28. பா மாலிகை (வாழ்த்துப்பா) 33.

ஜெர்மனிய தோழி கௌரி சிவபாலனின் தமிழ் வான் அவை நிகழ்வின் ஒரு வருட நிறைவுக்கு நான் எழுதிய வாழ்த்து

24. பாமாலிகை – (தமிழ்மொழி) 71.

குமிழாய் விரிந்து
00
(கல்லுதல் – தோண்டுதல். மௌவல் – முல்லை.
வெளவம் -தாமரைஇ பௌதிகம்– இயற்பியல்)
00
கல்லுதலால் சொல்வளம் ஊறும்
வெல்லச் சொற்களைப் பொறுக்குங்கள்
பல்லக்கிலல்ல எண்ணக்குதிரையில் ஏறுங்கள்
வல்லமைக் கருத்துகள் சாரலாகும்
00
அறிவுக் கணங்கள் ஊறட்டும்
பறியட்டும் அற்புதச் சொற்கள்
குறிக்கோள் கருத்துடை சொற்குவியல்
எறிவாரெவர் இவள் போல! வியக்கட்டும்!
00
அறிவற்றவர் வாழ்; நிலத்தில்
நெறி கூறும் நூல் எதற்கு!
குறியற்று செறிவின்றிக் குளம்பி
வறியவனாங்கு வாழ்தல் பெருமையா!
00
வெளவால் குடிசையில் மௌவலும்
வெளவமும் ஏன்! பௌர்ணமியும்
பொருந்தாது, இருண்ட பௌதிகம்
பொருந்திடும் வெளவால் தொங்கிட
00
ஆறறிவை மூடி வைத்து
தேறாத முகநூல் லைக்கை
ஆதி மந்தியாய்க் கைப்பற்றுகிறோம்.
மோதி மிதிக்கிறது தமிழறிவை
00
தமிழால் வசப்படுத்தும் மந்திரம்
குமிழாய் விரிந்து குடைவிரித்தது
அமிழ்த்துகின்ற பல நினைவில்
சிமிழாக அழகுக் கவிதையாகிறது
00
வேதா. இலங்காதிலகம் (இலங்கைத் தமிழ்)
டென்மார்க் 6-7-2021

86. பாமாலிகை (இயற்கை)126. படவரி 17. காட்சிக்கு நான்கு குருவி + மந்த தோற்றம்

படவரி 17. காட்சிக்கு நான்கு குருவி + மந்த தோற்றம்

ஏழு நிறப் பிரிகை எனலாம்
ஏன் இன்னும் அதிகமும் எனலாம்
குச்சிலாம்பிலொரு பிரபஞ்ச நீர்த் தொட்டிலோ!
உச்சி வேளையல்ல ஊருறங்கப் போகிறது.
ஆரம்ப ஓவிய வகுப்பில் நான்
ஆறுதலாக வண்ணம் பூசியது முப்பிரிவு
நிலம்இ நீர். வானம் – இங்கு
நிறைவாக நான்கு குருவி வரையலாம்!
00

மந்த தோற்றம்
வெண் சீருடை கழுவ
கண்ணன் மாயனின் வண்ணமாம்
கண் பறிக்கும் நீலப்பொடியை
எண்ணிக் கலக்கியது யாராகும்! –அன்றி – விண்முகில் இங்கு சடுதியாய்
மண்ணில் தெரியும் மாயை!
திண்ணமோ இது நானறியேன்!
கண்ணின் எண்ண மயக்கமோ!
– ஒன்று – இந்தப் பூனையும் பாலருந்துமோவென
மந்த தோற்றத்திலுறங்கும் கடலே!
மொத்த உலகுயிர்களைச் சுருட்டி
கத்தி ஆக்ரோசமான சுனாமியாவதும்
– நீ தானே! –
00
19-6-2015

   http://www.vallamai.com/?p=58919