1. எனது 4வது – 5வது நூல்கள்.

 

எனது 4வது – 5வது நூல்களின் விளம்பரம்.

*

vila-

*

42405823_2243071309068479_8400728865860747264_n

correcteddddd

 

யோ புரட்சி is with Vetha Langathilakam.
வெளியீடு: 23.09.2018, இனிய வாழ்வு இல்லம்.

டென்மார்க் வாழ் பெண் படைப்பாளி வேதா இலங்காதிலகம் எழுதி, வள்ளுவர்புரம் ‘செல்லமுத்து வெளியீட்டகம்’ வெளியீடான, ‘குறள் தாழிசை’, ‘பெற்றோரியலில் சிற்றலைகள்’ ஆகிய இருநூல்களின் வெளியீட்டு விழாவானது மாற்றுத் திறனாளிச் சிறுவர் இல்லமான வன்னியின் இனிய வாழ்வு இல்லத்தில் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு இடம்பெறும்.

 

அன்பான ஒரு வாழ்த்து

கலந்தர் பூமதீன்

வன்னித் தமிழ்
தாய் நிலத்தில்
வரமாய்க் கிடைத்த‌
வெற்றித் திலகம்
கவிப்பாரதியின் 
மறு உருவம்!

முல்லைமடி தவழ்ந்து 
தமிழ்ச் சொல்லால் 
உலகையே கவர்ந்த‌ 
கவிக்கோர் கலசம்
வேதா இலங்கா திலகம்!

பிற மொழி தேசம‌தில்
வாசம் கொண்டாலும்
முத்தமிழ் மொழியை
சுவாசமாய்க் கொண்டு
கொட்டுவதெல்லாம் 
வேதா இலக்கியம்!

மரபு,ஹைக்கூ
புதுக்கவிதை என 
புதுபுதுக் கோணத்தில்
புதுமை படைக்கும்
வேதாவின் புலமை!

உயிர் வாழும் வரை
வேதாவின் பேனா
தமிழ் பாடும்
வருங்காலம் வேதாவை
தமிழ் உலகமே 
கொண்டாடும்!!

தரணியெங்கும் 
தமிழ் வாழும்
தமிழ் உள்ள வரை
தங்கள் புகழ் வாழும்
வாழ்த்துக்கள் மேடம்!!!

****

 

Krishnamoorthy Krishnamoorthy வெண்பா வாழ்த்து.
**********************

நற்குறள் தாழிசை
நன்தமிழ் நூலுடன்
பெற்றோ. ரியலில்ஒண்
சிற்றலைகள் — இற்றரை
ஏரிரு நூலீய்
இலங்கை திலகமே…!
சீர்புகழ் ஓங்கும்
செகம்.

கவிக்கோலம்
கிருஷ்ணமூர்த்தி.

வேதா இலங்கை
திலகா

(வேதா. இலங்காதிலகம் )
******

 

12720-22coloured

எனது நூல்கள் என்ற இணைப்பில். முதல் 3 நூல்கள் பற்றி இங்கு காணலாம்.

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/  

 

sunburst

27. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். வீறு கொள் பெண்ணே!..

 

kaviju-parathy-10

*

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள் – 10

*

வீறு கொள் பெண்ணே!..

*

ஆறு போன்ற உன்னோட்டம் தடுப்பார்
ஊறு செய்யவே சிலர் காத்திருப்பார்
ஏறு போல் வந்து பொருதுவார்
வீறு கொள் பெண்ணே துணிந்திடு!

*

வன்புணர்வு பாலியல் கொடுமைகளை அறிந்து
என்றுமே மௌனமாகாதே! ரௌத்திரம் பழகு!
தன்னம்பிக்கையை ஊன்றுகோலாய் எடு! உண்மையில்
உன் மையினால் பிழைகளைத் திருத்தியெழுது!

*

பெண்மையொரு மகாசக்தி அறிந்திடு! மனவயலில்
திண்மைப் புது எண்ணங்களைத் தூவு!
உன் மௌனம் நிர்வாணம்! தொன்மைக்காலமல்லவிது!
நுண்மையான அறிவாயுதம் ஏந்தி முன்னேறு.

*

பாரில் பல மங்கையர் போராடினார்
போரில் மன்னன் ஆற்காடு நவாப்பை
வீரியமாய்த் தென்னிந்திய சுதந்திர போராட்டத்தில்
தைரியமாய்ப் புறங்காணச் செய்தார் வேலுநாச்சியார்.

*

பாரதத்தின் முதற் பெண் வீராங்கனையின்
பாசக்கணவர் வெள்ளையரால் கொல்லப்பட்டார் தயங்காது
வேசமின்றி வெகுசனப் புரட்சியால் வென்றார்.
வேங்கையாவோம் வீறுகொள்வோம் வேலுநாச்சியார் போன்று!

*

23-4-2018   வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

*

veeramankai

 

26. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். யாரிடமோ இவள் மனம்!……

 

 

kaviju-parathy-9

*

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள் – 9

*

யாரிடமோ இவள் மனம்!……

*

நிறம் கொஞ்சும் இரவிவர்மன் ஓவியமாய்
நினைவிருக்கும் வரை அரங்கேறும் காவியம்.
பிரபஞ்ச அழிவிலும் பிரிவற்ற காதல்
சுரம் கொஞ்சும் இராகமாலிகைப் பொழில்.
தரமுடை நினைவுத் தேனின் தேனடைகள்,
உரமான நினைவாற்றலில் நீந்தும் கனவுகள்.

*

நித்திலக் காதல் நிலவு வெளிச்சங்கள்
புத்தக மயிலிறகாய்ப் பொத்திய எண்ணங்கள்
சத்தான கனதியற்ற கற்பனை நினைவுகள்.
பூவிடும் மகரந்தப் பூந்துகள்கள், பூவாணங்கள்,
காவிடும் பூம்பல்லக்குகள், கனகரதங்களாய்,
நீவிடும் வாழ்வை நீண்டினிய பயணத்திற்கு,

*

இசையும் சுரப்பிகளின் இனிய மென்னகை
அசைத்து நனைக்கிறது உயிர் நதியை.
கிளுகிளுக்கும் இன்பத்தில் நெஞ்சம் கிறங்கி
தளதளக்கும் நேசத்தில் தனிசக்தி பிறந்து
குளுகுளுக்கும் பிருந்தாவன நீரூற்றாகும் இன்பத்தில்
கிசுகிசுக்கும் உயர் காதல் சிறகுகளாகிறதிங்கு

*

இவள் மனம் யாரிடமோ சங்கமம்.
இனிதான பெரும் ஊற்றாமன்புச் சாரலில்
இன்பத் திருவூற்றாம் விழிமொழியின் ஆதரவில்
ஊன் பாகமாயுயிரில் கலந்து இனித்து
தேன் பாகாய் உயிரில் உணர்கிறாளோ!
ஒன்றான உயிரின் தாளமிணையக் காத்திருக்கிறாளோ!

*

20-4-2018  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

 

butterfly- 3