3. எனது 4வது – 5வது நூல்கள்.

 

 

 

 

 

வாசலில் இருந்து மண்டபத்திற்குக் கரகாட்டம் கோலாட்டம்நடனமமென்று
மாலை மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டோம்.

 

https://www.youtube.com/channel/UCZdviTmSv3AQvfp7qvAUoJw?view_as=subscriber

***

 

10737791_771888509544924_1380567544_o

 

1. நூல் விமரிசனம்.

 

kilary

*

கிலரி கிளிண்டன்… ( டென்மார்க் கே.எஸ் துரையின் நூல்)

அன்று அவர் வெல்லுவார் முதல் பெண்மணி ஆவார் என்று நானும் மிகவும் ஆவலாக இருந்தேன்.
வெல்ல வில்லை என்றதும் வேதனைப்பட்டதும் உண்டு.

அவர் தோற்கடிக்கப்பட்டார்.

பெண்மையெனும் மாண்புடை மேன்மையை
கண்மையான கருமேகங்கள் மறைப்பதை
திண்மையான வேலையாகக் கொண்டதே
வண்மை உலக வழக்கு!
வெண்மை கிலரி கிளிண்டனும்
விதிவிலக்கல்ல என்றதிந்த நூல்..

கையிலெடுத்ததும் வைக்க மனமற்ற
மையலுடைய தமிழும், பரபரப்பும்,
வல்மான், அரதப்பழைய என்ற
சொல்லின் பாவனைகளும் ஒரு
வல்லமை மொழிபெயர்ப்பு வீரனை
துல்லியமாய்த் துப்பறிந்து காட்டியது

இத்தனை ஆண்டுகால மொழிபெயர்ப்பு
மொத்தத் துளிகளின் திரட்டலின்
சத்தான சாரமிது, சேமித்த
சொத்தெமக்கு வரம் இது!
பொத்தென்று வீழேன்! மீண்டும்
நித்தியமாயெழுவேன் என்கிறது அட்டைப்படம்!.

அறிவின் ஒளியும் தீர்க்கமும்
அறிவுறுத்த, வீழ்வேனென்று நினைத்தாயோ!
தெறிக்கும் தன்னம்பிக்கைச் சிரிப்பது!
முறியாத முயற்சியும், தேவைக்குக்
குறியான மௌனமும் பெண்ணே
எறிவேலாகப் பயனாக்கு! என்கிறது.

பெண்களே மயக்கம் விடுங்கள்!
மாண்பினை இணையுங்கள்! உலகின்
கண்கள் தான் நீங்களென்பதை
பண்போடு காட்டுங்களென்ற ஊக்கமிது.
புண்ணான சோம்பலை வீசுங்கள்!
வண்ணம் காட்டி வளமாகுங்கள்.

வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ் டென்மார்க்.24-10-2018
____

http://www.alaikal.com/2018/10/26/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/  

**

 

vision

2, எனது 4வது – 5வது நூல்கள்.

Vijay Printing Press is with யோ புரட்சி and 77 others.  23 September at 03:30

தனது 71 ஆவது வயதிலும் தமிழுக்குத் தன்சார் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டுமெனவும், சாதிக்க வயது வேறுபாடு முக்கியமில்லையெனவும் இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் டென்மார்க் வாழ் பன்முகப் படைப்பாளி வேதா இலங்காதிலகம் எழுதி, இன்று வெளியீடு காணவிருக்கும் இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெறவும், நூலாசிரியருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் எமது பதிப்பகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதில் உளம் நிறைகிறோம்..

#####  

நடந்தது இனிதாய்….!
Cool…..!  

 ‘குறள் தாழிசை’, ‘பெற்றோரியலில் சிற்றலைகள்’ ஆகிய இரு நூல்கள் வெளியீடு கண்டன. வள்ளுவர்புரம் ‘செல்லமுத்து வெளியீட்டகம்’ வெளியீடான இவ்விரு நூல்களின் வெளியீட்டு விழாவானது 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஈழத்தின் வன்னியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு இல்லத்தில் ஆரம்பமானது.

நிகழ்விற்கு முத்து ஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் ‘கம்பீரக் குரலோன்’ சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார். டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி முகாமையாளர் ‘பண்பலை வேந்தன்’ ரி.எஸ்.முகுந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

யோ.புரட்சி ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னதாக உதயச்சந்திரன் குழுவினரின் கரகாட்டம், பருதியின் தவில், இனிய வாழ்வு இல்லச் சிறார்களின் கோலாட்டம் மற்றும் பிற வாத்தியங்களின் இசையுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.
சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அண்மையில் மரணித்த கவிஞர் வன்னியூர் செந்தூரன் அவர்களின் துணைவியார் செந்தூரன் போதநாயகி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தினை முல்லைத்தீவு வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய மாணவிகள் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை இனிய வாழ்வு இல்ல மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை கவிஞர் ஜெயம் ஜெகன் வழங்கினார்.

நூலாசிரியரின் உறவினர்கள் சார்பாக நரம்பியல் நிபுணர் வைத்திய கலாநிதி திருநாவுக்கரசு திவாகரன் வாழ்த்துதல் வழங்கினார். 
இளைய பாடைப்பாளர் உரையினை கவிஞர் பாரதிமைந்தன் வழங்கினார். கவிஞரும், தமிழாசிரியருமான வே.முல்லைத்தீபன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியர் இரமணன் ஆகியோரின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. பாடகர் முல்லையூர்ப் பரணீதரன் தமிழிசை வழங்கினார்.

நூலினை டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி முகாமையாளரும், நிகழ்வின் பிரதம விருந்தினருமான ‘பண்பலை வேந்தன்’ ரி.எஸ்.முகுந்தன் வெளியிட இரு நூல்களையும் கிருபா லேணர்ஸ் அதிபர் தொழிலதிபர் ‘சமூக திலகம்’ அ.கிருபாகரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூற்பிரதிகள் வழங்கல் இடம்பெற்றது.

தொடர்ந்து புத்தளம் அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாடு சார்பில் திருமதி முல்லை றிசானா நூலாசிரியருக்கான கெளரவிப்பினை அளித்தார். தொடர்ந்து இரு நூல்களின் நூலாய்வுரையினை கலாபூஷணம் நடராசா இராமநாதன் நிகழ்த்தினார். பிரதம அதிதி உரையினை டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி முகாமையாளர் ‘பண்பலை வேந்தன்’ ரி.எஸ்.முகுந்தன் நிகழ்த்தினார். மாற்றுத்திறனாளி மாணவி தமிழினி இசைப்பாடல் அளித்தார். ஏற்புரையினை நூலாசிரியர் வேதா இலங்காதிலகம் வழங்கினார்..

நன்றியுரையினை ஆயுள்வேத மருத்துவர் மாதவராசா வழங்கினார்.

வேதா இலங்காதிலகம் அவர்கள் இலங்கை வானொலியின் ‘பூவும் பொட்டும்’ நிகழ்ச்சி மூலம் 1976இல் தனது இலக்கியப் பயணத்தினை ஆரம்பித்தவர். தற்போது டென்மார்க் தேசத்தில் வசித்து வருகிறார்.

—-  Puradchy —

24 September at 17:13

முல்லை வள்ளிபுனம், இனிய வாழ்வு இல்லத்தில் அறிஞர் வேதா இலங்காதிலகம் அவர்களின் நூல் வெளியீட்டு (23/09/2018) நிகழ்வில் இனிய வாழ்வு இல்ல மாணவிகளின் வரவேற்பு நடனம் சிறப்பாக இடம்பெற்றது. பயிற்றுவித்த ஆசிரியை சிறப்பாக அந்த மாணவியருக்கு அபிநயம் காண்பித்து ஊக்குவித்தமை நடனம் சிறப்பாக அமைய உதவியது எனலாம். சிறப்பான இந்நிகழ்வை பாராட்டுகிறேன். அந்த மாணவியருக்கும் பயிற்றுவித்த ஆசிரியைக்கும் நன்றி.   விருந்தினர் வரவேற்பு சிறப்பாக ஒழுங்கமைத்து இருந்தனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
இலங்கை, யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் வசிப்பவருமாகிய அறிஞர் வேதா இலங்காதிலகம் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு இலங்கை, முல்லைத்தீவு, வள்ளிபுனம், இனிய வாழ்வு இல்லத்தில் 23/09/2018 ஞாயிறு மாலை 3 மணிக்கு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நானும் வலைப்பதிவர் யாழ்பாவாணன் என்ற வகையில் நிகழ்வில் பங்கெடுத்தேன்.

அறிஞர் வேதா இலங்காதிலகம் அவர்களை 2012 இன் பின் wordpress வலைப்பூக்களூடாக அறிமுகம். அவர் ஆக்கிய ஓரெழுத்து ஒரு சொல் (தமிழில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்துச் சொல்லாக விளங்குகின்றன.) முறையிலான கவிதையினை எனது வலைப்பூக்களில் பகிர்ந்தேன். அக்கவிதை உள்ள நூலைhttp://www.noolaham.org இல் இருந்து பதிவிறக்கலாம். அவரது வெளியீட்டு முயற்சி சிறப்பாக இடம் பெற்றதை நான் நேரில் பார்த்தேன். அங்கு விருந்தினர் வரவேற்பு சிறப்பாக ஒழுங்கமைத்து இருந்தனர். அதே போல நிகழ்வும் சிறப்பாக இருந்தது.

குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் 
“கற்று உயர் பதவி வகித்தென்ன
பெற்றோரைப் பேணாதோன் கீழோன்.” என்றவாறமைந்த கவிதைகளை உள்ளடக்கிய “குறழ் தாழிசை” என்ற நூலும்

“வாராண்டி வாராண்டி
வாசுதேவன் வாராண்டி
வாரப்பாடு காட்டியே
வாருகிறார் பேத்தியை” என்றவாறமைந்த கவிதைகளை உள்ளடக்கிய “பெற்றோரியல் சிந்தனைகள்” என்ற நூலும் வெளியீடு செய்யப்பட்டது.

இரண்டிலும் வாசகர் நிறைவடையத் தக்க பதிவுகள் உள்ளன. பயன்மிக்க பதிவுகளை உள்ளடக்கிய இரண்டு நூல்கள் வெளியீட்ட அறிஞர் வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

42351461_2347258441957030_4708194199856480256_n

DSC01922

pura-6

DSC01899