79. பாமாலிகை (இயற்கை) 119. காலநிலை.

காலநிலை

இலையுதிர்க்கும் காலமாகி எங்கும்
கலைதுளிர்க்கும் இயற்கைக் கோலம்.
மலைத்திடும் அழகு மனமள்ளும்
நிலைத்திடாது அமர்ந்திடும் நிட்டையில்

( குச்சி குச்சியாகி மரங்கள் தவம் செய்யும்)
பள்ளிகொள்கையில் இதுவரை
தள்ளி உதைத்த போர்வையை
அள்ளி அணைக்கிறது கழுத்துவரை

மெ ள்ளத் தலைநீட்டும் குளிர்வரை
மழைமூட்டக் காலநிலை
இழைதலான வெயில் தூரநிலை
இழையூசிக் (மெல்லிய ஊசி) குளிர் ஏறுமா!
பழைய வருடப் பனியில்லாக் காலநிலையா!

8-11-2020

47. குறுகிய வரிகள் 160.161.162. 163, (ஊடகம் – பூவரசு) ஒப்பனை நட்பு, பழுத்தது விழுந்தது, இயற்கையின் நியதி,டென்மார்க் கண்ணோட்டம்.

டென்மார்க் கண்ணோட்டம்.

ஏகாந்தக் கிராமவெளி! நாம்
ஏங்கிக் குளிருடன் பார்ப்பது
கோடையில் இந்த மஞ்சள்
ஆடை வயலை நெருங்க
மேடை போல உருள
நேசமாய் மனம் நினைப்பது….

பா வானதி வேதா. இலங்காதிலகம். 23-3-2016

9. சிறு கட்டுரைகள், குறிப்புகள்

வேண்டிய நேரம் கொடுங்கள்.


(30-4.2005ல் இலண்டன் தமிழ் வானொலியின் ஓடி விளையாடு பாப்பா அனுபவக் குறிப்பில் ஒலி பரப்பானது.)

பிள்ளைகள் பல விதம். உணவு விடயத்தில் சில பிள்ளைகள் அடம் பிடிப்பவராகவோ வித்தியாசமானவராகவோ, பிடிவாதமானவராகவோ இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்களா!
அப்படி அல்ல. அவர்களுக்கு வித்தியாசமான உணவைப் பழக்கிக் கொள்ள நல்ல நேரம் தேவை.

நாம் ஓரிரு தடவைகள் புது உணவைக் காட்டி விட்டு, பிள்ளைக்கு இது பிடிக்கவில்லை என்கிறோம் மிக எளிதாக.

ஒரு அமெரிக்க ஆய்வின்படி ஒரு புது உணவை ஒரு குழந்தைக்கு பத்துத் தடவைகள் அறிமுகப் படுத்த வேண்டுமெனக் கண்டுள்ளனர்.

118 குடும்பங்களை ஒரு வருடமாக அவதானித்துக் கண்டது யாதெனில், இவர்கள் புது உணவை ஆக இரண்டரைத் தடைவை மட்டுமே அறிமுகப் படுத்துகிறார்களாம். இரண்டரைத் தடைவ மட்டுமே பரிமாறுகிறார்களாம்.

ஆகையால் பத்துத் தடவையளவில் புது உணவைப் பரிமாறுங்களேன்! வெற்றியடைவீர்களா என்று பாருங்களேன். உங்களுக்கு நல்லதிஷ்டம் கிடைக்கட்டும்.

(கீழ் வரும் ஆக்கம் 11-10-2005ல் – in london tamil radio – ஒலிபரப்பானது.)

77. பாமாலிகை (இயற்கை) 109. சீசோப் பலகையின் ஆட்டம்

சீசோப் பலகையின் ஆட்டம்

காற்றைத் தடுப்பார் யார்!
ஏற்றுத் தலையாட்டும் தென்னை
சேற்றில் தலையசைக்கும் பங்கஐம்
ஊற்றில் மகிழும் அன்னங்கள்.

கண்ணாடிப் பளிங்கு நீர்
விண்ணோடு பறவைகள் ஊர்கோலம்
எண்ணங்கள் கிளறும் இயற்கை
கண்கள் நிறையும் அற்புதம்.

அன்னத்தின் காதலுக்கு இங்கு
இன்னல் செய்ய யாருமில்லை
என்னயிது! விந்தையில்லை! இயற்கை!
கன்னல் அன்பு இணையிது!

காற்று ஊடாடும் வாடிவீடு
நேற்றைய வேலைக் களைப்பின்
ஆற்றல் தரும் ஓய்விடமிது
போற்றித் துதிக்கும் உல்லாசமிது.

சீசோப் பலகையில் ஆடும்
சீரிய ஆட்டமே வாழ்வு
சீதனமானது இன்பமும் துன்பமும்
சீரணமாக்கிச் சமாளித்து ஆடுதலே வாழ்வு

1-11-2020