13.  சோழா

விஐயதசமி சோழா. 2017

விஐயதசமி சோழா.

October 18, 2017  · எங்கள் சோழா சின்ன பேரனின் ஏடு தொடக்கலில் நான் விரல் பிடித்து எழுதியது மட்டும் தான்.சோழா! சொல்லுங்கோ என்று அ விலிருந்து அகேனம் வரை தமையன் சொல்லிக் கொடுத்தார். சோழாவும் தடங்கலின்றி அழகாகக் கூறினார்.எங்க மகன் திலிபனுக்குச் சரியான ஆச்சரியம் தன் பிள்ளைகள் திறமை பற்றி….

31. பா மாலிகை (வாழ்த்துப்பா) 36. Sasidevi nool vaalththu.

திருமதி சசிதேவிக்கு வாழ்த்துகள் (நான் எழுதிய வாழ்த்துரை)

டென்மார்க்கில் தமிழர்கள் எண்பதுகளில் தொண்ணூறுகளிவ் வந்து சேர்ந்தனர். மொழி, கலாச்சாரம், காலநிலை நம்மைப் புரட்டிப் போடும் விதத்தில் எதிர்மாறாக இருந்தது. அடுக்கடுக்கான ஆடைகளால் குளிரையும், கடும் முயற்சியால் மொழியையும் பழக்கப் படுத்தினார்கள். கலாச்சாரம் இடிபாடாகவே இருந்தது. பிள்ளைகள் வளர்ப்பில் சவாலாகவே இருந்தது. கலைவழியான நடனம், இசை வகுப்புகளுக்கு அவர்களை அனுப்புவதன் மூலம் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், பிள்ளைகளுக்குக் காட்டிக் கொடுக்கப் பட்டது. இறைவணக்கம், ஆசிரியரைக் கனம் பண்ணல், மொழிப் பரிமாற்றம் என்று அனைத்தும் உயிர்ப்பிக்கப் பட்டது. திக்குத் தெரியாத காட்டில் இது ஒரு தெய்வச் செயலாக இருந்தது. நடன ஆசிரியராக சசிதேவியும் தான் தாய்நாட்டிலிருந்து கொண்டு வந்த கலையை அஞ்சலோட்டமாக டென்மார்கில் எடுத்துச் சென்றுள்ளார். கணேஷா நாட்டியக் ஷேத்திரம் மூலம் இதை வளர்கிறார்.மாபெரும் சேவை இது. தனது எழுத்துமூலம் செயற்பாடுகளை நூலுருவில் மக்களிடம் சமர்பிக்கிறார் அனைவரும் இதைப் பெற்றுப் பயனடையவேண்டும். இவரது முயற்சிகள் மேலும் பெருகி உலகிற்கு நற்சேவையாக உயர வாழ்த்துகிறேன். இவ்வாழ்த்தைத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்திற்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன் வாழ்க! வளர்க!

ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை (பெட்டகோ)
பா
வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
ஐப்பசி 2020

30. ( பா மாலிகை (வாழ்த்துப்பா). Chamili nool vaalthu

ஷாமிலிக்கு நல்வாழ்த்துகள் (நான் எழுதிய வாழ்த்துரை)

கண்ணழகு, உடலழகு, கை மொழியோடு நுண்ணிய அபிநயத்தால் கதை சொல்லும்
விண்ணவரும் சொக்கும் பக்குவக் கலை மண்ணிலே சிறந்த நூதனக் கலை பரதம்.

ஆதிசிவன் தந்த ஆடற்கலையிது சிவனே ஆடினார் ஆனந்தத் தாண்டவம்
சினத்தில் ஆடினார் ருத்திர தாண்டவம் தாயின் வழியாகப் புலம்பெயர்நாட்டில் ஷாமிலியும், அவரது சகோதரர் சிந்துஐனும்; கலை கலாச்சாரங்களைப் பயின்று மேடைகளில் ஆடி வருகிறார்கள். ஷாமிலி மருத்துவராகப் படித்ததுடன் அல்லாமல் பொலிவுட்நடனமும் கிளாசிக்கல் நடனமுமாகக் கலைப்பள்ளியும் நடத்துகிறார். அத்தனையும் தாயின் ஊக்குவிப்பால் நடந்தேறியது. பிள்ளைகளும் பெற்றவருக்குப் பெருமை சேர்த்தனர். நடனக்கலை பற்றிய நூலையும் உலகிற்காக எழுதி விதைக்கிறார். அவரது பணிகள்மேலும் சிறந்திட இறையருள் நிறையட்டும். எமது வாழ்த்துகளையம் நாம் சொரிகிறோம். மானெனக் குதித்து மீனென நெளிந்து தேனுண்ணும் வண்டாக மற்றவர்கள் மகிழ ஆடுதலிலும் அதைக் கற்பித்தலிலும் சிறந்து விளங்கி நீடு வாழ்க! ஷாமிலி. அஞ்சலோட்டம் தொடர மூன்றாம் தலைமுறை வாரிசாக உங்கள் பிள்ளைகளோடும் இது தொடரட்டும். வாழ்க! வளமுடன்!

வாழ்த்துபவர் ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை (பெட்டகோ)
பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க் ஐப்பசி 2020