18. பாமாலிகை (தாய்நிலம்.) – 53. அகதி வாழ்வு

அகதி வாழ்வு

அகதி வாழ்வின் அல்லல் தெரியாது
சகதிப் பிரிவு, உறவுத் தவிப்பறியாது
மிகவான உயரிணைந்த மண்ணைப் பிரிந்து
சுகமற்ற காலத்தில் புலம்பெயர்ந்திங்கு
திகதியற்று ஊர் திரும்ப முடியாதிங்கு
தொகுதியின்று தனித தீவுகளாய் நாமிங்கு.

கலாச்சார இடிபாட்டிலெம் கவனம் நெரிபட
காலடிதடுமாறி அன்னியமொழியால் விழி பிதுங்க
குலாதார வாரிசுகள் அடிப்படை ஆதரவிழக்க
காலாதி காலமான பண்பாட்டுப் பாதை மாற
மூலாதார வாழ்வின்சீலம் நிலைமாற
கோலாகல வாழ்விங்கு நற்கோலம் மாறுது.

லைமுறைகள் தம் வாழ்க்கைத் துணையை
தலைமாறி அன்னிய சூழலில் தெரிதல்
தலையெடுக்கும் புலம்பெயர் பிரச்சனை
தலையிறக்கமிது எம்மின அழிவு நிலை.
தலைவாழையிட்டுத் தலையிடும் நிலையுமில்லை.
தலைவிதியிது பும்பெயர்ந்த நிலையிங்கு.

சுள்ளெனக் குததும் ஊசிக்குளிரில் தினம்
உள்ளம் வேதனையுடன் உடல் பலமிழக்கும்.
வெளிநாட்டில் நாம் பணம் காய்க்கும் மரமாம்
உள்நாட்டில் பணம் பிடுங்கம் தரம்
கொள்ளையிலேயிது கடற்கொள்ளைத் தரம்
வள்ளத்தில் வரும் போது துடுப்புடையும் தரம்

28-11-2005
(துவக்கு.கொம் கவிதைப் போட்டிக்கு எழுதியது.
21-3-2006 ரிஆர்ரி தமிழ் அலயில் வாசித்தது.

38. பா மாலிகை ( காதல்) – 105. காதல் பேரிகை

காதல் பேரிகை

நாதசுரத்தோடு நால்வகைக் கருவிகளாய்
காதற் பேரிகை முழங்கும் நாள்
காந்தம் கண்களில் கரங்களில் இணையும்
காதற் காணிக்கைக் களிப்பு நாள்.

அன்பு சிந்தும் உறவைப் போற்றும்
அகிலம் கொண்டாடும் வலன்ரைன்ஸ் நாள்
அற்புதக்காதல் நயகரா ஊற்று
பற்றுக்கொடான இயற்கை ஊற்று

உணர்வுச் சந்தன மணம் பரப்பும்
உணர்வில் பௌர்ணமி ஒளி விரியும்
மனிதனைத் தன்வசம் ஈர்க்கும்
புனிதக் காதலொரு தூண்டாமணிச் சுடர்

கண்களால்முளைத்துத் தரிசனநீராட்டி
கண்களால் உயிர்த்துக் காதலில் வளர்ந்த
காதலைக் கொண்டாடும் காதலர் தினத்தில்
காதல் ததும்பும் காதலர்கள் வாழ்க!

14-2-2006
( பதிவுகள் இணையத் தளம்- ரிஆர் ரி தமிழ்அலை-
இலண்டன் தமிழ் வானொலிகளில் வெளியானவை.

13. பிரபலங்கள் – அலைபாயுதே

அலைபாயுதே

வித்தக இசையோடு பிணைந்த
சக்கான அவன் வரிகளென்னுள்
பித்தாகு அலைபாயுதெ இன்னும்
சத்தமாய்ச் சுரம் பாடுதே

சிறுகூடற் பட்டிச் சிங்கமவன்
பெரும் பாடற் தொகுதி அங்கமவன்
துருவநட்சத்திரம் கவி வானிலவன்.
இருநாமகரணம் முத்தையா கண்ணதாசன்.

மன்றம் போற்றியது அவன் பாடல்
தென்றல் , இனிய காதற்கடலில்
குன்றிலுயர் தத்துவத்தேடல்
வென்றுகொண்டது வரியமைப்பில்

கலங்கரைவிளக்குப் பா வரியது
இலங்கியது முன்மாதிரி அமிழ்து அது
அலங்காரச் சொல்லடுக்கு அலை பாய்ந்து
துலங்கவைத்தது பாவலர் குழாமை

(அங்கம், அவன்- அங்கம் ஒரு நாடு என பொருள் படுகிறது.
இலங்குதல், துலங்குதல் – விளங்குதல்
குழாம் – கூட்டம், சபை)
25-6-2005

44. Photo poem – சேவை.

சேவை.

மீனினேர்விழி மாதுவாய் இங்கு
வானினேர்மொழி வார்த்தை இணைத்திடல்
தேனிலோர்கனி சுவைத்தலாயிங்கு
ஊனினையுருக்கும் இன்ப அனுபவமாய்
கூனிடா நிலைதரும் உண்மை.

நானிலம் மெச்ச அரங்கேறி
மானிடப்பெருமை கூறி
மேனிலை பெறப் பேசுதல்
தானியம் விதைத்தல் போன்றது.
மௌனித்தலிலும் உயர்ந்த சேவை.

16-10-2019

?????????????????????????????????????????????????????????

17. பாமாலிகை (தாய்நிலம்.) – 52. ஆண்டவனும் உள்ளாரோ!

ஆண்டவனும் உள்ளாரோ!
————————————-

வண்ண இயற்கைத் துறைமுக மென்று
கண்வைப்பு வெளிநாட்டார் திருகோணமலை மீது.
எண்ணெய், துறைமுக அபிவிருத்தியென்று
எண்ணும் அரசு கையேந்தல் வல்லரசுகளிடம்.

நல்ல பொருளாதாரத் திட்டம் என்று
சில்லுச் சில்லாகச் சின்ன நாட்டை
பல்லிளித்துக் கொடுக்கிறார் பலன் எடுக்க,
கையளித்து ஆப்பிழுத்த குரங்கு ஆகிறார்.

முன்னைய சனாதிபதி பிரதம மந்திரிகள்
பின்னி முடிச்சாக்கிய இனப் பிரச்சனை
பென்னம் பெரிய விசுவரூபம் எடுத்து
சின்னா பின்னம் ஆக்குகிறது பல்லுயிர்களை.

கொல்லும் வெறி கொண்ட தலைமை!
நல்ல போர் நெறியற்ற இராணுவம்!
எல்லாமாய் ஈழத்தில் செய்யும் கொடுமை,
சொல்லும் தரமன்று! இல்லையொரு தர்மமங்கு!

வல்லுறவுப் பாலுறவு! வயது முதிர்ந்;தோர்,
செல்ல மழலைகள் விதிவிலக்கின்றி அழிக்கிறார். கல்லுளிமங்கனையும் கரைக்கும் நிகழ்வுகளங்கு!
செல்லுகளிலும் இரத்தம் கொதித்துப் பாயும்!

பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மீது!
ஊரங்கு அழியுது! உயிரங்கு பிரியுது!
யாரங்கு கேட்பது! ஆண்டவனும் உள்ளாரோ!
சீரற்ற நாடகம் அரங்கேறி ஆடுது!

15-5-2009

http://www.vaarppu.com/view/1807/

131. 132. சான்றிதழ்கள் – கவிதைகள் – 140. கரம் பற்றிய காலம் வரை

கரம் பற்றிய காலம் வரை

வரம் பெற்ற வாழ்வு இது
உரம் கொண்ட அன்பால் உருகி
தரம்நிறை அன்பே தகுதியாய்
சிரம் தாழ்த்தி இறைக்கு நன்றிச்
சரம் சூடித் தாள் பணிவோம்
கரம் பற்றிய காலம் தொடங்கி
கவனமாய்ப் பேணிய அன்பு சுடரட்டும்
சுகம் தரட்டும் முடிவு வரை.

3-6-2018

132. சான்றிதழ்(காதல்_தேவன்_விருது)

இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள்.

https://kovaikkavi.wordpress.com/2017/03/22/66-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d_%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d_%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0/

43. Photo poem – கட்டுப்படுத்தும் வரைமுறை

கட்டுப்படுத்தும் வரைமுறை


தடம் பதி தளம் கண்டால்!
மடம் அல்ல, இடம் பலரிற்கு
விடம் சுயநலம் முடமாக்கும் உன்னை!
அடக்கம் பெரிது இடறல் தவிர்க்கும்!
கரையிடும் வரைமுறை!
உரை கேள்! மனதில் அரை!
சிரை அடங்கா மனதை!
தரையிலூன்று மானிட மாண்புடன்


24-10-2019

42. Photo poem – உடற்பயிற்சி

உடற்பயிற்சி

பாசம் விரித்த நற்சிந்தனை
நேசம் நிறைந்த உறுதியில்
தேசத்தில் உடற்பயிற்சி செய்யட்டும்
வாசமான உழைப்பைச் சிந்து!
நாசமான தகவல்களைத் தள்ளு!
பூசுமானந்தம் கேளாது நெருங்கும்.

பிணையும் சாந்த மொழியில்
இணைந்திடும் உறவாடும் சமூகம்
துணையான இயற்கை உறவில்
இணையும் இன்ப உலகு
கணையாழியாக்கு இயற்கை உணவை.!
சுணைப்புடன் ஆரோக்கியம் பெருக்கு.!

30-9-2019

37. பா மாலிகை ( காதல்) – 104. வஞ்சி உன்னைக் கொஞ்சயிலே

வஞ்சி உன்னைக் கொஞ்சயிலே

வஞ்சி உன்னைக் கொஞ்சயிலே
அஞ்சி அஞ்சி ஓடுகிறாய்
மிஞ்சுதே தாபம் தூரவாகாதே!
நெஞ்சுக்கு உரம் இல்லறவின்பம்
எஞ்சுவது உலகில் எது!

மனமிணைந்த திருமண சுகம்
மணமுடை இல்வாழ்வு தரும்
கணகணப்பு அணைப்புக்குள் ளாகு!
இணங்கி இணைதல் பேரின்பம்.
உணவாகும் வாழ்விற்கு உடற்சுகம்.

எப்படியடி ஓடுவாய்! உன்
செப்புக்குட இடையென் கையிலடி!
தப்ப முடியாதடி உலக
திப்புசுல்தான்களும் மயங்கிய
தெப்பக் குளமடி நீந்துவோமே!

மஞ்சத்து மகாராணியே உன்
கொஞ்சும் அணைப்பு என்
மிஞ்சும் திமிரை அடக்குமடி.
தஞ்சமானேன் தயவு காட்டடி
தவிக்கும் துடிப்படக்கும் கொஞ்சலடி

பருவத் தவிப்பு இதுதானடி
புருவம் உயர்த்த வேண்டாமடி.
கருவமற்ற தென்றல் போல
சுருட்டியணை, சுற்றி அணை
பெருமைப் பிறவிப் பயனடைவோம்.

பஞ்சு மேனி பரவசமடி
வஞ்சி உன்னைக் கொஞ்சயிலே
நெஞ்சம் எங்கும். தேனருவி!

29-6-2018

41. Photo poem – நற்தமிழ் உறவே தேவை

நற்தமிழ் உறவே தேவை

1
வழிந்து மின்னும் தங்கத் துகள்கள்
எழிலுடை மஞ்கள் ஈர வனம்.
விழிக்கும் சொற்களின் பரிமாற்றத்தில் பசி
அழியாதது நிசப்தம் அற்றதான அறிவு.
செழித்து அடர்ந்த தமிழ் வனம்.

2.
கற்றுத் தெளிந்தாலும் தீராத காதல்
சொற்களின் போதையில் புதிது புதிதாக
பற்றுடன் தேடும் அசுர பசி
குற்றமற்ற தமிழின் பரிபூரணப் பார்வையோடு
நற்றமிழ் உறவே வேண்டுவது


28-9-2019

?????????????????????????????????????????????????????????