37.பா மாலிகை ( கதம்பம்) 529. காலத்திற்கும்… மனது …

 

manam

*

காலத்திற்கும்… மனது …

*

ஓடிக் கொண்டேயிருக்கும் மன எண்ணம்
பாடிக் கொண்டேயிருக்கும் தினம் தினம்
புல்லாங்குழல் துளைகளால் இசை வழிகிறது.
பல்லாங்குழி ஆடி ஆசுவாசமாகிறது மனது

*

எண்ணத்தில் தெரிவது கடல் தொடுவதாய்
கண்களிற்குத்; தெரியும் வானச் சுவர்.
சுவருமில்லை கடல் தொடுவதுமில்லை. ஓரு
மாயத் தோற்றம் கானல் சுவரேதான்.

*

தேவர்களல்ல அவர்கள் வெறும் மானிடரே
தேவதருவல்ல மனம் உன் உதிரமுமே
எல்லாப் பூக்களும் மணப்பதில்லை நெஞ்சில்
நில்லா மணங்கள் எனவும் இல்லை.

*

ஈனச் சுவர் ஊனச் சுவரிடியும்
சீனச் சுவர் மானச் சுவரிடியாது
கான அலை காதில் கேட்டபடியே
காலத்திற்கும் நெஞ்சில் பாட்டு ஓடும்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 11-8-2016 

*

 

hearts-line-205qa1t

5. பா மாலிகை (வாழ்த்துப்பா) முல்லைத்தீபன்- தாரணி 53.

 

mullai

*

திருமண வாழ்த்து வரிகள்.

*

வாழ்க்கை ஒப்பந்தம் திருமணம்! மனிதனாக்கியது
ஆழ்ந்து அன்பில் ஊறி மனதால்
வாழ்வு சிறக்க சந்ததி பெருக்குமிணைப்பு.
தாழ்வின்றி இணைந்தேகுதல் தம் திறனே!

*

தலைகோதும் உறவு திருவளர் முல்லைத்தீபனும்
கலைமகளம்சமான தாரணியும் திருமணத்தில் இணைவு
விலையில்லா இல்லறம் பார் போற்ற
கலையம்சமாக அமையட்டும்! உளமார்ந்த வாழ்த்துகள்.

*

அன்பிலே கட்டுப்பட்டு அறனெனப் பட்டதே
இன்னமுத வாழ்வு பிறன் பழிப்பதில்லாயின்
நன்று என்ற வள்ளுவர் கூற்றினை
உன்னதமாக மெய்ப்பிக்க அன்பிலிறுகி வாழ்க!

*

மனமொத்து வாழ்ந்து உலகில் மணமுடன்
தினமும் தங்க நிமிடங்களாக இல்லறம்
கனமின்றி நகரட்டும்! காதல் பனி
வனமாக அழகு பொழிந்து மயக்கட்டும்!

*

சீரும் சிறப்புடன் மனமிணைந்து நீடு வாழ்க!
இன்பத் திருமண வாழ்த்துகள்!

*
கனகரட்னம். இலங்காதிலகம். வேதா. டென்மார்க். 19-4-2018.

*

mullai-pp

*

pink

3. மணிமேகலை சான்றிதழ்கள் – கவிதைகள் (காப்பியம் சிறக்க வந்த கணிகை மாதவி)

 

nila-manime-3

*

காப்பியம் சிறக்க வந்த கணிகை மாதவி

*

சிலப்பதிகாரம் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.
வலம் வந்தாளிரண்டாம் கதாநாயகியாக மாதவி.
ஆடற்கலையின் அற்புதநுணுக்கங்கள், பதினொரு வகை
நடனங்கள், இந்துசமயத் தொடர்புவிவரணமடங்கியது இவளால்.

*

இந்திரனவை தேவலோகத்திலகத்தியர் முன்னே சயந்தன்
இந்திரன் மகனிசை, ஊர்வசியாடலிலும் காமம்
சிந்தியதால், சந்தம் பிழைபட, அகத்தியர் சாபமிட்டார்.
வந்துதித்தாள் ஊர்வசி கணிகையர்குல மாதவியாக.

*

பூம்புகார், காவிரிப்பூம் பட்டினச் சித்திராதிபதி
புதல்வியாகி ஆடல், பாடல் அழகிலோங்கினாள்.
ஏழாண்டுப் பயிற்சி, பன்னிரண்டாண்டில் அரங்கேறியரசனிடம்
தலைக்கோல் பட்டம், பொன்னும் பெற்றாள்.

*

மாதவி மாலை தெருவில் விலைப்பட
மாதவியகம் சென்றான் கோவலனதை வாங்கி.
மாலைத் தங்கல், கண்ணகி பிரிவென்று
மாசறு இல்லறம் மாதவியால் வேறானது.

*

இந்திரவிழாவில் மாதவியாடலால் கோவலனின் பொறாமை
ஊடல் தீர்த்து கூடினாள் மாதவி.
கடலாடலில் யாழிசையோடு கானல்வரி பாடினர்
வரிகளின் கருத்தைப் பிழையாயெடுத்துப் பிரிந்தனர்.

*

தூது, ஓலைகள் பலனிழந்தன. பிற 
ஆடவரையெண்ணாது வாழ்ந்தாள் உயர்குலப் பின்னணியாலோ!
கோவலனாவி பிரிய புத்தமடத்திலிணைந்தாள் மணிமேகலையுடன்.
கண்ணகி கணவனைக் காதலித்த தவறன்றி கற்பிலுயர்ந்தாள்!

*

கணிகையர் குலத்திலும் தடைகள் தாண்டி
கண்மணி மணிமேகலையுடன் கற்பு மாணிக்கமானாள்.
மணிமேகலையையையும் இன்னொரு காப்பியத் தலைவியாக
வாழவழியூட்டினாள் காப்பியம் சிறக்க வந்த மாதவி.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 7-12-2017

*

silampu

22.பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( இரவின் மடியில் . )

 

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள்-5

 

kaviju-parathy-5

*

இரவின் மடியில் .

*
( புரவு- பாதுகாப்பு. விரவு- பரவுதல். முரவு- பறை வகை)

இரவின் மடியில் இன்மனம் உறங்கும்.
புரவுப் படியில் கனவுகள் மலரும்.
நிரவும் மலர்கள் நிறை மஞ்சமீது
சரணம் கொள்ளும் இதமான தூக்கம்.

*

பரவும் நாளின் பரபரப்பு நடுவிலும்;
திரவியம் மனிதனுக்கு திரளும் தூக்கம்.
சரளமான துயில் கொள்ள லென்பது
பரவும் அமைதியா பரமன் கொடையா!

*

அரவமான துயிலாமை இரவு. மடி
புரவியின் பாலைவனப் பயணம் சிலருக்கு.
அரற்றும் வெறுமை, இருண்மை, தனிமை
முரவு அடித்து முதுகு சொறியும்.

*

வரமேயொரு நிறை தூக்க இரவு.
விரற் சித்திர மன்மதக் கோயில்
சுரம் பாடும் சிறையும் நல்
இரவின் மடியில் உயிர் ஊன்றும்.

*

பொன்னிலவில் கடலலை தவழ வருடும்
தென்றல் அடமின்றி வசந்தம் இசைக்க
அன்றைய நிலவில் அசைந்த காதல்
இன்றுமினிப்பது இரவின் மடி அறியும்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.   26-3-2018

*

Scan-eye closed

9. பாமாலிகை (இயற்கை) 87. காட்சியும் கவிதையும்

 

neela thadaagam

*

காட்சியும் கவிதையும்

*

நீரைமேவி ஒரு பாலம் செவ்வில்லாக
நீலக் கம்பளத்தில் பசியவிலைகள் மனமள்ள
நீர்கோலும் கிண்ணமோ அழகிய தட்டோ
நீக்குதலற்ற சந்தன வட்டிலைகளும் காட்சியாக

*

நீச்சலில் மீனினம் வானவில் கண்காட்சியிட
நீரிலே தலைசாய்த்து நாணல்கள் வரவேற்க
நீராடும் அல்லியும் ஆம்பலும் சொர்க்கமாக்க
நீரிலே ஒளிவிளக்கிடும் காட்சி நினைவிலாடுது…

*

– 25-4-2018- 

*

lotus-border

21. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். (மண்ணில் உலவும் விண்ணக தேவதைகள்)

 

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள்-4

*

kaviju-parathy-4

*

மண்ணில் உலவும் விண்ணக தேவதைகள்

*

பஞ்சுக் கன்னம் பிஞ்சு விரல்
அஞ்சும் விழி அமுத மொழி
கஞ்சமற்ற புன்முறுவல் கதுப்புக் கன்னம்
துஞ்சும் விநாடியும் இணை பிரியேன்.
வஞ்சி மகளென் வசீகர தேவதை
மஞ்சுப் பெண்ணெ என்னாசை மகளே

*

உயிராய் என்னை அன்று உருவாக்கினாள்
உயிர் எழுத்தும் உணர்வும் ஊட்டினாள்
உலகில் எங்கும் உருவாக முடியாதவள்
உள்ளே கருவிலெனை உண்டாக்கி உதிர்த்தவள்.
உகந்தவள், உயிரானவள் அப்பாவிற்கும் எனக்கும்.
உண்மையாய் என்னுயிர்த் தாய்த் தேவதையவள்.

*
மேனகை, ரம்பை, ஊர்வசி திலோத்தமையை 
மேவிய என் தோழி தமிழரசி
மேன்மையான உயிர்த் தமிழ்ப் பண்டிதை.
இன்தமிழில் என்னை மறக்கடிக்கும் ஒளவை.
இன்பமுடை பெரு வண்டு விழியாள்.
அன்பில் ஆழ்த்தும் இகலோகத் தேவதை

*

அரம்பையர்கள் அன்றும், இன்றும் என்றும்;
நிரம்பவே கண்களில் நிறைகிறார் பூவுலகிலும்.
தரமுடை கலையரசிகள் பத்மினி, சோபனா
வரம்பற்ற நடன தேவதைகளாய்ப் பலர்
சரமாக மொழியலாம் சுந்தரிகள் நாமத்தை
வரம் எமக்கு மண்ணிலுலாவும் தேவதைகள்.

*

23-3-2018    வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

angel

39. சான்றிதழ்கள் – கவிதைகள் (49-வீரம் விளைஞ்ச மண் இது தானே)

senthamilsaral-kiramiyam -2

வீரம் விளைஞ்ச மண் இது தானே

*

வீரம் விளைஞ்ச மண்ணின் கதையின்
சாரம் கூறும் விவரங்கள் எம்மை
ஓரம் போகச் செய்யாது சிரமுயர்த்தி
தீரம் கொள்ளச் செய்திடும் உண்மை.

*

யாருக்கும் அடங்காத வீர குணம்
யாக்கையில் ஓடும் குருதியிலும் ஊறும்.
கோலெடுத்துச் சிலம்பாடி வளர்ந்து பின்
வேலெடுத்து வீரம் நாட்டினர் அன்று.

*

இலக்கு நோக்கிப் பயணம் சென்றால்
கலக்கி உயர்வாய்க் கவனச் செறிவில்
கனவேகம் மனவேகமாகி உறுதியான உடலும்
உனது இயக்கமாகி உலகை வெல்வாய்.

*

மகாபாரதப் போரும் தந்திரங்களும் இன்னும்
இராம இராவண யுத்தமும், தமழரின்
மரபுவழி வீர விளையாட்டு ஏறுதழுவலும்
வீரம் விளைந்த மண்ணின் வரலாறே.

*

சிந்துவெளி நாகரிகத் தொடக்கம் இது.
முந்தைய பெண் வீராங்கனை வேலுநாச்சியார்
பிரித்தானிய ஆட்சிக்கெதிராயெழுந்த இராணி இலட்சுமிபாய்
இந்திய விடுதலைப் போராளி கடலூர் அஞ்சலையம்மாவென
வீரம் விளைஞ்ச மண் இது தானே.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 22-4-2017

*

lines-flowers-and-nature-475142

6. நான் பெற்ற பட்டங்கள் (13)

 

muththamil-.Kaviyatuvi

*

தமிழுலகில் நான்பெறும் 17வதுபட்டமாக 

           – கவியருவி

என்ற பட்டத்தை பெற்றுள்ளேன். தமிழுக்கு ஆண்டவனுக்கு…நன்றிகள்.

****************

முத்தமிழ்க்களம். ஆண்டுவிழா போட்டிக் கவிதை.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 4-4-2018

*

காவிரித் தாய்

*
(கா- பூஞ்சோலை. ——– + விரி)

மேற்குத் தொடர்ச்சி மலை பிரம்மகிரியில்
மேன்மையாம் தலைக்காவிரியில் உருவாகித் தவழ்வதும்
மேனியிலுமடி மண்ணிலும் தங்கத் தாதுக்களும்
மேம்பாட்டால் பொன்னி என்ற பெயருடனும்
மின்னுற்பத்தி, அன்றாடப் பயன் பாசனத்திற்குதவுகிறாள்.

பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரிப்பதால்
பாங்காகக் காவிரி பெயரும் கொண்டாள்.
பிரச்சினை, தேசியமான நீர்ப் பங்கீடு.
பிணக்கு எதிர்ப்பாடில் தமிழ்நாடு கர்நாடகா.
பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் சங்கமம்.
___________________  

EN - paddankal - 2helt new

*

sunburst

5. நான் பெற்ற பட்டங்கள்(12)

 

தமிழுலகில் நான்பெறும் 17வதுபட்டமாக 

            -முழுமதி- 
என்ற பட்டத்தை பெற்றுள்ளேன். தமிழுக்கு ஆண்டவனுக்கு…நன்றிகள்.

muttam27-12-.2017

*

முற்றம்( படைப்பாளிகளின் சொர்க்கம்.)முத்தான 3 வரிகள் 26-12-2017 படவரிகள்.
1. பிள்ளைகளிற்காக எதுவும் செய்வாள் தாயவள்.
கிள்ளைகளை உயர்த்துவது புனிதத் தாய்மை.
வள்ளலிறைவன் வரமீவான் கொள்ளை சுகமடைவாய்.
2. நிச்சயம் வெல்ல உன்னால் முடியுமுன்
பச்சைப் பிள்ளைகளை நீ காப்பாற்றுவாய்.
அச்சமின்றி உழை! மச்சமுடைய எதிர்காலமுண்டு.
3. பூங்கொடி உன்னை இந்த நிலைக்குள்
பூட்டியவர் யார்! மெல்லிடை இது!
பொல்லாப் பாரம் தாங்குமா கொடுமை!
4. கடும் பாரம் ஏற்றியது விதியோ!
கணவனா, தந்தையை இழந்த நிலையாவிது!
வறுமையாலறிவுயராது பெரும் பொதி சுமக்கிறாயே!
5. பஞ்சுப் பொதியா இது அன்றிப்
பாரமுடைய நெற் பொதியா! உரமடைய
ஓய்வு எடுத்துத் தூக்கிடுவாய் பெண்ணே!
வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.26-12-2017
*
*
EN - paddankal - 2
*
ribbon

20. பாரதிதாசன் சான்றிதழ்கள், கவிதைகள் (உண்மை சொல்வாய் மனமே.)

 

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள் – 3

 

kaviju-parathy-3

*

உண்மை சொல்வாய் மனமே.

*

( அண்ணார் -பகைவர். வண்மை –வாய்மை. தெண்மை –அறிவின் தெளிவு. அண்ணல் -பெருமையுடையவர், இன்னும் பல)
கண்ணியமான வாழ்வெனில் அங்கு
உண்மையும் கலந்திருக்கும் நன்கு.
அண்ணார் கூட மதிப்பார்.
அண்ணல் என்றும் குறிப்பிடுவார்.
பண்ணும் இசைத்து ஏற்றிடுவார்.
*
வண்மை நிறைந்த வார்த்தைகள்
விண்ணைப் போன்ற வெண்மையது.
உண்மை நிலையால் வீழ்த்திட
விண்ணவரும் நளனைச் சோதித்தார்
மண்டியிட வில்லை நளமகாராசா.
*
தெண்மையுடன் பிறருக்குத் தீங்கற்ற
தண்மை வார்த்தைகள் கூறுதலே
உண்மை சொல்லல் உணர்வாய்!
மண்ணிலிதுவே மாணிக்கம்! மனக்
கிண்ணத்திலெடு! உயரத்தில் ஏறுவாய்!
*
நெஞ்சறிந்து பொய் சொன்னாலுன்
நெஞ்சே உன்னை வருத்தும்
அஞ்சாது உண்மை சொல்வாய்
வெஞ்சமரில் வென்றதாய் இன்புறுவாய்.
பஞ்சணையில் நிம்மதியாய்த் துஞ்சுவாய்.
*
பணம், புகழ், அகந்தையுன்
குணம் மாற்றி உண்மை
மணம் அழிக்கும் உணர்!
பிணமாக மதிப்பார் உண்மையற்றவனை
உண்மை நீராலுனைச் சுத்திகரி
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.18-3-2018.
*
swan devider