1. டி. கே. பட்டம்மாள்.

 

collage- padda

*

டி. கே. பட்டம்மாள்.

*

பாட்டிற்கொரு பெண் இசை ராணி
ஊட்டமிகு கர்நாடக இசைக் குயில்.
பாட்டுத் திறத்தாலன்று எம்.எல்.வசந்தகுமாரி
பட்டம்மாள், எம்.எஸ் சுப்புலட்சுமி
கூட்டாக பெண் மும்மூர்த்திப் பிரபலங்கள்.

*

தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி பக்திப்பாடகர்.
தாயார் காந்திமதி (ராஐம்மாள்) பாடகி.
பட்டம்மாளுடன் மூன்று சகோதரர்களும் பாடகர்கள்.
பகிரங்கத்தில் பெண்கள் பாடாத மரபுக்குடும்பம்.
பாட்டுத்திறன் வெட்டியது மரபு வேலியை.

*

பட்டுக் காஞ்சிபுரக்காரி டி.கே. பட்டம்மாள்.
இட்ட பெயர் அலுமேலு. செல்லமாய்
ஒட்டியது ‘ பட்டா ‘ ஈரிணைவாலானது பட்டம்மாள்.
சுட்டிப் பெண்ணாய் நான்கு வயதில் பாடினார்.
பாட்டரசி பிறப்பு 1919 பங்குனி 28.

*

முறையாக இசை பயிலாதவர். கச்சேரிகளில்
தவறாது இசைகேட்டுத் திறன் வளர்த்தார்.
தெலுங்கு இசையாசிரியர் சிலகாலம் பயிற்றுவித்தார்.
10 வயதில் வானொலியில் பாடிய பிரபலம்.
13 வயதில் எழும்பூரில் முதல் கச்சேரியரங்கேற்றம்.

*

இராகம் தானம் பல்லவியை சாதுரியமாய்
இசைக்கச்சேரியில் கையாண்ட பெண் இசைப்புலியிவர்.
இதனால் ‘ பல்லவி பட்டம்மாள் ‘ பெயர் பெற்றார்.
இசையரங்கில் பெண்பாட முடியாத மரபையுடைக்க
தலைமையாசிரியர் அம்முக்குட்டிஅம்மாள் தெலுங்காசிரியர் உதவினர்.

*

அனைத்து மாநிலங்களில் முன்னணி சபாக்களில்
தேசியகருத்து பக்திப் பாடல்களையே பாடினார்.
கொலம்பிய இசைத்தட்டில் பாடவும் ஊக்கியவர்
அம்முக்குட்டி அம்மாளே. பாபநாசம் சிவன்
தொடர்பால் சினிமாவில் பாடினார்.

*

எண்ணற்ற விருதுகள் பெற்றார். பல
வெளி நாடுகள் சென்று பாடினார்.
தனக்கெனத் தனிப்பாணி அமைத்துப் பாடியவர்.
இவர் ஒரு இசை சகாப்தம் 90வது வயதில்
2009 – ஆடி 16லிவர் பூதவுடல் மறைந்தது.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-7-2016.

*

Advertisements

1. வர்ணம் பூசிய வாழ்க்கையடா..

23658420_10213086759780833_3363056073118968420_n

*

வர்ணம் பூசிய வாழ்க்கையடா..

*
வர்ணம் பூசிய வாழ்க்கையை
பர்ணசாலை அமைதி உருவாக்கி
நிர்ணயம் செய்! நிர்மூலமாக்காது
சொர்ணமாக்குதல் உன் கடனே!
*
கர்ண பரம்பரை நல்வழிகள்
கர்ப்பத்து நல்மரபுக் குணங்கள்
சர்வ துர்ச்சூழலால் மாறுபட்டு
வர்ணம் மாறுதல் அநியாயம்!
*
கர்வத்தால் தர்மம் இழந்து
சர்ச்சைக்கு ஆளாகி மாளாது
சொர்க்க வாழ்விற்குக் கண்ணியமாய்
பர்வதம் ஏறலாம் குணவாளனாய்!
*
அர்ப்பணமாக அன்பை இணையடா!
அர்ச்சனைக் குணங்களை நிறைத்திடடா!
வர்ணம் பூசிய வாழ்க்கையடா!
கரணம் போடாது சர்க்கரையாக்கடா!
*
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-4-2016
*
bar-line-2

2. அறிவுடைமை (நாலடியார்)

 

நாலடியார்

*

அதிகாரம் 25 –  அறிவுடைமை

*

நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்      naladiyar
கணிகல மாவ தடக்கம்– பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரங் கூறப் படும்.

*

 

 நளி – பெரிய,  கடல் – கடலின், தண் – குளிர்ந்த, சேர்ப்ப – கரையுடைய அரசனே  நல் கூர்ந்த – வறுமையடைந்த,  மக்கட்கு – மனிதர்க்கு, அணிகலமாவது – அணிதற்குரிய ஆபரணமாவது, அடக்கம் – அடங்கியிருத்தல், பணிவுஇல் – அடக்கமில்லாத, சீர் – தன்மையில், மாத்திரையின்றி – அளவு இன்றி வரம்பு கடந்து நடக்குமேல் – ஒழுகுவானாகில்,  வாழும் . அத்தகையவன் வாழும் ஊர் – ஊரினரால், கோத்திரம் – தன் குலம், கூறப்படும் – இழிந்து சொல்லப்படும்.  என்றவாறு…

*

என் வரிகள்:

*

மகா சமுத்திரத்தின் தண்மை
மணற்தரையின் அதிபதியாம் மன்னனே!
கீழ்ப்படியும் குணம் பொருளில்
கீழ்நிலையாளரை வடிவாக்கும் நகை
கீழ்ப்படிதலற்று எல்லையின்றி மனிதன்
இயங்கினால் தன் சொந்தக்
குடியாளராலேயே இவன் குலம்
இழித்துக் கூறும் நிலையடையும்

*

 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
22-5-2015

*

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

1. அறிவுடைமை (நாலடியார்)

 

Billedresultat for palm leaves manuscript

*

நிறைமதியாளர்

*

அதிகாரம் 25 –   அறிவுடைமை

பகைவர் பணிவிட நோக்கித்  தகவுடையார்
தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)

அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.

*

எனது வரிகள்:-

*

முழுமதிச் சந்திரனையே என்றும்
பழுதுடை கிரகணம் பற்றும்
பிறை நிலாவை அதன்
குறையோடு கிரகணம் பற்றா
இவ் விதியாய் எதிராளியின்
திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
அடக்கார்  எதிர்க்கார்  தம்முள்
குறுகும் நிறை மதியாளர். 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-4-2015

div138

2. தேனினும் இனியது காதல். (69)

1383073_624407780944557_437286089_n

*

தேனினும் இனியது காதல்.

*

தேனினுமினியது காதல் ஊனையுருக்கும்
தேவ இரகசியமல்ல பூவுலக இன்பம்.
தேவனை, தேவதையைக் கண்டதும்
புலனைந்தும் தடுமாறி உலைதல்.

*

உயிரை உய்விக்கும் உன்னதம்
உடலைக் களவாடும் இளமையில்.
பயிராகிப் பயனீயும் முதுமையில்
ஒயில், பலம் காதல் யாகம்.

*

இயற்கையின் தேவை
இயல்பு நிலை.
கண்ணில் புகுந்து கருத்துக்
கவர்ந்து சுகிக்கும் காதல் தீ

*

கன்னல் இளமையிலின்னல் தருமிது
பன்னீரன்பால் பின்னிப் பிணையும்.
பார்வையூஞ்சல் பாந்தத் தொடுகை
ஏந்துமின்பம் ஏராளம்! ஏராளம்.!

*

அன்பிது பழகியறிந்தால்
துன்பியலிது பழகி விலகல்.
எதற்கிணையிது மதுவிது
அணைக்கவும் தீ அணையுது.

*

வஞ்சமற்று அள்ளி ஈவது
கஞ்சமற்று திரும்பக் கொடுப்பது.
விரல்கள் பத்துமுணரும் இன்பம்
வெட்கமில்லை வேண்டும் வரை

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-7-2016

*

(காதல் – தலைப்பில் 67 கவிதைகள் எனது முதல் வலையில் உண்டு)

*

1457745k8p286od3g

1. பா மாலிகை ( காதல்) – ஓரவிழிப் பார்வையிலே – (68)

kan

*

ஓரவிழிப் பார்வையிலே

*

ஓரவிழிப் பார்வையிலே தேனே
தாரகை நீயே ராணி
பாரம் சிறிது குறையுமே கண்ணே
சாரம் எதுவென்று கூறவா கண்ணே
*
நீந்துதே நிலவு முகத்திலுன் கூந்தல்
காந்த அலையொன்று கதம்பமாய் நெருங்குதே
அந்தக் கலை நின்றென்னை மயக்க
சொந்த நிலை அலர் நிலையாச்சுதே
*
இன்ப ஒளி விழியால் அன்பையூற்று
மன்மதப் பேரெழிலால் இன்னல் களை.
நன்றே என்னுள்ளில் நந்தவனம் நீயே
தென்றலாய் வீசு தெம்மாங்கு பாடு
*
எந்தன் அகத்தில் சுதந்திரச் சிந்தனைச்
சந்தனம் பூசுகிறாய் சகதியை நீக்குகிறாய்
தந்தனத்தோம் இசைக்கும் மந்திரக்காரி நீ
சிந்தும் இழிவற்ற காதலின் இலக்கணமே.
*
14-6-2016
வேதா. .இலங்காதிலகம்.
டென்மார்க்.
*

வேறு–

12-11-2015
பின்னும் மனம் இழைதலில்
மின்னும் நாணம் வழிதலில்
உன்னை இந்தக் கண்ணாடியில்
சின்ன இமை தாழ்தலில்.
காதலோ இது மனிதம்
காத்தலின் உணர்வுப் புனிதம்.
காந்தமாய் இழுக்கும் வனிதம்
காதல் நாணமொரு மந்திரம்!
_________________

நேயர்களே இது எனது இரண்டாவது வலை. முதலாவது – வேதாவின் வலை.
இணைப்பு இதோ:- https://kovaikkavi.wordpress.com/
அங்கு பா மாலிகை காதல் தலைப்பில் 67கவிதைகள் உண்டு அதன் இணைப்பு:-  https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/
*
Billedresultat for குழந்தை   தாயுடன்    அணைதல்

வேதாவின் வலை.2

05d338b42eb32412dbd3088bcc519b54

*

எனது வலை கோவைக்கவி வேட்பிரஸ்.கொம் (ஆங்கிலத்தில்)
தமிழில் – வேதாவின் வலை 
இனி- கோவைக்கோதை.வேட்பிரஸ்.கொம் – வேதாவின் வலை.2
என்று தொடர உள்ளேன்.

வாருங்கள் வந்து உங்கள் ஆதரவை அள்ளித் தாருங்கள்.
அனைவருக்கும் இனிய நன்றிகள்.

 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-5-2017

 

6cups