18. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். (உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.)

 

கடந்த 17 பாரதிதாசன் சான்றிதழ்களும் – முகநூல் சங்கத் தமிழ் குழுமம்தந்தவை.
இனி வருவது கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள்.

kaviijulakam - BARATHY-1

*

சங்கத் தமிழ்பூங்கா குழுமத்தின் சான்றிதழ்கள் இது வரை வலையேற்றினேன்.
இது கவியுலகப் பூஞ்சோலையில் நான் பெற்ற ஒரு பாரதிதாசன் சான்றிதழ் இது

கவியுலகப்பூஞ்சோலை – பாரதிதாசன் போட்டி. இல. 05

*

 உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

*

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் அத்தோடும்
அள்ளுதல் உள்ளத்தாலும் தூயதாகட்டும்.
உள்ளம் ஆசு தள்ளிடில்,
கொள்ளும் மனதின் தெளிவினில்
துள்ளும் நல்லொழுக்க எண்ணங்கள்.

*

இல்லத்தில் இந்நிலை உலாவினால்
செல்வங்கள் அடியொற்றும் நிலையாகும்.
நல்ல எண்ணங்கள் அத்திவாரம்.
நல்வழிக்குப் பொய்யறு நிலையுறுதி.
அல்லல்லழிக்கும் உண்மை பேசுதல்.

*

உயர் குறிக்கோள் உள்ளத்திற்கு
அயர்வற்ற ஊக்கம் தரும்.
துயரற்ற வெற்றியாளர் அனுபவம்
நயமுடன் தேடி அறி.
வியப்புறு வெற்றி பெறுவாய்.

*

நோக்கம் ஒன்று நிறுவு!
ஆக்கமுடன் குறி நோக்கு!
ஊக்கமாய் நகருதல் அவசியம்!
தேக்கமற்ற ஏக்கம், தயக்கம்
விலக்கியடியெடு வெற்றி உனதே!

*

மனமே நண்பன் உயர்த்துவான்!
வானம் தொட நினை!
தானாக மரத்திலேனும் ஏறுவாய்!
பின்னோக்கியுனை நீயே தள்ளாதே!
தன்னம்பிக்கை, உயரறிவு மனப்பாங்கேயுதவும்!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 28-3-2017

*

 

ribbon

Advertisements

30. சான்றிதழ்கள் – கவிதைகள் (44. பசுமை காக்க. )

 

sanka-padda-vati

*

பசுமை காக்க.

*

பசுமைப் புரட்சி உலகின் நிரந்தர
பட்டினிச் சாவைத் தொலைக்கும் அமுதசுரபி.
பசுமைப் புரட்சி இரசாயன உரமழிப்பு
விசுவரூப சுக ஆரோக்கியப் பராமரிப்பு.

*

காடழிப்பால் மழையின் அளவு குறைகிறது.
கடப்பாடாகிறது மனிதனுக்கு மரம் வளர்ப்பது.
திடமாக உயிர்ச்சூழலை உயிர்ப்பாக்க மரமவசியம்.
அடித்தளம் நாட்டிற்கு வனவளமே பிரதானம்.

*

மரம் நட விரும்பு! காடழிந்தால்
மனிதம், உயிர் சீவன்கள் அழியும்.
பயனுடைய பாரம்பரிய மரங்களின் பசுமையால்
விசுவம் (உலகம்) காக்க பசுமை பேணுக

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.15-2-2017

*

trees...

17. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( உருவங்கள் மாறலாம்.)

 

sanka-bara-17th

*

 உருவங்கள் மாறலாம்.

*

பொய்யான உலகில் புன்னகை
செய்தேயுருமாற்றும் போலியர் பலர்
மெய்யென எதையும் நம்பி
செய்யும் காரியமே வெம்புதலாகும்.
அய்யகோ! ஆபத்தான உறவுருவே!

*

பஞ்சான உள்ளம் கொண்டதாய்
பாம்பாக அசைபவரும், ஆபத்தாய்
வஞ்சகம் நெஞ்சில் தீயாய்
வாஞ்சையாய் அசைவோரும் பலராய்
அஞ்சும் உருவாம் உறவுகளே!

*

பருவ மாற்றங்களால் சுய
உருவ மாற்றங்கள் இயற்கை.
சருகாயுதிர்ந்து இலையாய் தளிர்த்தாலும்
தருக்களின் சக்கர வாழ்வு
உருமாறி உருள்தல் அழகு.

*

அரிதாரம் பூசும் உருவங்களால்
பிரிதலாகும் வாழ்வின் நிம்மதியால்
பரிதாப நிலை எழுகிறது.
விரிக்கும் வாழ்க்கையனுபவத் தாக்கங்களால்
உளமாற்றம் உருவை மாற்றுகிறது.

*

உறவு உயிரிற்கு உருவமில்லை.
துறவற்ற உணர்விற்கும் உருவமில்லை.
அறுசுவை, மலரின் மணம்
அலைகள் என்றும் மாறாதவை.
அழியாத மண்ணின் சொத்துகள்.

*

உருவங்கள் மாறினும் தம்
உள்ளம் மாறாதோரும், அம்(அழகிய) 
உள்ளமே மாறி உருமாறியோரும்
உள்ளனர் அதிசயம் இல்லை!
கள்ளம் ஊடுருவும் உள்ளங்கள்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 24-11-2017.

*

 

31851321-certificate-template-vector

16. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( நம்பிக்கையே வெற்றி)

 

sanka .bara-16

*

நம்பிக்கையே வெற்றி

*

நம்பிக்கையாம் அற்புதக் கோடு அரும்
தும்பிக்கை போன்றது. சிற்றொளிக் கீற்றும்
வெம்பிடாது மனம் காக்கும் தூணாகும்.
நம்பிக்கையில் துணிவு விதை மரமாகும்.
உந்துசக்தி, ஊன்றுகோல், கடிவாளமாம் நம்பிக்கை
எந்த நிலையிலும் எழ வைக்கும்.
எறும்பூரக் கற்குழியுமென்பது விடாமுயற்சியின் நம்பிக்கை.
மலையின் நிலையும் மாறும் சிற்றுளியால்.

*

அங்கீகாரம், அணைப்பு, அன்பு, பாசம்
நங்கூரமாகி நம்பிக்கைக் கொடி உயரும்.
அகங்காரம், வெறுப்பு, அலட்சியம், கோபம்
சங்காரம் செய்யும் நம்பிக்கை ஆணிவேரை.
இலையுதிர்க்கும் மரங்களின் பெரும் காத்திருப்பு
இலை துளிர்த்தலுக்காய் அழகிய பூத்திருப்பு
கலைமிகு எடுத்துக்காட்டு ஆறறிவு மனிதனுக்கு.
நிலையாம் நம்பிக்கை வளருங்கள் வெற்றிக்கு.

*

நம்பிக்கை வில்லெடுப்பவன் காண்பது வெற்றி
ஓயாத அருவியாக முயற்சி செய்!
இருடடிலே மின்னலும் நம்பிக்கை ஏந்தும்.
நதியும் கருமத்தின் சிரத்தை பாடும்.
தன் சிறகுகளை நம்பிப் பறக்கும்
தன்னம்பிக்கைக்குக் குருவிகள் ஓர் எடுத்துக்காட்டு.
சோர்வை அகற்று! இலட்சியம் பெருக்கு!
பார்வையைச் சிகரத்திற்கு உயர்த்து! சாதனையாக்கு!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 15-8-2017

*

rainbow line

15. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(இளமையில் வறுமை.)

 

 

sanka-bara-15

*

இளமையில் வறுமை.
*

வளர்ந்து செழிக்கும் இளமையில் வறுமை
கிளர்ந்து மனதில் சினத்தை வளர்க்கும்.
தளர்ந்த நம்பிக்கை தகராறு பண்ணும்.
கிளர்ந்திட விடாது வாலிபம் நரங்கும்.

*

வானமளவு விரியும் ஆசைகள் மனதுள்
வாதாடிச் சுருளும் குடிசையுள் பதுங்கும்.
வாக்குவாதம் ஏமாற்றத்தால் வஞ்சம் தீர்க்கும்.
வாதையால் தீய நட்புகளில் மனமேகும்.

*

இல்லாமை நிலைமை பெரும் கொடுமை.
வறுமை வராது தடுத்தல் மேன்மை.
முயலாமை இயலாமை இணைதலே வறுமை.
ஆற்றாமை வெறுமையழிக்க வறுமைச் சிறையுடையட்டும்.

*

பணம், அறிவு, பாதுகாப்பு, பொருளின்மையும்
வறுமையே. ஓளவை மொழிகிறாரிப் பாலைவனத்தை
‘ கொடிது கொடிது வறுமை கொடிது.
அதனிலும் கொடுமை இளமையில் வறுமை ‘ 

*

வறுமைப் பொறியைக் குறிவைத்து அணை!
வெறிச்சோடிய வாழ்வுயர விடாமுயற்சி எடு!
அறிவின்மையை அழித்து கல்வியொளி ஏற்று!
வறுமையின் எதிர்ப் பயணம் மானுடவினையூக்கு!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 22-5-2017

*

 

mybar

14. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(இளமையிற் கல்வி.)

 

sanka -14- bara

*

இளமையிற் கல்வி.

*

‘ இளமையிற் கல்வி சிலையில் எழுத்து.
இளமையிற் கல்வி கல் மேலெழுத்து ‘
வளமான பழமை ஊக்க மொழிகள்.
இளமையில் கற்றல் கற்றபடி ஒழுகிடவே.
கற்பதற்கு எல்லையில்லை கடலானது கல்வி.

*

களவு கொடுக்க முடியாத செல்வம்.
இளமையிற் கற்றால் மனதிலூன்றி வளரும்.
உழுத நிலத்தில் பயிரிடுவதற்குச் சமம்.
அள்ள அள்ளக் குறையாத செல்வமிது.
இளமையிற் கல்வி முதுமையிலும் உதவும்.

*

படித்தோம் எண்ணும் எழுத்தும் கண்ணாகுமென்று.
பசுமை மரத்தாணியாய் இளமையிற் பதியுமென்று
ஒழக்கவியல, நன்னடத்தைகள் கற்று அறிதலும் 
இளமையிற் கற்றலில் அடங்கியதும் பிரதானம். 
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதாம்.

*

காற்றுள்ள போதே நெல்லைத் தூற்றுவார்.
காய்த்திறுகாத பிஞ்சு மனம் இளமை.
காலத்தில் பயிரிடுதலே கல்வி ஞானம்.
காப்பீடு, காமதேனு போன்ற கல்வி
காய கற்பமாய்க் காலமுழுதும் காக்கும்.

*

‘ கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு ‘

( காய கற்பம் – உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து)

*

வேதா.இலங்காதிலகம். டென்மார்க். 16-5-2017

*

 

book - a

7. பா மாலிகை ( காதல்) காதலர் தினமே!…..74

 

vala

*

காதலர் தினமே!…..

*

உலவும் தென்றல் காற்றினிலே இலேசாய்
இலவம் பஞ்சாய் காதல் குமிழிகள்.
உலகக் காற்றில் காதல் முத்தங்கள்
குலவிக் கலக்கிறது காதல் சல்லாபத்தில்.
திலகம் வைக்கும், வாழ்வை வெற்றியாக்கும்.
விலகிவிட்டால் வேதனை தீயாகும்.
கலகம் பண்ணும் நிலைமை தெரியுமா!
உலகத் திருவிழாவாம் காதலர் தினமாமே!
*
 கோழையும் வீரனாவான், கோடீசுவர மனமாகும்.
பாளை விரிவதாய் சுரபிகள் இயங்கிப்
பரவச அழகு உடலில் பாயும்.
இரசிக மனதில் கற்பனை வளர்ந்து
பிரவகிக்கும். உலகம் இனிக்கும். இவை
அரவணைக்கும் காதலிதயங்களின் அம்சங்கள்.
தரவுகள் அமளிப்படுத்திக் கிளுகிளுக்கும்
பெரு நாளும் காதலர் தினம்தானே!
*
 பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகஸ், டென்மார்க். 13-2-2017
*
0066

6. பா மாலிகை ( காதல்) 73. விழியே கவியெழுது.

 

vili

*

விழியே கவியெழுது.

*

( விழிதுறை – இறங்கு துறை, நீர்த்துறை)

விழி நிறைய கணையாச்சு
அழியெனச் சுழன்று மயக்கமாச்சு
விழிதுறையில் விழுந்து நனைந்தாச்சு
விழியே கவியெழுது நாளாச்சு.

*

தெய்விகக் காதல் உயர்வுடைத்தாம்
செய்யோனாய்ச் சுடரும் நேசமாம்.
மெய் உணர்ந்து மேவுமாம்
உய்தலிற்கு ஒழுக்கவியல் வேலியாம்.

*

ஊனுயிராய் உலவிக் கலக்கும்
ஊன்றுகோல் அன்பின் இணைப்பாம்.
ஊற்றென்பது உன்னதப் பார்வையாம்.
ஊக்கமுடைத்து கோர்வை மொழிகளாம்.

*

அன்பிது பழகி அறிவது.
துன்பமது பழகிப் பிரிவது
கன்னல் இளமையின்ப இன்னலிது
பன்னீரன்பினால் பின்னிப் பிணைவது.

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.7-6-2016.

*

 

eye

13. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(புவியை மறந்த மேகங்கள்.)

 

 

sank-bara13

*

புவியை மறந்த மேகங்கள்.

*

கவிஞர் கவியை எழுத மறந்திடார்.
அவிப்பாகத்தை வேள்வியாளர் தர மறந்திடார்.
குவிதலால் கூம்பு, கோளம் காண்கிறார்
புவியை மறந்த மேகங்கள் குளிராததால்
பூமியை நனைக்காது வெப்பம் உயருகிறது.

*

பாளம் பாளமாய்ப் பூமாதேவி காய்ந்து
கூளமாய் இலைகள் பழுத்து விழ்கிறது.
கோளமாம் பூமியின் காதலையேன் மறந்தாய்!
தாளமிடும் மழையையேன் அனுப்ப மறந்தாய்!
மேளம் கொட்டும் இடியுடன் வருவாய்!

*

காடழித்து சூழலை மாசு படுத்தினோம்.
நாடழித்து தொழிற்சாலை, வாகனப் புகையால்
கேடதிகரித்து வெப்பம் ஏறியது உண்மை.
பாடறிந்து திருந்தி மரங்கள் நடுவோம்.
கூடடைவதான உன்னோட்டம் குறைத்து குளிர்வாயாக!

*

வெண் பஞ்சு மேகங்களே அசதியா!
விண் மறந்து இறங்க மனமில்லையா!
கண் துஞ்சுகிறீர்களா! கேள்விக்கு பதிலென்ன!
தண்புனலாம் மழையின் ” சோ ” என்னும்
பண்ணிசை காது குளிர இறங்கட்டுமே.

*

நீரினாவிகள் பாரமில்லையா! முகிலே!
நீர்க்கட்டி நோயாகாதா! நீசக்கிரகங்களுன்னைச் சுற்றியதா!
நீவிவிடக் குளிர் காற்று மறுத்ததா!
நீர்க்கோலம் போட மழையை அனுப்பிவிடு!
நீயாக வருவாய்! புவியை மறந்த மேகங்களே!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-5-2017

*

cloudbar550

33. பா மாலிகை ( கதம்பம்)528 – நாதம் என் ஜீவனே

 

naatham

*

நாதம் என் ஜீவனே

*
(பகாரம் – அழகு, தெளிவு)

இசையின் ஆதாரம் நாதம் குரல்
அசைய இன்பம் தரும் நாதம்.
தசையாகி நாதம் சுருதி தரும்.
பசையாகும் சுருதியால் சுவரம் எழும்.

*

சுவரங்கள் தென்றலாகி இராகம் தரும்.
சுகராக நாதம் எம் தஞ்சமாகும்.
விகார நாதம் இசைவற்ற கீதம்
பகாரம் நாதம் எம் ஜீவனே.

*

ஆதி நாதப் பிரமம் ஓங்காரம்
ஆதி அந்தமற்ற நாதமின்றேல் உலகேது.
சங்கிலிருந்து பிரசவம் ஓங்கார நாதம்.
எங்கும் அதுவே பிரமம் கடவுள்.

*

அமைதி நாதம் அருந்தும் நேரம்
அழகு அங்கமும் தாளம் இடுமே
அகமும் மகிழ்ந்து அர்த்தம் பெறுமே
மோக நாதத்து ரசனையில் தேனூறுமே.

*

உயிரை உருக்கும் உன்னத நாதம்
உணர்வு நரம்பு மீட்டி உவப்பாகுமே
உறவு ஊஞ்சலாடும் உலகு சிறிதாகுமே.
உல்லாசக் களிப்பில் உயர் செயலாற்றுமே.

*

வேதம் என்றாகும் நாதம் உலக
பேதங்கள் அழிக்கும் சாதனை துனிர்க்கும்.
தீதினை நசுக்கும் தீங்குரல் இனிமையில்.
நாதம் என்றும் என் ஜீவனே

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 28-10-2016

*

45