5. நான் பெற்ற பட்டங்கள். சாவித்ரிபாய் பூலே விருது…

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆன சாவித்ரிபாய் பூலே விருது…
குழுமத்திற்கு நன்றிகள்

நிலவும் மலரும் கவிதைப் போட்டி.

மந்திரப் புன்னகை

மாராட்டிய மாநில சமூக சீர்திருத்தவாதி
ஆராட்டும் சதார மாவட்ட நைகான்
வீராங்கனை – முத்து – சாவித்ரிபாய் கவிஞராக
விரித்த புன்னகை – கவிதைமலர்கள் – நூல்
சுந்தரத் திறமைகளின் மந்திரப் புன்னகையானது
00

புனே பல்கலைக்கழகம் இவர் பெயரேந்தியது
புகழுடை அஞ்சல் தலை வெளியீடாகியது.
சாவித்ரிபாய் புலே விருதும் உருவானது.
சாதனைப் பெண்ணரசியாகி சுந்தரமாய் அனைவருக்கும்
மாதிரியாகி மந்திரப் புன்னகை சிந்துகிறார்!


வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் – 9-3-2022

4.  நான் பெற்ற பட்டங்கள்.

2022

கவிமணி விருது. – இது இரண்டாவது கவிமணி விருது.

தலைப்பு –
கன்னம் உரசும் காற்றே என் கனவை அறிவாயா!

என்னை அதிகம் நேசிக்கும்
அன்புப் பேரழகி ரகளைக்காரி
கன்னக் குழல் காற்றில்
கன்னத்தை ஓயாது முத்தமிடும்
என்னவள் எங்காவது எதிர்ப்பட்டால்
இன்னமும் தேடிப் பிணைப்பாயா!
முன்னம் உணரா மயக்கம்
இன்னதென்று காட்டுவாயா இன்றே!
00

இன்பக் கிளர்ச்சியுடை இரசவாதியே!
கன்னற் தெம்மாங்குத் தென்றலே!
பற்பல ஆக்கங்களால் கட்டமைந்து
அற்புதப் பயணங்களாலான இயக்கம்
உற்சவ உலகவாழ்வு இனிக்க
கற்பகதருவென் கண்மணியைத் தேடுவாயா!
கன்னச் சுருள் என்னவள்
கன்னம் முத்தமிடல் நியாயமா!
00

குழைந்து குழைந்து இசைவாய்
இழைந்திடணும் நாளும் என்னுடன்
அழைத்து வருவாயா அருகினில்
பிழைத்திடுவேன் அன்பில் பிரியமாய்.
கன்னம் உரசும் காற்றே
இன்னும் தயக்கம் ஏன்!
அன்னம்விடு தூதாக அழைக்கிறேன்
உன் கடனைச் செய்வாயா!
00

சிறகின்றித் தமிழில் பறக்க
உறவேந்தி உரசுகிறாய் உருகி
மறவாது காதலை எண்ணி
உறவாட உணர்வு ஏற்றுகிறாய்
கிறங்கிடும் சொல் விதைகளை
உறங்காது கிளைத்துப் பரப்புகிறாய்!
நிறங்காணும் வண்ண ஒளியாக
திறங் காண சிகரமேற்றிடுவாய்!

வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்2022

3.  நான் பெற்ற பட்டங்கள். கவி அரசி விருது.

சொல்லத்தான் நினைக்கிறேன்


சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லிழுக்கு வருமோ!
சொல்வழுவற்ற கவிதை சொல்வோன் கவியரசன்.
சொல்வளக் கவிதைக்காரி கவியரசி எனலாம்!
வல்லமைச் சிறகு அன்றோ கவிதை!
நல்ல விருதிற்குச் சிறந்த ஆலோசனை!
00
சொல்ல நினைப்பது எத்தனையோ! எங்குமே
சொல் வன்மை இல்லையெனில் தோல்வியே!
சொல்லிழுக்குப் படாதிட நாகாத்தல் அவசியம்.
சொல்லில் பயனுடையவை சொல்லலாம் – நாளும்
நல்ல சொல் அல்லல் தராது!


வேதா இலங்காதிலகம் -டென்மார்க் -3-3-2022