34.  பா மாலிகை (வாழ்த்துப்பா vetha. 75th bday

2022

Kanakasabai KalalayamVetha Langathilakam

4th-2022 april…

எங்கள் உள்ளம் நிறைந்த இனிய இனிய பிறந்த நாள்

வாழ்த்துகள் திருமதி வேதா லங்காதிலகம் அவர்களுக்கு.🎂💐

————

Kulasingam KulanayagamVetha Langathilakam
·இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🎉🍰🎊

Sivaneswary ShanmuganathanVetha Langathilakam

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 🇩🇰🇩🇰🇩🇰🎂🍬

———-

செ. இரா. செல்வக்குமார்Vetha Langathilakam

மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தென்மார்க்கியத் தமிழ்க்கவிஞரே! பல்லாண்டு பல்லாண்டு இனிதே வாழிய! 🎉🎂🎁🎈

———

இரா. கி

கவிஞர் Vetha Langathilakam

பிறந்தநாள் வாழ்த்துகள்

———oooOooo——–

கன்னல் சாரும் கனி யதும் கலந்து சமைத்தத் தமிழில்

மின்னல் மிளிரும் எழிலாள் மிகுந்த கவிதை எழுத்தர்

முன்னாள் அழகில் மயங்கி முதுகில் சுமந்த கணவர்

இன்னாள் பிணைந்து வாழுகிறார் இதுபோல் நீடுழி வாழ்கவே

———oooOooo——–

வாழ்த்துவோருடன் கவிஞர் இரா. கி

————

Sathya MurtiVetha Langathilakam

22h  · 

முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்

அஷ்ட லஷ்மிகள் – ஆதி லஷ்மி, கெஜ லஷ்மி , தைர்ய லஷ்மி , விஜய லஷ்மி , சந்தான லஷ்மி , தான்ய லஷ்மி , வித்யா லஷ்மி , தன லஷ்மி – வாழ்த்தட்டும் அருளட்டும்

மும்மூர்த்திகள் வாழ்த்தட்டும் அருளட்டும்

வைஷ்ணவ தேவி, சிந்த்பூரணி, மனசா தேவி, காங்கடா வஜ்ரேஸ்வரி தேவி , சாமுண்டா தேவி நைனா தேவி சப்த தேவிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்

பிரம்மி, வைஷ்ணவி, கெளமாரி , மகேந்திரி, மகேஸ்வரி, வராஹி , சாமுண்டி – சப்த கன்னிகைகள் – வாழ்த்தட்டும் அருளட்டும்

சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்

விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்

பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்

விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்

வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்

அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்

நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்

சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்

அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்

ஈரேழு பதினான்கு உலக நன்மைகளும் விளையட்டும்

குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்

பதினாறு பேறுகளுடன் நவ நிதியமும் அஷ்ட லஷ்மி (ஆதி லஷ்மி , கெஜ லஷ்மி, தான்ய லஷ்மி, தைர்ய லஷ்மி, விஜய லஷ்மி சந்தான லஷ்மி,வித்யா லஷ்மி, தன லஷ்மி) அருளும் கொண்டு சங்க நிதி பதும நிதி குபேர சம்பத்துடன் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி ஆண்டு வாழிய வாழியவே

Vetha Langathilakam Comment

Love

1 Comment

  • Vetha Langathilakamமிகுந்த மகிழ்ச்சிமனமார்ந்த நன்றி.வாழ்க வளமுடன்.
  • ———

Yesterday at 12:16 PM  · 

Shared with Public

Public

குழுமத்திற்கு மிக்க நன்றி . மிக மகிழ்ச்சி.

அனைவரும் வாழ்க நீடு வளமுடன்

———–

பாரதி மைந்தன்Vetha Langathilakam

அன்னையின் கருவறை சுகத்தை

இனிமையாக்கி சின்ன விரல்

அணைப்பை கொடுக்க மண் மீது

வந்துதித்த அழகிய நாளின் நினைவுகளை

அன்பாய் நினைக்கும் அகவை நாளில்

அகவை தின வாழ்த்துக்கள் தமிழ்த்தாய்

ஆசியுடன் கூறியே நிற்கிறேன்

புத்தகவை தின வாழ்த்துக்கள் உறவே

அன்புடன் பாரதி மைந்தன்

——–


32.  பா மாலிகை (வாழ்த்துப்பா)37.

தொண்ணூறு அகவை நிறைவு வாழ்த்து
(பரமேஸ்வரி சிதம்பரநாதன்) 10-7-2018

தொழுகையே முன் நின்று
தொண்டுகள் புரியும் காலம்
தொல்காப்பியமான வாழ்வு அனுபவங்கள்
தொய்தல் நேரத்தில் கைத்தடியாகும்.
(தொல்லை கொடுப்போரும் தொட்டணைப்போருமாய்
தொல்லுலகில் பல அனுபவங்கள்)

வண்ணமயில் போல வந்து
வேல்முருகன் தேரில் நின்று
வடம் பிடித்துத் தேரிழுக்க
வாஞ்சையுடன் வருபவளே பரமேஸ்வரி அம்மா!

ஐந்து பிள்ளைகள் பெற்று
ஐசுவரியமாய் அவர்களை வளர்த்த
மூதாட்டியென் மாமியார், என் பிள்ளைகளின்
அப்பம்மா, என் கணவரைப் பெற்றெடுத்த தாய்

அன்பால் அனைவரையம் அணைத்து
குடும்பத்தைக் காத்த பெருவிருட்சம்

தொண்ணூறு ஆண்டு நிறைவிற்கு
இனிய வாழ்த்து கூறுகிறோம்


வேலவன் துணை கொண்டு
ஆரோக்கியமாய் வாழ வேண்டுகிறோம்

வாழ்த்துபவர்கள் – மகன்மார் – பேரப்பிள்ளைகள்- மருமகள்

31. பா மாலிகை (வாழ்த்துப்பா) 36. Sasidevi nool vaalththu.

திருமதி சசிதேவிக்கு வாழ்த்துகள் (நான் எழுதிய வாழ்த்துரை)

டென்மார்க்கில் தமிழர்கள் எண்பதுகளில் தொண்ணூறுகளிவ் வந்து சேர்ந்தனர். மொழி, கலாச்சாரம், காலநிலை நம்மைப் புரட்டிப் போடும் விதத்தில் எதிர்மாறாக இருந்தது. அடுக்கடுக்கான ஆடைகளால் குளிரையும், கடும் முயற்சியால் மொழியையும் பழக்கப் படுத்தினார்கள். கலாச்சாரம் இடிபாடாகவே இருந்தது. பிள்ளைகள் வளர்ப்பில் சவாலாகவே இருந்தது. கலைவழியான நடனம், இசை வகுப்புகளுக்கு அவர்களை அனுப்புவதன் மூலம் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், பிள்ளைகளுக்குக் காட்டிக் கொடுக்கப் பட்டது. இறைவணக்கம், ஆசிரியரைக் கனம் பண்ணல், மொழிப் பரிமாற்றம் என்று அனைத்தும் உயிர்ப்பிக்கப் பட்டது. திக்குத் தெரியாத காட்டில் இது ஒரு தெய்வச் செயலாக இருந்தது. நடன ஆசிரியராக சசிதேவியும் தான் தாய்நாட்டிலிருந்து கொண்டு வந்த கலையை அஞ்சலோட்டமாக டென்மார்கில் எடுத்துச் சென்றுள்ளார். கணேஷா நாட்டியக் ஷேத்திரம் மூலம் இதை வளர்கிறார்.மாபெரும் சேவை இது. தனது எழுத்துமூலம் செயற்பாடுகளை நூலுருவில் மக்களிடம் சமர்பிக்கிறார் அனைவரும் இதைப் பெற்றுப் பயனடையவேண்டும். இவரது முயற்சிகள் மேலும் பெருகி உலகிற்கு நற்சேவையாக உயர வாழ்த்துகிறேன். இவ்வாழ்த்தைத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்திற்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன் வாழ்க! வளர்க!

ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை (பெட்டகோ)
பா
வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
ஐப்பசி 2020

30. ( பா மாலிகை (வாழ்த்துப்பா). Chamili nool vaalthu

ஷாமிலிக்கு நல்வாழ்த்துகள் (நான் எழுதிய வாழ்த்துரை)

கண்ணழகு, உடலழகு, கை மொழியோடு நுண்ணிய அபிநயத்தால் கதை சொல்லும்
விண்ணவரும் சொக்கும் பக்குவக் கலை மண்ணிலே சிறந்த நூதனக் கலை பரதம்.

ஆதிசிவன் தந்த ஆடற்கலையிது சிவனே ஆடினார் ஆனந்தத் தாண்டவம்
சினத்தில் ஆடினார் ருத்திர தாண்டவம் தாயின் வழியாகப் புலம்பெயர்நாட்டில் ஷாமிலியும், அவரது சகோதரர் சிந்துஐனும்; கலை கலாச்சாரங்களைப் பயின்று மேடைகளில் ஆடி வருகிறார்கள். ஷாமிலி மருத்துவராகப் படித்ததுடன் அல்லாமல் பொலிவுட்நடனமும் கிளாசிக்கல் நடனமுமாகக் கலைப்பள்ளியும் நடத்துகிறார். அத்தனையும் தாயின் ஊக்குவிப்பால் நடந்தேறியது. பிள்ளைகளும் பெற்றவருக்குப் பெருமை சேர்த்தனர். நடனக்கலை பற்றிய நூலையும் உலகிற்காக எழுதி விதைக்கிறார். அவரது பணிகள்மேலும் சிறந்திட இறையருள் நிறையட்டும். எமது வாழ்த்துகளையம் நாம் சொரிகிறோம். மானெனக் குதித்து மீனென நெளிந்து தேனுண்ணும் வண்டாக மற்றவர்கள் மகிழ ஆடுதலிலும் அதைக் கற்பித்தலிலும் சிறந்து விளங்கி நீடு வாழ்க! ஷாமிலி. அஞ்சலோட்டம் தொடர மூன்றாம் தலைமுறை வாரிசாக உங்கள் பிள்ளைகளோடும் இது தொடரட்டும். வாழ்க! வளமுடன்!

வாழ்த்துபவர் ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை (பெட்டகோ)
பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க் ஐப்பசி 2020

26. பா மாலிகை (வாழ்த்துப்பா) 31. தற்பரானந்தம் – காந்திமதி 50th wedding

ஆசைப் பெரியப்பா பெரியம்மாவின் 50வது திருமண பொன்விழா வாழ்த்து

புங்கையூர் மண்ணில் உதித்த வைரங்கள்
பிரான்சு மண்ணில் வாழுமெம்மன்புச் சொத்துகள்.
பெருமையுடன் எட்டினார் திருமண பொன்விழா.
தற்பரானந்தம் – காந்திமதி இணையருக்கு இன்பநாள்.
தித்திக்கும் ஆனந்தம்! ஆகா கொண்டாட்டம்!

நாட்டில் அந்தக் காலத்திலேயே உழைப்பால்
உயரலாம் என்று நமக்கெல்லாம் உதாரணமாக,
எடுத்துக் காட்டாக வாழ்ந்திட்ட பாசக்காரர்.
வியாபார உத்தியாளர், ஓயாத உழைப ;பாளி.

எட்டு உடன் பிறப்புகளோடு மூத்தவரான பெரியம்மா
எல்லோரையும் தாயிற்குத் தாயாக வாழ்வுக்கடலுள்
தன் நேசச் சிறகிற்குள் பாதுகாத்த கப்ரன்.
அத்தனை குடும்பங்களையும் ஒருங்கிணைத்து
ஆதரித்து பாசமீந்து பராமரித்தார்.

தூரதேசமானாலும் தொலைபேசித் தொப்புள் கொடியால்
பட்டுப்பாசம் இணைப்பவர்.
எம்மைச் சிறுவயதில் பாடசாலை செல்லும்
பாதையில் இனிப்பு பழவகைகள் பால் தந்து
அணைத்தவர்.
கலைந்த தலையை எண்ணெய் பூசி
வாரியழகுபடுத்தி பாடசாலைக்கு அனுப்பிய
ஆசைப் பெரியம்மாவே எங்களிற்கு அடுத்த
பிறவியிலும ; வேண்டும்.
ஒளித் தடமான இவர்கள்
திருமண பொன்விழாவிற்கு எங்கள் மனமார்ந்த
மங்கல நல்வாழ்த்துகள் வாழ்க நீடு!

இது டென்மார்க்கிலிருந்து
சி.மு.கணேசமூர்த்தி குடும்பத்தினரின் இனிய வாழ்த்துகள். 30-7-2016