88. பாமாலிகை (இயற்கை) 128. முற்றத்து முழுமதியே

முற்றத்து முழுமதியே
00

அற்றம் (துன்பம்) அற்ற இன்பமே
இற்றும் (இன்னும்) தரும் என்னரும்
முற்றத்து முழுமதியே
உற்றறியும் என் உயிரே
எற்றம் (மனத்துணிவு) தூவும் மழைமுகிலே
00
ஓற்றடமிடும் ரோசா இதழே
கற்றடம் மின்னச் செய்யும்
இற்றை முழு நிலவே
குற்றமற்ற குளிர் திங்களே
கொற்றம் துருமென் துணையே
00
கொற்றவையென் வாழ்வில் நீயே
கொற்றவியென் இதயத்தின் பாதியே

சற்றும் விலகாயென் சதியே
சிற்றாடை அணிந்த தேவதையே
சிற்றடி மெட்டியொலி மங்கையே

00
சிற்றாறாம் காதற் செழிப்பே
சுற்றம் பேணும் சுடரே
கற்றை இருளழிக்கும் அம்புலியே
நற்றாய் ஆகிய பேரொலியே
நற்றிறம் போற்றும் முழுமதியே
00

பற்றுக்கோடுடை இரவுச் சுடரே
பற்றும் மனதின் பசுந்தானவளே
பெற்றிமையுடைய இரவு அரசியே
பொற்கிளியே! பொற்சிலையே! நற்
பொற்புடை என்னுற்ற தேவதையே
00


சாரல் குயில் – வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 28011-2021

13. எனது 1வது – 2வது நூல்கள்.

11-11-2006 ல் வெளியான – இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்டு – தொகுதி – 04ல் என்னைப் பற்றிக் காலஞ்சென்ற
கலாபூஷணம் புண்ணியாமீன் அவர்கள் எழுதியது

148. சான்றிதழ்கள் – கவிதைகள் 145.

அளவற்ற சமூக அக்கறை
அன்றும் இன்றும் ஆர்வம்
அருகான மிக நம்பிக்கை
அன்பு உயிர்ப்புடன் நிகழ்வுகள்
அலைகடலாக உயிர்க்காற்றுப் போல
அடர்த்தியாகச் செய்து நமக்கு
ஆதரவான கலையகம் எஸ்ரிஎஸ்.
அனுபவ வார்த்தை இது.
அவர்கள் முயற்சி வெற்றியடையட்டும்.
ஆதரவான நேசமுயர்ந்து பணி தொடரட்டும்.
இவர்கள் எனக்குத் தந்த சான்றிதழுக்கு மகிழ்வுடன்
நன்றி கூறுகிறேன். வாழ்க வளமுடன்.

17 -11 -2021

26. பாமாலிகை – (தமிழ்மொழி) 73. எண்ணக் கம்பளம்

எண்ணக் கம்பளம்
00

திரட்டும் ஒவ்வொரு சொல்லும்
திருவாசகமான கவிமொழியாய்த் தித்திக்கும்
திருத்தமுடைய திருமொழியாய்த் திண்மையாய்
திருவமுதாய் பிறக்கட்டும் திவ்வியமாய்.
00
பரிசுத்த சிந்தனைப் பதிப்பின்
வரிகளான்மாவை நீவும் மென்னிறகு.
சரிந்திடும் நிபந்தனையற்ற பாபுனைவு
உருத்துடன் நெய்யப்படும் உருப்படிகள்.
00
இன்கவிதை ஏவாமல் வருவது
இதய எண்ணச் சிறகுகள் இன்பத்தால்
இதமாகி வெப்பமாக இனாமாவது
என்னுயிரால் பிணைந்த எண்ணக்கம்பளம்.
00
நர்த்தன விரல்களே அருத்தமுடன்
வார்க்கும் மாமகுட வரிகள்.
சொர்க்கமாகக் காற்தடமின்றிச் சொரியும்
வர்த்தகமாய் நிறைகுடமாய் அமையும்.
00
துமிலமுடை (பேராரவாரம்)ஞாபகக்கிணறு மனம்
தமிழ் ஊற்றும் தரமுடைய
அமிழாத கவிமழை உன்னதம்.
அமிர்தசஞ்சீவி உயிரில் மலர்ந்த தமிழோடையாள்.
00
நன்நினைவுச் சொற்களை அடுக்கி

அன்பு பண்பால் வண்ணமூட்டி
என்கவிதைப் பூக்களால் மேடையிடும்
சீதனக்கவிதை சாதனை தரும்.
00
கவிதைப் பூக்களின் புன்னகை
புவிகைதட்டும் தேவப் பிரசாதம்.
கவிகையாய் (நன்மை) வேதனைகளைக் கொல்லும்
பவிகமான (சிறப்பு) வேதம் தமிழோடு கரைதல்
00
தேவையை நிறைவேற்றத் தேனெனும்
தேவவார்த்தைகள் தேடித் தேடி

தேங்குதலின்றி உயர்வாய்த் தேயாமதியாய்
தேர்ச்சியுடை மனித முயற்சியிது.
00
கவிதை கவ்விப்பிடித்துச் சுடர்கிறது
பூவிசிறி! மொழியின் அரசி!
பாவிதை விதைத்துப் படித்து
பூவிழிவிரித்து இரசிக்காத மனங்களுமுண்டு

00
குவிந்திடும் மனம் திறந்தால் நல்லறிவு
குவியும் அனுபவஅலை நுரைகள் முத்தாகும்
குவித்தல் கவிவலையில் மீன்களையல்ல
கவின் தமிழைத்தான் பிடிக்குமாசை
00


கவிவித்தகர் – வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 15-11-2021

32.  பா மாலிகை (வாழ்த்துப்பா)37.

தொண்ணூறு அகவை நிறைவு வாழ்த்து
(பரமேஸ்வரி சிதம்பரநாதன்) 10-7-2018

தொழுகையே முன் நின்று
தொண்டுகள் புரியும் காலம்
தொல்காப்பியமான வாழ்வு அனுபவங்கள்
தொய்தல் நேரத்தில் கைத்தடியாகும்.
(தொல்லை கொடுப்போரும் தொட்டணைப்போருமாய்
தொல்லுலகில் பல அனுபவங்கள்)

வண்ணமயில் போல வந்து
வேல்முருகன் தேரில் நின்று
வடம் பிடித்துத் தேரிழுக்க
வாஞ்சையுடன் வருபவளே பரமேஸ்வரி அம்மா!

ஐந்து பிள்ளைகள் பெற்று
ஐசுவரியமாய் அவர்களை வளர்த்த
மூதாட்டியென் மாமியார், என் பிள்ளைகளின்
அப்பம்மா, என் கணவரைப் பெற்றெடுத்த தாய்

அன்பால் அனைவரையம் அணைத்து
குடும்பத்தைக் காத்த பெருவிருட்சம்

தொண்ணூறு ஆண்டு நிறைவிற்கு
இனிய வாழ்த்து கூறுகிறோம்


வேலவன் துணை கொண்டு
ஆரோக்கியமாய் வாழ வேண்டுகிறோம்

வாழ்த்துபவர்கள் – மகன்மார் – பேரப்பிள்ளைகள்- மருமகள்