37. photo poem – பகல் வேடக்காடு….

பகல் வேடக்காடு….

நன்மதியைத் துன்மதி ஆக்குபவர்
வன்முறையாளர் பழிவாங்கும் சிந்தனையாளர்
இன்பமில்லா விடமேறிய சொற்களுடன்
அன்புக்காட்டைக் கொலைக்காடு ஆக்குபவர்
புன்னகையில் மர்மங்கள் புதைத்துள்ள
தென்பற்ற உறவுகள் விலக்குதற்குரியன.

பூச்சொரியும் என்று புறப்பட்ட
பாதங்கள் பாவிசை கேட்காது
பரவச மொழியை இழந்தால்
பந்தம் அறுத்திடும் ஒரு
பகல் வேடக்காடு தானே
பகிரங்க வாழ்வு மேடை.

முகத்தை முகம் பார்த்து
முக்காடற்று நிமிர்ந்து நேராக
முகம் கொடுப்பதே சுயநடை
முனகி விம்மும் மனமுகடு
முரணாகிச் சரிவதும் இயல்பு.
தரமற்ற நிலையின் தழுவலேயிது!

2-9-2019.

36. photo poem – மனம் சிறகு விரித்தால்

மனம் சிறகு விரித்தால்

கனமென்று நத்தைக் கூட்டினுள்
தினம் போர்வையுள் ஏன்!
மனம் சிறகு விரித்தால்
சனங்களின் தொடர்புச் சங்கிலியுள்
வனப்புடை பொறாமையற்ற உறவில்
இனத்தைப் பிணைத்தலும் இனிமையன்றா.

19-9-2019


OPERA HOUSE

3. பேட்டி – நேர்முகம் – விழா –

J.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கு’ ஈழவாடை- ‘ விழா கௌரவ அதிதி

பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது மிக மகிழ்ச்சி. எனது நூல்களையும் அங்கு கொடுக்க முடிந்தது ம் மகிழ்ச்சி.

9. எனது 4வது – 5வது நூல்கள் –

1 year ago

Arivirutchcham Mullaimaha is with யோ புரட்சி and 74 others.

September 29, 2018 at 12:13 PM · 

போதநாயகிக்கு அஞ்சலி’, ‘மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகப்பணி’, ‘பண்பாட்டுப் பேணுகை’ ஆகியவற்றோடு ஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய இரு நூல்கள் வெளியீட்டு விழா.

டென்மார்க் வாழ் ஈழத்துப் படைப்பாளி வேதா இலங்காதிலகம் அவர்கள் எழுதிய ‘குறள் தாழிசை’, ‘பெற்றோரியலில் சிற்றலைகள்’ ஆகிய இரு நூல்கள் வெளியீடு கண்டன. வள்ளுவர்புரம் ‘செல்லமுத்து வெளியீட்டகம்’ வெளியீடான இவ்விரு நூல்களின் வெளியீட்டு விழாவானது 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஈழத்தின் வன்னியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு முத்து ஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் ‘கம்பீரக் குரலோன்’ சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார். டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி முகாமையாளர் ‘பண்பலை வேந்தன்’ ரி.எஸ்.முகுந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

.
இந் நிகழ்விற்கு எமது அறிவிருட்ஷம் ஏற்பாட்டில் பு/ ஸாஹிரா தேசிய கல்லூரி உத்தரவாதக் கல்வி மாணவிகள் கலந்து சிறப்பித்தனர். தொடர்ந்து புத்தளம் அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாடு சார்பில் பன்னூலாசிரியர் முல்லை றிஸானா அவர்களினால் நூலாசிரியருக்கான கெளரவிப்பு அளிக்கப்பட்டது

I M சுறைஸ்
பணிப்பாளர்
அறிவிருட்ஷம்
துருத கல்வி சமூக மேம்பாடு

35. photo poem –

கொதி நீரில் குளிர்ந்த விரலாக
குதிக்கிறது பதியத் தேன்மொழி.
பசும் புல் தரையில்
மிதிக்கும் புற்களின்றி
கோரப் பற்களின் தாண்டவம்.
காயங்கள் தாயங்களாகி குலுங்கிக்
கோலங்களாவது இயலாமையின்
அவலங்கள் தான் சோகம்.!

29-9-2013

17. பா மாலிகை (வாழ்த்துப்பா) –

3-1-2016 நூல் வெளியீடு வாழ்த்து.

திருமதி ஷர்மி வீராவின் தமிழ்பணி
திவ்யமாக, திட்பமாக, திறனுடன் நகரட்டும்!
திசையெங்கும் தமிழ் மணம் வீசட்டும்!
விதைக்கும் முதல் கவிதை நூல்
” திமிரும் நீயும் ஒரே சாயல் ”
நிமிரும் வித்தியாச நூல் தலைப்பு
சமிர்த்தியாக இன்று வெளியாகி விரியட்டும்.
அமிர்த யோக வெளியீடு ஆகட்டும்.

ஆரம்பம் இது, அனுபவங்கள் நிறையட்டும்!
சாரமிகு பாக்கள் தமிழ் வானமெங்கும்
தாலாட்டுப் பாடட்டும்! சந்தம் இனிக்கட்டும்!
பாரெங்கம் புகழ் அலையாகப் பரவட்டும்!
டென்மார்க்கிலிருந்து வேதா. இலங்காதிலகமாகிய யான்
என் மனம் நிறைந்த வாழ்த்தை
சின்ன வரிகளினூடாகத் தெரிவிக்கிறேன். தங்கள்
தமிழ் வாழ்க! நீடு வளர்க!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
(வேதாவின் வலை)

5. சோழா – (11)

பந்து போல் உருண்டது 2019

ஐந்தாவது சோழனின் பிறந்த நாள்.

விந்தில் விளைந்தவன் இன்று பல

விசித்திரங்கள் செய்யும் விந்தையானவன்.

அதட்டி உருட்டி எம்மை ஆட்டுகிறான்.

இதயம் குளிரத் தமிழும் பேசுகிறான்

இதயம் நிறைந்த அன்பைத் தெளிக்கிறான்.

நிதியான நேர்மையை நாம் கொடுப்போம்.

நீதி நெறிகள் தினம் போதிப்போம்

தீதும் நல்லதும் எடுத்து உரைப்போம்.

சாதுவாக இன்றி சாதிக்கப் பழக்குவோம்.

சகாதேவன் அருள் நிறையட்டும் பிள்ளைக்கு.

23-9-2019

16. பாமாலிகை (தாய்நிலம்) – 51. மீண்டு(ம்) வருகிறோம்.

மீண்டு(ம்) வருகிறோம்.

ஆண்டுஆண்டாக நாம் எமது பாதையில்
தாண்டி வந்தது போராட்டமாகத் தான்.
பூண்டகோலம் மாறாது தீவைச் சிங்களமாக்க
வேண்டிய பாதையில் தான் அரச பயணமும்.
தண்டம் அடக்குமுறையென தாண்டியது போர்.
ஈண்டு வட்டம் தொட்ட இடத்திற்கே.

ஆடம்பர வாழ்வு சலுகைக்காக ஒரு கூட்டம்.
சுயதொழில் செய்துயர்ந்தோரை அலட்சியம்
செய்யுமொரு கூட்டம். தமிழீழம்இ போர்
இலட்சியமென்போரை இழிவு படுத்துமொரு
கூட்டமெனஇ ஊரையடித்து உலையில் போடுகிறார்கள்.
முண்டியடித்துக் கொண்டாடுகிறாரின்று பாராளுமன்றக் கதிரைக்கு.

இன்னபல குளப்பங்கள், சுனாமிகள், அழிவுகள்,
இறப்புகள் போர் என்பன மறக்காத வடுக்களாக.
உரிமைகள், உறவுகள் மாற்ற முடியாதவைகள்.
காலமெனும் தொடர்கதையில் மீண்டு(ம்)
வருகிறோம் – எழுவதற்குத்தான்.

.28-2-2010

15. பாமாலிகை (தாய்நிலம்) – 50. இவ்வருடம் விட்டுச் சென்ற….

இவ்வருடம் விட்டுச் சென்ற….

எவ்வளவினிய வன்னி இராச்சியம்!
இவ்வருடமெமை விட்டுச் சென்றது!
திவ்விய பலரினிய வாழ்வும்
செவ்விய கலாச்சாரக் கட்டுப்பாடும் சீரழிந்தது.

போரிழப்பு, கொலை, வன்புணர்ச்சியால்
பௌத்த சிங்களமயமாக்கும் பயங்கரத்தால்
மௌனித்தார் தாய்நிலத் தமிழர் – எம்
கௌரவம் இவ்வருடம் விட்டுச் சென்றது.

புல்லின் கீழ்பாம்புகளும் படமெடுக்கும்
பூனையில்லா எலிகளின் கொட்டமென
நிணவாடை நாடாகுமோ எம்நாடு?
இவ்வருடம் விட்டுச் சென்றது எம் கனவுகளின் கலைப்பு….

16-12-2009.

34. photo poem – சரவிளக்கு

in this link https://kovaikkothai.wordpress.com/2017/09/28/19-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95/

Sea shell swatch on white background. Watercolor drawing