94.பாமாலிகை (இயற்கை)134 கவித்துவமான நடனம்

 93.பாமாலிகை (இயற்கை)133

92. பாமாலிகை (இயற்கை)132. மோனம்!…..

மோனம்!…..

வானத்தின் ஓயா இன்பமாய்
தானமாகும் நட்சத்திரப் பூக்கள்
மோனத்தில் கவிழ்ந்த பவளமல்லிகையாய்க்
கானமிசைக்குது புலர்தலிலும் மலர்தலிலும்
00
கடல் அமைதியென்று கூறினால்
திடல் போல அலையுருள்வது
உடல் குமுற உள்ளே பொங்குவது
மடல் விரியும் அலையதன் திமிராகுமோ!


பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 15-4-2019

91. பாமாலிகை (இயற்கை)131.

மன்மத மந்திரம்

ஊதுகுழற் சொண்டினால் ஒலிபெருக்கிப் பூவில்
சூதுவாதின்றிச் சுறுசுறுப்பாகக் காதோடு காதாகக்
கருத்தாகச்சேதி சொல்வதாகத் தேனினை உறிஞ்சும்
தீதில்லா மனங்கவர் அழகுக் குருவிகளே!
0

மயக்கியென்னை வசீகரிக்கும் சின்ன வண்ணக்குருவிகளே!
இயக்கமாய்ப் பூவுக்குப் பூ பரவும் மன்மத தந்திரம்
தயக்கமின்றி மென்னிதழில் மெதுவாயமரும் மந்திரம்
சுயமாக நீங்கள் பெற்றதா! அந்த அர்த்தநாரீசுவரர் தந்ததா!
0

வியக்கும் கத்தரி, பச்சை, மஞ்சள், பொன்னிறம் சிவப்பில்
பூவண்ண இறகின் வசீகரம் பூரிப்பாய்த் தேனெடுக்குமார்வம்
பாக்கள் புனை மனமுனிவை தாக்கமாக்கியது எனக்கும்
நயக்கப் பல மலர் தாவும் முறை மனிதனுக்கு நீங்கள் தந்ததா!
0

அழகிய குருவிகளே! நீங்கள் ஆண்டவன் ஆசி பெற்றவர்கள்
ஆனந்தராகமாய் ஆசையோடு அமர்ந்திடுங்களென் விரலில்
ஆராய்வோம் நீங்களா அன்றிஅழகு மலர்கள் அழகாவென்று!
பழகிய பட்சமான குருவிகளே! பயமின்றி வாருங்கள் இங்கு!

வேதா. இலங்காதிலகம் -டென்மார்க் – 20-2-2005.
(ரிஆர்ரி தமிழ் ஒளித் தொலைக்காட்சி முகப்பு பார்த்து ஏழுதிய கவிதை
ரிஆர்ரி வானொலி -தொலைக்காட்சியிலும் வந்தது )

90. பாமாலிகை (இயற்கை) 130. நீலவானம் ஒளிவதெங்கே!

நீலவானம் ஒளிவதெங்கே!

தொட்டுவிடும் தூரத்தில் வானமில்லை
பட்ட கண்கள் மனதிலேயே மாயம்.
காட்டிலே நீலவானம் ஒழிந்திருக்கும்
எட்டிடும் பச்சைவானில் இச்சையுடன்
மீட்டிடும் பறவைகள் காதல் மொழி
00

முகிலோ வானோடு விளையாடுது!
முகிலோடு வானமா விளையாடுது!
துயிலாது இரசிக்கலாமிக் கண்ணாமூச்சியை
00
சருகோடு புதைந்துள்ள விநோதங்கள்
அருவருப்பான அரவமும் மறைந்திருக்கும்
சருகு மரத்தின் சொத்தா!
அருகும் வனத்தின் சொத்தா!

00
இலை வேர் மண்ணிற்கும்
அலையுடை ஆறு குளத்திற்கும்
மலைப்பிரசவம் அருவிச் சாரல்
விலையற்ற கொடையாளப் பயணி.
00
கல்லெறியக் குளம் கலங்கும்
நில்லாது சுழிக் கோலமிடும்
இல்லை சலனம் என்றால்
நல் வட்டப் பளிங்குநிலா


வேதா. இலங்காதிலகம் – டென்மார்க். 10-2-2022

89.  பாமாலிகை (இயற்கை)129 – 2021- 1 -12 டென்மார்க் பனி

2021- 1 -12 டென்மார்க் பனி

நிமிர்ந்து பார்ப்பதற்கிடையில்
நிகரற்ற இயற்கைக் காலநிலை மாற்றங்கள்.
நிச்சயமாக மனிதமனத்தையும் மாற்றும்
நிகழ்தல் திறன் கொண்டது.
00
காய்ந்த சருகுகள் விழ
வேய்தலாக வெண்பனி திடீரென
பாய்தலாகப் படர்ந்தது வியப்பு!
ஓய்தலின்றி நாள் முழுதும்
00
நன்மை தீமை இன்பதுன்பமாக
நாமேன் நம்மை மாற்றி மகிழ்வதில்லை!
நாசவழியில் துன்பத்தை அணைத்து
நாதாங்கி போடுகிறார் மகிழ்வையொதுக்கி
00


கவித்திலகம் – வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் – 2-12-2021

88. பாமாலிகை (இயற்கை) 128. முற்றத்து முழுமதியே

முற்றத்து முழுமதியே
00

அற்றம் (துன்பம்) அற்ற இன்பமே
இற்றும் (இன்னும்) தரும் என்னரும்
முற்றத்து முழுமதியே
உற்றறியும் என் உயிரே
எற்றம் (மனத்துணிவு) தூவும் மழைமுகிலே
00
ஓற்றடமிடும் ரோசா இதழே
கற்றடம் மின்னச் செய்யும்
இற்றை முழு நிலவே
குற்றமற்ற குளிர் திங்களே
கொற்றம் துருமென் துணையே
00
கொற்றவையென் வாழ்வில் நீயே
கொற்றவியென் இதயத்தின் பாதியே

சற்றும் விலகாயென் சதியே
சிற்றாடை அணிந்த தேவதையே
சிற்றடி மெட்டியொலி மங்கையே

00
சிற்றாறாம் காதற் செழிப்பே
சுற்றம் பேணும் சுடரே
கற்றை இருளழிக்கும் அம்புலியே
நற்றாய் ஆகிய பேரொலியே
நற்றிறம் போற்றும் முழுமதியே
00

பற்றுக்கோடுடை இரவுச் சுடரே
பற்றும் மனதின் பசுந்தானவளே
பெற்றிமையுடைய இரவு அரசியே
பொற்கிளியே! பொற்சிலையே! நற்
பொற்புடை என்னுற்ற தேவதையே
00


சாரல் குயில் – வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 28011-2021

87. பாமாலிகை (இயற்கை) 127. உயிராகும் இயற்கை

உயிராகும் இயற்கை

நந்தவனக் காற்று நலிவை
நகர்த்துகிறது இன்பம் நளபாகம்
நதியும் கொடுக்கிறது நல்லாரோக்கியம்
நாணலும் வளைகிறது நாரிகையாக
00

மழலையால் மகிழ்வு மனிதனுக்கு
மண்வெட்டியால் அகற்றினாலும் மகத்துவமாய் விலகாத
மண்ணை நேசிக்கும் மகாநதியின் பிடிப்பு
மனமில்லாப் பிரிவு மக்காத பற்று
00

மனம் நனைக்கும் மகிழ் நதி
மகுடம் சூடும் இன்பக் காற்று
மகோற்சவ இன்பம் மகோன்னத இன்பம்
மக்களுக்கு மங்காத இயற்கை
00

மழையில் ஒளிந்து மஞ்சனமாடும் காற்று
மண்ணாசை கொண்டு மண் நனைக்கும்
மழையும் வண்ண மையல் அலையும்
மண்மிசை உன்னத மாண்புறு இயற்கை
00


2-9-2021

86. பாமாலிகை (இயற்கை)126. படவரி 17. காட்சிக்கு நான்கு குருவி + மந்த தோற்றம்

படவரி 17. காட்சிக்கு நான்கு குருவி + மந்த தோற்றம்

ஏழு நிறப் பிரிகை எனலாம்
ஏன் இன்னும் அதிகமும் எனலாம்
குச்சிலாம்பிலொரு பிரபஞ்ச நீர்த் தொட்டிலோ!
உச்சி வேளையல்ல ஊருறங்கப் போகிறது.
ஆரம்ப ஓவிய வகுப்பில் நான்
ஆறுதலாக வண்ணம் பூசியது முப்பிரிவு
நிலம்இ நீர். வானம் – இங்கு
நிறைவாக நான்கு குருவி வரையலாம்!
00

மந்த தோற்றம்
வெண் சீருடை கழுவ
கண்ணன் மாயனின் வண்ணமாம்
கண் பறிக்கும் நீலப்பொடியை
எண்ணிக் கலக்கியது யாராகும்! –அன்றி – விண்முகில் இங்கு சடுதியாய்
மண்ணில் தெரியும் மாயை!
திண்ணமோ இது நானறியேன்!
கண்ணின் எண்ண மயக்கமோ!
– ஒன்று – இந்தப் பூனையும் பாலருந்துமோவென
மந்த தோற்றத்திலுறங்கும் கடலே!
மொத்த உலகுயிர்களைச் சுருட்டி
கத்தி ஆக்ரோசமான சுனாமியாவதும்
– நீ தானே! –
00
19-6-2015

   http://www.vallamai.com/?p=58919

85.பாமாலிகை (இயற்கை) 125

குட்டிப் படம் கடதாசியில் ஒட்டியதா-

குட்டிப் படம் கடதாசியில் ஒட்டியதா

ட வரிகள் 42./ 14-12-2015

சுவரில் தெரிவது தன் சொந்தமா என்று அறிந்துகொள்ளத்தான் இந்த முகர்தலா? அல்லது சுவரொட்டியாய் இருந்தால் புசித்துப் பசியாறலாமே எனும் ஆவலால் பிறந்த ஆராய்ச்சியா? என்று ஆட்டை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

குட்டிப் படம் கடதாசியில்
ஒட்டியதா! அதையாவது பிரித்தால்
பட்டினி பரிதவிப்பிற்கு உண்ணலாமே!
கிட்டச் சென்று ஆராய்ச்சியா!

சிறிதே பொறு பிள்ளாய்!
கடிதே புற்தரைக்குச் செல்லலாம்!
தெரிவதிங்கு நம் சொந்தமா!
உரிமையாய் அறிந்திட முகர்தலா!

வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்.

vector_146.cdr