83. பாமாலிகை (இயற்கை) 123. அஞ்சல் மட அன்னம்.

அஞ்சல் மட அன்னம்.

(அஞ்சல் – அஞ்சுதல், மருளுதல். மட – இளமை)
00


அன்பு, பாசம், தெய்வீகம்,
அழகியநடை, புகழ், தூய்மை,
உயர்வு, ஞானம், ஏகபத்தினி விரதமாம்
அரும் பொருள்கள்; தொனிக்க
அன்னத்தைப் பாடினார் முன்னோர்.
புவியில் நடந்து புட்கரத்தில்
பறந்து, நீரில் நீந்துமிது
குள்ளவாத்து நாரை இனம்.
00


கடற்கரை மணல்மேட்டில் தங்கி
பொய்கையில் கூட்டமாக மேயும்.
பெண்ணும் ஆணுமாக நீந்தியாடும்.
பறந்திடும் நெடும் தொலைவு.
கிரேக்கம், ஐரிஸ், இந்தியபுராணங்களிலும்
பௌதத்மீறாகவும் மங்களகர குறியீடானது.
மரபுவழி அலங்காரம், சிற்பம்
ஓவியக் கலைகளில் அன்னவுரு பிரதானம்.
00


தூய வெண்ணிறப் பறவை
ஆயகலைவாணி, பிம்மாவின் வாகனம்.
அமைதி நீரேரியில் குளிர்நாட்டில்
வாழும் அருகி வருமினம்.
மென்மையிறகு, சிவந்த கால்கள்.
அன்னத்தில் கருப்பு இனம் அவுஸ்திரேலியா
தென்.கிழக்கு, தென்.மேற்கில் உள்ளது
காலநிலை மாற்றத்திற்கேற்ப இடம்பெயருமினம்.
00


உடல் முழுதும் கருப்பு.
சொண்டு சிவப்பு, கால்கள்,
பாதமும், குஞ்சுகளும் சாம்பல்நிறம்.
இது அழியுமினமாக உள்ளது.
கருப்பு அன்னத்தின் கழுத்து
மிக நீண்டு ஆங்கில எஸ்
போல வளைவானது.
விசில் ஒலி எழுப்பும் பறவை.
00


கவிச்சுடர் வேதா. இலங்காதிலகம். (இலங்கைத் தமிழிச்சி)
டென்மார்க். 26-4-2021


82. பாமாலிகை (இயற்கை) 122. யாழ் இயற்கை வெண் மணல்.

யாழ் இயற்கை …வெண்மணல்.
00

(அலங்குதலாய் -ஒளி செய்தலாய். ஊர – ஊரனே.)

அலங்காரமாய் வீதியிரு அருகும்
இலங்குதோ பாலாறு ஒருமையாக
அலங்குதலாய் வெண்ணாடை அணைத்தனரோ
இலங்கையின் மணற்காடு கௌதாரிமுனை
துலங்கும் இயற்கையதிசயம் பூநகரியருகில்

பாலைவன நினைவேந்தும் மணல்
பாலாடையன்ன குருகு மணல்
சாலையிட முடியாத கும்பி
சேலை பறக்கும் காற்று
பக்கத்திலோடும் திரை தவழ்கடல்.

கண்டதும் வெண்மை கருத்திழுக்கும்
கண்டதில்லை சொர்க்கமோ கண்சொருகுதே!
கைகளாலளைதல் கைகளை ஒழித்தல்
கால்கள் புதைக்க உந்துமாவல்
குரவைக்கூத்தும் வெண்மணல் பரப்பிலாம் (நற்றிணை)

வெயிலில் தகிக்கும் வெண்மணல்
வெள்ளிய மணலோடு அருகில்
தண்ணிய கடல் கரைக்கும் மணல்
குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர (நற்றிணை)
வெண்மணலோவியம் – காற்று எதிரி

பொங்கு வெண்மணல் இலக்கியத்திலும்
‘வெண்மணல் விரிந்த வீத்தை
கானல் ‘ (குறுந்தொகை)
குவித்து வைத்த நிலவன்ன
வெண்மணலிற்; குவித்தார் அகத்தியர் சிவலிங்கம்.

‘ திரைதரு முத்தம் வெண்மணல்
இமைக்கும் ‘ (ஐங்குறுநூறு)
‘ தண்ணான் பொருநை வெண்மணல்
சிதைய ‘ (புறநானூறு)
‘ விளையாடு ஆயமொடு வெண்மணல்
அழுத்தி ‘ ( நற்றிணை)

20-2-2021

84. photo poem . உறங்காத பயணத்தில்……..

Pathivukal.com published.

உறங்காத பயணத்தில்……..

சொற் சுரங்கத்தில் அள்ளும்
அற்புத மணிகள் தினம்
உற்பத்தி செய்யும் படிமம்
கற்பிக்கும் பாடம் உலகிற்கு
நற்பேறு ஈயும் கடமையுண்டு.

ஆழ்மனதில் பூத்த எண்ணம்
வீழ்ந்து பரவி நதியூற்றாகி
வாழ்ந்திட உயிர் தருகிறது

தாழ்ந்திடாத அன்பின் சிலிர்ப்புகளில்
மலரும் மென்மொழிகளாக
கரங்களைப் பற்றுதலாக
இதயத்தை ஆதரவாய் ஒற்றுகின்றன

அடைகாக்கும் அன்பு மொழிகள்
ஆனந்தக் குஞ்சு பொரிக்கட்டும்

இதயக் கடலில் நினைவுகள்
இறகாக அசைந்து சிறகு விரித்துப்
படகாகிறது.
உறங்காத பயணமல்லவா இப்புரள்வு!

( படிமம் – பிரதிமை, வடிவம்)


2 – ஆனி – 2020

12. சிறு கட்டுரைகள், குறிப்புகள் –

சிறு கதைகள்


சிறுகதைகள் கவிதைகளிலும் பார்க்கப் பெரியது. நாவலிலும் சிறியது. அந்தந்தக் கிராமிய மொழிநடை, நகர வாழ்வுமுறை, மீனவர் வாழ்வு என்று எந்தெந்தத் தொழில் முறையோ அவ்வழியாகவும் மாற்றலாகவும் கதை புனைவார்கள். அது படிப்பினையாகவும், பட்டவர்த்தனமாகவும், கண்டனங்களாகவும், நகைச்சுவையாகவும், காதலாகவும் எழுகிறது.
இயற்கை விபரிப்புகள் கதையில் வரும் போது இயற்கை மீது தனிப் பற்றுதலை உருவாக்குகிறது. பக்தியோடு, பயணத்தோடு, தத்துவத்தோடு பிணைபவை இவ்வழி ஈடுபாட்டைக் கிளப்புகிறது. பல நுணுக்கங்களை விபரிக்கிறது. மனதில் பதிந்து ஈர்ப்பு உருவாகிறது.

சிறுகதைகள்.கொம் என்று எழுதி கூகிள் பண்ணினால் அகிலன் என்று அ னாவிலிருந்து அத்தனை கதையாசிரியர்கள் பெயரும் அவர்கள் கதைகள் பெயரும் இன்னும் பல தகவல்களும் பெறமுடியும். மார்கழி 2011ல் இருந்து இவ் இணையத்தளம் இயங்கி வருகிறது. 1400க்கும் மேற்பட்ட சிறுகதை எழுத்தாளர்களும், 11000 ற்கும் மேற்பட்ட சிறுகதைகளும் இங்கு காணலாம். இது மொபைல் போன் மூலமும் சாத்தியமாகிறது.
சிறுவயதிலிருந்து வாசிப்புத் துறைக்குப் பிள்ளைகளைத் தயார்ப்படு;துவது ஒரு இனிய அனுபவம். நல்ல கதைகள் மூலம் பழைய பாரம்பரியங்கள், மரபு முறைகளை நன்கு அறிய முடிகிறது. தேவையற்ற பொழுது போக்குகள் இன்றிப் பிள்ளைகள் நல்ல வழியில் செல்ல நல்ல ஊக்கமும் நிறைய வாய்ப்புகளும் உருவாகிறது.
சிறு கதைகள், குறுங்கதைகளாகவும் மிக நீண்டவை நாவல்களாகவும் பிரிவாகிறது. புலம் பெயர்ந்தோர் சிறுகதைகள் அந்தந்த நாட்டுக் கலாச்சார நிகழ்வுகளை மையப் படுத்தி வரும் போது அந்த நாட்டைப் பற்றி அறிய முடிகிறது. அனுபவங்கள் மூலமும் நாட்டு முறைகளை அறிய முடிகிறது.
சிறுகதை எழுதுதலும் ஒரு கலைப் படைப்புத் தான். தன் அனுபவிப்பு என்பதை ஒருமையில் எழுதுதலும், முழுமையும், உணர்வும் அவசியம். வளவள என்று எழுதாது சிக்கனமாக எழுதப் படுவது சிறுகதை. தனது கண்ணோட்டம், தனித்தன்மை, உணர்வுகள் மிக முக்கியமாகிறது. கண்ணியமாகவும், தீவிரமாகவும் அமைக்க வேண்டும்
ஒரு பிரச்சனையை எடுத்துக் கதையாகக் கோர்த்துப் பிணைக்கலாம். வாழ்வில் காணும் பாத்திரங்கள் கூட பல கதைகள் பின்ன வழி வகுக்கும். சொந்த அனுபவம் கூட சுயமாக வடிக்கும் முறையில் கற்பனையோடு சிறு கதையாகிறது. யாரும் சொல்லித் தந்து வருவதல்ல சிறுகதை.
பத்திரிகைகள் சிறு கதைகளை வளர்க்கிறது என்ற கூற்று அருகி வருகிறதோ என்று எண்ணத் nதோன்றுகிறது.

ஒரு முறையில் படித்து முடிக்கக் கூடியதான தன்னளவில் ஒரு அமைப்புத் தான் சிறுகதை. நல்ல சொல்லாட்சி, திடீர் மாற்றம் பெறும் விதம், கருத்துச் செறிவு உள்ளதாக அமைக்கலாம். அரை மணி முக்கால் மணியில்படித்து முடிக்கக் கூடியதாக இழைக்கலாம். எந்தக் குறுக்கீடின்றி வாசிக்கும் திறனுடைத்தாயிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டம் போன்று தொடங்கி முடிக்கும் சுவை நிறைக்க வேண்டும். எடுத்தவுடன் கவனமீர்த்துத் தளராது, இயக்கி உச்ச நிலையடைய வேண்டும். முழுதாக வாசகரைக் கட்டிப் போட வேண்டும். சிறு கருப்பொருள் இருத்தலே போதுமானது. சாகசம் நிறைத்தும் எழுதிடலாம்.
ஆரம்பம், மையப்பகுதி, உயர்ச்சி, வீழ்ச்சி என்று பிரிக்கலாம். சிறுகதையில் போராட்டமோ, மனப்போராட்டமோ, சமுதாய மாற்றமாகவோ இருக்கலாம். சிறிதான கட்டமைப்பாக இருக்க வேண்டும். ஒரு நிகழ்வோ, ஒரு மணிப்பொழுதோ, ஒரு வாழும் காலமாகவேனும் நீட்டி முழக்காது அமைக்கலாம்.
சிறுகதைகள் சமூகத்தைப் பிரதிபலிப்பவையே. தனிமனித, குடும்ப, பொருளாதார, சமூகச் சிக்கல், போர், இழப்பு எனப் பலவாகிறது. இதற்குள்ளும் பல கிளைகளுமாகிறது.
நல்ல தலைப்புகள் அமைக்க வேண்டும். தலைப்பு வேறு, கதை வேறாக அமைவது வெற்றி பெறாது. கதை எழுத எழுத முன்னேற்றம் உருவாகும். மொழி கதையமைப்பும் சிறக்கும். ஒவ்வொருவரின் எழுத்து நடையும் ஒரு தனித்துவமாக அமைகிறது. இதன் விளக்கங்களை நான் முன்னர் குறிப்பிட்ட இணையத் தளத்தில் வாசி;த்து அறிந்திடுங்கள். அதனாலேயே கதாசிரியர்கள் பெயர்கள் குறிப்பிட்டு அவர்கள் பாணி பற்றி இங்கு விபரிக்கவில்லை


மார்கழி. 2020

84. photo poem

இதுவன்றோ வேண்டும்!

இந்தக் கவிதை முதலாம் வலை — வேதாவின் வலையில்
பாமாலிகை கதம்பம் 269ல் பதியப்பட்டுள்ளது.
இணைப்பு கீழே உள்ளது.