல்) 111. வா! வாலிபக் கடற்கரை பரந்தது….

வா! வாலிபக் கடற்கரை பரந்தது….

அழகு தமிழ் மெய்யமைந்த
பழகு தமிழ் இனியவளே
மழலை மனம் கொண்டென்னை
மனதிலிறுகப் பிணைந்தவளே
தனமே என் காதலியே!

உன் விழி நட்சத்திரச் சுடரில்
என் மன இறுக்கங்கள் இழகுகிறது
உன்னிமைத்திரை மூடும் போது
என்னிதயம் நீரிலிருந்து விலகிய மீனாகத்
தவிக்கிறதே இது தான் காதலா!

அஞ்சன மையிட்டு அசத்தும் விழியாளே!
அழகுவெள்ளம் தேங்கும் உலக பள்ளத்தில்
காதல் மதுவின் போதை போதுமடி
திராட்சை மதுவெனக்கு வேண்டாமடி.
திரண்டவென் எண்ணத்தில் எப்படி நீ வீழ்ந்தாய்!

நான் கவிதைக் கடலில் வீழ்ந்துவிட்டேன்
காதல் போர்வையின் சூட்டினில் நாம்!
கூதல் நாட்டுப்பனியிதைத் தடுக்காது அன்பே’
அலை கழுவிய ஈரநிலமாயென் நெஞ்சம்
உன் நினைவுஅலை தழுவிக் குளிராகிறது!

அதிலுன் காலடித் தடம் பதிக்க வா!
ஐதியிடுமென் நினைவுச் சலங்கையின்
சுதியில் ஒரு வலை பின்னி உன்னைக்
கைதியாக்கி மயக்குவேன் வா!
உன் கண்மையெடுத்து உண்மையாய்

என் காதலைக் கூறுவேன் வா! கண்ணே!
ஏன் ¸தலைகவிழ்கிறாய! எதை வீழ்த்தினாய்!
என் இதயத்தையன்றோ திருடிவிட்டாய்!
கரும் கத்திரிநிற வெல்வெட்டின் ஜிகினா
சருகை இழைகளன்றோ உன்நினைவுகள்

என் இதயத்தில் தினமும் மின்னுகிறது!
வா! வாலிபக் கடற்கரை பரந்தது.!
வயதெல்லை வரையறை இல்லாதது!
காதலில் வென்றோம் காதலிப்போம் வா!
புது ஆதாம் ஏவாள் போற் காதலிப்போம்வா!

30-2-2003
(ரிஆர்ரி தமிழ் அலை கவிதை நேரம் தீபன் நிகழ்விற்கு.)

43. பா மாலிகை ( காதல்) 110 இங்கு இதுவும் காதல் தான்.

இங்கு இதுவும் காதல் தான்.

புனிதக் காதல் அத்தமிக்க
மனித வாழ்வு சில காணிக்கை.
சோலைவன வாழ்வு தர்ப்பணம்
பாலைவனமாக்க சுயநிர்ணயம்.
தியாகம் எனும் திருநாமத்தில்
யாகம் சிலர் சுயபாகம்.
எங்கும் காதலே இது பூமியில்.
தங்கிய காதலே இது என்றும்

நவீன புரட்சி மலர்ந்தது
அதீத எண்ணங்கள் விரிந்தது
பொருந்தா ஆடை களைவதாய்
பொருந்தும் ஆடை புனைவதாய்
‘ உணர்வுகளைக் கொல்லாதே ‘
‘ உணர்வுகளை உலவ விடு ‘
இது இவர்கள் காதல் வழி
இது இவர்கள் காதல் மொழி

மேற்கத்திய சித்தாந்தம் இது
நோக்கம் இவர்களுக்கு இது.
காதலுக்காக வளைந்த மனிதம்
மனிதனுக்காக வளைத்தான் காதலை
தாமிர, வெள்ளி விழாவும்
தங்கவிழாவும் சில கூட வரும்.
எங்கும் இதுவே காதலாக
இங்கு இதுவும் காதலாகும்.

ஓங்கும் காதல் தாராளமாக
ஏங்கும் இதயங்கள் ஏராளம்.
கட்டுப்பாடற்றது காதல் நதி
கட்டுக்குள் அடங்காத நதி
வெட்டிவிட இயலாத நதி
முட்டி மோதி நுரைக்கும்நதி
சட்டம் எதுவும் பண்ணாநதி
சரித்திரமும் படைக்கும் நதி.

7-2-2003
(இலண்டன் ரைம் வியாழன் கவிதை நேரம்)