9 குறுகிய வரிகள் (14வதில் 38-39-40-41

 

 

naan
Vetha Langathilakam     15 July 2010 at 23:35 ·

அனுதாப மொழிகள்
மனுக்குல வரங்கள்.
ஆறுதல் மொழிகள்
தேறுதல் வழிகள்.
துன்பத்தை வெல்லும் 
தென்புடை வழிகள்.

*

vannam

கருத்து:-
மனதிலின்பமூட்டும் நந்தவனம். (சாந்தி பாலாவிற்கு கொமெண்ட
கனதி நினைவையுதிர்க்கும் இன்பவனம்.
எனதுனது எழுதுகோலின் கருவனம்.
தனமிது தவசிகளும் விரும்பும் மலர்வனம்.
வேதா. இலங்காதிலகம்   2018

*

Waterloo main pic

*

கட்டுக்குள் கட்ட முடியா
கொட்டும் அருவி யடியே!
கொள்ளைப் பால் குடித்தாயா1
வெள்ளை அருவியாய் விழ 7-5-18

*

மனிதருக்கே சிரமம்…..

கத்தும் கடலோசை இயல்பாகும்.
நித்தமும் சொல்லாமல் வரும்.
சத்தம் சொல்லி வருவதல்ல.
முத்தான கருத்துகள் உதிர்க்கவும்
சத்தான மொழிகள் பேசவும்
எத்தனையோ சிரமம் மனிதருக்கே!

வேதா. 18-11-2017

*

47ifaoekmx0

 

 

9. பா மாலிகை ( காதல் 76) பார்வை ஒன்றே போதுமே

 

 

couple holding hands and walking in a park

*

பார்வை ஒன்றே போதுமே

*

தீர்வைத் தீயிடும் மயக்கம்
சோர்வை அழிக்கும் சூரணம்.
கோர்வையாய்க் கணை வீசுமுன்
பார்வை ஒன்றே போதுமே

*

கார்வை – காதலிசையின்நாத நீட்சி
சீர்மையுடன் சாதனை பெருக்கும்
போர்வையிடும் மன்மதக் கணை
தோர்வை (தோல்வி) விரும்பாத பிணை.

*

காலமுற்றும் தேவை பார்வை
காணாமலும் தொடும் சேர்வை (கூட்டுறவு)
காந்தக் கண்களின் வியர்வை
காதல் காதலாய் போதை.

*

இருவுடல் ஓர் எண்ணமே
இமையாத விழிக்குள் இருவருமே
கரையாது கரையும் எண்ணமே
கல்யாண வாழ்த்துப் பாடுவோமே!

*

(சீர்மை – புகழ், சிறப்பு)

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்   14-4-2016

*

 

birds

57. பா மாலிகை ( கதம்பம்) கோபம் 549.

 

 

angry

*

கோபம்

*
கோபம் சினம் வெறுப்பெனப் பலவாகும்.
உக்கிர போர் உணர்வு கோபம்.
அமைதியாகவும் கோபம் சாதிக்க முடியும்.
ஆத்திரம் பதட்டமாகவும் கோபம் சாதிப்பர்.
*
கோபம் தரும் நினைவைத் தள்ளிடவும்.
கோபம் ஏன் வந்ததென ஆராயவும்.
கோபம் வாழ்வுஇ வேலையில் பாதிப்புருவாக்கும்.
கோபம் இரத்தழுத்தம்இ வயிற்றில் புண்ணாக்கும்.
*

கோபத்தால் முக அழுகு கெடும்
கோபம் குறைக்க நல்லிசை கேட்கலாம்.
கோபமடக்க நீண்ட தூரம் நடக்கலாம்.
கோபம் அடக்க இலக்கங்கள் எண்ணலாம்.

*
கோபம் எல்லோருக்கும் வரும் உணர்வு.
கோபத்தின் வெளிப்பாடு பல வகையாகும்.
கோபக்காரனுக்கு புத்தி மட்டமாகிறது.
எம்மை மற்றவர் மதிக்காவிடில் கோபமுயரும்.

*

பிழை செய்பவரைக் கண்டால் கோபமுயரும்.
எங்களை யாரும் பேசினால் கோபமாகும்.
கோபம் வந்தால் முனிவர்கள் சாபமிடுவர்.
கோபம் நெருப்பு. மௌனம் நீர்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 21-8-16

*

angry-3

 

8. பா மாலிகை ( காதல் 75) மச்சானே

 

vajal..varappu--2

*

மச்சானே

*

அச்சோ மச்சானே
அச்சமின்றிக் குடித்திட்டு
அச்சாறு (ஊறுகாய்) கேட்கிறாயா.
அச்சன் (தந்தை) கத்துவாரே!
¤
உச்சுக் கொட்டாமல்
உச்சிமோந்து சொல்லு
மச்சான் என்னிலே
இச்சையுண்டா என்று!
¤
எச்சிற்படுத்தாத பழமாக
மச்சாளுக்கும் தருவாயாம்.
எச்சில் சாப்பிட
ஒச்சம் (நாணம்) மச்சான்.
¤
கச்சேரி நடக்குமா!
கச்சான் வீசுது.
கச்சிதமாய் போர்த்து.
கிச்சு கிச்சு மூட்டாதே!
¤
சச்சரவு வேண்டாம்.
சச்சை (ஆராய்ச்சி) வேண்டாம்.
கொச்சையாய் பேசாதே
மச்சான் செல்லமே!
¤
கைச்சாத்து இடு
கைச்சீட்டுத் தருவேன்.
கூச்சலிடாதே என்
சச்சிதானந்த மச்சானே!
¤
மிச்சம் வைக்காது
சோச்சி (சோறு) சாப்பிடு.
தச்சகன் (குடும்பத் தலைவன்) நீயல்லவா!
துச்சமல்ல (கீழ்மகன்- பதர்) நீயெனக்கு.
¤
தச்சன் இன்று
நிச்சயம் வருவான்.
பூச்சு பூசுவான்.
பச்சடி செய்யட்டுமா!
¤
வேதா. இலங்காதிலகம்.டென்மார்க். 12-8-16

*

Kolukkumalai-Tea-Estate_Munnar

 

 

56.பா மாலிகை ( கதம்பம்) இருவரிக்கவிதை. 548

 

 

two lines-2

*

இருவரிக்கவிதை

*

அன்பே! என்னை அழைத்தாயா நீ
இன்பமே தருவேன் அட்டி ஏது!

*

உனக்காகவே பிறந்தேன் உயிரே ஆணழகா!
தனக்கு தினக்கென தடுமாறுது நெஞ்சம்.

*

செப்புச் சிலையே செங்கரும்பே சித்திரமே
ஒப்புவமை இல்லா ஒய்யாரமே மயங்குகிறேன்.

*

பிரம்மன் படைப்பிலே பிரமை பிடிக்குதடி
வரம் பெற்றேன் வரமாக நீயெனக்கு

*

எப்படி உன்னை எங்கிருந்து படைத்தான்
தப்பேதும் கூறாரே தங்க விக்கிரகமே

*

ஆண் மனதை ஆட்டிப் படைக்கும்
ஆயிழையே உன்னை ஆராதிப்பேன் உறுதியடி

*

5-7-16 வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

waves

55. பா மாலிகை ( கதம்பம்) தனிமையில் ஒரு தேடல். 547.

DSC01517-x

*

தனிமையில் ஒரு தேடல்.

*

(பனிப்பகை-சூரியன். வனிகை-தோப்பு, பூந்தோட்டம்.
முனிவு – முயற்சி. அனிதம்-அளவற்றது. நுனித்து- கூர்ந்து)

தனிமை உணர்வு தவிர்க்க முடியாததே
இனிமை ஆக்குதலும் இலகு அற்றதே
தனிமையின் மிகப் பெரும் தேடலே
இனிமை உணர்பதிவுகளின் கவிதை ஆடலே.

*

பனிக்கட்டித் தனிமையின் பனிப்பகை, முயற்சியே.
வனிகையாக்கும் தனிமை வரட்சியை, ஆக்கவினையே.
முனிவாய் ஓவியம் முனைந்து தீட்டுதல்
அனிதமான ஊக்கம் ஆவலாய் வினையூக்கும்.

*

வாசிக்கும் இன்பம், கணனியில் தேடல்
நேசிக்கும் தமிழோடு உறவு கூடலால்
பூசிக்கும் நிலை பூரண இன்பம்.
யாசிக்கத் தேவையற்ற யாககுண்டம், தனிமையழிக்கும்.

*

தனிமையும் ஒரு வகையில் இனிமையே
இனிய இசைகேட்டு, இலக்குடை உலாவோடு
பனிக்குளிர் நீராடி பரவசமாய் அடக்குமுறையின்றி
நுனித்துப் பார் நிழலும் தனிமையே

*

நட்சத்திரக் கூட்டமிருந்தும் நிலவு தனிமையே
அட்சய பாத்திரமாம் ஆதவனும் தனிமையே
இட்டமுடை தேடலில் இசைவான ஆக்கத்தால்
சுட்டுவிடு தனிமையை சுகமாக ஆனந்தி.

*

9-7-2018  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

ஒரே கருக்கொண்ட இன்னொரு கவிதை இணைப்பு;. 

https://kovaikkavi.wordpress.com/2013/05/15/276-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/

தனிமை

சீரில்லா உறவுக் கூடு
சீற்றத்தின் வெற்றுக் கோடு
தீராத வெறுமைக் காடு
தீமூட்டும் தனிமைக் கோடு.

தனிமையைத் தகவோடு தத்துவமாக்கலாம்.
தனிமையைத் தத்தளிக்காது தாண்டலாம்
இனிமயாய்த் தருக்கோடு கலந்தாடலாம்
தனிமையோடு இணைந்து இசைந்தாடலாம்

தனியன் நீயென்று தவிப்பது ஏன்!
இனியன் நீயென்று நினைத்திடு தேன்!
தனிமையோடொரு பட்டிமன்றம் வீண்!
இனி–மை போடுன் பேனாவுக்குத் தான்.

ஊனம் கொண்ட அறிவினிறக்கம்
ஞானம் கழன்ற உணர்வினேக்கம்.
சுய இயக்கம் சுயதிருப்தியினூக்கம்
வியக்க வைக்கும் மனநிம்மதித் தேக்கம்.

பூ மலர்ந்த மணம் பரப்பும் தனியே.
பூமி சுழன்றுவரும் இயக்கமும் தனியே.
பூப்படையும் பெண்ணிலையும் தனியே.
பூமத்தியரேகையெனும் மதிப்பும் தனியே.

பிறப்பும் இறப்பும் தனிமையே
மறப்பதேன்! சுயம்பிக்கைக் கொடியேற்று
திறப்பதுன் மன மகிழ்வினூற்று.
வனித மனம் தனிமையையும் ரசிக்கும்.

தவிப்பு நிலை தருமிந்திரியங்களோடு
தந்திரமாயுன் வழக்கை விலக்கு!
தனிமையைத் துணிவோடு கையாண்டு கலக்கு!
தத்துவமாயுன் வாழ்வைத் துலக்கு!

பா வானதி வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க் 26-7-2019

https://kovaikkothai.wordpress.com/2019/06/02/104-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

2Fin

56. சான்றிதழ்கள் – கவிதைகள்- வந்தியத்தேவன் குந்தவி காதல்.66

thamil sevai 17-7-18

*

வந்தியத்தேவன் குந்தவி காதல்.

*
காசிப்பட்டு மென்மை கண்ணில் போதை
காட்டுத்தேனின் இனிப்பும் கார்காலத்து மின்னல்
வெட்டுமான ஒரு பெண்ணின் குரல்
குந்தவி:- ஆனைமலைக் காட்டிற்குச் சென்று வந்த
வரலாறு கூறும் போது பேச்சை
அடிக்கடி நிறுத்தி, மேலும் கீழும்
பார்த்து பேச்சைத் தொடர்ந்தது எதற்காகவோ!
வந்திய..:- புனைகதையல்ல இது. என் பேச்சுத்
தடைக்கு வேறு காரணம் உண்டு.
குந்தவி:- பெண்களிடம் கூறக் கூடாத
பெருமிரகசியமோ அது!
வந்திய..:- ஆம் தங்களிடம் மட்டும் கூறிவிடலாம்
அனுமதி தந்தாலதையும் கூறுவேன்.
அரிய தங்கள் பெருவிழிகளின்
மாயம் என்ன!..விழிகளில் பதியும்
என் பார்வையைத் திகைத்திட வைக்கிறது
ஆயினும் சமாளித்துத் தொடருகிறேனே….
குந்தவி:- அரிய மாயமும் அதிசயமும் இல்லை
சிலகாலமாக மையிடவில்லை கண்களிற்கு
தம்முருவமென் கண்களில் தெரிந்திருக்கும்
அதுவே திகைக்க வைத்திருக்கும்….
வந்திய..:- என்னுருவை நான் தெளிந்த நீரில்
கண்ணாடியில் கண்டு திகைப்படையவில்லையே
குந்தவி:- கண்ணாடி மங்கும், நீர் கலங்கிடும்!
தங்களுருவம் எப்போதுமென் கண்களில் பொலியும்
அதிசயக்காரணம் தங்களிற்குத் தெரியுமா?
வந்திய..:- தெரியவில்வையே தேவி….
குந்தவி:- இப்பரந்த தேசத்தில் எனக்கான சுயம்வரம்
உருவானால், அரண்மனைத் தோட்டத்தில் என்னை
சந்தித்த அந்த அனாதை வாலிபன்
எங்கேயென்று தேடியவர் கழுத்தில் மாலையிடுவேன்.
(வந்தியத்தேவன் காதிலாயிரம் கிண்கிணிகள் ஒலித்தது.
பொன்மழை பொழிந்தது. வண்ணத்திப்பூச்சிகள் நடனமிட்டன.
எழுந்து நின்றான்)
குந்தவி:- நான் கூறுவது தங்களிற்குப் பிடிக்கவில்லையா?….
வந்திய..:- இது உண்மையா கனவாவென்று சோதித்தேன்.
உண்மையென உணர்கிறேன். தங்கள் மொழிகள்
அமுதுண்டவனாக என்னையாக்கி புத்துயிர் அளித்தது.
குந்தவி:- தாம் போகுமிடங்களில் பல அபாயங்கள்
வரும் போரிடுவீர்கள், தம்முயிருக்கு அபாயம்
விளைந்தால் இந்த சோழர்குல இளவரசி
மணமாக முன்னே கைம்பெண்ணாவாள் என்பதை
மறவாதீர்கள்!
வந்திய..:- அப்படி நேராது தேவி! நான்
அமுதம் அருந்தி அமரனாகிவிட்டேன். எங்கும்
என்னை வழிகாட்டும் துருவநட்சத்திரமாக
கலங்கரைவிளக்காக, பசுஞ்சோலை சீவநதியூற்றாகத்
தாங்கள் எனக்குதவுவீர்கள். எங்கு சென்றாலும்
திரும்பி வந்து தங்கள் கரம் பற்றுவேன்.
இது நிறைவேறும் வரை இயமன்
என்னை நெருங்கமாட்டான்.
(குந்தவை மெய்மறந்தாள். இந்த வீரன் இதை முதன்முறையாககக் கூறவில்லை. யுக யுகாந்தரங்களாகப் பல தடைவ இதை, இந்த விசித்திர சித்தப்பிரமையைக் கேட்டதாக உணர்ந்தாள்.)
19-7-2018-வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.
(இதை வசன கவிதை என்று சொல்லலாம். இதில் பின் பாதிக்கு சான்றிதழ் கிடைத்தது.)
*
love- 4

24. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். என்னுள் மலரும் நினைவா நீ!

 

kaviju-parathy-7

*

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள் – 7

என்னுள் மலரும் நினைவா நீ!

*

என்னுள் மலரும் நினைவு நீ
நீலவானக் கதிரின் மஞ்சள்
கோல எழிலுக்காய் உள்ளம்.
அலைகள் பொங்கும் நுரையுள்
வலம் வரும் குதிரையின் கம்பீர
உலாவாய் உணர்வுகள் சொடுக்கி
உயிர் பிழியமாட்டானா!

*

உன் தூரம் நீண்ட பாலைவனமாய்,
என்னுள் இரகசியமாய்ச் சபிக்கிறேன்.
மழைச்சாரலில் நனைந்த மல்லிகையாய்க்
குழையும் தனிமையும், குளிரும்
கவிந்து வியாபித்துப் போர்த்துகிறது
இதயம் பிளக்கும் இரகசிய இரணமாய்….
என்னுள் மலரும் நினைவா நீ

*

வசந்தம் குடிகொள்ளும் அறையுள்
விடியலின்றி உறவு, கருமைப்
பொடி தூவிய இருட்டாக.
நொடிப் பொழுதும் மனம்
துடித்த போர்வையை விலக்கிய
துடிக்கும் உணர்வுக்கான ஏக்கம்.
என்னுள் மலரும் நினைவு நீ

*

5-4-2018   வேதா. இலங்காதிலகம்.. டென்மார்க். 

*

one line

16. கண்ணகி-6. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- இலக்கியத்தில் இன்ப நிலா

 

 

nila-kannaki-6

*

இலக்கியத்தில் இன்ப நிலா

*

(எண்நாள் திங்கள் – எட்டாம்பிறை நிலவு.)

அன்றாட வாழ்வியல் இலக்கியத் தமிழெங்கும்
நின்றாடுது வரமாய் நிலாவின்ப அங்கம்.
இன்னழகு, வருணனை, இசைவு, தூது
பழகிய சாடையில் பாசப் புலம்பலிற்கும்
வழக்காடல் ஊடலுக்கும் வாகுடைய நிலா.

*

காயும் நிலவு காமத்தில் கவிஞர்களோடு
ஓயும் நிலையற்ற ஒளிவிளக்கு. தலைவன்
வாய்ச்சொல்லில் வழங்கினான் தலைவிக்கு பொய்மை. 
‘ திங்களுள் தீயென ‘ தீட்டியது கலித்தொகை.
திங்களுள் தீயில்லை. பொய்மைக்கிது உவமை.

*

பண்டைத்தமிழர் தொழில் நுட்பத்தில் முன்னணியில்
பாண்டியர் திறமைப் பணியாளர். வேலைத்திட்டத்தில்
தண்ணீர்வள தரமான ஏரியமைப்பு முறையை
‘ எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை ‘ யென
சங்கப்புலவர் கபிலர் பாடிக்காட்டியமையுயர் திட்டம்.

*

‘ தண்கதிர் மதியத்து அணிநிலா நிரைதரப் ‘(கலி-121-3)
நிலவொளியில் எட்டும் கூட்டுப் பறவைகளென
பட்டுச்சொற்கள் மொழிந்தது நிலா பற்றி 
எட்டுத்தொகையில் ஐம்பத்திமூன்று முறைகள் அருமை.
பத்துப்பாட்டில் முப்பத்தினான்கு இடங்களில் பெருமை.

*

முத்துச்சுடர் போலே நிலாவொளியை பாரதியார்
முன்புவரக் கேட்டது காணிநிலத்தில். நிலாவை
நிலாச்சேவல் வரிகளில் பாரதிதாசன் பறவையாக்கியும்
நல்லோர் நட்பை வளர்பிறையாகவும் தீயோர்
நட்பை தேய்பிறை என்றமையும் திருவள்ளுவர்.

*

பகையான நாகம் பக்கமிருக்கும் பயத்தினாலா
பிள்ளைநிலாவாக வளராது உள்ளதென சிவனை
காரைக்காலம்மையார் கிண்டலடித்தார். 

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 29-3-2018

*

 

moon

15.கண்ணகி-5 மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- மடமையைக் கொளுத்துவோம்.

 

 

nila-kannaki-5

*

மடமையைக் கொளுத்துவோம்.

*

(உடைமை-உரிமை. கடைமை-கீழ்மை. பாலித்து- காத்தல்
நாண் மதி- முழுநிலா. மதுகை- அறிவு. பொற்பு- பொலிவு) 

குடையின் கீழ் ஒற்றுமை நிழலில்
கடமை என்று கண்ணிய வழியில்
உடைமை என்று உண்மையாய் வாழ்தல்
கடைமை அல்ல மடமையைக் கொளுத்தவே.

*

பாலர் பிராயத்தில் பழக்க(ம்) வழக்கங்கள்
சீலமாய் மனதில் படிய வைத்தால்
பாலமாய்ப் பருவத்தில் பாக்கியமாய் உதவும்.
பாலித்துப் புழங்கும் பண்பாக விரியும்.

*

அடிமை, ஏழை இளக்காரம் இன்றி
கடுமை உழைப்பாளன் கருமகர்த்தா என்ற
படிமம் உலகில் பரவும் போது
மடமை அழிந்து மதுகை பெருகும்.

*

மனிதனைச் சாதியாம் மறுதலிப்பால் பிரித்து
புனிதன் எனும் பொற்பை எரிக்கும்
வனிதமற்ற பேதமை வழக் கொழித்து
இனிதான வொரு இகலோகம் அமைப்போம்.

*

பெண் ஆணென்று பேதங்களின்றி மக்கள்
மாண்புட னிருசாராரும் மதித்து வாழ்தல்
நாண் மதியாக, தூணாகத் துணையாகும்
வீணல்லவிது வேண்டுதல்! மடமையைக் கொளுத்துவோம்!

*

வேதா. இலங்காதிலகம்.. டென்மார்க். 22-3-2018

*

 

fire divider