2. பாமாலிகை – இயற்கை (80)

 

pirapanjam-580x286
*

பேரண்டப்  பெருவெளி.

*
நட்சத்திரங்கள்,  கோள்கள்,  மனிதனியக்கும்  கருவிகள்
தட்டாமலையாகச்  சுற்றும்  பேரண்டப்  பெருவெளி.
வெட்ட வெளி,  ஆகாயம்  விதானமென்றும் 
வட்டம் சுற்றும் காற்று  மண்டலமுமிணைந்தது.
*
அறிவியலிற்கு   எட்டாத  மன  எல்லைகள்
முறிவற்று  விரிக்கும்  பால் வெளி பூமியும்
தெறிக்கும்  ஒளியீயும் சூரியனும்  தவிர
பிறிதொரு  எல்லையுண்டோ  பேரண்டப்  பெருவெளிக்கு!
*
நிறை விசை, அலை குன்றிய விசை,
மின்காந்த விசை,  ஈர்ப்பு  விசைகளடங்கிது,
அணு,  அணுத்துகள்களால்  உருவான கோள்கள்
பிரபஞ்சப்  பகுதிகளாகுமாம்  அறிவியற்  கூற்று.
*
ஆழம், பாரம்  அறியாதது, முடிவு
ஆரம்பம்   அறிய   முடியாதது  ஆகாயம்.
எம் மனமும்  அது போல 
தெய்வ நம்பிக்கையில் புவியில்  சுழருகிறோம்.
*
ஆறிவியல் வெற்றியால்  மனிதன்  நிலவில்
குறியாகக்  காலடி   வைத்தின்னும்  ஆராய்கிறான்.
காற்று  மண்டலம் போர்த்திய  வெளி
சூலுடை  மேகங்களும்  பேரண்டப்  பெருவெளியாகிறது.
*
இஸ்லாமியத்தில்  பிரபஞ்சத்  தகவல்கள்  அதிசயம்.
சூரியன்   பூமி,   நிலா  நட்சத்திரங்களே
பிரபஞ்சமா! அறிய  முடியாத  அதிசயம்.
ஆய்வகள்   தொடரும்   ஆழ்  வெளியிது
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  29-5-2017.
*
divider lines.jpg - A
Advertisements

4. சான்றிதழ்கள் (18)– கவிதைகள். பூஞ்சோலையில் ஒரு பொன் வீணை.

 

 

kavijulakam-first

*

 

pooncholai

 

*

பூஞ்சோலையில் ஒரு பொன் வீணை.

*

பூச்சிதறும் நந்தவனம் உள்ளே அங்கேயா!
பூபாளம் இசைக்கும் பெண்ணா வீணையா!
பாச்சிதறும் ஒரு தமிழ் வீணையா!
பூங்கணை வீசுமொரு பெண் வீணையா!

*

பூவுலகில் இன்பங்கள் கோடி பல
பூரித்து மகிழ்கிறோம் நாளும் சில.
பூஞ்சிட்டுக்கள் ஒரு புறம் கலகலக்க
பூங்காற்று மனசெல்லாம் பூமணம் தூவியது.

*

பூமுகம் மலர்ந்தவொரு பெண் சிலையருகே
பூபாள இசை கேட்குமொரு குழந்தை
பூங்கோயிலெனத் தாய் முகம் பார்க்க
பூரித்து இராகம் இசைக்கிறாள் வீணையில்.

*

மஞ்சள் பட்டு உடுத்திய அவள்
மரகதச் சிலையாய் தாய்மை பொங்க
மிஞ்சிய இசையாய் தாய்மையாய் சிரிக்கும்
பூஞ்சோலையில் ஒரு பொன் வீணையவள்.

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
25-5-2016

 

end

3. சான்றிதழ்கள் – கவிதைகள்(17) கலப்படம்

 

 

puthumai i-7 -2016

*

 

கலப்படம்

*

செழிப்புடன் நடக்கும் வியாபார உத்தி.
விழிப்பணர்வு தான் மக்களுயர் புத்தி.
இழிஞர் செயல் இயற்கையையே ஏய்த்தல்
அழிப்பதிதை யென்பது முயற்கொம்பு வைத்தல்

*

பாலிலே நீர் புரதம் யூரியாவுடன்
பாதகமாய் அமோனியமும் கலக்கி விற்பனை.
பாலர்இ நோயாளிகளிற்கும் பாடாவதி செய்கிறார்.
பாதுகாக்கும் உயிருக்குதவும் மருந்திலும் கலப்படம்.

*

அரிசியில் கற்கள். நீரில் கழுவுகிறோம்.
அரிக்கன் சட்டியால் பிரித்து எடுக்கிறோம்.
சரியான பொருளின் சாயலில் இன்னொரு
உரித்தான பொருள் கலந்து பொருளீட்டல் கலப்படம்.

*

கூகிளிணையம் புகுந்து கலப்படப் பொருளறிந்தால்
கூச்சல் பயங்கரமாய் எழும் இதயத்தால்
நீரிழிவு நோய்இ வயதிற்கு மீறியவுடல்
நிறைஇ ஆபத்துகள் கணக்கின்றி வரும்.

*

விஞ்ஞானம் நன்மைஇ தீமையாய் சமூகவிரோதிகளாம்
மெஞ்ஞானமற்ற பணமுதலைகளின் கலப்படப் பெருக்கம்.
உணவுப் பாதுகாப்பாளர்இ தரக்கட்டுப்பாட்டாளர்இ சுற்றுச்
சூழல் மையங்கள் பரிசோதனை அவசியம்.

*

நன் கொடை இரத்தத்திலும் கலப்படமாம்
வன்மை நிலை! எத்தனை பேராபத்து!
இயற்கையோடு இணைந்த பொருட்கள் வாங்கி
செய்கையாய் வீட்டில் பொருளாக்கல் சிறப்பாம்.

*

நிலவரம் எதற்கும் துணியும் பணவெறியர்.
கலவரம் காக்க நல் விபரமறிந்து 
கலப்படமற்ற கொள் முதலே நலமுடைத்து
கலாச்சாரக் கலப்படம் இரவாட்டம் காதலர்தினமுமன்றோ!

*

 

 

divider

9. பா மாலிகை ( கதம்பம்) போட்டி (504)

 

போட்டி

*

போட்டியில்   பங்கெடுக்க   மனபலம்   தேவை
ஈட்டியெனும்   தோல்வி  மனதில் ஆழ்ந்து
தாட்டிகமாய்க்  காயம்  தருவது   உண்மை.
கேட்டினையும்  சிலருக்கு. பலவிதமாய்  விளைவிக்கும் 
ஆட்டம்   விறுவிறுப்பாவதும்    மிக  உண்மை.

*

போட்டி,   பந்தயம்  என்றும்  அழைப்போம்
கூட்டிடும்   சுயவளர்ச்சியை  என்பதும்   திண்ணம்.
தேட்டம்  கூட்டிடும்   தன்  செயற்பாட்டிற்கும்.
நீட்டிடும்   வெற்றி    தோல்விக்குப்  பயிற்சியும்.
காட்டிடுமொரு  பாதையை  நல்ல  வளர்ச்சிக்கும்.

*

நாட்டமாகும்   முயற்சியுரம்  வெற்றி  வாசத்தில்.
மொட்டவிழ்ந்து     வெற்றி   மலர்கள்  உதிரும்.
சூட்டி    மகிழும்   ஆக்கமுடை    இதயம்.
வாட்டும்   துன்பம்  விலகும்   புன்னகையில்.
மீட்டுமிராகங்கள்    துணிவில்  ஒளிரும்  தீபங்கள்.

*

பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.

 

Billedresultat for contest divider lines

 

2. சான்றிதழ்கள் (16) – கவிதைகள் – விடியலில் கரைந்த இரவு

13-10-2016

*

விடியலில் கரைந்த இரவு

*

இரவுகள் மெல்ல மெல்லக்
கரவுகிறது விகசிக்கும் விடியலில்.
பரவிடும் செயற்பாடுகள் பவ்யமாய்
இரவரங்க மேடையில் ஓய்வெடுக்கிறது.

*

மற்றுமொரு புது விடியல்
அற்புத ஓய்வில்இ தன்னம்பிக்கை
ஏற்றும் பேரொளிப் புத்துணர்வாகிறது.
நேற்றைய கவலைகள் கடுகாகிறது.

*

இரவெனும் போர்வை சீவன்களிற்கு
இரசவாதமிடும் காய கற்பம்.
இரட்சணியம் தரும் வலை.
அரவணைக்கும் பஞ்சுப் பொதி.

*

இயற்கையின் விந்தையாம் இரவு
மயற்கையற்ற பூமியின் தரவு.
பிரச்சனை வனாந்தர நெருப்பிற்கு
சிரச்சேதம் தரும் இரவு.

*

விடியலில் தரை தட்ட
அடியெடுக்கும் புதுத் திட்டம்.
படிமானமாக்கி எதையும் தடவிடுமிரவு
அடிவானம் அத்திவாரமமைதி வாழ்விற்கு.

*

கசங்கிக் கலங்கி மனிதன்
கரைந்திடுவான் அறிவீர் இரவின்றேல்!
வரையிலாப் பொறுமையுடை தாயாகிறது
நிகரிலா விடியலில் கரையுமிரவு.

*

காற்றில் வாசனை கலத்தலாய்
ஆற்றில் அசுத்தம் கரைதலாய்
ஊற்று மலை உயரமாய்
தேற்றுகிறதுயிர்களை விடியலில் கரையுமிரவு.

*

13- 10 – 2016
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

 

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

3.நான் பெற்ற பட்டங்கள்(10)

15வதாக ‘ கவி வித்தகர் ‘பட்டம் இறுதி வரிக்கவிதை வரிகளாக எழுதிவெற்றி பெற்றேன்.
தமிழுக்கு ஆண்டவனுக்கு…நன்றிகள்.

ஓ!……மிகவும் ஆனந்தம்!…லேசுப்பட்ட வேலையல்ல.!…
பல தடவை முயற்சித்தேன்!.
அதனால் எழுத எழுத என் தமிழ் மெருகேறுவது உண்மை….
இன்னும் முயற்சிப்பேன். ‘ கவி வித்தகர் ‘ நிலாமுற்றப் பட்டம்.
மிகுந்த மகிழ்ச்சி…நடுவர் குழாம், நிலாமுற்றம் குழுவினருக்கு மிக்க நன்றி.

*

En paddankal

*

nilaamuttam .kaviviththakar

*

 இதன் கவிதை இதோ!..:-    கடைசி வரிக் கவிதை

அவள் ஒரு அழகிய கவிதை

*

மஞ்சள் நிலவொன்று  மகிழ்ந்து
கொஞ்சும் விழிகளுடன் வீதியிலிறங்கியது
தஞ்சம் கேட்கவில்லை தன்
நெஞ்சத் துணிவுடன் கடமைக்காய்.

*

ஆரவாரமின்றி அடக்கமாய் அடியெடுக்கிறாள்.
ஆரணங்கேயுன் அழகால் அல்லாடும்
அணழகர் எத்தனையோ ஆயிழையே!
ஆராதிக்குமவன் உன்னிதயம் திருடிவிட்டானா!

*

பிரமன் படைப்பிலே பித்தாகிறேன்
பிரமை பிடிக்குதடியுன் விழியழகில்
பிரபஞ்சத்தைப் புரட்டும் காதல் 
பிட்சாந்தி நானடி புரிகிறதா!

*

நாணிக்கோணும் பெண்ணல்ல நீ!
நாலும் தெரிந்த பாவனையென்னை
நாட வைக்கிறதுன் அன்பை
நாடகப்பொற்பாவையே என் நறுந்தேனே.

*

வாழ்வின் சந்தம் காதலடி
தாழ்ந்திடாது உய்த்திட உன்னோடு
ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமடி.
வாழ்ந்திடுவோமே ஒரு குடைக்கீழ்

*

இவளொரு ஆசைச் சுரங்கம்!
அறிவுப் பெட்டக அரங்கம்!
அனுபவக் காதலிற்கு விதையாய்
அவள் ஒரு அழகிய கவிதை.

*

(பிட்சாடனம் – இரத்தல், பிச்சையெடுத்தல்)

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 5-7-2017

*

 

divider lines.jpg - A

 

8. நம்பிக்கைத் துரோகம்.(503)

*

 

நம்பிக்கைத் துரோகம்.

வீட்டிற்கு வீடு வாசற்படியாகும்
வீக்கமுடையது நம்பிக்கைத் துரோகம்.
ஏட்டில் எமுத முடியாததும்
வாட்டம் தந்து வதைப்பதுவாம்.
*
மனிதனை மனிதன் மதிக்காமையும்
புனிதம் உறவென எண்ணாமையும்
இனிய பாதை செல்லாமையும்
அலட்சியத்தாலானதும் நம்பிக்கைத் துரோகம்.
*
இனிக்கப் பேசுவார்!…….நீயல்லாலெவர்
இனித் திறமையாளர் என்பார்
தனித்தே உதாசீனமாய் தள்ளுவார்!
சனியாகிடும் நம்பிக்கைத் துரோகம்
*
பிறரை உயர்த்தித் திறமை
சிறகுடைப்பார் உன் நம்பிக்கை
துறவாகும். மோசடித் துரோகமதை வ
ரட்சி மனது உருவாக்கும்.
*
இனிமைக் காதல் சிலையென்றும்
தனிமையில் நீயே சரணமென்றும்
இனிக்கப் பேசியே பலரையும்
இனிப்பாய் காதலித்துக் கைவிடுவார்.
*
தாலி கட்டிய மனைவியையே
தாழ்வாக எண்ணித் தள்ளியே
தாறுமாறாகத் துரோகங்கள் நடந்திடுமே
தாராளமாயுலகில் நம்பிக்கைத் துரோகங்கள்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-6-2016
*
இதே தலைப்புடைய இன்னோரு கவிதை வேதாவின் வலையில் இந்த இணைப்பில் உள்ளது.
https://kovaikkavi.wordpress.com/2010/09/15/72-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/
*

7. பு(பொ)ன்னகை. (502)

 

*

பு(பொ)ன்னகை.

*

புன்னகை நல்லிதயத்தால் அழகாகத் தவழும்.
புன்னகை பல முறை சிந்தினாலும்
மென்னகையாய் ஆடம்பரமற்று இதழ் விரிக்கும்.
உன்னகை, என்னகை எல்லோர் புன்னகையும்
நன்னகை, இன்பநகை உலகைக் கவர்ந்திடும்.
தன்னிலை உயர்த்தும் சுயமதிப்பு பெருக்கும்.

*

தன்னகை அறிவால் ஞான நகையானால்
சின்ன நகையானாலும் அவைக்கு இணையாக
என்னகை உலகில் ஈடாகும் சொல்லுங்கள்!
பொன்னகையால் அழியும் உறவும் உலகும்
என்னமாய் பதுக்கி குற்றவாளி ஆகிறார்!
புன்னகை போதும் பொன்னகை வேண்டாம்!

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-5-2016

*

(புன்னகை தலைப்பில் எனது முதல் இணையத்தளத்தில் இன்னொரு கவிதை)     https://kovaikkavi.wordpress.com/2010/11/03/133-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/

*

 

No automatic alt text available.

 

 

 

2. கண்ணதாசன் சான்றிதழ்(19)

 

vilikalin ekkath - 19

*

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
– பாவேந்தர்

வணக்கம் பாவலர்களே#கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்

தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 24–1–17 நாளாம் போட்டி கவிதையின்
#தலைப்பு_விழிகளின்_ஏக்கத்தையே…தொடரவும் கோர்வைகளாகும்#பலவிரல்கள்_ஆறுதல்_கூற_பின் 

வெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

#கவிதாயினி_கவிச்சிற்பி_சிவதர்சினி_ராகவன்_நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


தமிழமுது கவிச்சாரல் 23-1-2017
வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.
தலைப்பு:- விழிகளின் ஏக்கத்தையே……….
கோர்வைகளாகும் பல விரல்கள் ஆறுதல் கூற பின்.
விழிகளின் ஏக்கத்தையே பிரதிபலிக்கும்
அழிவுடை பசியில் ஆழ்ந்திருக்கும்
கழிவிரக்கத்திற்கு ஆட்படும் சிறார்கள்
அழிந்திட மாட்டார் மாறாக
வாழ்வினில் உயர்ந்தோர் உதவியில்
இழிவற்ற நிலைக்கு ஏகி
விழிகளில் நிறைவு கண்டால்
எழிலாகக் குறைகள் மறைந்திடும்.

*

காதலனின் பிரிவால் வாடி
காலை மாலையாய் ஏங்கியவள்
காத்திருக்கும் நீள் பிரிவில்
பூத்திருக்கும் விழியின் ஏக்கம்
பார்த்திருக்கப் பறந்து போகும்.
கோர்த்திடும் மந்திர மாயம்
ஈர்த்திடும் காதல் தானே!
பார்த்திருக்கப் பசுந்தாகும் காதல்.

*

குழந்தையின் ஏக்கம் என்றும்
குறைவற்ற பெற்றோர் அணைப்பில்.
நிறைவில் ஒன்று குறைந்திடினும்
மறையாது விழியின் ஏக்கம்.
இறையருளால் நெருங்கும் அன்பாளர்
குறையற்று ஆதரவாய் அணைத்தால்
கோர்வைகளாகும் பல விரல்கள்
ஆறுதல் கூற பின்.

*
puple colour